ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளுக்கு ஏழைகள் எல்லாம் எப்படி இருப்பாங்க ன்னு காமிக்கிறதுக்காக ஒரு கிராமத்துக்கு கூப்டுட்டு போனார். ரெண்டு நாள் அந்த குடிசையில ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க.
திரும்ப வரும் போது, அப்பா கேட்டார், ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே?
மகன் சொன்னான் ”ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு ஆனா அவங்க கிட்ட நாலு இருக்கு…நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல் கார்டன்ல நடுவுல இருக்கு..ஆனா அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது… நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம்..ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது…நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது…ஆனா அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.. நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம்..ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க.. நம்மள பாதுக்காக்குறதுக்கு நம்மள சுத்தி சுவர் மட்டும் தான் இருக்கு…ஆனா இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க..
அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வச்சதுக்கு நன்றி அப்பா”னு சொன்னான்.
அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.