நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 8,307 
 

குண்டுகளின் வெடியோசை காதைப்பிளக்கின்றது, மல்ரிபரல் எறிகணையில் இருந்தும் ஆட்டிலெறி எறிகணைகளும் வீழ்ந்து வெடித்து கொண்டு இருக்கின்றது. பலர் உடல் சிதறிப் பலியாகியவண்ணம் இருக்கின்றார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கயங்களுடன் எங்களைக் காப்பாறுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தியவண்ணம் இருக்கின்றனர். சுதா ஒரு ஆலமரத்துக்கு பின் ஒழிந்து கொண்டு “கடவுளே கடவுளே..” என வேண்டிக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் விழ்ந்து வெடித்த எறிகணையின் சிதறல் துண்டு அவன் வயிற்றப்பகுதியை பதம் பார்த்தது “நான் காயப்பட்டிட்டன் … நான் காயப்பட்டிட்டன்.. என்னை காப்பாற்றுங்கள் என கத்தினான்.

“என்ன இவன் நிதிரிரையில் புலம்புகிறான்” என தாய் கோமதி அவனை “டேய் எழும்பட எழுமணியாச்சு சும்மா கனவு கண்டது காணும்”

திடுக்கிட்டு எழும்பிய சுதா “ அட நான் கண்டது கனவா.. முள்ளிவாய்க்காள் கொடுமை நடந்து நாழுவருசமாச்சு ஆனாலும் கூட கனவில் கூட மனுசர கொல்லுது..” என எண்ணிக்கொண்டு எழுந்தான்.

எழுந்த சுதா குளித்து விட்டு தாயார் செய்த தோசையினை அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்ல ஆயுத்தமானான்.

சுதா இப்ப யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு அச்சகத்தில தான் வேலை பார்க்கிறான். சம்பளம் சும்மா பரவாயில்லை வருமானத்துக்கு ஏற்றமாதிரி தனது பொற்றோரை இவனே வைத்துப் பார்க்கிறான்.

இவன் வேலைசெய்யும் அச்சகத்தில் இவன் தான் எல்லா வேலையினையும் இழுத்து போட்டு செய்வான். இவன் மீது முதலாளிக்கு நல்ல மரியாதை அதுமட்டுமன்றி அங்க வேலை செய்யிற எல்லோருக்கும் சுதா ஏன் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறார் என தங்களுக்குள் கதைத்துக்கொள்வதுண்டு அச்சகத்துக்கு வாற புறக்கர் மார் கூட “சுதா நல்ல இடத்தில பொம்பிள்ளைகள் இருக்கு நீ சரியென்றாள் சொல்லு இப்பவே எல்லாம் முடிக்கலாம்” என சுதாவை வற்புறுத்துவார்கள்.

“என்ன அவசரம் எல்லாம் ஆறுதலாக செய்வம்” என நக்கல சொல்லி எல்லோருடைய வாயையும் அடைத்து விடுவான்.

சுதாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை எல்லோருக்கம் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

ஒரு நாள் சனிக்கிழமை கரண்ட இல்லை வேலைக்கு வந்த பிள்ளைக்ள வீட்ட பேயிற்ரின சுதாமட்டும தனியாக இருந்தான்.

அடிக்கடி அச்சகத்துக்கு வருகின்ற சுஜிதா வந்தாள்.

“என்ன சுதாண்ணை தனிய நிக்கிறியல்” என கேட்டவண்ணமே உள் வந்தாள்.

“கரண்ட் இல்ல அது தான் மற்றாக்கள் எல்லோரும் வீட்ட போட்டின நான் ஒரால பார்த்துக்கொண்டு நிக்கிறன்;;;;;;” என்றான்.

“சுதாண்ணை நான் ஒன்று உங்கள கேட்பன் நீங்கள் யாரிட்டையும் சொல்ல கூடாது” என இழுத்தாள் சுஜிதா.

என்னத்த கேட்க போகிறாள் என மனதக்குள் சினந்துகொண்டு “பரவாயில்லை சொல்லு சுஜிதா” என்று கூறினான் சுதா.

