அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16
அந்த நேரம் பார்த்து காயத்திரி ஒரு கைலே காய்கறியும்,ஒரு கைலே மளிகை சாமானையும் எடுத்துண்டு வழக்கத்துக்கு விரோதமா,வேகமா வந்து,ரெண்டு பையையும் கிழே வைத்து விட்டு, அம்பாள் படத்துக்கும்,தன் கணவா¢ன் படத்துக்கும் நமஸ்காரம் பண்ண போனவளுக்கு,அம்பாள் படத்தில் இருந்து தான் காலையிலே வைத்து விட்டுப் போன ரோஜாப் பூ கிழே விழுந்து இருந்ததை பார்த்தாள்.அம்பாள் படத்துக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்து கொண்டு “லதா,அம்பாள் நமக்கு ஒரு வழி காட்டி இருக்கா” என்று சந்தோஷமாக சொன்னாள்.
லதா “அம்மா,நான் இப்ப தான் முதல் தடவையா அப்பா படத்துக்கும்,அம்பாள் படத்துக்கும் முன்னாடி நின்னுண்டு வேண்டிண்டு,நமஸ்காரம் பண்ணிட்டு எழுந்தப்ப,அம்பாள் படத்தில் இருந்து நீ காத்தாலே வச்சு விட்டுப் போன ரோஜாப்பூ கீழே விழுந்தது.நமக்கு நல்லது நடக்கப் போறதுன்னு எனக்கு தோன்றது” என்று சந்தோஷமாக சொன்னாள்.உடனே காயத்திரி “அப்படியா லதா.இப்போ நமக்கு நல்லது தான் நடந்து இருக்கு”என்று சொல்லி முடிக்கவில்லை,லதா “அப்படியாம்மா.அது என் னன்னு சீக்கிரமா சொல்லும்மா”என்று அம்மாவை உலுக்கினாள்.காயத்திரி நிதானமாக “வா லதா,இப்ப டி உக்காரு.நான் எல்லாம் விவரமா சொல்றேன்” என்று சொல்லி விட்டு கொஞ்சம் ஜலத்தை குடித்து விட்டு வந்த லதா பக்கத்திலே உட்காந்துக் கொண்டாள்.
“லதா,நான் கடைக்குப் போனேன். முதல்லே மளிகை சாமான் வாங்கிண்டு,அப்புறமா காய்கறி வாங்கலாம் என்று நினைச்சு போனா மளிகை கடை இன்னும் தொறக்கலே.சரி,நாலு கடை தள்ளி இரு ந்த காய்கறி கடைக்கு போய் கால் கிலோ வெண்டைக்கா,நூறு தக்காளி வாங்கிண்டு கடைகாரன் கிட் டே பணத்தை குடுத்துட்டு,திரும்பிக் கொண்டு இருக்கும் போது, ரோடிலே இருந்த ஒரு ஆட்டோலே இருந்து ‘காயத்திரி மாமி’ என்று குரல் கேட்டது.’இவ்வளவு காத்தாலே யார் நம்மை பேர் சொல்லிக் கூப்பிடறா’ன்னு நினைச்சு,நான் பாத்துண்டு இருந்தேன்.அப்போ என் கிட்டே பழைய ‘மெஸ்’ மாமி வந்தா.அந்த மாமி நெத்தியிலே விபூதி இட்டுண்டு இருந்தா.எனக்கு ஒரு நிமிஷம் தூக்கி வாரிப் போ ட்டது.அந்த மாமி என் கிட்டே வந்து ‘காயத்திரி மாமி,எங்காத்துக்காரர் மூனு வருஷமா அவருக்கு வந்த உடம்போடு போராடி வந்து போன வருஷம் தவறிப் போயிட்டார்.வருஷ காரியம் போன வாரம் தான் முடிஞ்சது.என் மச்சினர் மறுபடியும் அந்த ‘மெஸ்ஸை’ தொறக்கப் போறார்.எங்க ஆத்துக்காரர் இருந்த போது நான் கல்லாவிலே இருந்த மாதிரி இப்பவும் கல்லாவில் இருந்து வறப் போறேன்.என் மச்சினர் ‘மெஸ்’க்கு வேண்டிய சாமாங்கள் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வருவார்.நீங்க இப்போ எங்காவது சமையல் வேலை பண்ணிண்டு வறேளா.முடிஞ்சா அதெ விட்டூட்டு எங்க ‘மெஸ்’க்கு’ சமை யல் வேலைக்கு வர முடியுமா.உங்க சமையல் எங்காத்து மாமாவுக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. நானும் உங்களே ஒரு வாரமா பழைய சமையல் கார மாமி கிட்டே எல்லாம் கேட்டுண்டு இருந்தேன் அவ எல் லாரும் உங்களே பாக்காலேன்னு சொல்லிட்டா.நல்ல வேளை நீங்களே என் கண்லே பட்டு இருக்கேள். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.வர வாரம் விஜய தசமி அன்னைக்கு அதே இடத்லே பூஜையை போட்டுட்டு ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம்.நீங்க மறுக்காம எங்க ‘மெஸ்’க்கு சமையல் வேலைக்கு வரனும்’ன்னு கண்லே நீர் துளிக்க கேட்டா லதா.நான் உடனே ‘சரி மாமி,நான் மறுபடியும் விஜய தசமி அன்னைக்கு உங்க ‘மெஸ்’ சமையல் வேலைக்கு வறேன்’ன்னு சொன்னேன்.அந்த மாமிக்கு ரொம்ப சந்தோஷம் நான் சொன்னதைக் கேட்டு.என் கையை பிடிச்சுண்டு ‘ரொம்ப தாங்க்ஸ் காயத்திரி மாமி’ ன்னு சொல்லிட்டு அவ ‘வெயிட்டிங்கில்’ போட்டு இருந்த ஆட்டோலே ஏறிப் போயிட்டா.நான் மளி கை கடை தொறந்ததும் மளிகை சாமான் வாங்கிண்டு ஆத்துக்கு வந்தேன்.அதான் நான் ஆத்துக்கு வந்ததும் அம்பாள் படத்துக்கும் நமஸ்காரம் பண்ணி எழுந்தேன்.நானும் அம்பாள் பத்தலே இருந்து கா த்தாலே வச்சு விட்டுப் போன ரோஜாப் பூ கீழே விழுந்து,இருந்ததே பாத்தேன்” என்று சொன்னாள்.
லதாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.அம்மாவை கட்டிண்டு ”நீ ரொம்ப நல்ல ‘நியூஸை’ கொ ண்டு வந்து இருக்கயேம்மா.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்று சொன்னாள் லதா.காய த்திரி லதாவை பார்த்து“அந்த அம்பாள் நமக்கு ஒரு கதவு மூடிட்டா,ரெண்டோ,மூனு மாசமோ போன ப்புறம் இன்னொரு கதவைத் தொறந்து அனுகிரஹம் பண்றா”என்று சொல்லி தன் கன்னத்தில் போட் டுக் கொண்டு சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
விஜய தசமி அன்னைக்கு காயத்திரி குளித்து விட்டு தன் கணவர் படத்துக்கும்,அம்பாள் படத் துக்கும்,நமஸ்காரம் பண்ணி விட்டு,நன்றாக வேண்டி கொண்டு பழைய ‘மெஸ்’ இருந்த இடத்துக்கு போனாள்.வாசலிலேயே ‘மெஸ்’ மாமி காத்துக் கொண்டு இருந்தாள்.காயத்திரியைப் பார்த்ததும் “வாங் கோ மாமி.நீங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.’மெஸ்ஸை’ இன்னைக்குத் தான் தொறந்து என் மச்சி னர் ஆரம்பிக்கப் போறார்.எங்க ஆத்துக்காரர் உங்களுக்கு குடுத்துண்டு இருந்த சம்பளத்தே நான் உங் களுக்கு இப்போ தறேன்.’மெஸ்’ வியாபாரம் கொஞ்ச சூடு பிடிக்க ஆரம்பிச்சா,நான் உங்களுக்கு சம்ப ளத்தே ஒசத்தி தறேன்”என்று சொன்னதும் காயத்திரி ‘அது வரைக்கும் இந்த மாமி,நம்மை சமையல் வேலைக்கு வச்சுண்டாளே’ என்று சந்தோஷப் பட்டு கொண்டே சமையல் அறைக்குப் போனாள்.பத் து மாசம் போனதும் அந்த ‘மெஸ்’ மாமி “காயத்திரி மாமி,வியாபாரம் கொஞ்ச கொஞ்சமா சூடு பிடிச்சு ண்டு வறது.என் மச்சினர் உங்க சமபளத்தே ஒசத்தி ஐனூறு ரூபாய் அதிகமா தரச் சொன்னார்”என்று சொன்னதும் காயத்திரி “ரொம்ப ‘தாங்ஸ்’ மாமி”என்று சொல்லி விட்டு தன் ‘போர்ஷனு’க்கு வந்து லதா விடம் தன் சமபள உயர்வைப் பத்தி சொல்லி சந்தோஷப்பட்டாள்.காயத்திரி அந்த ‘மெஸ்’ஸில் வேலை செய்துக் கொண்டு வந்தாள்.
ஒரு வருடம் ஓடி விட்டது.அடுத்த நாள் விஜய தசமி.லதா ரொம்ப ஆசைப்பட்டு “அம்மா, நா ளைக்கு விஜய தசமி.நான் ஆனந்தனை அடுத்த தெருவிலே இருக்கிற பள்ளீக் கூடத்லே சேர்த்து படி க்க வைக்கட்டுமா”என்று கேட்டாள்.உடனே காயத்திரி “ஆமாம் லதா,எல்லா குழந்தைகளையும் விஜய தசமி அன்னைக்கு தான் ஸ்கூல்லே சேக்கணும்.அப்போ தான் படிப்பு நன்னா வரும்.நீ இன்னைக்கு ஒரு துணிக்கடைக்குப் போய் அவன் ‘சைஸ் ஸ¤க்கு ரெண்டு ஷர்ட்டும்,ரெண்டு அரை டிராயரும்,ஒரு துணிபையும்,ஸ்லேட்டும்,பலப்பமும் வாங்கிண்டு வா.நான் வேலைக்குக் கிளம்பினதும், நீ அவனை அழைச்சுண்டு போய் அந்த ஸ்கூல்லே சேத்துட்டு வா.சுவாமி பெட்டியிலே ஆயிரம் ரூபா இருக்கு. அவ கேக்கற பணத்தை கட்டு” என்று சொன்னதும் லதாவுக்கு சந்தோஷம் தாங்க வில்லை.அம்மாவை கட்டிண்டு “ரொம்ப ‘தாங்ஸ்ம்மா’.நீ இவ்வளவு சீக்கிரமா ஒத்துப்பேன்னு நான் நினைக்கலே” என்று சொன்னதும் ”எனக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா லதா.ஆனந்தன் யாரோவா.என் பேரன் இல் லையா” என்று சொல்லி தன்னை லதா பிடியிலே இருந்து விலக்கிக் கொண்டு ‘மெஸ்’க்கு சமையல் வேலைக்குக் கிள்மபினாள் காயத்திரி.
அம்மா ‘மெஸ்’வேலைக்குப் போனதும் லதா ஆனந்தனை அழைத்துக் கொண்டு போய் அம்மா சொன்ன எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.அடுத்த நாள் லதா ஆனந்தனை காத்தாலே எழுப்பி குளீக்க வைத்து தான் வாங்கிக் கொண்டு வந்த புது ஷர்ட்டையும் அரை டிராய ரையும் போட்டு ரெடி பண்ணினாள்.காயத்திரியும் லதாவும் ஆனந்தனை சுவத்திலே மாட்டி இருக்கும் ரெண்டு படத்துக்கும் நமஸ்காரம் பண்ண சொன்னார்கள்.அப்புறமா லதா ஆனந்தனை தன் அம்மா வுக்கு நமஸ்காரம் பண்ண சொன்னாள்.ஆனந்தனும் காயத்திரிக்கு நமஸ்காரம் பண்ணீனான்.காயத்தி திரி ஆனந்தன் தலையை வருடி விட்டு “ஆனந்தா,நீ நன்னா படிச்சு முன்னுக்கு வரணும்”என்று ஆசீர் வாதம் பண்ணி விட்டு சமையல் வேலைக்குக் கிளம்பினாள்.லதா ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு, தன் அப்பா படத்துக்கும், அம்பாள் படத்துக்கும் நமஸ்காரம் பண்ணி விட்டு “நான் ஆனந்தனை இன்னை க்கு பள்ளிக் கூடம் சேக்கப் போறேன்.அவன் படிப்பு தடை படாம இருக்கணும்ன்னு,நீங்க ரெண்டு பேரும் அவனை ஆசீர்வாதம் பண்ணிங்கோ” என்று கண்களில் கண்ணீருடன் வேண்டிக் கொண்டு ஆனந்தனை அழைத்துக் கொண்டு,அம்மா சொன்ன ஆயிரம் ரூபாயையும் தன் பர்ஸில் எடுத்து வைத் துக் கொண்டு அடுத்த தெருவிலெ இருந்த இருந்த பள்ளீக் கூடத்திற்கு போனாள்.லதாவை போல ஆறு பெண்மனிகள் அவர்கள் குழந்தையை அந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்து இருந்தார்கள்.
