கதையாசிரியர் தொகுப்பு: சிபி சரவணன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சலூன் கண்ணாடி

 

 சிலநாட்களாக அந்த சலூன் கடை திறப்பதில்லை. அப்பா இவ்வளவு தாடியோடு அலைவது விரத காலங்களில் மட்டும் தான். இப்போது ஏன் சவரம் செய்யாமல் இருக்கிறார்? ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும் பொழுது தாடியையும், முடியையும் தடவிப் பார்த்து முகம் கோணிப் போகிறாரே ஏன்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் என் மூளை நரம்புகளை சுண்டி இழுக்கின்றன. அந்த பெயர் வைக்காத சலூன் கடை முதலாளி மன்னிக்கவும், சக தொழிலாளி மரித்து விட்டாராம். உங்களுக்கு தெரியுமா? என் அப்பாவின் இளமை


ஸ்டிக்கர் பொட்டு

 

 இருள் பகலை வெறிபிடித்துத் துரத்தியது. ஜன்னல் கம்பிகளினூடே ஊர்கள் மெல்ல ஓட, ஓட மனம் இறுகிப்பிடிக்க ஆரம்பித்தது. இன்னும் பத்து கிலோமீட்டர் தள்ளித்தான் அம்மா இருக்கிறாள். அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்த நாளிலிருந்தே நான் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியவில்லை. எப்போதும் அவளது நினைவுகளில் நெஞ்சுக்குள் கண்ணீர் சிந்திய வண்ணமிருந்தேன். நடத்துனரின் விசில் குண்டு சுழல எங்கள் ஊரை ஒட்டி வண்டி நின்றது. மெல்ல இறங்கி தெருக்களை ஊற்றுப் பார்த்தவாரே நடந்தேன்.தெருக்கடைகளின் பழைய ரம்மியம் குறைந்து நலிந்திருந்தது. சீனிக்கிழவி


கேம்ஸ் டீச்சர்

 

 ரொம்ப வருடங்கள் கழித்து நான் படித்த பள்ளியின் வாசலை மிதித்தேன். நாங்கள் ஞானம் பெற்ற பள்ளியில் சிதிலடைந்த சுவர்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிகரெட் துண்டுகளைத் தான் காண நேர்ந்தது. தூய ஆத்மாக்கள் பயிலும் பள்ளியில் அசுத்தத்தின் கோர முகம் விரவியிருந்தது. நாங்கள் இருந்த காலத்தில் எவ்வளவு பசுமையாக இருந்த பள்ளி இப்போது மனித அரவமற்று ஊதப்படாத சங்கினை போல் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. ஏக்கமும்,பழைய நினைவுகளும் தழும்ப வெளியே வந்து பிரக்க்ஷையற்று நடந்தேன் மனம் அகாலத்தில்