கதையாசிரியர் தொகுப்பு: அ.மு.ஹாரீத்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பிறவி

 

 எழும்பூர் இரயில் நிலையம், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மதியவேளை. இன்னும் பண்டிகைகளின், தொடர் விடுமுறை தினம் துவங்காத நாட்கள் என்பதால், நெருக்கியடிக்கும் கூட்டமில்லை. பயணிகள், பிளாட்பாரத்தில் வந்து நின்றிருந்த இரயிலின் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த லிஸ்ட்டில் தங்களின் பெயரையும், இருக்கை எண்ணையும் சரி பார்த்துக் கொண்டும், தங்களின் உடமைகளோடும், மனைவி, பிள்ளைகளோடும், அல்லாடிக்கொண்டிருந்தனர். கான்ஸ்டபிள் குமரேசனுக்கு, அன்று ரோந்து சுற்றும் பணி. காலையிலிருந்தே, குமரேசனுக்கு மனசு சரியில்லை. ரோந்தில் மனமில்லாமல்தான் சுற்றிக்கொண்டிருந்தார். கூட்டத்திலுள்ளவர்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தவருக்கு, அங்கே யாருக்கும்


லூயீ

 

 பஸ் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. வெயிலின் வெப்பக் காற்று முகத்தில் அறைந்தது. பஸ்சில் இருந்தவர்கள் வெயிலின் உஷ்ணத்தை தம் கைகளால் விசிறிக் கொண்டும், பலர் தூங்கிக்கொண்டும் சமாளித்துக் கொண்டிருந்தனர். எனக்கு முன்னால் இருந்த இரண்டு இருக்கைகளிலும், உட்கார்ந்திருந்த அந்த நான்கு சிறுவர்களுக்கு சுமார் பதினாலு, பதினைந்து வயது தான் இருக்கும். அவர்களுக்குள்ளே எதைப்பற்றியோ பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. வெளியே துளியளவும் எந்த சத்தமும் இல்லாமல். ஆம், அவர்கள் அனைவரும் வாய் பேச முடியாத காதும் கேளாதோர். அவர்களின்


வெளிச்சம்

 

 வீட்டுக்குள் நுழைந்ததும், என் மனைவி நித்யா என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அது என் சித்தி எழுதியது. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, சொந்தங்களிடமிருந்து எனக்கு வரும் முதல் கடிதம். விஷயம் இரத்தினச் சுருக்கமாக எழுதியிருந்தது. பிரியமுள்ள சேதுவிற்கு, நலம். எப்படி இருக்கே? போன மாதம், நான் திரும்பவும் மதுரைக்கே வந்துவிட்டேன். உன்னைய பார்க்கணும் போல இருக்கு. நேரம் கிடைக்கும்போது மருமகளையும், குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு வா. – சித்தி மாலா. படித்ததும் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளுக்கு வார்த்தையில்லை. மொபைல்