அந்த பள்ளிக் கூட நிர்வாகி “குழந்தையை இந்த பள்ளீகூடத்லே சேர்க்க நீங்க முதல்லே ஐனூறு ரூபாய் கட்டணும்.அப்புறமா மாசா மாசம் எர நூறு ரூபாய் கட்டணும்” என்று சொன்னதும் லதாவும் மத்த பெண்மனிகளும் ஒத்துக் கொண்டு,அந்த நிர்வாகி சொன்ன பணத்தைக் கட்டி விட்டு,அவர்கள் குழந்தையை அந்த பள்ளீ கூடத்தில் சேர்த்து விட்டு வீட்டுக்குப் போனார்கள்.லதா பகவானை வேண்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.சாயங்காலம் அம்மா வீட்டுக்கு வந்ததும் லதா பள்ளி கூட நிர்வாகி சொன்னதை சொல்லி ஆனந்தனை அந்த பள்ளீ கூடத்லெ சேர்த்து விட்டு வந்ததாய் சொன்னாள்.லதா தினமும் அம்மா சமையல் வேலைக்கு போன பிறகு கொண்டு போய் விட்டு விட்டு வந்துக் கொண்டு இருந்தாள்.ஆனந்தன் அந்த பள்ளி கூடத்லே நிறைய ‘ப்ரெண்ட்ஸ்’களை சிநேகம் பிடித்து வந்து அம்மா அவனை விட்டு விட்டுப் போனதும்,அம்மாவை ஆத்துக்குப் போக சொல்லி விட்டு பள்ளி கூட மணி அடிக்கும் வரை வாசலில் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டு இருந்து விட்டு பள்ளி கூட மணி அடித்ததும் பள்ளிக் கூடத்திற்கு உள்ளே போவான்.ஆனந்தன் அந்த பள்ளீ கூடம் சேர்ந்து ஆறு மாசம் ஆகி விட்டது.
ஒரு நாள் ரமேஷ் வரதனைப் பார்க்க போனான்.ரமேஷ் வந்து இருப்பதைப் பார்த்த வரதன் அவனை ஆத்துக்குள்ளே வரச் சொல்லி சோபாவில் உட்கார சொன்னான்.பேச்சின் நடுவிலே வரதன் தன் தங்கைக்கு கல்யாணம் நிச்சியம் பண்ணி இருப்பதாயும்,பிள்ளை வீட்டார் வரதக்ஷணையாக ஒரு லக்ஷ ரூபாய் கேட்பதாயும் சொன்னான்.கூடவே “இந்த பணத்தாசை என்னைக்கு இந்த பிராமணா ளுக்கு போறதோ,அன்னைக்கு தான் நம்ம ஜாதி முன்னுக்கு வரும்மா.இப்படி பணத்தாசை பட்டு வந் தா,நாம இன்னும் கீழே தான் போய்ண்டு இருப்போம்.இது எங்கே தெரியறது இந்த வரதக்ஷணைக் கேக்கறாவாளுக்கு” என்று சொல்லி அலுத்துக் கொண்டான்.”நீ சொல்றது ரொம்ப சரி வரதா.பிள்ளை வச்சு இருக்கிறவா வரதக்ஷணை தரணும்ன்னு கேப்பா.ஆனா கல்யாணத்துக்கு பொண்ணை வச்சு ண்டு இருக்கிறவா இதையே ‘வரதக்ஷணை கொடுமை’ ன்னு சொல்லுவா வரதா.இது உலக இயற்கை. நாம இந்த உலகத்திலே இதை எல்லாம் சகிச்சுண்டு தான் வரணும்” என்று சொன்னான் ரமேஷ். கொஞ்ச நேரம் ஆனதும் “வரதா நான் உனக்கு ஒரு லக்ஷ ரூபாய்க்கு நாளைக்கு ஒரு ‘செக்’ தரேன். நீ அந்த பிள்ளை வீட்டார் கேட்பதை எல்லாம் பண்ணி உன் தங்கை கல்யாணத்தை நல்ல விதமாக முடி” என்று சொல்லி ஒரு லக்ஷ ரூபாய்க்கு ஒரு செக்¨க் கொடுத்து விட்டு வந்தான் ரமேஷ்.வரும் வழியில் அவன் ‘நாம் நம் நண்பன் ஒருவன் தங்கை ஒரு கல்யாணத்துக்கு பண உதவி பண்ணோம்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.
