கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.பாஸ்கர்

14 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு நாள் டைரி..!

 

 “கொமாரூ…! ” “அம்மா.! ” “எந்திரி ராசா…போ. பல்லு விளக்கிட்டு வாப்பா..!” தினமும் காலை மூனரை மணிக்கு அம்மாவின் பாசக் குரல் கேட்டு எழுந்திருப்பேன்…! காலு சுருக்கி வெச்சு படுத்ததால லைட்டா முட்டியில நோவும்…! என்னை எழுப்பிட்டு அம்மா கீழ விரிச்சிருந்த சேலய சுருட்டி வெச்சிட்டு இந்த நேரத்திலயே வாச கூட்ட போயிருவாங்க..! வாசத் திண்ணையில அப்பா இந்த நேரத்திலயும் லொக் கு ..லொக்குனு இருமுவார் ..பாவம் ராத்திரியெல்லாம் இருமுனதுல அவரும் தூங்காம .. நாங்களும் சரியா


தோ.. தோ..!

 

 படு வேகமாக வந்து தெரு ஓரத்தில் சர்ரென திரும்பியது அந்த வண்டி..! தூக்கி வாரிப் போட்டு .. எழுந்து ஓரமா ஓடினேன் நான்..! அம்மா டக்குனு பயந்து போய்ட்டாங்க.! “உன்ன தெரு ஓரமா படுக்காதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்.! ஒழுங்கா இங்க வந்து ஓரமா மரத்தடியில படு”..ன்னு பயத்தோட அதட்டினாங்க…. ! எனக்கும் ரொம்ப பயமாப் போச்சி.. பேசாம சைலன்ட்டா ஓடிப் போய் அம்மா கிட்ட படுத்துகிட்டேன்..! அக்காவும் ஏற்கனவே அம்மா கூடத்தான் இருந்தா..! எனக்கு தூக்கம்


செக்ரட்டரி மாமா..!

 

 நான் சிவக்குமார்..மனைவி சித்ரா.. ஒரே மகன் கணேஷ்.. ஏழு வயது! எங்க வீடு இருந்தது அந்த அப்பார்மெண்டுல.. ! சொந்த ஊர் ராஜ பாளையம் பக்கத்துல .. செட்டில் ஆனது கோயமுத்தூர்..! அப்பா அம்மா தம்பிலாம் ஊர்ல இருக்காங்க. தோட்டம் இருக்கு.. எங்க அப்பார்ட்மெண்ட்ல மொத்தம் அறுபத்து நாலு வீடு..! எல்லாருமே மிடில் க்ளாஸ்.. அதற்கும் சிறிது மேற்பட்ட குடும்பங்கள்தான்..! எனக்கு நிறைய தெரிந்த முகங்கள் இருக்கிற குடியிருப்புதான்.. என்னடா தெரிஞ்ச முகம்னு சொல்ரானேன்னு யோசிக்காதீங்க… காலைல


பாட்டாளி வர்க்கம்..!

 

 நான் சின்ன வயசுல இருந்தது ஒரு சிமெண்ட் ஃபேக்டரியோட குடியிருப்புல..! அப்பாவுக்கு அங்க தான் வேலை..! எல்கேஜி முதல் பளளி இறுதியாண்டுவரை அங்கேயேதான் படிப்பு.! வீட்ல நான் தான் ஒரே ஆம்பளப் பையன் ஆரம்ப நாட்கள்ல.. ஏன்னா அண்ணன் மெட்ராஸ்ல பாட்டி வீட்ல இருந்தான்..! ஆறாவதுல இருந்துதான் எங்க வீட்டுக்கு வந்தான்..! என் அப்பா அம்மாவுக்கு எல்லா வீட்டு வேலைக்கும் நான்தான் எடுபிடி..! வீட்ல பெரிய தோட்டம் உண்டு.. கனகாம்பரம் ல இரு்து.. டிசம்பர் குண்டு மல்லி..சென்ட்டு


கஜேந்திர கன பாடிகள்.!

 

 நான் நாராயணன்..! நாணா.! வசிப்பது நாக்பூரில் .! அப்பாவுக்கு நாக்பூரில் உத்யோகம்.! பேரு தர்மராஜ்..! இந்திப் பள்ளிக்கூட வாத்தியார் .! அம்மா ஞானம் .! அப்பா அம்மாவின் ஒரே புள்ளையாண்டான் நான்.! அப்ப உத்யோகமா இருந்த பள்ளிக்கூடத்தில்தான் நானும் படிச்சேன்.! ஆனா சொந்த ஊரு மேலக்கோட்டைன்னு ஒரு கிராமம்..! தஞ்சாவூர் பக்கத்துல…. “மேப்புல தேடாதீங்க.. கிடைக்காது..” அவ்வளவு சி்ன்ன கிராமமா இருந்தாலும்.. கிராமம்னு சொன்னா உங்க கற்பனையில உதிக்கிற மாதிரி ஆறு, வாய்க்கா, தோப்பு,தொரவு ..ஒரு குட்டி


நான் சாரங்கபாணி..!

