கதையாசிரியர் தொகுப்பு: கி.கார்த்திகேயன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!

 

 கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். பிப்ரவரி 13 நள்ளிரவு 11:59:55… 56… 57… 58… 59… 12:00:00. பீப் பீப்… பிப்ரவரி 14. காதலர் தினம். என் கல்லூரி விடுதி அறையில் நான் விட்டத்தைப் பார்த்துப் படுத்தபோது, ‘இந்த இரவு விடியாமலே இருந்துவிடக் கூடாதா?’ என்று இருந்தது. கண்களை மூடியவுடன் நீரலை பிம்பங்களாக என் அப்பத்தா முகம் தோன்ற, விரிந்தது அந்த ஃப்ளாஷ்பேக். 21 வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கரிசங்குளத்தில் நான் பிறந்ததும் இதே பிப்ரவரி


கற்றது காதல்!

 

 ”ஹலாவ் ரூம்மேட்… குட்மார்னிங்! மார்கழிப் பஜனைக்குப் போறேன். பூணூல் போட்டுக்கணுமா… மூணு விபூதிக் கோடு மட்டும் போதுமா? பக்கா கெட்டப்ல என்னைப் பார்த்ததும் ‘இவன் நம்ம ஆளு’ன்னு அவா எல்லாம் ஈஷிக்கணும். ‘இது நம்ம ஆளு’ பாக்யராஜ் மாதிரி டீல் பண்ணிரக் கூடாது. உங்களுக்குத் தெரியலைன்னா, யார்கிட்டயாவது கேட்டுச் சொல்றீங்களா?” ‘யார்கிட்டயாவது’ திலக் கேட்டுச் சொல்லச் சொன்னது அக்குளுக்கு உள்ளும் குளிரும் அதி காலை மூன்றரை மணிக்கு! பளீர் வெள்ளை வேட்டியில் அத்தனை அதிகாலைக்கு அதி உற்சாகமாக