கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.கே.நாராயண்

1 கதை கிடைத்துள்ளன.

அவன் செய்த குற்றம்

 

 பச்சை ஜிப்பா நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தக பெருங்கூட்டத்திலும், அந்தப் பச்சை ஜிப்பாவினால் மட்டும் யாருடைய கவனத்திலிருந்தும் தப்ப முடியாது. சொக்காயும் தலைப்பாகையும் அணிந்த நாட்டுப்புறத்தார்கள், கோட்டும் தொப்பியும் தரித்த நகரப்புறத் தார்கள், உடலை மறைக்கத் துணியின்றி வெற்றுடம்புடன் காட்சி அளித்த பிச்சைக் காரர்கள், வண்ண வண்ணப் புடவைகள் உடுத்திய பெண்மணிகள் எல்லோரும் கடை களுக்கிடையே இருந்த குறுகலான பாதை வழியே நெருக்கியடித்துக் கொண்டு