கதைத்தொகுப்பு: கிரைம்

310 கதைகள் கிடைத்துள்ளன.

விமான நிலையம்

 

 கோயமுத்தூர் விமான நிலையம் ! அப்பொழுதுதான் சிங்கப்பூரிலிருந்து வந்திறங்கிய விமானத்திலிருந்து பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்யும் இடத்திற்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சுங்க இலாகா அதிகாரி விமல் பரபரப்பாய் இருந்தார். காரணம் இன்னும் சற்று நேரத்தில் ஒரு பட்சி அவரிடம் வகையாக மாட்டிக்கொள்ள போகிறது. இப்பொழுதே அவரது இதய துடிப்பு குதிரையின் வேகத்தில் இருந்தது. கண்டிப்பாய் அந்த கடத்தல் ஆசாமி அவரிடம் மாட்டிக்கொள்வான் என்பதில் அவருக்கு நூறு சதவிகிதம்


காவல்

 

 மல்வேட்டி ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணணாடி அணிந்திருந்த அந்தப் பெரியவர் காவல் நிலையத்தில் நுழைந்தார். மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே இன்ஸ்பெக்டர் காட்டிய நாற்காலியில் அமர்ந்து மேல் துண்டினால் விரல்களில் போட்டிருந்த மோதிரங்களை துடைத்து விட்டுக் கொண்டார். ‘என்ன விஷயம்?’ – வினவினார் இன்ஸ்பெக்டர். ‘ஒண்ணுமில்லே சார். என் பேர் கனகலிங்கம். நாங்கள் விவேகானந்தர் காலனியிலே புதுசா வீடு கட்டி குடி போயிருக்கோம். நம்பர் 13, நாலாவது தெரு. வர்ற ஏப்ரல் பத்திலேருந்து பதினைஞ்சுவரை ஹைதராபாத்துலே என்னோட


அந்திநேரத்து நிஜங்கள்

 

 செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச் செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச் சதாகாலம் ஒம்சிங்ரங் அங்சிங் கென்று மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால் வேதாந்தச் சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய் உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால் உத்தமனே சகலசித்துக் குதவி யாமே. -சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதம். கதவு தட்டப்பட்டச் சத்தம் கேட்டு மும்முரமாக கதை எழுதிக்கொண்டு இருந்த நான் நிமிர்ந்தேன். “போய்விடு” என்று


ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்

 

 முல்லையூற்று ஒரு அழகிய சிற்றுார். மேற்குத் தொடர் மலையை ஒட்டி அமைந்திருந்த மலையடிவாரத்துக் கிராமம். திருநெல்வேலி ஜில்லாவுக்கே உரிய இயற்கைப் பொலிவு பூரணமாக விளங்கும் இடம். மர்ந்தோப்பும் தென்னந் தோப்புமாக ஊரைக் சுற்றி ஒரே பசுமை மயம். அங்கங்கே பிரிந்து ஒடும் சிறு சிறு வாய்க்கால்கள். அவைகளுக்கு வேலி பிடித்தாற்போல அமைந்திருக்கும் தாழம் புதர்கள், வான மண்டலத்திற்குக் துரண் நாட்டியது போன்ற பெரிய மருத மரங்கள். வயல்வெளிகளில் இடையிடையே தாமரைப் பொய்கைகள். இன்னும் எவ்வளவோ! இப்படி அழகிய


நடக்கும் என்பேன், நடக்கும்!

 

 போன வருஷ அக்டோபரில் என்னை உங்களுக்குத் தெரியாது. நான் அப்போது பிரபலமே இல்லை. பெட்டிக் கடையில் சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தால், யாரும் கைகாட்டிப் பேசிக் கொண்டதில்லை. நானே காசு கொடுத்து எடுத்துக் கொண்டபோது கூட என்னை ஒழுங்காய் யாரும் புகைப்படம் எடுத்ததில்லை. இப்போது என்னடாவென்றால் பேப்பரைப் புரட்டினால் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். வாக்கிங் போனால், அடடா, நீங்க நடந்து வாக்கிங் போலாமா?” என்று காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு ட்ராப் செய்கிறார்கள். எங்கள் பத்திரிகையில் ஒரு தொடர்


திருடியது யார்?

