கதையாசிரியர் தொகுப்பு: இராம் சபரிஷ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மா ஒரு கலைமகள்

 

 பூஜை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.மக்கள் அங்குமிங்மாய் வரிசையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.ஒவ்வொரு முகத்திலும் தீராத ஒரு இறைத் தேடல் படர்ந்து இருந்தது. கவலைகள் அனைத்தையும் தன்மனத்தினுள் கடற்கரையோர மண்பொந்துகளில் தம்முட்டைகளைப் பதுக்கும் நண்டுகளைப் போல, புதைத்து வைத்துவிட்டு கோயில் வரிசையில் இறைவனடி சேர ஒரு மென்மையான அமைதியுடன் யட்சகர்கள் காத்திருந்தனர். ஒருவன் நெற்றியில் வெள்ளை நிறத்தில் விரளலவு தடிமன் கொண்ட மூன்று திருநீர்க் கோடுகளுடன்‌ வரிசையை நோக்கி நடந்து வந்தான்.அவன் நெற்றியிலிருந்த பட்டை அணிலின் முதுகில் செல்லும் அதே


கறி குழம்பு

 

 முத்துவேல் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மூலத்தெரு அண்ணாச்சி கடையில் விற்கப்படும் மரத்தூள் கலந்த காபி பொடி நிறத்திலும் அல்லாமல் மாநிறத்திலும் அல்லாத இடைப்பட்ட ஒரு இளம்பழுப்பு நிறத்தில் இருந்த பாட்டா செருப்பை அணிந்து கொண்டு தெருவில் நடக்கலானார்.சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக இருந்தமையால் முத்துவேலின் நிழல் தரையில் விழவில்லை எனினும் வெயிலின் தாக்கம் மண்டையை கிறுகிறுக்க வைத்தது.அவர் கையில் மனைவி தனம் கைகளால் பின்னப்பட்ட சிவப்பு நிற “வயர்” கூடையொன்றை வைத்திருந்தார்.அது முத்துவேல்‌ வீட்டவர்களால் பிரத்யேகமாக இறைச்சி