கதைத்தொகுப்பு: சுபமங்களா

38 கதைகள் கிடைத்துள்ளன.

ஓராண் காணி

 

 (1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த நாலஞ்சு நாளைக்குள் தேனு இப்படி அன்னியோன்னியப் பட்டுப் போய்விடுவோம் என்று அவன். என்னிக்கும் நினைத்துப் பார்த்தவன் இல்லை. எல்லாம் புதுசாய், க்ஷண நேரத்தில் மனசு அப்படியே ஒட்டிப் போகச் செய்யும் சொகம். அவளுக்கு மட்டுமா? அவள் புருஷன் மனக சில்லாப்பில் குளிர்ந்து போயிருந்தது. அவளிடம் எல்லாத்தையும் தான் எடுத்துக் கொள்ள உரிமை கொடுக்கச் சுண்டு விரல் மொத்தத்தில் மஞ்சக் கயித்தைக் கட்டிக்


சிதைவு

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராத்திரிக்கு ஒரு வாசனையுண்டு. தாழம்பூ. அணைத்த காடா விளக்கு. ‘சரட் சரட்’ என்று வார்ச் செருப்பு ஒலிக்க, அரவம் ஒழிந்த தெருவில் யாரோ குடித்துக்கொண்டு போகிற சுருட்டு … தெரு விளக்கு மட்டும் எரிகிறது. வீட்டில் விளக்குப் போய் ஒரு மணி நேரமாகிறது. எல்லாச் சத்தத்தையும் பெருக்கி எடுத்துப் பூதம் காட்டுகிற ராத்திரி… சைக்கிள் ரிக்ஷா வந்து நிற்கிற சத்தம்…தடதடவென்று யாரோ இறங்குகிற


உள் வாங்கும் உலகம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மா கடிதம் எழுதியிருந்தாள். ஆறாவது கடிதம். பத்து நாட்களுக்குள் தொடர்ச்சியாய் ஆறு கடிதம். கடிதத்தைப் பார்க்கிறேன். அம்மாவின் முகம். நீரில் மிதப்பது மாதிரி மிதக்கிறது. கிணற்றுத் தண்ணி கற்கண்டு மாதிரிக் கிணற்றுத் தண்ணி. அதில் அம்மாவின் முகம் பொலிவுற்றுத் தெரிகிறது. பார்த்துக் கொண்டே இருந்தேன். படிக்கவில்லை . படிக்க குரல் உயர்கிறது. உலர்ந்து துவண்டு போன அவளின் உதடுகள் படபடக்கிறது. அம்மாவிற்குப் பயம்.


அங்குசம்

 

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் மீண்டும் சலித்து நின்றாள். பின்னே என்ன அவர்கள் இருவருக்கும் இருந்த பிரச்சனை சுதந்திரம்தான்! அது இல்லாமல் இருந்தால் அவனும், அவளும் இந்நேரம் ஒன்று சேர்ந்து குடும் பாமாகி குழந்தைகள் பெற்று வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப் பார்கள், இரண்டு பேருமே அதில் சளைத்தவர்களில்லை. வாழ்க்கையின் பொருள் சுதந்திரம்தான் என்று சாதித்தார்கள். அதுதான் சுதந்திரமற்றுப் போனார்கள், அந்த பஸ் ஸ்டாண்டில்தான் எத்தனை நேரம்


ஒத்தையடிப் பாதையிலே…

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஜோசப்…டே ஜோசப்…” “யார்றா ?” “நான்தான்!” “நான்தான்னா?” “பூமணி!” “அட! பூமணியா…” “பூமணி! எப்படியிருக்கடா…?” “இருக்கேன்.” “லைனுக்குப் போகலையா பூமணி?” “போவணும். உன்னைத்தான் தேடிட்டிருக்கேன்.” “எதுக்கு?” “ஒரு விசயம், ரொம்ப ரொம்ப முக்கியமானது!” “சொல்லேன்.” “நீ எங்கே இருக்கேனு தெரிய லீயே …!” “இங்கதான். இங்க பாரேன். அட இங்க பார்றானா… எங்கயோ பாக்குறே! பூமணி இங்க… நேரா இங்க பாரேன்…” “குரல்தான்


