ஒருநாள் மாலைப்பொழுதில், அக்பரும் பீர்பாலும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘வழியில் ஏதேனும் ஒரு பொருளைக் கண்டு எடுத்தால் அதில் எவ்வளவு தருமம் செய்வீர்?” எனக் கேட்டார் அக்பர்.
‘நான்கில் ஒரு பகுதியைக் கொடுத்து விடுவேன்’ என்றார் பீர்பால்.
சிறிது தூரம் சென்றதும், ஒரு ரூபாய் கிடைத்தது பீர்பாலுக்கு ! ஆனால் அதன் மதிப்பு முக்கால் ரூபாய்தான். அதைக் கண்ட அக்பர், ”நீர் அதிர்ஷ்டசாலி, கண்டெடுத்த ஒரு ரூபாயிலிருந்து நான்கின் ஒரு பகுதியை தர்மம் செய்துவிடும்’ எனக்கூறினார்.
‘என்ன செய்வது? அரசர் பெருமானே, −றைவனுக்கு என்மீது நம்பிக்கை −ல்லை போலும்; தருமம் செய்ய வேண்டிய கால் ரூபாயையும் அவன் முன்னரே எடுத்துக் கொண்டு விட்டானே” என்றார் பீர்பால்.
”அது எப்படி?” என்று கேட்டார் அக்பர்.
‘நீங்களே பாருங்கள் ! முக்கால் ரூபாய் மதிப்புடைய பழைய ஒரு ரூபாயை அல்லவா −றைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான் ! ” என்றார் பீர்பால்.
பொருளாதார விஷயத்திலும் பீர்பால் நிபுணர் என்பதை உணர்ந்து பாராட்டினார் அக்பர்.