ரமேஷ் கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு ரமேஷ் மறுபடியும் காரில் ஏறி “அம்பதூர் பாக்டரிக்கு போப்பா” என்று சொல்லி விட்டு வெளியே பார்த்துக் கொண்டு வந்தான்.கார் மயிலாபூர் தாண்டி வந்துக் கொண்டு இருக்கும் போது வழியில் இருந்த ஒரு ஸ்கூல் வாச லில் ஒரு நாலு வயது பையன் போட்டு இருந்த ‘ஷர்ட்டை’ சரி செய்து அவன் தலையை வருடியவாறு, அவன் கன்னத்தை தொட்டு ஒரு முத்தம் கொடுத்து விட்டு,அவனை பள்ளிக்கூடத்தின் உள்ளே போ கச் சொல்லி விட்டு,லதா கிளம்பினாள்.ஆனால் ஆனநதன் உள்ளே போகாமல் வாசலிலே அவன் ‘ப்ரென்ட்ஸ்களுடன்’ பேசிக் கொண்டு இருந்தான்.ரமேஷ¤க்கு அவன் கண்களை நம்பவே முடிய வில்லை.அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.நான் பாப்பது ‘கனவா’ இல்லை’ நிஜமா’ என்று தன்னை யே கிள்ளிப் பார்த்துக்கொண்டான் அவன்.அவன் கை ‘சு¡£ர்’ என்று வலித்தது.‘நாம பாப்பது லதாவா இல்லே,லதா போல ஒரு பெண்ணையா. அன்னைக்கு பாத்த லதா நன்னா வாளீப்பா இருந்தாளே. இவளோ மிகவும் இளைச்சு இருக்காப் போல இருக்கே.எதற்கும் நாம காரை நிறுத்தி விட்டு போய் பாக்கலாமே’என்று எண்ணினான்.உடனே ரமேஷ் டிரைவா¢டம் “டிரைவர் நீ காரை ஒரு ஓரமா நிறுத்து” என்று சொன்னான.டிரைவரும் உடனே “சரிங்க,இதோ நான் காரை ஒரு ஓரமா நிறுத்துறேங்க”என்று சொல்லி நிறுத்த இடம் பார்த்து காரை நிறுத்தி னான்.ரமேஷ் தன் மனதுக்குள் ’இவளே நம்ம லதாவாக இருக்க வேண்டுமே கடவுளே’ என்று வேண்டி கொண்டான்.எவ்வளவு இளைச்சு இருக்கா.பாவம் அவ ஏழ்மை,அப்பா பேர் தெரியாத ஒரு குழந்தை கைலே.இந்த குழந்தை வளக்கும் மனச்சுமை,பண செலவு மனதில் துக்கம் எல்லாம் சேந்து அவளை இந்த நிலைமைக்கு ஆக்கி விட்டதோ என்னவோ எவ்வளவு கஷ்ட பட்டு வறாளோ’ என்று மனதில் எண்ணினான் ரமேஷ்.
கார் ஓரமாக நின்றதும் ரமேஷ் உடனே டிரைவரைப் பார்த்து “டிரைவர், நான் எதிரே இருக்கும் இந்த பள்ளிகூடத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பழைய வாத்தியாரைப் பார்க்கணும்.அவர் எங்க தூரத்து உறவுக்காரர்.இந்த பள்ளிக்கூடத்தில் தான் அவர் வேலை செஞ்சி வரார்.இப்ப தான் எனக்கு திடீரெ ன்று ஞாபகம் வந்தது.நான் கீழே இறங்கினதும்,நீ காரை உனக்கு ‘பார்க்கிங்க்’ கிடைக்குதோ அங்கு ‘பார்க்கிங்க்’ போட்டு விட்டு இரு.நான் அவரை பாத்து முடித்தவுடன் உனக்கு போனில் கூப்பிடறேன். அப்போ நீ இந்த ஸ்கூல் வாசலுக்கு வா என்ன” என்று சொன்னான் ரமேஷ். உடனே அந்த டிரைவர் ”சரிங்க நாம் எனக்குப் எங்கே ‘பார்க்கிங்க’ கிடைக்குதோ,அங்கே நான் பார்க்கிங்க போட்டுக்கறேன். நீங்க அவரை பார்த்த பிறகு எனக்கு ஒரு ‘மிஸ் கால்’ குடுங்க.’நான் இந்த ஸ்கூல் வாசலுக்கு வரேன்” ”என்று சொன்னான் அந்த டிரைவர்.லதா விட்டு விட்டுப் போன பையனை அடையாளம் பார்த்துக் கொண்டே ரமேஷ் மெல்ல தன் செயற்கை காலை மாட்டிகொண்டு,அக்குள் கட்டையையும் எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானான்.டிரைவர் காரை விட்டு கீழே இறங்கி வந்து ரமேஷின் கார் கதவை திறந்தான்.டிரைவர் காரின் கதவைத் திறந்தவுடன் ரமேஷ் மெல்ல இறங்கி ஸ்கூலை நோக்கி நடந் தான்.லதா விட்டு விட்டுப் போன பையன் அவன் ஸ்கூல் ‘ப்ரெண்டுடன்’ நின்றுக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.ரமேஷ் மெல்ல அந்தப் பையன் பக்கத்தில் போனான்.அவனை நெருங்கி யவுடன் ‘குந்திக்கு கர்ணனைப் சபையிலே பார்த்த போது அவ அறியாமலே அவள் சதைகள் ஆடியது போல’ ரமேஷ¤க்கும் அவனை அறியாமல் அவள் சதைகள் ஆடின.தன் ‘இச்சை’ இல்லாமல் ஆடு வதை உணர்ந்தான்.’இந்தப் பையன் நமக்குப் பிறந்த பையனா இருப்பானா’ என்று எண்ணும் போது ரமேஷ¤க்கு தன்னையும் அறியாமல் ஒரு பாசம் பீறிட்டுக் கொண்டு வந்தது.அவன் கண்கள் குளமா யிற்று.ரமேஷ் தன் பாக்கெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
மெல்ல அவன் அருகில் போய் தம்பி “உன் பேர் என்னப்பா” என்று சற்று குனிந்துக் கேட்டான் ரமேஷ்.”என் பேர் ‘ஆனந்த்’ மாமா” என்று கணீரென்று சொன்னான் அந்த பையன்.வெண்கலத்தின் மணி ஓசை போல் இருந்தது அவன் குரல்.‘என்னை மாமான்னு சொல்றயே குழந்தை,நான் உன் சொ ந்த அப்பா.ரமேஷ¤க்கு ‘நான் உன் அப்பா’ன்னு அவனுக்கு சொல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டா ன்.ஆனால் ‘எதற்கும் நாம் இப்போ அவசரபட கூடாது,கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.இவன் அம்மா நம்முடைய லதா தானா என்று முதல்லே தெரிஞ்சுக்கணும்’ என்று நினைத்து தன் ஆசையை அடக்கிக் கொண்டான்.அந்த பையனை பார்த்து “உன்னை ஸ்கூலே விட்டுட்டுப் போனது உன் அம் மாவா.உன் அம்மா பேர் என்ன,உன் அப்பா பேர் என்ன”என்று தட்டு தடுமாறி கொண்டே கேட்டான் ரமேஷ்.ரமேஷை நிமிர்ந்து பார்த்து அந்த பையன் “ஆமாம்,அது என் அம்மா தான்.என் அம்மா பேர் லதா.எனக்கு அப்பா கிடையாது.என் அம்மா தான் எனக்கு எல்லாம்”என்று சொல்லிக் கொண்டு இரு க்கும் போது ஸ்கூல் ‘பெல்’ அடிக்கவே அந்த பையன் அவன் ‘ப்ரெண்டுடன்’ ஸ்கூலுக்கு உள்ளே ஓடி போய் விட்டான்.அவன் ஓடி போவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ரமே ஷ்.அவன் கைகள் அவன் கண்களைத் துடைத்த வண்ணம் இருந்தது.ரமேஷ் யோஜனைப் பண்ணி னான்.’உன் அம்மா பேர் லதாவா’ என்று தன் மனதில் வெறுமனே சொல்லிக் கொண்டு சந்தோஷப் பட்டான் ரமேஷ்.தன் மனதை கல்லாக்கி கொண்டு,தன் டிரைவருக்கு போன் பண்ணிணான்.