“நான் உங்கள ஒரு வருசமா காதலிக்கிறன் உங்களத்தான் திருமணம் செய்து கொள்ள அசைப்படுறன் தயவு செய்து மாட்டன் என்றுமட்டும் சொல்லிடாதங்கோ” என்று சடார் என சொல்லி முடித்தாள்

சுதாவுக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை சுதா யாருடனும் இன்ன மாதிரி எண்ணத்துடன் பழகியதில்லை இப்படி சொன்னவுடன் ஒன்றும் புரியல…

“சுஜிதா நீ என்ன விளையாடுறிய என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் ஒன்றும் தெரியாம சும்மா ஆசைய வளத்துக்காதே சொல்லிட்டன்” என சுதா கோபத்துடன் பேசினான்.

“சுதாண்ணை நீங்க என்ன சொன்னாலும் நான் என் முடிவை மாத்திக்கிறதா இல்லை” என கண்கலங்கி நின்றாள் சுஜிதா.

“ஒன்றும் கதைக்காத எனக்கு ஏற்கனவே திருமணம் முடிஞ்சு போச்சு நான் சிரித்து கதைத்தவுடன் நீ இப்படி எண்ணத்துடன் வந்து நிற்க கூடாது”.

“சும்மா கதை விடாதிங்க இப்படி சொன்ன போல நான் என்ன நம்பிடுவன” என்றாள் சுஜிதா.

“யாரும் நம்பமாட்டாங்க உண்மை தான் மனதுக்குள்ள சோகத்தை வைச்சுக்கொண்டு வெளியில சிரிச்சு கதைச்சவுடன இப்படித்தான் பலரும் நினைக்க கூடும் ஆன எனக்கு திருமணம் நடந்து ஐந்து வருசமாச்சு” என்றாள் சுதா.

“என்ன ஐஞ்சுவருசாம போச்சா”? எங்க உங்க மனைவி பிள்ளைங்க எங்க”? என அடைத்த குரலில் கேட்டாள் சுஜிதா.

“மனைவி பிள்ளைகள் எல்லாம் போச்சு” என பெருமூச்சு விட்டுக்டுக்கொண்டு தனது கதையினை சுஜிதாவுக்கு சொல்லத் தொடங்கினான் சுதா.

“ வன்னியில் இரண்டாயிரத்திஎட்டாம் ஆண்டு போர் உச்ச கட்டத்தை அடைந்திருந்த போதுதான் எனக்கும் பவித்திராவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் செய்த நாள் முதல் இறுதி கட்டம் வரை பல இடப்பெயர்வுகள், பல துன்பங்கள் இருந்தாலும் நானும் பவித்திராவும் அன்பாக இருந்தோம். இப்படித்தான் இடம் பெயர்ந்து போய் புதுக்குடியிருப்பில் இருக்கேக்க பவித்திரவின் தம்பி செல்லடியில செத்திட்டான்.

எங்களுக்கு நடந்த துன்பங்கள் சொல்லி புரியாது அடுத்த கட்டமாக இரணப்பாலையில் கொஞ்சநாள் இருந்தோம் அப்ப பவித்திரா நாலுமாசம் கர்பமாக இருந்த இருந்தாலும் எமக்கு ஒரு வாசிசு வரப்போகிறது என்ன சந்தோசத்தில எந்த துன்பமும் பெரிசாத் தெரியல.

இப்படியே கடைசிய முள்ளிவாய்களுக்கு வந்து சேர்ந்திட்டம் பவித்திர நிறைமாத கர்பணியாக இருந்தாள் நாள் ஒரு நாள் முள்ளிவாய்க்காள் ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு இருந்த போது எங்க அம்மா அப்பா இருந்த இடத்தில கொஞ்சம் கடுமைய செல்கள் வீழ்ந்து வெடித்த வண்ணம் இருந்தது.

அப்ப பவித்திர சொன்னாள் நான் இங்க தனிய இருக்கிறன் என்று நினையாதிங்க என்னை போல பல பேர் இஞ்ச இருக்கின நீங்கள் ஒருங்க மாமா மாமிய பேய் பார்த்துக்கொண்டு வாங்க என்றார்ள்.

ஆவசரமாக நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து அம்மா அப்பாவ அவதானமாக பங்கருக்குள்ள இருங்கோ என்று சொல்லிட்டு பவித்திரட்ட ஓடிப்போனேன் நான் போய் கொண்டு இருக்கும் போது ஆஸ்பத்திரி பக்கம் ஓரே செல்லடியாக இருந்தது பயந்து கொண்டு ஓரு மாதிரி பதுங்கி பதுங்கி கொண்டு ஒரு மாதிரி ஆஸ்பத்திரிக்கு போயிற்ரன் அங்க உடல்கள் சிதறி கால் வேறு கைவேறா ஓரே இரத்த வெள்ளமா கிடந்தது.

