கதையாசிரியர் தொகுப்பு: எம்.சீ.யே.பரீத்

10 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுகளும் நிஜங்களும்

 

 ”வாலிப காலத்து நெருங்கிய நண்பர்களுக்கு ஓர் அழைப்பு ,எனது கடைசி மகளின் திருமணம் எதிர்வரும்…..திங்கள் கிழமை நடைபெறுவதற்கான சூழலை இறைவன் ஏற்படுத்தியுள்ளான் அன்று எமது வீட்டில் நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்தில் தாங்கள் கலந்து கொள்வதை மிகவும் விருப்பத்துடன் எதிர்பார்க்கின்றேன்.(ஞானப்பிரகாசம்)” ஞானம் சார் என்று எல்லோரும் செல்லமாக அழைக்கும் ஓய்வுபெற்ற அரசநிதி நிர்வன முகாமையாளர் ஞானப்பிரகாசம் அவர்களின் வட்ஸப் மூலமான மகளின் திருமண அழைப்பிதழ் அது, இருந்தபோதும் நேரடியாக அழைப்பது மாதிரி இருக்காது என்று யாராவது நினைக்க கூடாது


ஒரு நாள் ஒரு பொழுது

 

 எனது விடுமுறையில் ஒரு காலைப்பொழுது அமைதியாக கடந்துகொண்டிருந்தது ஜன்னல்களை விரித்துவிட்டு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறேன் வீட்டின் முன்னால்… இரவெல்லாம் உறங்கிக்கொண்டிருந்த அந்தப்பாதை விழித்துவிட்டதுபோல் ஒரு பிரமை எனக்கு, பாடசாலைகளை நோக்கி படையெடுக்கும் மாணவமாணவிகளின் நடமாட்டம் ஒருபுறம், தனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு விட்டு தனது காரியாலத்திற்கு வேளைக்குசென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தோடு மோட்டார்சைக்கிளில் பறந்து செல்லும் பெற்றோர்கள், ஒருபுறம், இதனிடையே உறுமிக்கொண்டும் போட்டிபோட்டுக்கொண்டும் பறந்து செல்லும் அரச தனியார்பேருந்துகளின்அட்டகாசங்கள், அமைதியாக என் உடலை வருடிச் செல்லும் குளிர்காற்று..இனி…பத்திரிகை கண்ணோட்டத்தை பார்ப்பதற்காக


மிஸ்..யூ..டடா

 

 தனது இளையமகனை வழியனுப்பிவிட்டு பொங்கிஎழுந்த அழுகையுடன் கன்னத்தால் வழிந்தோடும் கண்ணீரைக்கூட அடக்க முடியாமல் வாடகை வாகணத்தில் ஏறிக்கொள்கிறேன், இனி நானும் மனைவியும் வீட்டில் ஆளையாள் பார்த்துக்கொண்டு சோகங்களை சுமந்தவர்களாக நாட்களை கணக்கிடவேண்டியதுதான். என்ன வாழ்க்கை இது.. எனது ஒரே ஒரு மகளும் கண்காணாத நாட்டில் பிள்ளைகுட்டிகளுடன்…ஊரில் நல்லதோ கெட்டதோ ”வாட்சப்” மூலம் அறிந்து கொள்ளவேண்டியநிலமை, தொலைத்தொடர்புகள் கைவிரித்தால் யாரிடம் போய்முறையிடுவது. மலைநாட்டின் ரம்மியமான காட்சிகளும்,உடலை வருடிச்செல்லும் குளிர்மையான காற்றும் ரசிக்கவோஉணரவோ முடியாதவனாய் பக்கத்தில் வெறுமையாகக்கிடக்கும் மகன் அமர்ந்து


களையெடுப்பு

 

 பதவி உயர்வுடன் கிடைத்த இடமாற்றக் கடிதத்துடன் அந்த வங்கியின் கடமைகளைபொறுப்பேற்பதற்காக வந்திருக்கின்றேன்,வாடிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன்கள்,மற்றும் நிலுவைகள் பற்றிய விபரங்களை பரிசீலித்துக்கொண்டிருக்கின்றேன், குறைந்தது இன்னும் மூண்றுநாட்களின் பின்புதான் முகாமையாளரின் ஆசனத்தில் அமரலாம் என நினைகிறேன்,அதன் பின்னர்தான் ஏற்கனவே கடமையாற்றிக்கொண்டிருக்கும் முகாமையாளரை அவருக்கு கிடைத்திருக்கின்ற கிளைக்கு சென்றுவிடுவார். காலை பத்து மணி “சார் சுகமாக இருக்கிறீர்களா”தேனீர்கப்புடன் என் முன்னால் நின்றுகொண்டிருந்தான்அங்கு சிற்றூளியனாக கடமையாற்றும் அருதயன், ”ஆ ..அருதயன் நீ எப்படி சுகமாக இருகிறாயா” பதிலிக்கு நானும் அதே வினாவை அவனிடம்கேட்டு


மனிதம்

 

 நாளை மறுநாள் நேர்முக பரிட்சைக்காக அரசவங்கியில் இருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது கல்முனயில் இருந்து கொழும்பிற்கு செல்ல வேண்டும். நண்பர்களிடம் சொல்லிப்பார்த்தான் ‘டேய் தொழில் இல்லாட்டி பறவாயில்லை உயிர்தாண்டா முக்கியம் கொழும்புக்கு போறதப்பற்றியே நினைக்காத” வீட்டில் அதைவிட மேலும் பல வார்தைகளை கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். ”மகன் தொழில் இல்லாட்டி எப்பசரி எடுத்துக்கொள்ளலாம் நீ எங்களுக்கு வேண்டும்” பெற்றோர்கள் ஒரு பிடியில் நின்றார்கள் “நான் யாருக்கு என்னதீங்கு செய்தன் எனக்கு எதுவுமே நடக்காது எனக்கு அல்லாஹ்