போன் வந்தவுடன் டிரைவர் ”இதோ நான் வரேன் சார்” என்று சொல்லி விட்டு காரை எடுத்துக் கொண்டு ஸ்கூல் வாசலுக்கு ஓட்டி வந்தான்.டிரைவர் வந்தவுடன் அவனுடன் காரில் ஏறிக் கொண் டான் ரமேஷ்.காரை ஓட்டி கொண்டே கார் டிரைவர் “சார், நீங்கத் தேடி போன அந்த பழைய வாத்தியார் கிடைச்சாரா சார்.இவ்வளவு சீக்கிரமா வந்துட்டேங்களே” என்று கேட்டான்.’கிடைச்சார்,நாங்க ரொம்ப நேரம் பேச முடியலே.ஸ்கூல் பெல் அடிச்சுட்டதாலே அவர் ஸ்கூல் உள்ளே அவசர அவசரமாக போயிட்டார்.நாளைக்கு தான் நான் அவர் கிட்டே நான் நிதானமா பேசணும்.நாம் நாளைக்கு மறுபடியும் இந்த ஸ்கூலுக்கு வரணும்”என்றான் ரமேஷ்.”சரிங்க, நாம வரலாங்க” என்றான் டிரைவர்.“இப்போ நாம அம்பத்தூர் ‘பாக்டரிக்கு’ப் போகலாமா சார்”என்று கேட்டான் டிரைவர்.”ஆமாம் அங்கே போகலாம்” என்று சொன்னதும் டிரைவர் காரை அம்பத்தூர் ‘பாக்டரிக்கு’ ஓட்டினான்.
ரமேஷ் வழி நெடுக யோஜனை பண்ணினான்.’பையன் நம் கண்ணில் பட்டுட்டான்.இவனை வச்சுண்டு நாம் லதாவை பாத்து பேசணும்.நாம பண்ண என் தப்புக்கு மன்னிப்பு தேடி கொள்ளணும். தன்னால் ‘தீங்கு’ இழைக்க பட்ட அந்த குடும்பத்துக்கு நாம் பண உதவியும்,எல்லா வசதியும் செஞ்சுக் குடுத்து அவா கஷ்டம் இல்லாம வாழ்ந்து வர எல்லாம் தான் செஞ்சு வரணும்’ என்று அவன் மனம் ஆசைப் பட்டது.’நாளைக்கு காத்தாலே நாம கொஞ்சம் முன்னமே அந்த ஸ்கூலுக்கு வந்து லதா அந் த குழந்தையே விட்டுட்டு போனவுடன் அவ பின்னாலேயே போய் அவ இருக்கும் ஆத்தை முதல்லே கண்டு பிடிக்கணும்.அப்புறமா அந்த ஆத்துக்கு போய் அவா ஆத்லே நம்மை ‘சுரேஷ்’ ன்னு சொல்லி ண்டு நுழையணும்.‘சுரேஷ்’ன்னு நம்மை சொல்லிண்டா தான் லதாவும்,அவ அம்மாவும்,நம்மை அவா ஆத்துகுள்ளேயே சேப்பா.இந்த சொத்து,இந்த ரெண்டு பாக்டரிகள்,இந்த பங்களா,எல்லாம் நம்ம குடும் ப வாரிசான ‘ஆனத்துக்கு’த் தானே சேரணும்.அவன் தானே இவைகளை அனுபவிக்க அருகதை உள் ளவன்’ என்று அவன் எண்ணி கொண்டு இருக்கும் போது அம்பத்தூர் ‘பாக்டரி’ வந்து விடவே, ரமே ஷ் அந்த யோஜனைகளை கொஞ்ச நேரம் மூட்டை கட்டி வைத்து விட்டு காரை விட்டு கீழே இறங்கி தன் ‘ரூமுக்’குள் போய் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொ ல்லி விட்டு கோவிலுக்கு போக ரெடியாக இருந்தான் ரமேஷ்.கார் ‘போர்ட்டிகோவிற்கு’ வந்தவுடன் சுவாமியை வேண்டி கொண்டு காரில் ஏறினான்.கார் டிரைவரை காரை கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஓட்டிப் போக சொன்னான்.ரமேஷ் மெல்ல காரை விட்டு கீழே இறங்கி தன் ‘ஆர்டிபிஷியல்’ காலை மெல்ல பொருத்தி வைத்துக் கொண்டு டிரைவர் கொடுத்த அக்கூள் கட்டையை வைத்துக் கொண்டு கபாலீஸ்வரர் கோவிலுக்கு உள்ளே போனான்.ரமேஷ் சுவாமி தா¢சனம் பண்ணிக் கொண்டு வெளியே வந்தான்.டிரைவரை பார்த்து “டிரைவர்,நாம அந்த ஸ்கூலுக்கு போகலாமா” என்று கேட்டான் ரமேஷ். டிரைவரும் “சரி சார்” என்று சொல்லி விட்டு காரை ரமேஷ் சொன்ன ஸ்கூலுக்கு காரை ஓட்டி போனா ன்.ஸ்கூல் வாசலுக்கு வந்து காரை நிறுத்தி ரமேஷ் உட்கார்ந்துக் கொண்டு இருந்த கதவை திறந்தான் ”சார்,நாம ரொம்ப சீக்கிரமா வந்துட்டோம் போல இருக்கு.நீங்க காரிலேயே இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்களா” என்று கேட்டான் டிரைவர்.உடனே ரமேஷ் ”இல்லை டிரைவர்,அவர் இன்னைக்கு சீக்கிரமே வருவதா சொல்லி இருக்கார்.நான் ஸ்கூல் வாசல்லே அவருக்காக காத்துண்டு இருக்கேன்.நீ ஒரு நல்ல இடத்தில் ‘பார்க்கிங்க்’ போட்டுண்டு இரு.நான் அவா¢டம் பேசிட்டு வர கொஞ்சம் ‘லேட்டா’ கும்.நான் பேசி முடிச்சவுடன் உனக்கு ஒரு ‘மிஸ் கால்’ தறேன்.அப்போ நீ வந்தா போதும்” என்று சொல்லிவிட்டு காரில் இருந்து மெல்ல கீழே இறங்கினான்.
