கதையாசிரியர் தொகுப்பு: அம்புஜவல்லி தேசிகாச்சாரி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தானம்

 

 ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி கர்மம் நடக்கும் வீட்டிலும் இருக்குமோ? ஆனால் இது கல்யாணக் கருமம் தானே? யாருக்கும் துக்கம் துவண்டு போகவில்லை. ”தாத்தாவுக்கு அரவிந்த் மேல அலாதி ப்ரியம். அதனால்தான் அவன் வந்திருக்கும்


க்ரீன் கார்டு

 

 “பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என் உடலைச் சிலிர்க்க வைத்தது. ஆயிரம்தான் தேசம் தேசமாகப் பறந்தாலும் நம் தாய்மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்னைச் சிறு குழந்தை போலத் துள்ளவைத்துவிடும். ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போலாகுமா?’ சென்னை நகரம் நான் போன வருடம் விட்டுச் சென்றபடியே இருந்தது. உறவினர்கள், அண்டை அயலாரின் விசாரிப்புகள், வேலைக்காரப் பெண்மணியின் உதவியுடன் வீட்டை