தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 4,627 
 
 

அத்தியாயம்-29 | அத்தியாயம்-30

லதா படத்தைப் பார்த்து ‘லதா,நான் ரெண்டு கோடி ரூபாய் ‘வேத சம்ரக்ஷண நிதி’க்கு குடுத்து, உன் தாத்தா குடுத்தது போல ஒரு ரசீது வாங்கிக் கொண்டேன்” என்று சொல்லி சந்தோஷப் பட்டான்.

வயது அதிமாக ஆனதாலும்,இந்த நாள் வரைக்கும் ரொம்ப மிகவும் சொகுசாக வாழ்ந்துக் கொ ண்டு வந்து இருந்ததாலும்,ரமேஷூக்கு காசி குளிர் ஒத்துக் கொள்ளாம,அவனுக்கு நெஞ்சில் சளிக் கட்டிக் கொண்டு இருந்தது.அதை ரொம்ப பாராட்டிக் கொள்ளாமல் ரமேஷ் அவன் வழக்கம் போல் இருந்து வந்தான்.ஐந்து நாள் கழித்து அவனுக்கு ஜுரம் வந்தது.‘ரிசப்ஷனுக்கு’ போன் பண்ணி ஒரு டாக்டரை வரச் சொல்லி அவன் உடம்பைக் காட்டி,அவர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்தான் ரமேஷ்.அந்த மாதிரைகளால் அவன் உடம்பு தேவலை ஆகாமல் இன்னும் ஜுரம் இருந்துக் கொண்டு இருந்தது.அதனால் ரமேஷ் பக்கத்திலே இருந்த ஒரு பொ¢ய ‘நர்ஸிங்க் ஹோமில் ‘அடமிட்’ ஆனான்.அந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ அவன் பெட்டில் படுத்து வந்து,அந்த டாக்டர் கொடுத் த ‘இஞ்செக்ஷனை’போட்டுக் கொண்டு,’ஆண்டிபயாடிக்ஸை’யும் சாப்பிட்டு வந்தான்.ஆறு நாட்கள் கழித்து அவன் ஜுரம் நார்மலுக்கு வரவே,அந்த ‘நர்ஸிங்க் ஹோம்’ ரமேஷை ‘டிஸ்சார்ஜ்’ பண்ணினார் கள்.ரமேஷ் அந்த ‘நர்சீங்க் ஹோமுக்கு’ பணத்தை ‘செக்காக’ கொடுத்தான்.

‘நர்சிங்க் ஹோமை’ விட்டு தான் இருந்த வந்த ஹோட்டலுக்கு மறுபடியும் வந்து ‘ரெஸ்ட்’ எடு த்து வந்தான்.அவன ஹோட்டலுக்கு வந்து ஒரு மாசத்துக்கு மேலே ஆகி விட்டதால் ஹோட்டல் ‘ரிஸப்ஷனிஸ்ட்’ரமேஷூக்கு போன் பண்ணி “சார்,நீங்க இந்த ஹோட்டலுக்கு இன்னியோடு ஒரு மாசம் அறு நாள் ஆகிறது.நீங்க ரூம் பேமண்ட்டை பண்ணுங்க”என்று சொன்னதும் ரமேஷ் அவன் ஹோட்டலுக்கு வந்த அன்னிக்கு கொடுத்த அடவான்ஸை கழித்துக் கொண்டு ஒரு லஷம் ஐம்பதா யிரம் ரூபாய்க்குக் கொடுத்து ‘’ரிசப்ஷனிஸ்ட்’இடம் ”நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த ரூம்லே இருக்கப் போறேன்”என்று சொன்னான்.

ரமேஷ் ரொம்ப ‘வீக்காக’ இருந்ததால்,அவனால் சங்கர மடத்துக்குப் போக முடியவில்லை. மடத் துக்கு வந்து நாலு கோடி ரூபாய் ‘டொனேஷன்’ கொடுத்த ரமேஷ் மடத்துக்கு பதினைந்து நாளா வரா மல் இருக்கவே,விசுவும் மானேஜரும் மிகவும் கவலைப் பட்டர்கள்.விசு மடத்லே இருந்தவர்களைப் பார்த்து “அந்த பணக்காரப் பையன் மடத்துக்கு வந்து பதினைஞ்சு நாளுக்கு மேலே ஆறதே.என்னை பாக்க அவன் வரவே இல்லையே.ஒரு வேளை அவனுக்கு உடம்பு சரி இல்லாம இரு க்குமோ” என்று கவலைப்பட்டு,எல்லோரையும் கேட் டுக் கொண்டு இருந்தார்.மடத்தில் இருந்தவர்கள் “நாங்க விசாரி ச்சுண்டு வறோம்” என்று சொல்லவே,பொ¢யவருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

‘நாம நாப்பது வருஷமா இந்த சங்கரமடத்லே,ஒரு அனாதை போல வாழ்ந்து வந்துண்டு இருந் தோம்.அந்த பகவான் அனுக்கிரஹத்தாலே,நம்முடைய பேத்தியின் ஆம்படையானை என்னை பாக்க வந்தான்.ஆனா இப்போ திடீர்ன்னு அந்தப் பையனை மடத்துக்கு வரலையே” என்று ஏங்கினார் விசு. ‘அந்தப் பணக்கார பையனை,என் பேத்தியின் ஆத்துக்காரனை என் கண்லே காட்டப்பா’ என்று தின மும் அவர் பகவானை வேண்டிக் கொண்டு வந்தார்.‘தன் பிராணன் போனா,பதிமூனு நாள் காரியங்களும் பண்றேன்னு சொல்லி விட்டுப் போன பேத்தி ஆமபடையான் தன்னை பாக்க வராததால் பொ¢ய வருக்கு ஏக்கம் அதிகம் ஆகி,நெஞ்சு வலி வர ஆரம்பித்து விட்டது.‘நமக்கு இப்படி நெஞ்சு வலி வந்து ட்டதே’ என்று நினைத்து அவர் மிகவும் வருத்தப்பட்டார்.அந்த வருத்தத்தால் அவர் நெஞ்சு வலி அதி கம் ஆகியது.அவர் மடத்தில் இருந்தவர்களிடம் ‘தனக்கு அடிக்கடி நெஞ்சு ரொம்ப வலிக்கிறது’ என்று சொல்லி வந்தார்.