கார் போனதும் ரமேஷ் மெல்ல நடந்து வந்து ஸ்கூல் முன்பு இருந்த ஒரு பொ¢ய புளிய மரம் பின்னால் சற்று ஒளிந்து கொண்டு ‘லதா,ஆனந்த்,எப்போ வருவா’ என்று எதிர் பார்த்து நின்று கொண் டு இருந்தான்.அவன் மனம் ‘திக்’‘திக்’ என்று அடித்துக் கொண்டு இருந்தது.சற்று நேரத்தில் லதா ஆனந்தை அழைத்து கொண்டு வந்து ஸ்கூல் வாசலுக்கு வந்து,அவன் சட்டையை சரி செய்து விட்டு அவன் கன்னத்தை லேசாக வருடி விட்டு அவனுக்கு ‘டா’ ‘டா’ காட்டி விட்டு திரும்பி நடந்தாள். லதாவை,இவ்வளவு கிட்டத்லே பார்த்த ரமேஷ¤க்கு வெட்கமாக இருந்தது.அவள் ஒரு நூறு அடி தூரம் போனதும் ரமேஷ் அந்த பக்கம் வந்துக் கொண்டு இருந்த ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ டிரைவா¢டம் “நீங்க மெதுவாக அதோ அங்கே போகிற பெண் பின்னாலேயே போங்க.நான் அவங்க வீட்டுக்குப் போகணும்”என்று சொல்லி விட்டு,தன் அக்குள் கட்டையை எடுத்து ஆட்டோவுக்குள் வைத்து விட்டு,மெல்ல ஆட்டோவில் ஏறினான்.
ஆட்டோ டிரைவர் ”சார்,நாம வேகமாக போய் அவங்களையும் நம்ம கூட ஏத்திகிட்டே போகலா ங்க”என்று கேட்டான்.உடனே ரமேஷ் “வேணாம்ப்பா.நான் இந்த அக்குள் கட்டையை வச்சு கிட்டு ‘ஆர்டிபிஷியல்’ காலையும் ஆட்டோலே வச்சுகிட்டு உக்காறது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக் கும்.நீ அவங்க பின்னாலேயே மெதுவா போய் அவங்க வீட்டுக்கு உள்ளே போன பிறகு என்னை அவங்க வீட்டு வாசலிலே விட்டு விடப்பா.நான் அவங்களுக்குத் தெரியாம அவங்க வீட்டுக்கு போக ணும்”என்று சொன்னான்.‘பாத்தா பொ¢ய இடத்து பையன் போல் இருக்கார்.ஆனா அந்தப் பொண் ணை ‘பாலோ’ பண்ணச் சொல்றாரே’ன்னு ஆட்டோ டிரைவர் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தான். ’நமக்கு ஏன் இந்த துப்பு துலக்கிற வேலை,யார் யாரை ‘பாலோ’ பண்ணா நமக்கு என்ன’ என்று நினைத்து டிரைவர் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு போய் கொண்டு இருந்தான்.
முன்னே போய்க் கொண்டு இருந்த லதா கொஞ்ச தூரம் போய் ‘கேசவன் பிள்ளைத் தெரு’ என்ற ஒரு தெருவில் நுழைந்தாள்.அந்த தெருவின் பேரை பார்த்துக் கொண்டான் ரமேஷ்.லதா புது எண் 15 பழைய எண் 34 என்ற வீட்டில் நுழைந்து இரும்பு வாசல் கதவைத் திறந்துக் கொண்டு பின் கட்டுக்குள் போனாள்.லதா அந்த வீட்டுக்குள் நுழைவதை பார்த்தான் ரமேஷ்.ரமேஷ் ஆட்டோவை அந்த வீட்டு வாசல் முன்னால் நிறுத்த சொன்னான்.ஆட்டோ நின்றதும் ரமேஷ் மெல்ல கீழே இறங்கி தன் அக்குள் கட்டையையை அக்குளில் வைத்துக் கொண்டு தன் பர்ஸைத் திறந்து ஆட்டோ டிரைவ ருக்கு பணம் கொடுத்தான்.பணம் கிடைத்ததும் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு போய் விட்டான்.கடவுளை வேண்டிகொண்டான் ரமேஷ்.