புரிதல்

 

 ‘நாளையுடன் 14 நாட்கள் முடியுது, நாங்கள் இங்கேயே வாடகை வாகனம் எடுத்து காலையில ஊருக்கு புறப்பிட்டு வாறம்’ மருமகன் தொலைபேசியில் சொன்னார் முன்பெல்லாம் வெ்ளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வந்தால் ஊரில் இருந்து விமானநிலையதுக்கு வாகணம் எடுத்துச்சென்று கூட்டிக்கொண்டு வரும் காலம் இந்த கொறோனாவால் தொலைந்து விட்டது ”இதோ நாங்கள் வாகணத்தில் ஏறிவிட்டோம் ஊருநோக்கி வந்துகொண்டிருக்கிறோம்” இது மூத்தபேரனின் கைபேசிஅறிவிப்பு இனியென்ன இப்போ நாங்கள்…கண்டியை கடந்துவந்துவிட்டோம் ..ஹசலக்க…பதியதலாவ…உகன…இப்படி கடந்து செல்லும் ஊராக நேரஞ்சல் செய்துகொண்டே இருப்பான் மருமகன்,மகள்,இரண்டுபேரன் இரண்டு


பிரிவு

 

 விமான நிலையத்தின் வாகணத்தரிப்பிடத்தின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கிறேன்,வாகணத்துள் எனது மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் இருக்கின்றார்கள்.இன்னும் ஒரு மணித்தியாலத்தால் அவர்கள் விமானத்திற்குள் இருந்தேயாகவேண்டும்,வருடத்தின் இருமுறை நடைபெறும் தற்காலிக பிரிவுதான் இருந்தும் மனம் ஏற்றுக்கொள்வதாக இல்லை, வியர்வை என்று பொய்சொல்லிக்கொண்டு கைக்குட்டையை நனைத்துகொள்கின்றேன், ஊரில் இருந்து அதிகாலை புறப்படும்போதே அழக்கூடாது என்று எனது மூத்தபேரனிடம் சொல்லியிருந்தாலும் சிலவேளைகளில் நானே சிறுபிள்ளையாகிவிடுவேனோ என்பதுபோல் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொள்கிறேன், அவன்… பேரன் ஓமானில் ஆண்டு இரண்டில் படித்துக்கொண்டிருக்கிறான்,அடுத்தது இரு பேத்திகள் “எனது ஊர் ஓமான் தான்


விதியின் பாதையில்

 

 வானொலியில் பொங்கும்பூம்புனல் போய்க்கொண்டிருக்கும் சுசான் கேற்றடியில்நின்றுகொண்டிருப்பான் ”காலை வெயிலில் நிறையவிட்டமின் “டி” இருக்கின்றது’ ஸ்கூலில் “ஹெல்த் மாஸ்டர் சொல்லியதை தன் மேனி இலேசாக சுடும்போது அவன் நினைத்துக்கொள்வான். இன்னும் ஒருபாடல் முடிவதக்குள் வந்துவிடுவாள் இப்படி அவன் நினைத்துக்கொண்டு சுவருக்கு ஒற்றைக்காலை உதை கொடுத்த வண்ணம் சாய்ந்து நிற்கும்போது- அவள் சுஹைறா –“இண்டைக்கு ஸ்கூலுக்கு போவதில்லை” என்றமுடிவுடன் வீட்டில் முகம் கழுவாமலே நின்றிறுக்கக்கூடும். குறைந்தது எட்டுமணி வரை நின்றிருப்பான். ஏனென்றால் இவனைக் கடந்துதான் அவள் ஸ்கூலுக்கு செல்ல வேண்டும்


நுரைகள்

 

 ஏதோ சிறைவாசம் போனமாதிரி ஜந்து வருடங்களை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு ஊர் வந்த என்னை அந்த சி ரி பி பஸ் விட்டு விட்டு செல்கின்றது. “எப்படியாவது நாட்டுக்குப்போகவேண்டும்”கடைசியாக விமானத்தில் ஏறி சீட்டில் அமரும் வரைஇருந்த அவா ஊரைக்கண்டதும் மேகக் கூட்டத்துள் தொலைந்த நிலவின் கதியாக… சீ ரி பி விட்ட இடத்திலிருந்து ஒரு முக்கால் மைல் சென்றால்.. கடைசியாக வீட்டில் இருந்து வந்த கடிதத்தில்…”வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது நம்மட வீட்டைப்போல ஒரு வீடு நமது


நாணயம்

 

 உதயமாகி உடலுக்கு மென் சூட்டை தினிக்கும் ஒரு காலைப்பொழுது சிலர் சூரியன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கக் கூடும்,சிலர் சூரிய உதயத்தைக்கண்டு தொழுகின்ற இஷ்றாக் தொழுகையில் ஈட்பட்டைருக்கக்கூடும். நான்..வேண்டப்பட்ட ஒரு நண்பனின் மகனைப்பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கிறேன். “இன்று லீவு போல” ”ஏன் சைக்கிளில் செல்கிறீர்கள்..” “மோட்டார் சைக்கிளுக்கு ஏதாவது பழுதா..” இப்படியான கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்லவேண்டியவனாக சென்று கொண்டிருக்கிறேன்,கேள்விக்குரியவர்கள் எனக்கு நன்கு அறிமுகமான ஊரார்கள் என்று சொல்வதைவிட நான் கடைமையாற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்று சொல்வதே மிகவும்