கதையாசிரியர் தொகுப்பு: இரா.சோமசுந்தரம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

யாது உம் ஊரே!

 

 மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே வருவதில் வியப்பே இல்லை. அவள் நின்ற தளத்துக்கு மேலாகவும் அறுபது வயது கடந்தவர்கள் வீட்டுக்குள்ளேயே கிடந்தார்கள். இங்கு கடைசியாக அவள் வந்த தருணத்திலிருந்து இதுவரை வண்ணப் பூச்சு பெறாத கதவைத் தட்டும் முன்பாக தயங்கினாள். தளர்வுற்ற, தலைநரைத்த, தலைமுதல் கால் வரை கறுப்பு ஆடை அணிந்திருந்த பெண்மணி கதவை, சில அங்குலம் மட்டுமே திறந்து பார்க்கும்


மழை ஓய்ந்தது

 

 மழைப் பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ்மக்கள், எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. மனிதர்கள் இன்னமும் அப்படியேதான் வாழ்கிறார்கள். ஆரணி பஜார் முழுவதும் சேறாகக் கிடக்கிறது. அண்ணாசிலை துவக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலும் கால் வைக்க முடிவதில்லை. மக்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், செருப்பால் பின்வருபவர்மேல் சேறடிக்கிறார்கள்… கடையில் நின்றபடி மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் தூறல் போட ஆரம்பித்ததும் ஜனங்கள்


அழையா அழைப்புகள்

 

 யார் அந்த குமார்? எனக்குத் தெரியாது. இந்தப் பெயரைத் தவிர அவரைப் பற்றிய எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்வதிலும் விருப்பமில்லை. எவனோ ஒருவன் பற்றி நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்.? எனக்குத் தேவையும் இல்லை. ஆனாலும் அந்த குமார் என் வாழ்க்கையில் தேவையற்ற குறுக்கீடாக மாறியதற்காக என் அலுவலகத்தைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். இடம்மாற்றம் பெற்று பணியில் சேர்ந்ததும் எனக்கு ஒரு செல்போன் கொடுத்தார்கள். அடுத்த நாளே, அதை வாங்கிக் கொண்டு வேறு எண் கொண்ட