கதையாசிரியர் தொகுப்பு: சர்வஜித்

3 கதைகள் கிடைத்துள்ளன.

கார்டு மாறிப்போச்சி!

 

 புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தார் ராம்குமார். நண்பர், உறவினர் கூட்டத்தைக் கூட்டிப் பெரிய விருந்து கொடுத்தார். வந்தவர்களும் வயிறார உண்டு, பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் அளித்துச் சென்றார்கள். பிறகு, சாவகாசமாக அவற்றையெல்லாம் பிரித்துப் பார்த்துக்கொண்டு இருந்த ராம்குமார், ஒரு வாழ்த்து அட்டையைப் பிரித்துப் படித்ததும் திடுக்கிட் டார். ‘உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! கடவுள் உங்களுக்கு மன நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கட்டும்!’ என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. கீழே குணசேகரன் என்ற கையெழுத்து. ராம்குமார்


கீழே விழுந்துட்டேங்க!

 

 மதிகெட்டான்பட்டியின் அராஜகப் பேர்வழிகள் அத்தனை தப்பு தண்டாக்களையும் செய்துவிட்டு, ஊர் பூசாரியிடம் போய், தாங்கள் செய்த தப்பை விலாவாரியாகச் சொல்லி, ‘ஐயோ! இப்படிச் செய்துவிட்டேனே!’ என்று வருந்திக் குமைவார்கள். அவர் எண்பது வயது முதியவர். பழுத்த பழம். அவருக்கு இதனால் பெரிய தலைவலியாகிவிட்டது. ஊர் நாட்டாமையிடம் அவர் ஒருநாள் இதுபற்றி முறையிட, நாட்டாமை ஊரைக் கூட்டி, ”இதோ பாருங்கப்பா! அவரோ வயசானவரு. அவர்கிட்டே நீங்க பண்ணின கற்பழிப்பு விஷயம், பொம்பளைங்க சோரம் போன விஷயம் இதையெல்லாம் அப்படியே


ஏலியன்!

 

 ஒரு குட்டிப் பையன் சம்மர் கோர்ஸில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக அப்பாவுடன் நீச்சல் குளத்துக்குப் போனான். அப்பா அந்த கோர்ஸ் பற்றிய விவரங்களையும், பயிற்சி நேரம், கட்டணம் பற்றியும் அதன் நிர்வாகியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, பையன் ஆர்வ மிகுதியில் அந்த நீச்சல் குளத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டான். ஒவ்வொரு அறையாகப் புகுந்து வெளியேறினான். அங்கே பெண்கள் உடை மாற்றும் பிரத்யேக அறை ஒன்றும் இருந்தது. சிறுவன் நேரே உள்ளே நுழைந்துவிட்டான். எதிர்பாராதவிதமாக ஓர் ஆண் பிள்ளையைக் கண்டதும், அங்கே