மெல்ல ¨தா¢யத்தை வரவழைத்து கொண்டு மூடி இருந்த இரும்பு கதவை திறந்துக் கொண்டு வீட்டில் நுழைந்து பின் கட்டுக்குப் போய் வாசலில் நின்றான் ரமேஷ்.கொஞ்சம் ஓரமாக நின்றுக் கொ ண்டு வாசலில் இருந்தே அந்த வீட்டை நோட்டம் விட்டான்.சமையல்கார மாமி காயத்திரிக்கு நல்ல ஜுரம் போல் இருந்தது.அவள் ஹாலில் ஒரு ஓரம் கிழிந்துப் போன பாயில் படுத்துக் கொண்டு இருந் தாள்.அவள் தலையணை எண்னை சிக்கு பிடித்து இருந்தது.உடம்பில் ஒரு சாயம் போன நூல் புட வை கட்டிக் கொண்டு சுருண்டுப் படுத்து இருந்தாள் அவள்.அந்த ஹால் சின்ன ஹால்.எட்டு அடிக்கு எட்டு அடி இருக்கும்.அதை ஒட்டி ஒரு சின்ன கிச்சன்.அது சுமார் ஆறு அடிக்கு ஆறடி இருக்கும் ஹாலில் இருந்த கொடியில் ஒரு ஓரத்தில் அம்மா புடவையும்,பக்கத்தில் லதாவின் புடவையும் உலர் ந்து கொண்டு இருந்தது.சாப்பிட்டு விட்டு அம்மா,பொண்ணு,ஆனந்த் மூவரும் அந்த ஹாலில் படுத் து கொள்வார்கள் போல் இருக்கிறது என்று எண்ணினான் ரமேஷ்.ஹாலில் ஒரு மர சேர் தான் போட்டு இருந்தது.ஒரு ‘டேபிள் பேன்’ இருந்தது.இவைகளை கவனித்த ரமேஷ¤க்கு அவர்களின் ஏழ்மை நிலை நன்றாகப் புரிந்தது.’இவர்கள் பாவம் இத்தனை ஏழ்மை நிலையிலே வாழ்ந்து வருகிறார்கள்’ என் று நினைத்து ரமேஷ் மிகவும் மனம் வருந்தினான்
லதா கொஞ்சம் வெந்நீர் போட்டுக் கொண்டு வந்து தன் அம்மாவிடம் கொடுத்து “ஜுரம் கொ ஞ்சம் விட்டு இருக்காம்மா.இந்தா இந்த மாத்திரையும் போட்டுண்டு வெந்நீரைக் குடி.மத்தியானத்து க்குள் ஜுரம் சரியா போறதான்னு பாப்போம்.இல்லாட்டா டாக்டர் கிட்ட தான் சாயங்காலம் போய் காட்டணும்.விளையாட்டா இன்னியோடு நாலு நாள் ஆறது உனக்கு ஜுரம் வந்து” என்று கவலையோ டு சொன்னது ரமேஷ் காதில் விழுந்தது.காயத்திரி இருமிக் கொண்டே மெல்ல எழுந்து லதா கொண்டு வந்து கொடுத்த மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு அவள் கொடுத்த வெந்நீரையும் குடித் தாள்.”என்ன ஜுரமோ லதா,இந்தப் பாழா போன ஜுரம் விடாம அடிச்சுண்டே இருக்கு.நானும் வேலை க்கு போய் நாலு நாள் ஆறது.இப்படி வேலைக்கு போகாம இருந்தா அந்த ‘மெஸ்’ மாமா என்னை ‘நீ வேலைக்கு வேணாம்.நான் வேறே ஒரு மாமியை வேலைக்கு வச்சிண்டுட்டேன்’ன்னு சொன்னாலும் சொல்லிடுவார்.அப்படி பண்ணிட்டா நாம என்னடி பண்றது”என்று சொல்லும் போதே அவள் கண்களீ ல் நீர் துளித்தது.”பாக்கலாம்மா.நீ வீணா கவலை படாம இருந்து வா” என்று சொல்லி மெல்ல தன் அம் மாவை படுக்க வைத்து விட்டு,ஒரு போர்வையை அவள் மீது போர்த்தினாள்.”நான் பாக்கர சமையல் வேலே என்ன நிரந்தரமா லதா.இது வரைக்கும் மூனு இடத்லே சமையல் வேலை செஞ்சு வந்தேன். அந்த மூனு இடத்திலேயும் ஏதோ காரணத்தாலே வேலே போயிடுத்து.விலை வாசி எல்லாம் ஏறிண்டே வருது.ஆனந்துக்கு பள்ளி கூட பீஸ் கட்டி வரணும்.நான் வேலேக்குப் போனா தானே சமபளம் வரும் சொல்லு”என்று புலம்பி விட்டு லதா கொடுத்த போர்வையைப் போர்த்தி கொண்டாள்.லதா சமையல் ரூமுக்கு போனாள்.இத்தனையும் வீட்டின் சற்று தூரத்தில் நின்று கேட்டுக் கொண்டு இருந்தான் ரமே ஷ்.அவன் மனம் இன்னும் வேதனைப் பட்டது.
யோஜனைப் பண்ணினான் ரமேஷ்.பிறகு மனதில் ¨தா¢யத்தை வர வழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு உள்ளே போய் “மாமி,என்னை தெரியறதா,நான் தான் சுரேஷ்”என்று சொல்லி நின்று கொண்டு இருந்தான் ரமேஷ்.மெல்ல கண்ணைத் திறந்துப் பார்த்தாள் காயத்திரி.வாசலிலே நின்றுக் கொண்டு இருந்தவனை பார்த்ததும் அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.’என்னடா இவன் நன்னா தானே இருந்தான்.இப்ப அக்குள் கட்டையை வச்சுண்டு நிக்கறானே இவன்’ என்று யோஜனை பண் ணீனாள் காயத்திரி.லதாவும் அவனை பார்த்தாள்.அவளுக்கும் அவனை பார்த்ததும் தூக்கி வாரி போ ட்டது.கண்களை அகல விரித்து பார்த்தாள் லதா.அவள் முகம் குப்பென்று வெக்கத்தால் சிவந்தது. தன் ஆத்துக்கு வந்து இருப்பது சுரேஷ் என்று அவள் நினைத்து சந்தோஷப்பட்டாள்.”நீங்களா,வாங் கோ.உள்ளே வாங்கோ.எனக்கு நாலு நாளா ஜுரம் அடிக்கிறது.இன்னைக்கு சாயங்காலத்துக்குள் சரி யா போயிடும்ன்னு நினைக்கிறேன்.ஆமாம்,நாங்க இங்கே இருக்கோம்ன்னு உங்களுக்கு எப்படி தெரி ஞ்சது.எப்படி இந்த விலாசத்திற்கு நீங்க வந்தேள்”என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் காயத்திரி.
