அவர் ஒரு நெறிப்படுத்தும் அறிஞர்; வழிகாட்டி; வாழ்வின் அனைத்துச் சவால்களையும் சமாளிப்பதற்கு வழிகாட்டுவதில் வல்லவர்; உலகெங்கும் அவர் புகழ் பரவியிருந்தது.
அவரது கூட்டத்திற்கு ஒரு நகரத்தில் ஏற்பாடாகியிருந்தது. குறித்த நேரத்தில் கூட்டம் தொடங்கியது. அரங்கம் நிரம்பி வழிந்தது. கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் வெறியுடன் இருப்பவர்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் அறிஞர் வந்தார். பேச்சை ஒரு கேள்வியுடன் ஆரம்பித்தார்.
“”உங்களில் யார் யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள்” என்று கேட்டதுதான் தாமதம், அங்கிருந்த அனைவரும் கைகளை உயர்த்தி எழுந்து நின்றனர்.
அறிஞர் கூறினார், “”பின் ஏன் இங்கு உட்கார்ந்துகொண்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள்? கடுமையாய் உழைத்திட உடனே புறப்படுங்கள். இருக்கும் ஒவ்வொரு விநாடியும் உங்கள் வெற்றிக்குத் தேவை! புறப்படுங்கள்!” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
– வெ.சத்தியசீலன், கிழவன் ஏரி. (பெப்ரவரி 2013)