கதையாசிரியர் தொகுப்பு: அண்ணாதுரை சி.என்.

29 கதைகள் கிடைத்துள்ளன.

1938-1940 – ஒரு வசீகர வரலாறு

 

 முன்னுரை: வரலாறு என்றால், மண்டிலம், மன்னர் . போர், என்று மட்டுமே இருக்க வேண்டுமென்று சட்டம் உண்டா? இல்லை. அகவே 1938-40 வரை, உள்ள காலத்திலே நடைபெற்ற ஒரு குடும்ப வரலாறு, இங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது; அரச குடும்பமல்ல, குடிபடைதான்! ஆதாரம்: இந்த வரலாற்றுக்கு மூலம், ஆதாரம் உண்டா ? வரலாறுகளுக்குக் கல்வெட்டு, காவியம், கட்டுக்கதை, புதை பொருள், என்று பல ஆதாரங்களைத் துணை கொள்வதுதானே வாடிக்கை. அதுபோல், இந்த பிரத்யேக வரலாற்றுக்கும் மூலம், ஆதாரம் உண்டு. அவை,


பிரமநாயகம்

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாடித் தாழ்வாரத்தில் கிடந்த சசி சேரில் சாய்ந்து கிடந்தார், பண வீக்கம் என்று பட்டப் பெயர்பெற்ற பிரமநாயகம் பிள்ளை. அவர் சிந்தனையிலே ஆழ்ந்திருந்தார். காபி டம்ளரைக் கையிலேந்தியபடியே வந்து சேர்ந்தாள் பர்வதம்மாள்-அவரின் தர்ம பத்தினி! “ஏனுங்க! இப்படி முகம் வாடிக் கிடக்கிறீங்க!” என்ன யோசிக்கிறீங்க! என்று வழக்கமான கேள்வியின் மூலம், அன்றைய பேச்சைத் தொடங்கி வைத்தாள்! “என்னடி, பர்வதம் நான் என்ன செய்வதென்று


அவள் முடிவு

 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அவள் மஞ்சளையும், குங்குமத்தையும், இழந்தவள்தான். ஆனால் அழகாகத்தான் இருந்தாள். அவள் பெயர் அமிர்தம்தான்! ஆனால் விஷமாகக் கருதப்பட்டாள். அவள் ‘அமிர்தம்’. ஒரு சீமானின் செல்வப் புதல்வி. அந்த சீமான் ஒரு சனாதனி, அவளுக்கு மணமான அண்ண ன் ஒருவன் இருந்தான். அவளுக்குச் ”சிவபெருமானின் திருவருளை” முன்னிட்டுத்தான், சோதிடர்கள் குறிப்பிட்டபடி கன்னியா லக்கினத்தில் கலியாணம் நடந்தது. பாவம்! அவளுடைய கணவன் கலியாணமான ஒரு வருடத்திற்குள்ளாகச்


எங்கும் அவன்

 

 (1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சோளக் கொல்லைதானேடா! முக்கா ஏக்கரு. உங்க அப்பனுக்கு.” ‘ஆமாங்க! மூணு ஏக்கர் இருந்ததுங்க முன்னாடி அம்மாவுக்கு சீக்கு வந்தப்ப போயிடுச்சி…” “உங்க ஆத்தாளும்தானே போயிட்டா…” “வருஷம் மூணு ஆகுதுங்க. அம்மா காலமாயி. அப்பாரு அப்ப இருந்து பித்துப் பிடிச்சவர்போலக் கிடக்கறாரு…” “சரி, சரி! இப்ப முக்கா ஏக்கர் பேர்லே, ‘மூணு நூறு கேக்கறியே கடன் – எப்படிடா கொடுக்கறது.” “பாடுபட்டு வயத்தைக் கட்டி,


இவர்கள் குற்றவாளிகளா?

