கதையாசிரியர் தொகுப்பு: இளைய அப்துல்லாஹ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அஸ்மியாவின் பயணம்

 

 ”பெல்ஜியம் சென்ட்ரல் மிகவும் கம்பீரமாக இருந்தது. பரபரப்பான வேலை நேரம். பெல்ஜியம், கண்ணாடிக்குப் பெயர் போன இடம். பொதுவாக பெல்ஜியத்தில் இருந்துதான் பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்கள் உலகின் மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னுமொரு விஷயத்துக்கும் பெல்ஜியம் மறைமுகமாகப் பெயர்போன இடம். ஆள் கடத்தல், அகதிகள் கடத்தல்! இவற்றை தமிழர்கள்தான் முன் நின்று நடத்துகிறார்கள். ஆட்களைக் கடத்துவதன் சூட்சுமம் வலுவாகத் தெரிந்தவர்கள் தமிழர்கள். ஹார்பர்களுக்குப் போகும் கள்ளப்பாதைகள், கன்டெய்னர் யார்டுகளுக்கு எத்தனை வரிசை முள் கம்பி அடிக்கப்பட்டிருக்கின்றன,


தலைமுறை நிழல்கள்

 

 லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. ‘மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது. மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த


நிராகரிக்கப்பட்டவன்

 

 கண்களில் பயத்தோடு ஈட்டன் ஹவுஸ் அகதிகள் நிலையத்தில் அவன் நின்றுகொண்டு இருந்தான். அகதிகள் எப்போதும் பயத்துக்கு உரியவர்கள்தான். டோக்கன் நம்பர் கொடுத்து இருந்தார்கள். கையில் இருக்கும் நீல நிறத் துண்டில் இலக்கம் 14 என்று அச்சிடப்பட்டு இருந்தது. அவனுக்குச் சிரிப்பு வந்தது. 14-ம் திகதிதான் அவனது பிறந்த திகதியும். வாழ்க்கையில் 14-ம் திகதி, அவனுக்கு எந்த சுபிட்சத்தையும் கொண்டுவரவில்லை. வலது பக்கம் ஒரு செக்யூரிட்டி இருந்தார். அவர் ஆப்பிரிக்க நாட்டுக்காரர். இடது பக்கச் சுவரில், ‘நீங்கள் உங்கள்