கதையாசிரியர் தொகுப்பு: உமா ஷக்தி

2 கதைகள் கிடைத்துள்ளன.

சித்திரச் சாலை

 

 வெகு நாள் கழித்து அந்த தொலைபேசி எண்ணை என் விரல்கள் அழுத்தியது. எவ்வளவோ காலமாகியும் அந்த எண் மனதிலிருந்து உதிர்ந்து போய் விடவில்லை. இணைப்புக் கிடைக்கவில்லை.மீண்டும் முயற்சித்தேன். இம்முறை எதிர்முனை நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்தது., பதிலில்லை. நம்பிக்கை இழந்து ,முயற்சியைக் கைவிடத் தீர்மானித்த தருணத்தில் எதிர்முனை உயிர் பெற்றது. ”ஹலோ’ ‘என்ற அந்தக் குரலில் காலம் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணியதாகத் தெரியவில்லை. வேண்டுமென்றே குரலை லேசாக மாற்றிக் கொண்டு ” நல்லா இருக்கியா ”என்றேன்.


காதல் பூக்கும் தருணம்!

 

 தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக, செல்வாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. அடையாறு டிப்போவுக்குச் சரியாகப் பத்து மணிக்கு வந்துவிடுவதாக ஃபோனில் செல்வா சொல்லியிருந்தான். மணியைப் பார்த்தவள் அழும் நிலைக்கு வந்து விட்டாள். ஒண்ணரை மணி வெயில் அவள் மென்மையான தேகத்தை சுட்டெரித்தது. கர்சீப்பால் வியர்வையை ஒற்றி எடுத்தாள். செல்வாவை நம்பி இப்படிக் கிளம்பி வந்தது தவறோ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்