கதையாசிரியர் தொகுப்பு: தாரணி வரதராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

மருதாணி

 

 “என்னாதிது?” அறை கதவை அடைத்துவிட்டு கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே கேட்டான். “பின்ன? நேத்து அரச்சது எப்டியிருக்கும்?”, அவள் நிமிர்ந்து கூட பார்க்காமல் எரிச்சலுடன் கூறியது அவனை சுடவில்லை, புன்னகைத்துக்கொண்டான். அவளின் பொய் கோபங்கள் கூட தெரியாதவனில்லை. கைபேசி திரையை தடவிக்கொண்டே கட்டிலயே சுற்றி சுற்றி பார்த்தான், மனம் மருதாணி வைத்துகொண்டிருக்கும் அவளையே சுற்றி வந்தது. அவளிடம் எதாவது பேசலாம், சில்மிஷம் செய்யலாம் என்றது. கைபேசியை அணைத்துவிட்டு அருகே போய் அமர்ந்தான். “குடு நா வக்கிறேன்”, கையை நீட்டினான்.