உடனே மடத்தின் மானேஜர் ஒரு டாக்டரை மடத்திற்கு வர சொல்லி விசுவை அவரிடம் காட்டினார்.டாக்டர் வந்து விசுவை நன்றாக பா¢சோதனை பண்ணி விட்டு “இவருக்கு ‘ஹார்ட்’ ரொம்ப வீக்கா இருக்கு.இவருக்கு வயசு ரொம்ப அதிகமா ஆயிடுச்சி.இவருக்கு நான் எந்த மாத்திரை குடுத்தாலும், அவர் உடம்பலே இனிமே வேலை செய்யாது.மாத்திரை குடுப்பதிலே எந்த பிரயோஜனமும் இல்லே. .இவர் இப்படியே இருந்து வரட்டும்.கொஞ்ச நாள்லே,இவர் ‘ஹார்ட்’இன்னும் வீக்காயிடும் அப்போ இவர் காலமாகி விடுவார்”என்று சொல்லி விட்டு அவர் ‘·பீஸை’ வாங்கிக் கொண்டு போய் விட்டார். மடத்தின் மானேஜர் டாக்டர் சொன்னதை விசு மாமா கிட்டே சொல்ல முடியாமல் தவித்தார்.

ஆனால் விசு அவர் கிட்டே டாக்டர் ‘என்ன சொன்னார்,என்ன சொன்னார்’என்று கேட்டு துளைத்துக் கொண்டு இருந்தார்.அவர் தொந்தரவு தாங்காம மானேஜர் இன்னொரு டாக்டரைக் கூப் பிட்டு மடத்துக்கு வந்து விசு மாமாவை பார்க்க சொன்னார்.அவர் மடத்துக்கு வந்து விசுவை பா¢சோத னைப் பண்ணி முதல் டாக்டர் சொன்னதை போலவே சொல்லி விடவே,மானேஜர் அவரிடம் ரகசிய மாக “டாக்டர்,நீங்க ஏதாவது மாத்திரை எழுதிக் குடுங்க.நீங்க சொன்னதை நான் அவர் கிட்டே சொ ல்ல முடியாதே”என்று சொல்லி கெஞ்சினார்.அந்த டாக்டரும் மனேஜரின் தர்ம சங்கடத்தை புரிந்துக் கொண்டு சில மாத்திரைகள் பேரை எழுதிக் கொடுத்து விட்டு,தன் ‘·பீஸை’ வாங்கிக் கொண்டு போ னார்.மானேஜர் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை விசுவுக்கு வாங்கி கொடுத்து சாப்பிட்டு வரச் சொன்னர்.விசு ‘என் பேத்தி ஆம்படையான் என்னை பாக்க வராம இருக்கானே,அவனுக்கும் ஏதாவது உடம்பு வந்து இருக்குமோ.ஏற்கெனவே அவனுக்கு ஒரு கால் இல்லே.அக்குள் கட்டையை வச்சுண்டு நடந்துண்டு இருக்கான்.கிருஷ்ணா,அவனுக்கு ஏதாவது உடம்பு வந்து இருந்துன்னா, அந்த உடம்பை சீக்கிரமா குணப் படுத்தி,அவனை நன்னாக்கி என்னை வந்து பாத்து,நான் கண்ணே மூடிட்டா எனக்கு ‘நெய் பந்தம்’ பிடிக்க வச்சி,என் ‘பதி மூனு காரியங்களை பண்ண வைப்பா” என்று வேண்டிக் கொண்டு வந்தார்.

டாகடர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு வந்தார்.ஐஞ்சு நாள் ஆகியும் அவர் நெஞ்சு வலி குறையாமல் கஷ்டப் பட்டு வந்தார்.உடனே மானேஜர் அங்கு வேலை செய்து வரும் ஒரு வனைக் கூப்பிட்டு,மறுபடியும் டாக்டரை அழைத்து வரச் சொன்னார்.அந்த ஆள் டாக்டரை அழைத் துக் கொண்டு வந்தான்.அந்த டாக்டர் விசுவை நன்றாக பா¢சோதனைப் பண்ணி விட்டு “இவர் ’கண் டிஷன்’ ரொம்ப மோசமா இருக்கு.இவர் மூச்சு விடவே மிகவும் சிரமப் படறார்.இவர் இன்னும் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டார்.இவருக்கு வேண்டியவங்க கிட்ட சொல்லி அனுப்பிடுங்க”என்று சொல்லி விட்டுப் தன் ‘·பீஸை’வாங்கிக் கொண்டு போனார்.

டாகடரை அழைத்து வரப் போன ஆள் மானேஜர் கிட்டே”சார்,அன்னைக்கு வந்த பணக்காரர் ‘ஹோட்டல் விஸ்வனாத்’தில் தங்கி இருக்கார்ன்னு என் ‘·ப்ரெண்ட்’ என்னை வழிலே பாத்து சொன் னான்”என்று சொன்னான்.அவன் அப்படி சொன்னதை கேட்டதும்,விசு சங்கர மட மானேஜரைப் பார்த்து “நீங்க தயவு செஞ்சி என் பிராணன் போற துக்கு முன்னாடி அந்த ‘ஹோட்ட லுக்கு’ப் போன் பண்ணி,அந்தப் பையன் கிட்டே ‘உன் தாத்தா சாகக் கிடக்கறார்,தயவு செஞ்சி அவரை ஒரு நிமிஷம் வந்து பாத்துட்டு போ’ன்னு சொல்லுங்கோ”என்று மூச்சு முட்டச் சொன்னார்.

