கதையாசிரியர் தொகுப்பு: சோ.சுப்புராஜ்

16 கதைகள் கிடைத்துள்ளன.

வீடெனும் பெருங்கனவு

 

 ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால் நேரம் கடந்தும் தனபாலன் அங்கு வந்து சேரவில்லை. ஜெயசீலியும் செல்வகுமாரும் சில வருஷங்கள் அபுதாபியில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார்கள். மறுபடியும் அபுதாபிக்குத் திரும்பிப் போக வேண்டாமென்றும் அங்கு சேமித்த பணத்தில் சென்னையின் ஏதாவதொரு புறநகரில் வீடு கட்டி செட்டில்


காதல் கண்மணிக்குக் கல்யாணம்

 

 வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப்பட்டுத் துழாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து, “”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம். நாளைக்கு போஸ்ட் ஆபீஸýல போயி வாங்கிக்கணுமாம்…” என்று அரையும் குறையுமாகவும் அவசரமாகவும் சொல்லி முடித்ததும் உள்ளே போய் கதவைப் பூட்டி, வெளி விளக்கையும் அணைத்து விட்டாள். இது நடந்தது இப்போதல்ல தொண்ணூறுகளின் தொடக்கத்தில் …. அப்போதெல்லாம் தகவல்


தீராத சாபங்கள்

 

 முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ” சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக இருந்தது. சாப்பிட்டு முடித்த வேலையாட்கள், சிலர் அங்கங்கே உட்கார்ந்து பழமை பேசிக் கொண்டும், பெரும்பாலோர் மணலிலும் தரையிலுமாய்ப் படுத்துக் கண்மூடியும் கிடந்தனர். அக்கௌண்டென்ட் மணிசேகர் ஓரமாய் நின்று சிகரெட்டை இலயித்து இரசித்து ஊதிக்


பால்ய கர்ப்பங்கள்

 

 பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ அம்மா என்று சத்தம் வரவும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அவசரமாய் அந்த அறைக்கு ஓடினார். சுந்தரத்தாய்க்கு எதுவும் புரியவில்லை. அவள் உடம்பு சுகமில்லாததால் மெடிக்கல் லீவு போட்டு வீட்டிலிருந்தவள், இன்றைக்கு அவளுடைய பாடத்திற்கு பரீட்சை என்பதால் சிரமத்துடனேயே பள்ளிக்கு வந்திருந்தாள். அவள் பள்ளிக்குள் அனுமதிக்கப் படவில்லை. மாணவர்கள் எழுதி


பண உறவுகள்

 

 வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும்போது கூட முத்தையாவிடம் வந்து, “”கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்….. நீங்க, உங்க வீட்டுக்குப் போற வழியில தான் என்னோட வீடு….” என்று அழைப்பு விடுத்து விட்டுத் தான் போயிருந்தான். இன்றைக்கு அவனுடைய இரண்டாவது பெண்ணிற்கு மூன்றாம் வயது பிறந்த நாளாம். அவனும் ரொம்ப நாளாக இவனைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறான். இவனுக்குத்தான் போய் வருவதற்கான அவகாசமும் பொறுமையும் வாய்க்கப் பெறாமல் இழுத்துக் கொண்டே போகிறது.


குங்குமச் சிமிழ்

 

 தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார். இவளுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்வாள்.


நிலமென்னும் நல்லாள்

 

 “காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராம்நாத் கொஞ்சம் தடுமாறித்தான் போனார். “ஸாரி. தெரியலியே ஸார், எதுக்குக் கேட்குறீங்க? நான் வேணும்னா நெட்ல தேடிப் பார்த்துச் சொல்லட்டுமா?“ என்றார் பணிவுடன்.. “நோ நோ. பரவாயில்லை விடுங்க; சும்மாதான் கேட்டேன். நம்ம பாரதியார், பராசக்தி கிட்ட காணிநிலந்தான் கேட்டார். கடைசி வரைக்கும் அவருக்கு அது கை கூடவே இல்ல. ஆனால் அந்த


துரத்தும் நிழல்

 

 தினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னதான் கண்டித்தாலும், புத்தி சொன்னாலும் அமைதியாக பாவம் போல் பார்த்துக் கொண்டு நிற்பவனை என்னதான் செய்வது? கடந்த மூன்று தினங்களாக அவன் வேலைக்கும் வரவில்லை. அவனிடமிருந்து தகவலும் இல்லை. அவன் தங்கி யிருக்கும் ‘லேபர் கேம்பிற்கு’ போன் பண்ணிக் கேட்ட போதும் சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.எங்கு போய்த் தொலைந்தான்? இவர்கள் கம்பெனி விசாவில் இருந்து கொண்டே வேறெந்த


மீண்டும் துளிர்த்தது

 

 ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்கள் அவை. கிளி, ஜோஸ்யக்காரன் விரல்களுக்குள் ஒளித்துக்காட்டும் நெல்மணியைக் கண்டதும் மிக எளிதாக ராசிக்குறிப்பைத் தேர்ந்தெடுத்து விடுகிறது. இவனுக்குத் தான் எப்படி இந்தக் குவியலிலிருந்து தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதென்ற சூட்சுமம் புரியவில்லை. நாற்பது வயதைக் கடந்துவிட்ட மனைவியை இழந்த ஒரு விடோயரை மணந்து கொள்ளத் தான்


கருணையின் நிழல்கள்

 

 அன்னணூர் இரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார வண்டியிலிருந்து கூட்ட நெரிசலிலிருந்து பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுந்தாள் அலமேலம்மாள். அவளுக்கு ரொம்பவும் படபடப்பாக இருந்தது. மத்தியான வேளையிலும் என்ன கூட்டம் என்று அலுத்துக் கொண்டாள். எத்தனைமுறை இரயிலில் பிரயாணித்தாலும் இறங்கும் நேரத்தில் எந்தப் பக்கம் பிளாட்பார்ம் வருமென்று குழம்பி விடுகிறது. இன்றைக்கு தூக்கக் கலக்கம் வேறு. வெயிலின் உக்கிரத்திலும், நகரும் இரயில் வண்டியின் ஜன்னலினூடே முகத்தில் வந்து மோதும் இதமான காற்றின் குளிர்ச்சியில் இலேசாய் கண்