வரதட்சணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 3,138 
 
 

மாலை நேரம் இனியனும் மாளவிக்காவும் கடல்கறையோரத்தில் அமர்ந்திருந்தார்கள்.இருவர் மனதிலும் குழப்பம்,ஆயிரம் கேள்விகள்,ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை,சற்று நேரத்தில் இனியன் வாயை திறந்தான்,அன்று நம் வீட்டில் கேட்டதை,பெரிது படுத்திக் கொள்ளாதே என்றான் அவளுக்கு சுள் என்று தலைக்கு ஏறியது கோபம்,உங்கள் வீட்டில் எங்களை என்ன நினைத்தார்கள்?பணம் காய்க்கும் மரம் என்று நினைத்தார்களா?இவ்வளவு பணப் பேய்களாக இருக்கின்றார்கள் என்றாள்.இது கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் இனியனுக்கு வாயை மூடிக்கொண்டான்.

காரணம் அவன் பெற்றோர்கள் மாளவிக்கா குடும்பத்தில் கேட்ட வரதட்சணை அதிகம் கார்,நகை,இது போதாதகுறைக்கு கல்யாண முழு செலவும் உங்களுடையது என்றால்,யாருக்கு தான் கோபம் வராது,கடந்த சனி கிழமை மகன் விருப்பபட்டு விட்டான்,என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்,பெண் வீட்டுக்கு போக சம்மதம் தெரிவித்த அவனுடைய பெற்றோர்கள்,அங்கு போய் இவ்வளவும் கேட்டதால் வந்த பிரச்சனை,தற்போது மாளவிக்கா முன் தலை குனிந்து நிற்கிறான் இனியன்

மேலும் அவள் தொடர்ந்தாள்,ஏன் நானும்,நீங்களும் ஓடிப்போய் கல்யாணம் பன்னியிருந்தால்,யாரிடம் கேட்டிருப்பார்கள் வரதட்சணை,நாங்கள் தான் முட்டாள்கள்,பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்யனும் என்று நினைத்தது தப்பா போய்விட்டது, இப்படி உங்கள் குடும்பம் பணப்பேய்கள்!என்று முன்பே தெரிந்திருந்தால்,உங்களை இழுத்துக்கிட்டு ஓடிப் போயிருப்பேன் என்றாள் அவள்.

மாளு அவசரப்படாதே!என் குடும்பத்தைப் பற்றி எனக்கு முன்பே நன்றாகவே தெரியும் என்றான் இனியன்,அப்படி தெரிந்த நீங்கள் ஏன் என்னை லவ் பன்னுனீங்கள் கார்,பங்களாவுடன் எவளையாவது லவ் பன்னி கட்டியிருக்களாமே?என்றாள் மாளவிக்கா,ம்..உன் அழகில் மயங்கி தான் என்றான் இனியன்,இதற்கு மட்டும் குறைச்சல் இல்லை என்று முறைத்தாள்,ஏய் முறைக்காதே,நான் சொல்வதை அமைதியாக கேள் என்றான் அவன்

அப்பா அம்மா அந்த காலத்து மனிதர்கள்,ஒரே மகனை பெற்றெடுத்த வீராப்பு!நாங்கள் சொல்வதை தான், பெண்வீட்டார்கள் கேட்க்க வேண்டும் என்ற மிதப்பில் பேசிவிட்டார்கள்.அதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க்கிறேன் என்றான்,மன்னிப்பு கேட்டால் அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்தாகிவிடுமா என்றாள் மாளவிக்கா,என் குடும்பத்தில்,என்னை அப்பா,அம்மா, அண்ணா மூவரும் திட்டி தீர்க்கிறார்கள்,எங்கே போய் இப்படி ஒரு குடும்பத்தை பிடித்த என்று,இது எனக்கு தேவையா என்று அலுத்துக்கொண்டாள் அவள்.