எலியம்

 

 கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு


மௌனமாய் ஒரு தீர்ப்பு

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உறுமிக்கொண்டும் இருமிக் கொண்டும் ஓடிய அந்த தகர டப்பா வேனை அந்த வெள்ளை அம்பாஸிடர் கார் முன்னால் ஓடிப் போய் நின்று வழிமறித்தது. நிற்க முடியாமல்கூட அந்த வேன் மோதி விடலாமே என்ற பயம்கூட சிறிதும் இல்லாமல் அநாவசியமாய் நிறுத்தப்பட்ட அந்த காரிலிருந்து ஆறடி உயர மனிதர் முதலில் வெளிப்பட்டார். ‘எவன்டா இவன்’ என்று கேட்கப்போன வாலிப டிரைவர். அந்த மனிதரைப் பார்த்


பாலம்

 

 நிதானமாகப்பரந்துகொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்கு மான இடை நிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள். காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது. தூரத்தில், பின்னால் தாமரைக்குண்டு விலக்கில் மட்டும் சில்லறை யாய் சில விளக்குகள். முன்னால் தூரத்தில் மாங்குளத்தில் விளக்கேதும் வெளித் தெரியா வண்ணம் சுற்றிலும் அடைத்துக்கொண்டு வாழைத் தோட்டங்கள், தென்னந் தோப்புக்கள். நிலவொளியில் காங்கிரஸ்காரன் போட்ட தார் ரோடு மெல்ல மினுங்கியது. ஏராளமான நொடிகள். இரண்டு பக்க வயல்காரர்களும் ஏதோரோட்டில்


யார் நான்?

 

 சுப்ரமணியசாமி என்ற தன் பெயரையும், முழு முகவரியையும் லெட்ஜரில் எழுதி கையெழுத்திட்டு விட்டு, லாட்ஜ் பையன் திறந்துவிட்ட அறைக்குள் நுழைந்தபோது – அவனுள் ஓர் இறுக்கம். மனதில் பதற்றம். ஒரு குற்ற உணர்ச்சி. ஷர்ட்டைக் கழற்றி ஹாங்கரில் மாட்டி, கைலியை எடுத்து உடுத்திக் கொண்டு, பேண்ட்டை உருவினான். கட்டிலில் சாய்ந்தான். மின் விசிறி காற்றின் இரைச்சல். ‘யாராவது பாத்திருப்பார்களோ’. உள் தடுக்கம். இந்த லாட்ஜ், அப்படிப்பட்ட ‘ஒரு மாதிரி’. இவனும் அதே ‘ஒரு மாதிரி’, சபலத்தில், வங்கியில்


சீதாவின் கல்யாணம்

 

 நடுச்சாமத்தில் வசந்தியின் கல்யாணம் நடந்து முடிந்தது. கல்யாண விமரிசையைப் பற்றியோ நடந்த கடம்பரத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவுக்குத் தடபுடல். மாப்பிள்ளை பொறியியல் வல்லுனர். அவருடைய அப்பா பெரிய்ய பணக்காரர். அவரை சம்மத்தி ஆக்கிக்கொள்ள நீ நான் என்று போட்டி இருந்தது. ஆனால் அவரோ வசந்தியைத்தான் தனது மருமகளாகத் தேர்ந்தெடுத்தார். அப்படியான ஒரு கல்யாணத்தில் செலவுகளுக்கும் கொண்டாட்டங் களுக்கும் கேட்கவா வேண்டும். இந்த வசந்தியின் கல்யாணத்துக்கும். நம்முடைய கதைக்கும் அதிகத் தொடர்பு இல்லை. இன்னும் சொல்லப் போனால்,