கதையாசிரியர் தொகுப்பு: கி.பென்னேஸ்வரன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

இணக்கம்

 

 சபேசன் கையை வைத்ததும் காத்திருந்தது போல “படக்” என்று திறந்து கொண்டது கதவு. சார்த்தி வைக்கவில்லை போலிருக்கிறது. கெüரி உள்ளேதான் இருக்கவேண்டும். வீட்டுக்குள் மெல்ல மெல்ல இருட்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. சோபாவின் மீதும் மற்ற இருக்கைகள் மீதும் புத்தகங்களும் துணிக்குவியல்களும் கண்டமேனிக்கு இறைந்து கிடந்தன. தரை முழுக்கக் குழந்தையின் விளையாட்டுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. ஓரிரண்டு இடங்களில் மூத்திரம் பெய்து துடைக்கப்படாமல் சிறு குட்டைகளாகத் தேங்கிக் கிடந்தன. எப்போதும் எதையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பவள் கெüரி.


கொசு

 

 துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (ஆறாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒவ்வொரு வருடம் உபரியாகிப் போனதால்) அரசு கலைக்கல்லூரியில் மூன்று வருஷங்கள் ஏறத்தாழ அதே வகுப்புத்தோழர்களுடன் காலம் கழித்ததால் எவ்வித மாற்றமும் அடையாது, இத்தனை வருஷங்களும் கிருஷ்ணமூர்த்தி என்னும் அவன் பெயர் அனைவராலும் வயது வித்தியாசமின்றி கொசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. கல்லூரியில், அவன் காதலிக்கலாம் என்று திட்டமிட்ட பெண்ணுக்கும் நண்பர்களால் கொசு என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டான். ஏற்கனவே, சிறுவயதிலிருந்தே அங்கே


முறையீடு

 

 ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. ரொம்ப நேரத்துக்கு சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் அளிப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்த மதராஸிகளிடம் அதிகம் வேலை காண்பிக்க முடியாது. தில்லியில் மத்திய அமைச்சரவையில் பதினைந்துக்கும் மேற்பட்ட மதராஸிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். தில்லியெங்கும் தடுக்கி விழுந்தால் ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மதராஸிகளாக இருக்கிறார்கள். இந்தக்


கிறுக்கல்கள்

 

 07 ஆகஸ்டு 2011 பெருமதிப்புக்குரிய நாராயணன் சார் அவர்களுக்கு வணக்கம். நீண்ட ஆண்டுகள் கழித்து நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தை மிகவும் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது. அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். டெல்லியில் என்னுடைய மகன் வீட்டில் ஆறுமாதங்களும் மகள் வீட்டில் ஆறு மாதங்களும் நான் மாறி மாறித் தங்குவதால் ஏற்பட்ட குழப்பம் இது. பல ஆண்டுகளாக என்னுடைய மகனும் மகளும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது கிடையாது. ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போக்குவரத்து கிடையாது. நான்