கதையாசிரியர் தொகுப்பு: தி.மயூரன்

1 கதை கிடைத்துள்ளன.

சொல்லிப் போடாதை

 

 பலாலி விமான நிலையத்தில் சம்பிரதாயமான பரிசோதனைகள் முடிந்து, கொழும்பு செல்லும் விமானத்தின் வருகைக்காகப் பயணிகள் எரிச்சல் கலந்த களைப்புடன் காத்திருந்தனர். யுத்தம் முடிவடைந்ததாய் பெயர்தானே தவிர, பரிசோதனைக் கெடுபிடி கள் இன்னமும் மாறவில்லை. அதே முறைப்புடன் பரிசோதனை என்று கிண்டிக் கிளறிக் கடுப்பேத்தினார்கள். ஓடு பாதையில் ராணுவ விமானம் ஒன்று இரைந்துகொண்டு இருந்தது. ஆல்ட்றினா ஓல்ப்ஸ் ஒவ்வொரு பயணியையும் பார்த்துக்கொண்டு இருக்க… கஜன் அதீத சிந்தனையில் நனைந்திருந்தான். தூரத்தில் கருமேகங்கள் திரண்டு திடீர் மழைக் கோலம் காட்டிற்று.