கதையாசிரியர் தொகுப்பு: அ.முரளி

1 கதை கிடைத்துள்ளன.

பேருந்து நிலையத்தில் ஒரு நாள்

 

 பிச்சைக்காரனின் பார்வை தூங்குமூஞ்சி மரத்துக்கு அப்பால் பிரம்மாண்ட லாட்ஜுக்குப் பின்னால் வடிவமே அற்ற பெருங்கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் மேக நாயின் மேல் பதிந்திருந்தது. உடைந்து விழுந்து போன, ஒரு சின்னப் பையன் கைவைத்து ஒரே எம்பு எம்பித் தாவிக் குதித்துச் செல்லும் அளவுக்கு உயரமான, காம்பவுண்டு சுவருக்குப் பின்னால் வெங்காயத் தாமரைகளுடன் தேங்கிக் கிடந்த நீர்ப் பரப்பிற்கு அருகில் உறுமியபடி பன்றிக் கூட்டம் சுற்றிக் கொண்டு இருந்தது. பக்கத்தில் சைக்கிள்களுக்கு டோ க்கன் போட்டுக்கொண்டிருந்தார்கள். டோ க்கன்