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு 11 மணி இருக்கும். காய்ச்சிய இனிய பாலைக் கரத்தேந்திய வெள்ளிப் பாத்திரத்திற் கொண்டு, பள்ளியறை நோக்கி மெள்ள மெள்ள நடந்து வந்தாள் கோகிலம். அவள் வரவைக் கண்ட அமுதன், அயர்ந்து நித்திரை செய்பவன் போல் தூக்கங் கொண்டிருந்தான். “இதோ பால் பருகுங்கள்!” என்று நீட்டினாள், அவள். அச்சொல் அவன் காதில் ஏறுமா? உண்மையில் தூங்குபவனை எழுப்பி விடலாம். வேண்டு மென்றே தூங்குபவனை


செங்கரும்பு

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் காளையை இருநூறு ரூபாய் கொடுத்து அவன் வாங்கியபோது, கிராமத்துப் பெரியவர்கள் அவன் ‘செட்டாக’க் குடித்தனம் செய்து, பணம் மிச்சம் பிடித்து, நல்ல காளை வாங்கினான் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வேலை வெட்டியைக் கவனிக்காமல் இருக்கும் உழவர்களையும், கிராமத்துப் பெரியவர்கள், கண்டித்துப் புத்திமதி கூறும்போது, சின்னப்பனை தான் உதாரணம் காட்டிப் பேசுவார்கள், அவன் புத்திசாலி, கெட்டிக்காரன், வீண் ஜோலிக்குப் போகமாட்டான், சளைக்காமல்


குற்றவாளி யார்?

 

 “விபசாரியா?” – கோபத்துடன் இக் கேள்வி பிறக்கிறது. “ஆமாம்” – சோகம் கப்பிய குரலில் பதில் வருகிறது. கேள்வி கேட்டவர் திகைத்து நிற்கிறார். அவர், வெட்கத்தால் அவள் நிலைகுலைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார். பதிலோ அவ்விதமில்லை. அவள் பேச்சை நிறுத்தவில்லை. “ஆமாம் – ஏன் என்றா கேட்கிறீர்கள்?” – அவள் குரலிலே சோகத்தையும் சிதைத்துக்கொண்டு, நகைச்சுவை வெளிவந்தது. “இல்லை” – பயத்துடன் பேசலானார் அவர். “அந்தக் கேள்வியைக் கேட்டுவிடாதீர்!” – அவள் பேசுகிறாள் – பேச்சா அது!


பிரார்த்தனை

 

 “அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே விளையாட்டுத்தானா? வந்து சாமியைக் கும்பிடடி! கண்ணைத் திறந்து பாரடியம்மா; காமாட்சி என்று சேவிச்சுக்கோ காலையிலே எழுந்ததும், கனகாம்பரமும் கையுமா இருக்கிறாய். மாலையிலே மல்லிகைப் பூவுடன் மகிழ்கிறாய். இப்படியே இருந்துவிடுமா காலம்? வா, வா, விழுந்து கும்பிடு”. அன்னம், சின்னஞ் சிற்றிடையாள், சேல்விழியாள் சிவந்த மேனியாள், சிரிப்புக்காரி, உலகமே அறியாதவள். தாயம்மாள், அன்னத்தைப் பெற்றவள். வயதானவள். உலகின் மாறுதலைக் கண்டவள், உத்தமர்கள் உலுத்த ரானதையும் கண்டிருக்கிறாள்; ஓட்டாண்டிகள் குபேரரானதையும் கண்டாள். தனது


பாமா விஜயம்

 

 “பாமா மிகப் பொல்லாதவள்! படித்த பெண் ஆகவே, அம்மா எதைச் சொன்னாலும் குற்றங் கண்டுபிடிக்கிறாள்” என்று அந்த ஊர் குளத்தங்கரையில் குப்பம்மாள் கூறினாள். “ஆனால், பாமா, நல்ல அழகு! தங்கப் பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள்! தகப்பனுமில்லை பாபம்! அவர்கள் சொத்தைப் பார்த்துக்கொள்ள, பாமாவிற்குப் புருஷன் எந்தச் சீமையிலிருந்து வருவானோ தெரியவில்லை” என்றாள் அன்னம்மாள். “பாமாவின் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு, சினிமாவிலே, யாரது, அந்த தேவிகா ராணியோ என்னமோ பேர் சொல்கிறார்களே, அதே கவனம்


நாக்கிழந்தார்

 

 “தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது. மயக்கமாக இருக்கிறது. ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்.” பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா, தங்குவார்! அதோ பாருங்கள். அவர் எவ்வளவு கவலையுடன் காரில் உட்காருகிறார்.