 

 நான் சாரங்கபாணி.! சின்ன வயசில இருந்தே அம்மா.. அப்பாலாம் “சாரி…சாரி”. ணே கூப்டுவா..! சின்ன வயசுல என்ன எல்லாரும் “சாரி.சாரி.”ன்னு கூப்டரச்சே.. “ஏன்..! நீங்க என்ன தப்பு பண்ணினேள்.?.எங்கிட்ட சாரி கேட்கரேள்?” னு ஜோக் அடிப்பேன் நான்.. குறைஞ்சது ஒரு ஆயிரம் தடவையாவது நான் இந்த ஜோக்க அடிச்சிருப்பேன்..அம்பது வயசு வரைக்கும் .. ஆரம்பத்துல எல்லாரும் சிரிப்பாங்க.. போகப் போக கடைசியா நானே சொல்லிட்டு நானே கெக்கபிக்கேனு சிரிக்கர்து வழக்கமா போய்டுச்சு…! திருச்சி லால்குடி பக்கத்துல மணக்கால்


ஆதி சிந்தனை..!

 

 (அக்கால சிந்தனைகள் தற்கால வாசகர்களின் வசதிக்காக இக்கால எழுத்துக்களில் விளக்கப் பட்டிருக்கின்றன..!) அந்த பெரிய மரத்தின் தடித்த கிளையின் மேல் படுத்திருந்தேன்..! சிலு சிலு வென காற்றில் இலைகளின் அசைவுகள்… வயிறு நிரம்பி இருந்ததால் சுகமான உணர்வு..! இப்போதுதான் ஒரு பெரிய மானை நானும் என் கூட்டத்தினரும் கட்டிப் பிரண்டு சண்டை போட்டு உண்டு முடித்தோம்..! தூரத்தில் எனது பெட்டைகள் .. குட்டிகளுடன் காரசாரமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பதை பார்த்தேன் .! அதோ அந்த பாறைக்கு நடுவே


ஜக்கம்மா..!

 

 “கோல்டன் குரோவ்..!” பெரிய நாயக்கன் பாளையத்தில் இருந்து கொஞ்ச தூரத்துல தள்ள்ள்ள்…..ளி உள்ள்ள்ள்…ள இருக்கிறது இந்த கேட்டட் கம்யூனிட்டி..! இருங்க ட்ரோன் கேமிராவ எடுத்து பறக்க விடறேன்..கழுகுப் பார்வையில பார்க்கலாம்.! இப்பல்லாம் இதான ஃபேமஸ்.? பெரிய நாயக்கன் பாளையத்தில இருந்து எல்எம்டபிள்யூக்கு நேர் எதிர் ரோட்ல போனா பத்து .. பதினோராவது கிலோமீட்டர்ல வரும் இந்த கோல்டன் குரோவ்.. அவ்வளவு தூரம் பறக்க ட்ரோன் கேமிராவுல சார்ஜ் இருக்குமான்னு தெரியல ..பார்ப்போம்…! போற வழியில இருக்கிற ரெண்டு


கொரோனா கிச்சன்..!

 

 இந்தக் கொரோனா எத்தனையோ பேருக்கு உலகம் முழுக்க எத்தனையோ விஷயங்களைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது…! அதற்கு எப்படி பயப்படுவது..? எப்படி கட்டுப்பட்டு நிற்பது..? எப்படி மீறுவது ..? ஏன்..!? எப்படி அதை அலட்சியப் படுத்துவது வரை.. !! எனக்கும் சொல்லித் தந்து கொண்டிருக்கிறது.. எப்படி நாக்கிற்கும் சிறிது ருசியாக சமைப்பது என்று…!! எப்படி வேளா வேளைக்கு வீட்டைப் பெருக்குவது.. ஸிங்க் கில் ரொம்பிக் கிடக்கும் பாத்திரங்களைத் தேய்ப்பது..!! சமையலறை மோடையைத் துடைப்பது.. !நாலஞ்சு நாள் பாத்ரூம் வாஷ்பேஸின்


பிறக்காத தந்தை..!

 

 சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்ப எத்தனித்தான் ரவி..! “என்னங்க .! வெளிய கௌம்பிட்டீங்களா? வெறும் வயத்தில போகாதீங்க.! கொஞ்சம் பழைய சாதம் கரைச்சு வெச்சிருக்கேன்.! சாப்டுட்டு போங்க என்றாள் மனைவி மல்லிகா.! மனைவியை ஏறிட்டு பார்த்தான் ரவி.. ! அப்போதுதான் படுக்கையில் இருந்து எழுந்து வந்திருக்கிறாள் போலும்.! கலைந்த தலை..! வாரி சுருட்டி முடிந்திருந்தாள்..! முகம் பள பளப்பாக..! பூசின மாதிரி இருந்தாள்..! ஒரு பூரிப்பில்..! மாசமாக இருக்கிறாள்..! நாலஞ்சு நாட்கள் முன்னாடிதான் தெரிந்தது..! முதல்