‘இவர் இன்னும் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டார்.இவருக்கு வேண்டியவர்களிடம் சொல் லி அனுப்பி விடுங்க’என்று டாக்டர் சொன்னதை கேட்ட மடத்து மானேஜர் பயந்துப் போய் ‘ஹோட்டல் விஸ்வனாத்து’க்கு ‘போன்’ பண்ணினார்.மானேஜர் அங்கு இருந்த ‘ரிசப்ஷனிஸ்ட்’ இடம் “நான் சங்கர மடத்து மானேஜர் பேசறேன்.உங்க ஹோட்டல்லே தங்கி இருக்கும் சுரேஷ் என்பவர் கிட்ட சங்கர மடத் திலே இருக்கற விசு மாமா ரொம்ப ‘சீரியஸ்ஸா’ இருக்கார்.அவரை உடனே சங்கர மடத்துக்கு வந்து, அவர் இறந்து போவதற்கு முன்னாடி,ஒரு தடவை வந்துப் பாத்துட்டுப் போக சொல்லுங்கோ.அவர் உடம்பு உண்மையிலே ரொம்ப மோசமா இருக்கு” என்று வருத்ததுடன் சொன்னார்.

உடனே அந்த ‘ரிசப்ஷனிஸ்ட்’ “நான் உடனே அவருக்கு சொல்றேன்.நீங்க கவலைப் படாதீங்க” என்று சொல்லி விட்டு ‘போனை’ ‘கட்’ பண்ணினார்.அந்த ‘ரிசப்ஷனிஸ்ட்’ உடனே ஹோட்டல் ‘இண்டர்காம்’ போன்லே ரமேஷக் கூப்பிட்டார்.ரமேஷ் போன்லே வந்ததும் சங்கர மடத்து மானேஜர் சொன்னதை ரமேஷூக்கு சொன்னார்.

விஷயம் கேள்விப் பட்டதும் ரமேஷ் மெல்ல தன்னை சுதா¢த்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு சங்கர மடத்துக்கு வந்தான்.அவன் உள்ளே வேகமாக வந்து,தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு,விசு மாமா படுத்த இருந்த பெட்டில் தன் வலது காலை கீழே வைத்து க் கொண்டு இடது காலை மடக்கி வைத்து கொண்டு தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். தன் பேத்தி ஆம்படையனைப் பார்த்ததும் விசுவுக்கு சந்தோஷம் தாங்க வில்லை.அவர் சந்தோஷத்தில் தட்டுத் தடுமாறி “வந்துட்டாயப்பா சுரேஷ்.என்னை.. .உன் மடிலே …..கொஞ்ச நேரம்…. என் பிரா ணன் போறதுக்கு முன்னாடி… வச்சுக்கப்பா” என்று சொன்னார்.உடனே அங்கு இருந்த எல்லோரும் விசு மாமாவை மெல்ல எழுப்பி ரமேஷ் மடியில் விட்டார்கள்.

தாத்தாவை மடியில் விட்டுக் கொண்டு ரமேஷ் சங்கர மடத்து மனேஜரைக் கூப்பிட்டு “சார்,இவர் பேர்லே ‘விஸ்வநாதன் அன்னதான டிரஸ்ட்’ ஒன்னை உடனே ஆரமபிச்சுடுங்கோ.சங்கர மடத்துக்கு வர வெளி ஊர்லே இருந்து வர யாத்ரிகாளுக்கு இலவசமா சாப்பாடு போடுங்கோ.அதுக்கு நான் ரெண் டு கோடி ரூபாய்க்கு ‘செக்’ குடுத்துடறேன்”என்று சொல்லி விட்டு தன் ‘ப்ரீ·ப்’ கேசைத் திறந்து ரெ ண்டு கோடி ரூபாய்க்கு ஒரு ‘செக்’ ஏழுதி மனேஜரிடம் கொடுத்தான்.அந்த செக்கை வாங்கிக் கொ ண்டு அந்த மானேஜர் “நான் இன்னைக்கே ஒரு அன்னதான ‘ட்ரஸ்ட்’அரம்பிச்சு,அதுக்கு ‘விஸ்வநா தன் அன்னதான ட்ரஸ்ட்’ ன்னு பேர் வச்சிடறேன்.நீங்க சொன்னா மாதிரி மடத்துக்கு வெளி ஊர்லே இருந்து வர யாத்ரிகாளுக்கு இலவசமா சாப்பாடு போடறோம்”என்று சொன்னார்.விசு கண்களில் இரு ந்து கண்ணீர் தாரை தாரையாக வந்துக் கொண்டு இருந்தது.ரமேஷூக்கு அந்தப் பொ¢யவர் அழுவ தைப் பார்த்ததும் மனசுக்கு ரொம்ப வருத்தமாய் இருந்தது.

