கதையாசிரியர் தொகுப்பு: ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

வேலை(ளை) வந்துவிட்டது

 

 “ஏதாவது ஒரு பெரிய கம்பெனியில் கெமிஸ்டாகச் சேரலாம். இல்லையென்றால் கெமிகல் அனலஸ்டாகப் போகலாம். அதுவும் கிடைக்காவிட்டால் மெடிகல் ரெப்ரசன்டேடிவ் அல்லது லாப் அஸிஸ்டெஸ்ட். உருப்படியாக எந்த வேலையும் அமையாவிட்டால் இருக்கவே இருக்கிறது, ஏதாவது ஒரு கல்லூரியில் கெமிஸ்டரி டெமான்ஸ்ட்ரேட்டர் உத்தியோகம்.” இப்படித்தான் நினைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். நெல்லை எக்ஸ்பிரûஸ விட்டு இறங்கிய என்னை வரவேற்க எழும்பூர் ரயிலடிக்கு யாருமே வரவில்லை. இத்தனைக்கும் பொன்னையா மாமாவுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். கண்டிப்பாக ஸ்டேஷனுக்கு வரவேண்டுமென்று. பொன்னையா மாமா