கதையாசிரியர் தொகுப்பு: சரவணன் குமரேசன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வீனஸில் இருந்து ஒரு வாடாமல்லி

 

 செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அது. அதிக ஜன நெருக்கடி இல்லாத உச்சிப் பகல் வேளையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருக்கும் ஓட்டலுக்கு வெளியே தூணை சுற்றி கட்டப்படிருக்கும் திண்டில் உட்கார்ந்து கொண்டு, வந்து போகும் எல்லா பஸ்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் அவளை அவ்வப்போது நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார் ஓட்டல் முதலாளி பகீரதன் பிள்ளை. “என்னா வெயில் அடிக்கி மழைக்கான சுவடே இல்ல” என்றவாறே நுழைந்த ரெகுலர் கஸ்டமரான மாடசாமியை கூட அவர் கவனிக்கவில்லை. அதை கவனித்த


சாமியாடி

 

 இன்னும் சற்று தூரத்தில் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம். பேருந்தில் இருந்து இறங்குவதற்காக கடைசி படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன். பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் போது அந்த குளந்தங்கரை திண்டில் உட்கார்ந்திருந்த இரண்டு பேர் எழுந்து வந்து சாலையோரம் நின்று கொண்டார்கள். எங்கள் ஊர்காரர்கள் போல தெரிந்தது. நெருங்கும் போது தான் இருவரில் ஒரு பெண்ணை அடையாளம் தெரிந்தது. சந்தியா. என் சொந்தத்தில் வரும் ஒரு மாமன் மகள். பேருந்து நின்றவுடன் நான் இறங்க, அவர்கள் இருவரும்


நிலையில்லா மீன்கள்

 

 அடர் மஞ்சள் பூக்களை சாலை எங்கும் யாரோ அள்ளி தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள் போல. வளைவுகள் அற்ற நீண்ட அந்த சாலை சாலையின் இருமருங்கிலும் நின்ற‌கொன்றை மரத்தில் இருந்து விழுந்திருந்த பூக்களை பார்க்கும் போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. ஒரு கையால் ஸ்டியிரிங்கை பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் அவளின் கரம் பற்றி இறுக்கினேன். திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை ஒன்றை வீசினாள். மஞ்சள் பூக்களை அள்ளி முகத்தில் வீசியதை போன்ற உணர்வு. அதிக வாகனங்கள்