அந்தப் பெரியவர் ரமேஷின் கையைப் பிடித்துக் கொண்டு “சுரேஷா,நீ முனு கோடி ரூபாய் குடுத்து என் பொண்ணு பேர்லே ஒரு ‘ட்ரஸ்ட்’ ஆரம்பிச்ச்சு இருக்கே.என் பேத்தி பேர்லே மூனு கோடி ரூபாய் கொடுத்து ஒரு ‘ட்ரஸ்ட்’ ஆரம்பிச்சு இருக்கே.என் பேர்லே ரெண்டு கோடி ருபாய் ‘வேத சம்ர க்ஷண நிதி’க்கு குடுத்து இருக்கே.இப்போ என் பேர்லே இன்னும் ஒரு ரெண்டு கோடி ரூபாய் குடுத்து ஒரு அன்னதான ‘ட்ரஸ்ட்டை’ ஆரம்பிக்க சொல்லி இருக்கே.இந்த மாதிரி ஒரு பணக்கார பேத்தி ஆம் படையான் எனக்கு கிடைச்சதுக்கு அந்த பகானுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று சொல்லி விட்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது ரமேஷ் “தாத்தா,லதாவும் செத்துப் பொறதுக்கு ஐஞ்சு நிமிஷம் முன்னாடி,உங்களே மாதிரியே,அவளும் என்னை மடியிலே விட்டுக்க சொன்னா.ஐஞ்சு நிமிஷம் கூட ஆகலே,அவ கண் ணே மூடிட்டா”என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதான்.”உன்னே அப்படியா பண்ண சொன்னா என் பேத்தி. ஐஞ்சு நிமிஷம் ஆறதுக்கு முன்னாடி அவ கண்ணே மூடிட்டாளா” என்று கேட்டு அவர் கொஞ்ச நேரம் அழுதார்.

கொஞ்ச நேரம் போனதும் விசு “சுரேஷா,நீ எல்லாம் நன்னா பண்ணி முடிச்சி இருக்கேப்பா. நான் போயிட்டா,எனக்கு நீ ‘நெய் பந்தம்’ பிடிச்சு,கொள்ளீப் போட்டு என்னை கரை சேத்து…..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் மடியில் அவர் தலை சாய்ந்து விட்டது.அங்கு கூடி இரு ந்தவர்கள் எல்லோரும் “எங்களே எல்லாம் விட்டுப் போயிட்டேளே மாமா”என்று சொல்லி கதறி அழுதார்கள்.

பிறகு எல்லோரும் விசு மாமாவின் ‘பாடியை’ ரமேஷின் மடியில் இருந்து எடுத்து தரையில் விட் டார்கள்.ரமேஷ் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து,அவர் ‘காரியங்களை’ எல்லாம் ஒரு ஒரு குறையும் இல்லாம பண்ணச் சொன்னான்.தன் உடம்பு ‘கண்டிஷனை’க் கூட பாராட்டாமல் ரமேஷ் ‘வேனில்’ சங்கர மடத்தில் இருந்து ‘மயான காட்’ வரைக்கும் ‘நெய் பந்தம்’ பிடித்துக் கொண்டு போய் விசு மாமாவுக்கு ‘கொள்ளிப்’ போட்டான்.அவருக்கு பதிமூன்று நாள் காரியத்தையும் ‘சிரத்தையாக’ பண்ணி முடித்து,பதி மூனாவது நாள் மடத்லே இருந்த எல்லோருக்கும் வடை பாயசத்துடன் ‘சமாரா தணை’ சாப்பாடு போட்டான்.

பிறகு எல்லோரையும் ‘தாங்க்’ பண்ணி விட்டு,ரமேஷ் தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு,கார் ஏறி தன் ஹோட்டல் ரூமுக்கு வந்தான்.ரமேஷ் காரை விட்டு கீழே இறங்கி மெல்ல அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு தள்ளாடி தள்ளாடி தன் ரூமுக்கு வந்தான்.பதி மூனு நாள அவன் சங்கர மடத்தில் இருந்து முடியாமல் எல்லா ‘காரியங்களும்’பணண அவன் உடமபும் மனதும் ரொம்ப ‘வீக்காக’ இருந்தது.ஹோட்டல் ‘ரெஸ்டாரென்ட்டை’க் கூப்பிட்டு தன் ரூமுக்கு ராத்திரி சாப் பாட்டை அனுப்ப சொன்னான்.ரமேஷ் அந்த சாப்பாட்டை சாப்பிட்டான்.

அன்று இரவில் இருந்து காசியில் அடை மழை பெய்து வந்தது.அந்த மழை விடாமல் ஆறு நாள் பெய்த்தது.ரமேஷால் வெளியே எங்கேயும் போக முடியவில்லை.அவன் ஹோட்டல் ரூமிலேயே இருந்து வந்தான்.பெட்டில் படுத்துக் கொண்டு யோஜனை பன்ணினான்

’நல்ல வேளை,இந்த மழை, லதாவின் தாத்தா ‘பதிமூனு நாள் காரியங்களும்’ நடந்து முடிஞ்ச அப்புறமா பெய்யறது.இந்த மழை இன்னும் ரெண்டு நாள் முன்னமே பெய்ய ஆரம்பிச்சு இருந்தா,இந்த காலை வச்சுண்டு மடத்லே அவர் காரியங்களை பண்ணுவது ரொம்ப சிரமமா இருந்து இருக்கும். ஆனால் எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சி இருக்கு.உனக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்’ என்று சொல்லி சுவாமி படத்தைப் பார்த்து தன் கண்னத்தில் போட்டுக் கொண்டான்.பிறகு லதா படத்தைப் பார்த்து ‘லதா,உன் தாத்தா ஆசைப் பட்டது போல நான் ‘நெய் பந்தம் பிடிச்சுண்டு போய், அவரை ‘சம்ஸ்காரம்’பண்ணிட்டு, பதிமூனு நாள் காரியங்களையும் ரொம்ப சிரத்தையா பண்ணி,பதி மூனாவது நாள் அன்னைக்கு மடத்லே இருந்த அத்தனை பேருக்கு ம் வடை பாயசதோட ‘சமாராத ணை’ சாப்பாடும் போட்டேன்” என்று சொல்லி ஒரு குழந்தை சந்தோஷப்படுவது போல சந்தோஷப் பட்டான் ரமேஷ்.அவன் மனம் அவ்வளவு ‘வீக்காக’ஆகி விட்டது இருந்தது..

ஏழாவது நாள் கொஞ்சம் மழை விட்டு இருந்தது.‘நாம இப்படிசெலவு பண்ணி வரோமே, ‘பாங்லே’ மீதி என்ன பணம் இருக்கு என்று பார்த்துக் கொண்டு வரலாம்’என்று நினைத்து ரமேஷ் கார் டிரைவரை தன் ரூமுக்கு கூப்பிட்டு தன் ‘பாங்க் பாஸ் புக்கை’க் கொடுத்து ‘பாலன்ஸ் என்ன இருக்கு என்று ‘என்ட்ரி’ போட்டுக் கொண்டு வரச் சொன்னான்.கார் டிரைவர் ‘பாங்கு’க்குப் போய் ‘பாலன்ஸ் ‘என்ட்ரி’ போட்டுக் கொண்டு வந்தான்.பாங்கில் மீதி ‘பாலன்ஸ்’ ஒரு லக்ஷத்து ரெண்டாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.ரமேஷ் யோஜனைப் பண்ணினான்.‘நம்ம கிட்டே இருக்கிற ‘பாலன்ஸ்’ பணத்லே, காரையும் வச்சுண்டு வந்து,நாம இந்த ஹோட்டல்லே ரொம்ப நாள் இருந்து வர முடியாதே.இனிமே நாம பண்ண ஒரு காரியமும் இல்லே.நாம கொண்டு வந்த பணம் எல்லாமும் தீந்து போயிடுத்து.நாம ஆசைப் பட்ட து போல கங்கைக்கு போய் நம்ம உசிரை மாய்ச்சிக்கறது ஒன்னு தான் பாக்கி இருக்கு’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டான்.

அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

ஹோட்டல் மானேஜரைக் கூப்பிட்டு அன்று வரை ஆன ஹோட்டல் ‘பில்லை’ அனுப்புமாறு சொன்னான்.ஹோட்டல் ‘பில்’ கொண்டு வந்த ஆளிடமே ரமேஷ் ஹோட்டல் ‘பில்லு’க்கு ஒரு ‘செக்’ கை எழுதிக் கொடுத்தான்,பிறகு ‘ரிஸ்பஷனிஸ்ட் இடம் போன் பண்ணி “நான்,என் கிட்டே மீதி இருக் கிற பணத்லே,இன்னும் எத்தனை நாள் இந்த ஹோட்டல்லே இருக்க முடியும் என்று எனக்குத் தொ¢ய லே.அதனால் நான் தினமும் ‘ரூம்’வாடகைக் குடுத்து வறேன்”என்று சொன்னதும் அந்த ‘ரிஸ்ப்ஷனி ஸ்ட்’ ஒத்துக் கொண்டார்.

ரமேஷ் கார் அனுப்பும் கம்பனிக்கு போன் பண்ணி ”சார்,இன்னைக்கு தேதி இருபத்தி ஐஞ்சு ஆறது.நீங்க உடனே இந்த முழு மாச ‘பில்லான’ என்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு பில்லை அனுப்புங்க. நான் ‘பே’ பண்ணிடறேன்”என்று சொன்னான்.அரை மணி நேரத்தில் அந்த கார் கமபனி ஆள் என்ப தாயிரம் ரூபாய்க்கு ஒரு ‘பில்லை’ எடுத்துக் கொண்டு ரமேஷ் ரூமுக்கு வந்தான்.ரமேஷ் அவனிடம் என்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு ‘செக்’ எழுதிக் கொடுத்து அவனை அனுப்பினான்.

அன்று காலை “ப்ரேக் பாஸ்ட்டும்’,’லன்ச்சும்’ இரவு சாப்பாடும் ‘ரெஸ்டா ரென்ட்டில்’ இருந்து ஆர்டர் பண்ணி அதை சாப்பிட்டு விட்டு தன் ‘பர்ஸில்’ இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து அந்த பில்லை ‘பே’ பண்ணினான்.’பாங்கு‘’க்குப் போய் ஒரு ஆயிரம் ரூபாயை மட்டும் ‘பாலன்ஸ்’ வைத்து விட்டு,மீதி பணத்தை ‘காஷ்’ ஆக வாங்கிக் கொண்டு வந்தான்.

அடுத்த நாள் ரமேஷ் தன்னிடம் ஒரு ‘டிரஸ்ஸை’ மட்டும் வைத்துக் கொண்டு மீதி ‘டிரஸ்களை’ எல்லாம் கையில் எடுத்துக் கொண்டான்.சாயங்காலம் கொஞ்ச மழை விட்டவுடன் ரமேஷ் காரில் ஏறி காசி விஸ்வநாதரையும்,விசாலாக்ஷ¢ அம்மனையும்,கடைசி தடவையாக தா¢சனம் பண்ணி விட்டு நன் றாக வேண்டிக் கொண்டு வந்து,தான் கொண்டு வந்து இருந்த பழைய ‘டிரஸ்களை’ வழியில் இருந்த ஏழைகளுக்குப் போட்டு விட்டான்.பிறகு அவன் கங்கை படித்துறைக்குப் போனான்.கங்கை நதி,இந்த கரைக்கும் அந்த கரைக்கும் நதி நொப்பும் நுறையுமாக வெள்ள பிரவாகமாக ஓடிக் கொண்டு இருந்தது. கங்கையிலே யாரும் இறங்கி குளிக்கவில்லை, குளிக்க வந்தவர்கள் எல்லாம் மேல் படித்துறையில் நின் றுக் கொண்டு ஒரு ‘மக்கில் தண்ணீரை எடுத்து மேலே விட்டுக் கொண்டு குளித்துக் கொண்டு இருந் தார்கள்.

ரமேஷ் கொஞ்ச நேரம் கங்கை வெள்ளப் பிரவாகத்தில் ஓடிக் கொண்டு இருபதைப் பார்த்து ரசித்தான்.பிறகு ஒரு ஆரத்தியை வாங்கி கங்கைக்கு காட்டி ‘அம்மா,நான் இன்னிக்கு ராத்திரி,உன் மடிலே வந்து விழுந்திடப் போறேன்.நீ தான் என்னை ஏத்துண்டு நான் பண்ண ‘மஹா பாதக செயலு க்கு பிராயசித்தம் தரணும்’என்று மனதார வேண்டிக் கொண்டான்.ஆரத்தி காட்டி விட்டு மெல்ல அவ ன் இருந்த படித் துறையை விட்டு மேலே வந்தான்.

ஹோட்டலுக்கு வரும் வழியில் ரெண்டு பூ மாலைகளை வாங்கினான்.ஹோட்டலுக்கு வந்து ஒரு மாலையை சுவாமி படத்துக்கு போட்டு விட்டு.‘பகவானே நான் உனக்குப் போடும் கடைசி பூ மாலை இது தான்.இனி அடுத்த ஜென்மத்லே நான் மனுஷனா பிறந்தா உனக்கு மறுபடியும் பூமாலை போடறேன்”என்று சொல்லி வேண்டிக் கொண்டான்.அடுத்த பூமாலையை லதா படத்திற்கு போட்டான்.

’ரெஸ்டாரென்ட்டில்’ ராத்திரிக்கு கொஞ்சமாக சாப்பாடு ஆர்டர் பண்ணினான்.சாப்பாடு வந் ததும் ரமேஷ் அதற்கான ‘பில்லுக்கு’ தன் பர்ஸில் இருந்த பணத்தில் கொடுத்து அவனை அனுப்பி னான்.ரமேஷ் வந்த சாப்பாட்டை சாப்பிட்டான்.

ரமேஷ் கார் டிரைவரை தன் ரூமுக்கு வர சொன்னான்.அவன் வந்ததும் அவன் கிட்டேஇங்கிலிஷில் “நான் நாளைக்கு வேறே ஊருக்குப் போகப் போறேன்.அதனால் நீ நாளைக்கு வெடி காத்தா லே ரெண்டரை மணிக்கு ‘ஷார்ப்பா’ ஹோட்டலுக்கு வந்துடு.நான் இந்த ஹோட்டலை காலி பண்ணி யாகணும்”என்று சொன்னான்.’ஷார்ப்பா’ வெடி காத்தாலே ரெண்டரை மணிக்கு வந்துடு” என்று மறு படியும் இங்கிலிஷில் சொன்னதும் அந்த டிரைவர் “எர்ல்லி மார்னிங்க் ஷார்ப் டூ தர்ட்டிக்கு ஐ கம் சார், டோன்ட் வரி சார்” என்று தனக்கு தொ¢ந்த ஓட்டை இங்கிஷில் சொன்னான்.

ரமேஷ் அவன் பேசிய இங்கிகிஷை நினைத்து சிரித்துக் கொண்டே ஹோட்டல் ‘ரிஸப்ஷனுக்கு’ வந்து “நான் நாளைக்குக் காத்தாலே வேறே ஒரு இடத்துக்குப் போறேன்.இன்னைக்கு ‘ஸ்டே’ பண்ண துக்கு ‘பில்’ குடுங்க”என்று கேட்டதும் அந்த ‘ரிசப்ஷனில்’ இருந்த ஆள் ஆறாயிரம் ரூபாய்க்கு ‘பில்’ கொடுத்தார்.ரமேஷ் தன் ‘பர்ஸில்’இருந்த மொத்த பணத்தையும் எடுத்து,அவருக்கு ஆறா¡யிரம் ரூபா ய் கொடுத்து விட்டு மீதி என்ன இருக்கு என்று பார்த்தான்.அவனிடம் ஒரு ஆயிரம் ரூபாயும்,கொஞ் சம் சில்லறையும் இருந்தது.அதை தன் ‘பர்ஸில்’ வைத்துக் கொண்டான்.

ரமேஷ் அந்த ‘ரிசப்ஷனில்’ இருந்த ஆளிடம் “என்னை நீங்க நாளைக்குக் காத்தாலே சரியா ரெண்டரை மணிக்கு எழுப்பி விடுங்க நான் வேறே ஊரூக்குப் போகப் போறேன்”என்று இங்கிலிஷில் சொன்னதும்,அந்த ‘ரிஸப்ஷனில்’ இருந்த ஆள் “ஓ.கே.சார்,நாங்க உங்களை சரியா காத்தாலே ரெண்டரை மணிக்கு எழுப்பறோம்” என்று இங்கிலிஷில் பதில் சொன்னான்.

‘ரிஸப்ஷனில்’சொல்லி விட்டு ரமேஷ் தன் ரூமுக்கு வந்து படுத்துக் கொண்டான்.

அவனுக்குத் ரமேஷூக்கு தூக்கமே வரவில்லை.

மாதா கோவிலில் ஒரு மணி அடித்தது.

’நான் லதாவுக்கும்,அவ அம்மாவுக்கும் எல்லா ‘காரியங்களும்’ செஞ்சேன்.லதா தாத்தாவுக்கு காசிலே கிரமமாக ‘காரியங்கள்’ செஞ்சேன்.என் அம்மா,அப்பா,சுரேஷ் மூனு பேருக்கும் என் சித்தப்பா எல்லா காரியுமும் செஞ்சாரு.யாரும் ‘அனாதை பிணமா’ சாகலே.ஆனா நான் மட்டும் எங்கோ,கங்கை கரையின் ஓரத்லே இருக்கிற ஒரு கிராமத்லே ஒரு ‘அனாதைப் பிணமா’ நாளைக்கு காத்தாலே ஒதுங்கி இருக்கப் போறேன்’ என்று எண்ணும் போது அவனுக்கு அழுகை வந்து விட்டது.கொஞ்ச நேரம் ரமேஷ் அழுதான்.

‘அந்த ஏழை சமையல்கார மாமியையும்,அபலைப் பெண் லதாவையும் ரொம்ப நல்லவன் போல் நடிச்சு, நமப வச்சு,அவாளுக்கு மயக்க மருந்து காட்டி லதாவின் ‘கற்பை’ சூறையாடினதுக்கு இந்த ‘இழிச் சாவு’ எனக்கு வேண்டியது தான்.’அந்த ‘ஆக்ஸிடெண்டி’லே நானும் என் குடும்பதோடு மடிந்து இருக்கணும்.பிழைச்சு வந்த எனக்கு இந்த இழிச் சாவு வேண்டியது தான்’என்று அவன் மனம் எண்ணிக் கொண்டு இருந்தது.

அசதியால் ஒரு அரை மணி நேரம் அவன் கண் அசந்து இருப்பான் ரமேஷ்.

சரியாக ரெண்டரை மணிக்கு ஹோட்டல் போன் மனி அடித்தது.

போனை எடுத்து பேசினான் ரமேஷ்.“சரி மணி ரெண்டரை” என்று சொல்லி விட்டு போனை ‘கட்’ பன்ணினான் ஹோட்டல் ‘ரிசப்ஷனில்’ இருந்த ஆள்.ரமேஷ் தன் படுக்கையை விட்டு எழுந் தான்.

‘இனி மேலே நமக்கு நிரந்தர தூக்கம் தானே’என்று நினைத்து தன் மனதுக்குள் அழுதான் ரமேஷ்.பல்லைத் தேய்த்துக் கொண்டு குளித்து விட்டு சுவாமி படத்தின் முன் நின்றுக் கொண்டு சுவாமி மந்திரங்களை எல்லாம் சொல்லி முடித்தான்.தன்னிடம் இருந்த ஒரே ஒரு டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டான்.

‘ப்ரீ·ப் கேஸில்’ சுவாமி படத்தையும்,லதாவின் படத்தையும் எடுத்து வைத்துக் கொண்டான். பிறகு ரமேஷ் அவன் ரூமைப் பூட்டி விட்டு தன் ‘ப்ரீ·ப் கே¨ஸை’ எடுத்துக் கொண்டு ‘ரிசப்ஷனுக்கு’ வந்து ரூம் சாவியை கொடுத்தான்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் எறிக் கொண்டு “கங்கைக்குப் போ”என்று சொன் னான்.அந்த டிரைவர் கங்கை கரைக்கு காரை ஓட்டி வந்தான்.ரமேஷ் காரை விட்டு கீழே இறங்குவ தைப் பார்த்த அந்த கார் டிரைவர் “சார்,’ப்லீஸ் டோன்ட் கோ டு கங்கா,டூ மச் வாட்டர் இன் கங்கா, கங்கா ரிவர் ஓவர் ·ப்லோயிங்க்.யூ கான்ட் டேக் பாத் டு டே’ “என்று தனக்குத் தெரிந்த இங்கிலிஷில் கத்தினான்.

ரமேஷ் அவனிடம்“இட்ஸ் ஓ.கே” என்று சொல்லி விட்டு காரை விட்டு மெல்ல கீழே இறங்கி னான்.அந்த டிரைவரிடம் தன் பர்ஸில் இருந்த கடைசி ஆயிரம் ரூபாயைக் கொடுத்து “யூ கோ பாக் டு ஹோட்டல்.ஐ வில் கால் யூ லேட்டர்” என்று சொன்னதும் அந்த டிரைவர் அந்த ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ரமேஷூக்கு ஒரு சலாம் அடித்து விட்டு காரை ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு போய் விட்டான்.

ரமேஷ் பாய்ந்து வரும் கங்கையைப் பார்த்தான்.அந்த டிரைவர் சொன்னது போல கங்கை ரெண் டு கரையிலும் பிரவாகமாக வெள்ளத்தோடு படித்துறைக்கு மேலேயே நொப்பும் நுரையுமாக ஓடிக் கொண்டு இருந்தது.கங்கை இப்படி கரை புரண்டு ஒடிக் கொண்டு இருந்ததால் கங்கையில் குளிக்க யாரும் வரவில்லை.

மங்கலாக இங்கும் அங்குமாக தெரு விளக்குகள் எரிந்துக் கொண்டு இருந்தது. பிச்சைக்காரர் கள் ஒருத்தர் ரெண்டு பேர் கங்கை கரையில் தங்களைப் போர்த்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.ரமேஷ் தன் ‘பர்ஸில்’ இருந்த சில்லறையை எல்லாம் அந்த பிச்சைக்காரர் தட்டிலே போ ட்டு விட்டு தான் இத்தனை நாளாக வைத்துக் கொண்டு இருந்த அருமையான ‘பர்ஸை’ தூர ஏறிந்தான்.

ரமேஷ் தன் ‘ப்ரீ·ப் கேசை’ திறந்து அவன் கொண்டு வந்து இருந்த சுவாமி படத்தை வெளீயே எடுத்து அதைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு நன்றாக வேண்டிக் கொண்டான்.அந்த சுவாமி படத்தை கரையில் ஒரு ஓரமாக வைத்து விட்டு,லதா படத்தை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண் டான்.இததனை வருடங்களாக உபயோகப் படுத்தி வந்த தன் அக்குள் கட்டைகளை தூர ஏறிந்தான்.

ரமேஷ் லதாவின் படத்தை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு படியாக தன் செயற்கை காலை வைத்துக் கொண்டு இறங்கினான்.உடல் பூராவும் தண்ணீரில் மூழ்கி,கழுத்து மட்டும் மேலே இருக்கும் படி வரை மெல்ல இறங்கினான்.பிறகு சுவாமியை வேண்டிக் கொண்டு,வெள்ளப் பிரவாக மாக ஓடிக் கொண்டு இருக்கும் கங்கை நதிக்குள்,மீதி இருக்கும் படிகளில் மெல்ல இறங்கி மூழ்கி விட்டான் ரமேஷ்.

ரமேஷ் உடலை கங்கை அடித்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தது.

ஐந்து நிமிஷத்துக்கு எல்லாம் அவன் ‘ஆவி’ கங்கையை விட்டு மேலே போய்க் கொண்டு இருந் தது.ரமேஷ் கையின் பிடி,இளகிய பிறகு லதா படம் அவன் கையை விட்டு,விடுபட்டு,கங்கா மாதாவின் பிரவாகத்தால் இப்படியும்,அப்படியும்,ஆடிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தது.

இனிமேல் அந்த படம் யார் கையிலே கிடைத்தால் என்ன.எங்கே கரை ஒதுங்கினால் என்ன. அதை வைத்துக் கொண்டு இருக்க வேண்டிவன் தான் இப்போது உயிரோடு இல்லையே!!.

ரமேஷின் ‘பூத உடலை’ கங்கை மாதா பல மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தின் கரையி லே ஒதுக்கி விட்ட பிறகு தன் பயணத்தை தொடர்ந்துக் கொண்டு இருந்தாள்.

ரமேஷ் வாழ்க்கை முடிந்து விட்டது. பொழுது ‘பல’ ‘பல’ என்று விடிந்தது.

கங்கையில் ஜலம் எடுக்க வந்த பெண்களும்,அதி காலையில் கங்கையில் குளிக்க வந்தவர்களு ம் ரமேஷின் ‘பூத உடலை’ பா¢தாபமாகப் பர்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அந்த ஊர் வெட்டியான் தன்னிடன் மீதி இருந்த வரட்டிகளையும்,காய்ந்துப் போன மரக் கிளை களையும் போட்டு ரமேஷின் ‘பூத உடலை’ கொளுத்தினான்.தன்னிடம் இருந்த வரட்டிகளும்,காய்ந் த மரக் கிளைகளும் தீர்ந்துப் போன பிறகு,அந்த வெட்டியான் பிணம் எரிக்கும் அந்த இடத்தை காலி பண்ண நினைத்து ரமேஷின் பாதி எறிந்த ‘பூத உடலை’ இழுத்து மறுபடியும் கங்கையில் போட்டு விட் டான்.ரமேஷின் பாதி எறிந்த ‘பூத உடல்’ கங்கையில் மிதந்து போய்க் கொண்டு இருந்தது.

ரமேஷின் உடம்பில் மீதி இருந்த எறிந்த சதைகளின் அடிப்பாகத்தை கங்கையில் வாழ்ந்து வந்த மீன்கள் தின்றுக் கொண்டு இருந்தது.மேலே பறந்துக் கொண்டு இருந்த கழுகுகளும், பறந்துகளும், கொக்குகளும்,நாரைகளும் ரமேஷின் உடம்பின் மேல் பாக சதைகளை கொத்திக் கொத்தி தின்றுக் கொண்டு இருந்தன.

ரமேஷ் ஆவி மேலே போய் எமலோகத்துக்கு போனது.எம தர்மராஜன் சபையில் தராசுக் கோல் தொங்கிக் கொண்டு இருந்தது.எம தர்ம ராஜன் தன்னுடைய சிம்மாசனதில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான். ரமேஷ் “ஆவி” அவன் முன் நின்றுக் கொண்டு இருந்தது.

எம தர்மராஜன் சித்ர குப்தனைப் பார்த்து “சிதரகுப்தா,இந்த ‘மானிடன்’ செய்த பாவ புண்ணிய ங்களை எல்லாம் சொல்லி தராசில் வை” என்று உத்தரவுப் போட்டார்.

உடனே சித்ரகுபதன் தன் புஸ்தகத்தை பிரித்து படித்து விட்டு,எம தூதர்களைப் பார்த்து ரமேஷ் வாலிபத்தில் செய்த ‘தப்பான காரியங்களையும்’,காயத்திரி மாமியையையும் லதாவையும் நம்ப வைத்து ஏமாற்றி,மயக்க மருந்து காட்டி லதாவை ‘கெடுத்த மஹா பாதக செயலையும்’,அதற்கு அப்புறமாக, அவர்கள் பட்டு வந்த கஷ்டங்களையும்,மன வேதனையும்,ஒரு தட்டிலேயே வைக்கச் சொன்னான்.

இன்னொரு தட்டில் ரமேஷ் அப்போலோ ஹாஸ்பிடலில் உடம்பு குணம் ஆகி ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்ததில் இருந்து,அவன் கங்கையில் மூழ்கும் வரை செய்து வந்த எல்லா ‘புண்யகாரி யங்களையும்’ எல்லாம் வைக்க சொன்னான்.

எந்த தட்டு கீழே இறங்கும்?…. எந்த தட்டு மேலே போகும்?…..

எமனிடம் “ரமேஷ்” என்கிற ஜீவனுக்கு மன்னிப்பு கிடைத்து இருக்குமா?

கிடைத்து இருக்காதா?

தீர்ப்பு…… உங்கள் கையில்!!!!.

–முற்றும்–

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *