கதையாசிரியர் தொகுப்பு: க.பார்வதிபாமா

1 கதை கிடைத்துள்ளன.

ஜன்னலும் கண்களும்

 

 எதிர்பாராமல் இழுக்கப்பட்ட போர்வை காலை நேரத்தில் எரிச்சல் தந்தது. அப்படி செய்த ஜீவனை இழுத்து வைத்து நாலு அû விடலாம் போல வேகம். லீவுநாளில்கூட தூங்கவிடாமல் என்ன இது. எழுந்து உட்கார்ந்து சுருங்கிக்கிடந்த போர்வையை மீண்டும் போர்த்திக் கொண்டு லேசான குளிருக்கு அடங்கிக் கொண்டு, சுருண்டபோது, சூடாக டீ குடித்தால் நன்ாக இருக்குமென்று தோன்றியது. பொட்டச்சி காலைல எழுந்து எறும்பு மாதிரி ஓடி ஆடி வேலை பார்க்க தேவல்ல. வீட்டிலேயே கிடன்னு காலை ஒடிச்சி வெச்சிருந்தா சரிப்பட்டிருக்கும்.