அப்பா,அம்மா லிஸ்டில் என்னையும் சேர்த்து விடாதே,நான் ரொம்ப நல்லவன் என்றான் இனியன்,ஆமா ஆமா அன்றே பார்த்தேனே உங்கள் நல்லதை,பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருந்ததை என்றாள் மாளவிக்கா,எனக்கு அவர்களிடம் வாதாடி பழக்கம் இல்லை,கொஞ்சம் அடங்கி போறப்பையன்,அதற்காக அவர்கள் கேட்டது எல்லாம் சரி என்று வாதிடவில்லை, மற்றவர்களின் முன் அவர்களை எதிர்த்துப் பேச மனமில்லை எனக்கு என்றான் இனியன்

ஆகவும் நல்ல பையனாக தான் இருக்கீங்கள்,அதுவே நம் காதலை பிரித்து விடும்போல என்று உதட்டைக் கடித்துக்கொண்டாள் மாளவிக்கா,அவன் பதறிப்போனான் அப்படி சொல்லாதே உன் வாயால் என்று அதட்டினான்,சரி இப்ப என்ன செய்வது என்றாள் மாளு,அவர்கள் காதல் திருமணத்தையே வெறுக்கிறவர்கள்,நம் காதலை ஒத்துக்கொண்டதே பெரியவிடயம்,அவர்கள் கேட்டதை கொடுத்து,சமாளித்துவிட்டால்,பிறகு எந்த பிரச்சினையும் வராது என்றான் இனியன்,என்ன விளையாடுறீங்களா? என்றாள் கோபத்துடன் மாளவிக்கா,பொறு பொறு நான் உங்களை கொடுக்க சொல்லவில்லை,நானே கொடுக்கிறேன் என்றான்.அவள் ஆச்சிரியமாகப் பார்த்தாள் அவனை,ஏன் உனக்கு நம்பிக்கை இல்லையா என்றான் இனியன்,அது எப்படி சரிவரும் என்றாள் மாளவிக்கா.

அதுவெல்லாம் சரிவரும்,நீ பேசாமல் இரு,நான் எனது கம்பனியில் பணத்தை பிரட்டி காரை வாங்கிவிடுவோம், அதை என் மாதச்சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்கள். எனது சேமிப்பில் பணம் இருக்கு,அதில் நகையும் கல்யாண செலவையும் முடித்து விடலாம்,எப்போதும் என் பெற்றோர்கள் என் சம்பள பணத்தையோ,சேமிப்பையோ கேட்டதில்லை,அதனால் இதுவெல்லாம் அவர்களுக்கு தெரியவராது நீ பயப்பிடாதே என்றான் இனியன்

இதை ஒத்துக்கொள்ள மாளவிக்கா மனம் தயங்கியது,அவன் அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்கவைத்தான்.அவள் அறை மனதோடு ஒத்துக்கொண்டாள்.இதை எப்படி நம் வீட்டில் ஒத்துக் கொள்ளவார்கள் என்றாள் அவள்,அந்த கவலையை நீ விடு,வரும் சனிகிழமை நான் உன் வீட்டுக்கு வந்துப் பேசி சமாளிக்கிறேன்,அடம் பன்னினால்,தலையில் இரண்டு குத்தி,சம்மதிக்க வைக்கிறேன் என்றான் அவன்,ஏன் குத்த மாட்டீங்கள் என்றாள் சிரித்துக்கொண்டே மாளவிக்கா,சரி நேரம் ஆகிவிட்டது,என்று இருவரும் எழுந்துகொண்டார்கள்.

அன்று சிறிது தாமதமாகவே வீட்டுக்கு வந்தாள் மாளவிக்கா,அம்மா அவளை எதிர்ப்பார்த்து வாசலில் நின்றாள்.ஏன் இவ்வளவு நேரம்?என்றாள்,நிஷாவை கண்டேன் வரும் வழியில்,அவளைப்பற்றி தான் உங்களுக்கு தெரியுமே!வாயை திறந்தால் மூடமாட்டாள்,என்று கூறிக்கொண்டே அறைக்குள் சென்றுவிட்டாள்.கடந்த சனிக்கிழமையில் இருந்து இனியனை பற்றி வாயே திறப்பதில்லை வீட்டில்,அதனால் தான் இப்போதும் பொய் சொன்னாள்.

இனியன் சனிகிழமை மாளு வீட்டுக்கு வந்தான்.மாளுவின் குடும்பம்,முதலில் முகம் கொடுத்து கதைக்கவில்லை அவனிடம்,அவன் எதிர்பார்த்தது தான்,அவன் அவர்களிடம் பக்குவமாக கதைத்து புரியவைத்து சம்மதிக்க வைத்தான்.இதில் பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும்,மாளுவிக்காக சம்மதித்தார்கள். தங்களிடம் தற்போதைக்கு கொஞ்சம் பணமும்,நகையும் இருக்கு,கார் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை என்றார்கள் அவர்கள்,நீங்கள் கார் வாங்கும் பணத்தை நாங்கள் தந்து விடுவோம் எங்களுக்கு பணம் கிடைக்கும் போது என்றார்கள்,அதை அப்போது பார்களாம்,நம் வீட்டுக்கு போன் பன்னி,கல்யாணத்திற்கு நாள் குறிக்க சொல்லுங்கள் என்றான் இனியன்,மாப்பிள்ளைக்கு அவசரம் தான் என்றார்கள் அவர்கள்,பின்ன இருக்காதா இரண்டு வருடம் தவம் இல்ல இருக்கிறேன்,என்று மனதில் நினைத்துக் கொண்டான் இனியன்

அவன் சொன்னப்படியே,கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள்.இனியன்,மாளவிக்கா சந்தோஷ உச்சத்தில் இருந்தார்கள்.அவர்களின் நண்பர்களுக்கு அவர்களே கல்யாண காட் கொடுக்கசென்றார்கள்,நல்ல ஜோடி பொறுத்தம் என்று அவர்கள் காதுபடவே சொன்னார்கள் பலர்.அவர்களின் கல்யாணமும் இனிதே நடந்து முடிந்தது.இருவரும் ஹனிமூன் போக திட்டம்,அவர்களின் முதலிரவும் அங்கு வைத்துக்கொள்ள நல்ல நாள்,நேரம் பார்த்து முடிவாகியது.

இருவரும் கல்யாணம் முடிந்த மறு நாள்,அவர்கள் புதிதாக வாங்கிய காரில்,தேவையானவற்றை எடுத்துக் கொண்டு,இரு குடும்பத்தாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு பயனமானார்கள்.போகும் வழியெல்லாம் பல கனவுகள்,கற்பனைகள்,ஒரு வளைவில் இனியன் காரை திருப்பும் போது,எதிர்பாரா விதமாக எதிரே வேகமாக வந்த லாரியில் கார் மோதியது,இருவரும் தூக்கி எரியப் பட்டு கீழே இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்,கூட்டம் கூடியது,யாரோ ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்ல,வேகமாக வந்த ஆம்புலன்ஸில் இருவரையும் ஏற்றும் போதே அவர்களின் உயிர் பிரிந்து விட்டது,லாரி ஓட்டுனருக்கு பலத்த காயம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அந்த இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் இனியன், மாளவிக்கா குடும்பத்திற்கு தகவல் அனுப்பினார்கள்.அதை அறிந்த இரு குடும்பமும் ஆடிப்போனார்கள்.செய்வது அறியாமல் தவித்தார்கள்,வரதட்சணை என்ற பெயரில் காரை வாங்கி இரண்டு உயிர்களையும் பறி கொடுத்து விட்டோம்,என்று இனியன் குடும்பம் குற்ற உணர்ச்சியால் புழுவாய்துடித்தார்கள்.இந்த வேதனையும் வலியும் இனி அவர்கள் வாழ்நாள் முழுவதும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *