கதையாசிரியர் தொகுப்பு: நட.சிவகுமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அலுமினிய தட்டில் அரிசி காய்த்து கொண்டிருந்தது

 

 ஏறத்தாழ எல்லா கிளைகளும் உதிர்ந்த நிலையில் மரங்களிலிருந்தது. வழக்கம் போல் அல்லாமல் வானம் பூமியை பார்த்து கொண்டிருந்தது. சின்னஞ்சிறியதாய் சிறுத்து தெரிந்த வானம் அன்னியப்பட்டு கிடப்பது மாதிரி இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன்னால் தண்ணீருக்கு பதிலாய் வெயிலை குடித்து கொண்டிருந்தார்கள். நீரின் மாய ஜால வித்தைகளை அவர்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி விரைவாக நடந்து கொண்டிருந்தது. ஏகதேசம் ஒரு ஊரே காணாமல் போக கூடிய சூழல். பக்கத்து ஊரில் உள்ள


காக்கை சாம்பலில் ஒரு சிகப்பு கண்

 

 காக்கையை உயிரோடு பிடிப்பது பற்றி பல வகைகளில் நாங்கள் யோசனை செய்தோம்.கவண்கற்களை எடுத்து கொண்டு நாண் வைத்து அடித்து பார்க்கலாமா இல்லை வலை விரித்து பிடிக்கலாமா இப்படி பல விதங்களில் யோசனை செய்து முயற்சி செய்தோம் .பிறகு ஒரு குறவனை தேடி கண்டு பிடித்து உயிரோடு ஒரு காக்கை வேண்டும் எவ்வளவு ரூபாய் ஆனாலும் பரவாயில்லை என்று கூறிய பிறகும் காக்கை உயிரோடு கிடைக்கவில்லை. காக்கையை ஏன் உயிரோடு கைவசப்படுத்த வேண்டும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து


ஆத்துக்கடவு அம்மை

 

 மீனாட்சி அத்தை சொல்லும் போதே மெய் சிலிர்த்தது. கல்யாணம் கழிச்ச புதுசில …என தொடங்கி அத்தை பேச ஆரம்பித்தாள். மக்கா எனக்க வீட்டுக்காரங்க தொடுவெட்டி சினிமா தியேட்டருக்கு உண்ணாமலை கடையில இருந்து ஒத்தயடி பாதையில போயி இராத்திரி இரண்டாம் ஆட்டம் படம் பாத்திட்டு நடந்து வரும் போது ஒண்ணரை இரண்டு மணி ஆயிடும் .வந்தவுடனே அடுப்ப பத்த வச்சு ஒரு கட்டன் காப்பி திக்காசன் கூட்டி போட்டு குடுப்பேன். கொஞ்ச நேரத்தில வெள்ளாவி அடுப்புக்க பக்கத்தி போயி