பவித்திராவ நான் எல்ல இடத்திலும் தேடிப்பார்த்தேன் ஒரு இடத்திலும் பவித்திர காணல அதில கிடந்து அழுதழுது தேடினேன் கடசிவர அவள கணவே இல்லை சிதறிய தசைக்குவியலுக்குள் என் மனைவியும் பிள்ளையும் கண்டுபிடிக்கவே முடியல.

அந்த நொடியே நான் இறந்திருக்க வேண்டும். ஆனா நான் செத்துப்போனா என்ர அம்மா அப்பாவுக்கு யாருமே இல்லை கடசிக் காலத்தில அவங்கள நிம்மதியப் பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் தான் இன்றும் உயிருடன் இருக்கிறன்”. என தனது சோகக்கதையினை கூறி முடித்தான்.

இப்படியெரு சோகம் சுதாவின் மனதுக்குள் இருக்கும் என சுஜிதா எதிர் பார்க்கவில்லை.

“சுதாண்ணை என்னை மன்னியுங்கோ நான் உங்கள தப்பா புரிஞ்சு கொண்டிட்டன் உங்கட நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியே நடக்கும்” என கூறிவிட்டு சென்றாள்.

சுஜிதா போனபின்பு சுதா எதிர்பார்த்துக்கொண்டிருந்த செல்வன் வந்தான்.

“என்னடா செல்வன் இவ்வளவு நேரமாப் போச்சு என்ன செய்தனி இவ்வளவு நேரம்” என்னான் சுதா.

“அதுவந்தட இரனைமாநகரில் இருந்து வாறது என்றாள் என்ன சும்மாவா றோட்டும் சரியில்லை அது தான் நேரமா போச்சு அது இருக்கட்டும் வாட வாட மீன் பழுதாய்ப் போகப் போகுது வேளைக்கு வீட்ட போவம்:” என்றான் செல்வன்.

சுதா அச்சகத்தை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிலில் இருவரும் சுதாவின் வீட்டுக்கு சென்றனர்.

“டேய் செல்வன் அடிக்கடி வாற பிள்ளையொன்று கதைத்துக்கொண்டிருக்கேக் சட்டென்று என்னை விரும்பிறாள் என்டிட்டாள் எனக்கு ஒன்றும் செய்ய முடியல பவித்திராவின் கதையினை அவளுக்கு சொன்னான் அதுதான் மனம் ஒருமாதிரி இருக்கு, இந்த கொடுமைகள் நடந்து நாழுவருசமா போச்சு ஆனா ஒன்றையும் மறக்க முடியல” என்றான் சுதா.

“ஏன்ர விசற அவளுக்கு சரியென்று சொல்லி இருக்கலாம் நீயும் இப்படியே இருந்து என்ன செய்யப்போகிறாய்…” என்றான் செல்வன்.

என்னடா மச்சான் எல்லாம் தெரிஞ்ச நீயுமா என்ன புரியல..?” என சுதா ஆதங்கத்துடன் கேட்டான்.

சுதாவும், செல்வனும் வீட்ட போன போது அங்கு பவித்திராவின் அப்பா வந்திருப்பதை கண்டான்.

“மாமா எப்படி சுகம்” என விசாரித்த படியே உள்ளே சென்றான்.

நல்ல மீன் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு எல்லோரும் கூடி கதைத்துக் கொண்டிருந்த போது பவித்திரவின் அப்பா.

“தம்பி எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போறியல் எங்கட வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ராஜாவின் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் உங்கள பற்றி சொன்னோடன அவைக்கும் நல்ல சந்தோசம் நீங்க சரியென்றாள் மற்ற ஏற்பாடுகள் பற்றி கதைக்கலாம்” என்று இழுத்தார்.

சுதா சற்று நேரம் யோசித்து விட்டு “மாமா நீங்க என்னபற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் அவையள வேற இடத்தில மாப்பிள்ளையை பார்க்கச் சொல்லுங்க” என்றான் சுதா.

“தப்பா நினைக்க வேண்டாம் தம்பி உங்க நினைச்ச எங்களுக்கு கவலையாக இருக்கு” என்றார்.

“பரவாயில்லை மாமா என்னால் பவித்திராவ மறக்க முடியாது அவள் எண்ணுடன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் இதை தயவுசெய்து எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்” என சொன்னான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *