கதையாசிரியர் தொகுப்பு: தமிழ்நதி

1 கதை கிடைத்துள்ளன.

வாடகை வீடு

 

 வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பேருந்தில் இருந்து இறங்கி, அகண்ட கரும் பாம்பாகக்கிடந்த வீதியைக் கடக்கும்போது, உயிர் ஒரு நிமிடம் உதறல் எடுத்து ஓய்ந்தது. நல்லவேளை, கதிர் அவளது கையைப் பற்றி இருந்தான். பிரதான வீதியில் இருந்து அந்த அபார்ட்மென்ட் இருக்கும் சிறு வீதியினுள் இறங்கியதுமே ஆசுவாசமாக உணர்ந்தார்கள். அதற்கு, சாலையின் இருமருங்கில் இருந்தும் கிளைக் கைகளை நீட்டி ஒன்றையன்று பற்ற முயன்றுகொண்டு இருந்த மரங்கள் காரணமாக இருக்கலாம். ஏதோ யோசனையில்