கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.அபிலாஷ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்களைப் பற்றி மட்டுமான கதை

 

 சில வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சின்ன குழந்தை ஒரு பிளாஸா அல்லது மால் வாசலில் மிக்கி மௌஸ் வேடம் போட்டு நிற்பவனை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என அடம் பிடிப்பது போல அவர்கள் எழுத்தாளனை தம் வீட்டுக்கு அழைத்து வந்து கூடவே பராமரிக்கிறார்கள். அல்லது சற்று அருகாமையில் இருத்தி கவனித்துக் கொள்கிறார்கள். அல்லது சற்று தொலைவில் வைத்து சமாளித்துக் கொள்கிறார்கள். வினோத் என்னை அப்படித்தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். வினோத்துக்கு நான் பாதி நண்பன்,


வலி

 

 நான் ஒரு பத்திரிகையாளன். அவ்வளவாய் புத்திகூர்மை இல்லாத ஒரு மனிதன். அதனாலேயே என் அலுவலகத்தில் என்னை சில விசயங்களை எந்த கேள்வியும் கேட்காமல் ஒப்படைத்தார்கள். அவை பல சமயம் முக்கியமான பணிகளாகவும் இருக்கும். அடிக்கடி பத்திரிகை அறிக்கைகளின் மேல் நீங்கள் பார்க்கக் கூடிய கதிர்வேலன், மோகன்பாபு, சிவகுமார் போன்ற பல பெயர்களில் ஒன்று. நான் எழுதிய எதையும் படித்து இவன் யார் என்று வினவ மாட்டீர்கள், என்ன விசயம் என்று மட்டுமே தற்காலிக ஆர்வத்துடன் இமை தூக்குவீர்கள்.


தும்பிகள்

 

 வாழ்வின் இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்த கபாலீஸ்வரன் தன் கல்லூரி நாட்களை ஒரு முறை விரல் விடாமல் எண்ணிப் பார்த்தான். எரிச்சலோடு சிகரெட் புகையை இழுத்து விட்டுக் கொண்டான். சிகரெட் நுனி கனன்று தகித்தது. எதிரே உட்கார்ந்திருந்த பூனைக் குட்டி கூர்ந்து பார்த்தது. கல்லூரி உதவி நூலகர் கமலா கிருஷ்ணசாமி இதே போல் முறைத்துப் பார்த்து உப்பிப் போய் உட்கார்ந்திருப்பார். புத்தகங்களை பெற்றுச் செல்வதற்காக நீட்டும் போது அச்சு பிச்சென்று தும்முவார். “எனக்கு தூசு