கதையாசிரியர் தொகுப்பு: இராம.முத்துகணேசன்

1 கதை கிடைத்துள்ளன.

கரகு பெரி ஜா

 

 சரியான காரணம் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வெளியேறிவிடு என்று மனசு சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் போலிருந்தது. இன்று நேற்றல்ல மூன்று வருடங்களாய் “வீட்டைவிட்டு, குடும்பத்தை விட்டுப்போ” என்று மனதின் குரல் என்னை நச்சரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் வீட்டைத் துறப்பதற்கான ஒரு காரணம்கூட என்னிடம் இல்லை. ஒரு குறையும் இல்லை. இதோ என்னை அணைத்தபடி தூங்குகிறாளே சுமதி, நான் காதலித்துக் கைப்பிடித்தவள், இவளைவிட அன்பும் கருணையும் ஏன் அழகும் இணைந்த இன்னொருத்தியைப் பார்ப்பது கடினம். எட்டு வயதில்