 

 “என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார். குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார்


பெட்டி

 

 பல்லவனுக்காக கால் கடுக்க நின்றிருந்த போதுதான் பஸ் ஸ்டாப்பில் இருநத அந்தப் பெட்டி விமலின் கண்களை உறுத்த ஆரம்பித்தது. சிவப்புக் கலரில் வர்ணம் பூசப்பட்டு, சதுரமாய் தெர்மாஸ் போல தலையின் கைப்பிடியுடன் இருந்த அதன் கவர்ச்சி அவனை ஈர்த்தது. “மாமா! அதைப் பார்த்தீங்களா…?” என்றான் உற்சாகத்துடன் சேது அதற்குப் பதில் சொல்லாமல் நரசிம்மராவாய் (உம்மென்று) நின்றிருநதார். அயோத்தியோ, பஞ்சாப் பிரச்சனையோ, புதிய பொருளாதாரக் கொள்கையோ அதற்குக் காரணமில்லை. ஹர்சத் மேத்தாவும் காரணமில்லை. எத்தனை வெட்டிவிட்டாலும் படுவா வந்து


இன்றே கடைசி

 

 டிரைவ் – இன் ஹோட்டலில் கார்கள் ஒழுங்கில்லாமல் அணி வகுத்திருந்தன. காருக்குள் குடும்பமே ஐக்யமாகியிருக்க. வெயிட்டர்கள் பணிவோடு அவர்களிடம் ஆர்டர் எடுததுக கொண்டிருந்தனர். புல்வெளியில் டேபிள்கதள் நிரம்பியிருந்தன. ஹோட்டலைச் சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்தன. அந்தப் பகுதி முழுக்க மெல்லிய இருட்டு. கார்டனில் அங்கங்கே ராட்சஷ டிவிகள்! அவற்றில் வெள்ளைக்காரிகள் ஜட்டி பிராவோடு பீச்சில் ஓடிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் ஊஞ்சலாடின சறுக்கின. வாடிக்கையாளர்களெல்லாம் பணம் போவது பற்றி கவலைபடாமல் உல்லாசமாயிருக்க மரம் ஒன்றின் கிளையில் அமர்ந்திருந்த அவனுக்கு மட்டும் டென்ஷன்!


லேப்டாப் எனும் பொட்டி

 

 நடு இரவை தாண்டி இரண்டு மணி நேரம் ஓடியிருக்கும், அந்த இருளில் “திக்”திக்” மனம் துடிக்க கையில் ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தான் மாரி. அப்பா..இதை எடுக்க மாலையிலிருந்து காத்திருக்கிறான். “பாவி பயல்” இந்த பொட்டியை விரித்து வைத்து என்னனென்னவோ செய்து கொண்டிருக்கிறான். மூடி வைக்க காணோம். அவன் அறைக்கு நேர் எதிர்புறம் இருந்த பள்ளத்தில் படுத்து படுத்து இவனையே பார்த்து கொண்டிருந்ததில் கழுத்து வலிதான் வந்தது. அடச்சே போ என்று அந்த


பீகேயும் தானியல் ஆசானும்

 

 மனசு நல்லாருந்தா மந்திரமும் தேவையில்லை ஒரு மயிருந் தேவையில்லை தெரியுமா…காலை கொஞ்சம் நீட்டி நீட்டி போட்டு நடந்தார் பீகே. பின்னால் தானியேல் மாமாவும் சந்திரனும் பீகேவின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தம்பிடித்து நடந்தார்கள். பீகே வயசில் மூப்பு என்றாலும் கெத்துப் பிடித்து நடந்தார் என்றால் ஒரு மாதிரிப்பட்டவன் அவருடைய நடைக்கு ஜோடி போட முடியாது. பழய ரோட்டில் வடக்கமாற நடந்து கொண்டிருந்தார்கள். பீகே சொன்னார் “தானியேலே குறைஞ்சது இரண்டாயிரம் டெப்பாவது போடணும். நடக்க நடக்க கேஸ்