கதையாசிரியர் தொகுப்பு: அகில்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வெளியில் எல்லாம் பேசலாம்

 

 நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது. ‘என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்கு போகவேணும் என்டனீங்கள்….. என்ன வெளிக்கிட இல்லையோ?’ ‘மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்’ என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். ‘இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கு……’ என்னுள் நினைவுகள் ஓட அவசரமானேன். ‘சரி நான் போயிற்றுவாரன் சுதா’ என்று


கூடுகள் சிதைந்தபோது…

 

 கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது…..? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள்.


உறுத்தல்

 

 அன்று சனிக்கிழமை. மதிய தூக்கத்துக்குப் பின் எழுந்த இளங்கோ, நேராக சமையல்கட்டுக்கு வந்தான். மனைவி சுமதி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன சுமதி! எல்லாம் ரெடியா?’ ‘நாங்க எல்லோரும் ரெடிங்க. நீங்க தான்……’ ‘இன்னும் பத்து நிமிஷத்தில் நா ரெடியாயிடுவன்’ சொல்லி விட்டுப் போன இளங்கோ, சொன்னதை விட விரைவாக வந்தான். வராண்டாவில் இளங்கோவின் அம்மா காமாட்சி சோகமாக உட்காந்திருந்தாள். அப்பொழுது தேனீர் கப்புகளோடு வந்த சுமதியைப் பார்த்து இளங்கோ கேட்டான், ‘அம்மாவின் உடுப்புகள் எல்லாம் எடுத்தாயிட்டா?’ ‘இதோ