ரமேஷ் தன்னை சமாளித்துக் கொண்டு “நான் நேத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய் சுவாமி தா¢சனம் பண்ணிட்டு வந்துண்டு இருந்தப்ப லதா ‘மாதிரி’ இருந்த ஒரு பொண்ணு ஒரு பைய னை ஸ்கூல்லே விட்டுட்டு போனதை நேத்து பாத்தேன்.நான் காரை நிறுத்தி விட்டு ஸ்கூல் வாசலுக் கு வறதுகுள்ளாற அந்த ‘பொண்ணு’ போயிட்டா.ஆனா அந்த பையன் மட்டும் ஸ்கூல் வாசல்லே அவன் ‘ப்ரெண்ட்ஸோ¡ட’ பேசிண்டு இருந்தான்.நான் அவன கிட்டே போய் “உன் பேர் என்ன. உன்னே இப்போ ஸ்கூல்லே விட்டுட்டு போனது யாரு,உன் அம்மா பேர் என்ன,உன் அப்பா பேர் என் னன்னு’ கேட்டேன்.அவன் ‘என் அம்மா பேர் லதா,எனக்கு அப்பா பேர் தெரியாது’ன்னு சொல்லிட்டு ஸ்கூல் உள்ளே ஓடிப் போயிட்டான்.அப்போ தான் எனக்கு எல்லா விவரமும் தெரிய வந்தது.நான் இன்னை க்கு மறுபடியும் கோவிலுக்கு போயிட்டு வரும் போது லதாவை பாத்தேன்.நான் காரை விட்டு கீழே இறங்கி ஒரு ஆட்டோவை வச்சுண்டு,லதா பின்னாலேயே வந்தேன்.அப்போ இந்த ஆத்துக்குள் லதா நுழைவதை நான் பாத்தேன்.அதான் நான் உள்ளே வந்து உங்களை பாத்துட்டு போகலாம்ன்னு தான் நான் நுழைஞ்சேன் மாமி” என்று சொல்லி விட்டு அக்குள் கட்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு சுவாதீனமாக காயத்திரியை தொட்டு பார்த்தான்.”நல்ல ஜுரம் அடிக்கிறதே மாமி. வாங்கோ, நாம ஒரு நல்ல டாக்டரை பாத்து மருந்து வாங்கிண்டு வரலாம்.எங்க ‘பாமிலி’ டாக்டர் ரொம்ப நல்ல வர்.எழுந்திருங்கோ,நாம போய் வரலாம்”என்று சொல்லி காயத்திரியை எழுந்து கொள்ள சொன்னான் ரமேஷ்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் லதாவை பார்த்து “என்ன லதா,நீ இவ்வளவு இளைச்சு போய் இருக்கே.உனக்கும் ஏதாவது உடம்பு சரி இல்லையா” என்று கேட்டான்.தன்னை பற்றி விசாரித்ததும் லதாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.‘எவ்வளவு நல்லவர் இவர்’ என்று நினைத்து சந்தோஷப்பட் டாள் லதா.
லதாவின் உடம்பை பத்தி ரமேஷ் விசாரித்ததும் காயத்திரிக்கு கோவம் பொத்து கொண்டு வந்த து.தனக்கு ஜுரம் என்று கூட பார்க்காமல் கோவத்தில் காயத்திரி “உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு இரு ந்தும் இப்படி கேக்கறளே.உங்க ‘வெறி நாய்’ தம்பியின் ‘காம ஆசைக்கு’ என் பெண் லதா ஆளாகி இப்போ ஒரு ஆண் பையனை பெத்துண்டு இருக்கா.உங்க வீட்டு வேலைகாரன் ஆறுமுகத்துக்கு லீவு குடுத்து அவனை வெளியே போக சொல்லிட்டு,எனக்கும் லதாவுக்கும் மயக்க மருந்தை மூக்கில் வச்சு, எங்களுக்கு மயக்கம் வரவச்சுட்டு,லதாவை ‘கெடுத்து’ இருக்கான் உங்க ‘அயோக்கிய தம்பி’.லதா கர்ப் பமானதே அவளுக்கு தெரியாம,அந்த குழந்தை அவ வயித்லே வளந்துட்டதாலே,நாங்க வேறு ஒரு வழியும் இல்லாம அந்த குழந்தையை பெத்து கொள்ள வேண்டியதாச்சு.நான் ஒரு ‘தலை’ இல்லாத ஏழை சமையல் காரி.அவளோ ‘இப்படி’ ஆயிட்டா.இதனாலே அவளும் நானும் பட்ட மன வேதனை எங்களுக்கு தான் தெரியும்.இந்த லொகத்லே யாருக்கும் அந்த மாதிரி மன வேதனை வர கூடாது. உன்னை போல நல்ல அண்ணனுக்கு இந்த மாதிரி ஒரு ‘வெறி நாய்’ எப்படித் தான் தம்பியா பிறந்தான்னு எனக்குத் தெரியலே.அவன் இப்படி பண்ணி என் பெண் கர்ப்பமானதை உன் அப்பா, அம்மா,உன்னிடமும் நான் கபாலீஸ்வர் கோவில்லே சொல்லி உங்க குடும்பத்தை நான் கண்ட படி திட்டினேனே.பிடி சாபம் குடுத்தேனே.எங்க போறாத வேளை தான் நாங்க உங்க பங்களாலே சமையல் வேலைக்கு வந்து மாட்டிண்டோம்.நல்ல பிராமணா குடும்பமா இருக்கேன்னு தான்,நான் நம்பி அங்கே சமையல் வேலைக்கு வந்தேன்.ஆறு மாச கர்ப்பிணி பொண்ணே வச்சுண்டு,நான் ஒரு நாய் படாத கஷ்டம் எல்லாம் பட்டுண்டு வந்தேன்.மூனு ஜாகை மாத்தீண்டு வந்து இருக்கேன்.மூனு இடத்லே சமையல் வேலை செஞ்சுண்டு வந்தேன்.போன் ஜெம்னத்லே பண்ண கொஞ்ச புண்ணியத்தாலே,சில நல்லவா,உதவியாலே,நாங்க இன்னும் உயிரோடு இருந்துண்டு வறோம்.இப்போ நாலு நாளா ஜுரத் தோடு இருந்து வறேன்.அவ உடம்பு இ¨ளைக்காம இருக்குமா சொல்லுங்கோ”என்று அழுதுக் கொ ண்டே சொன்னாள் காயத்திரி.
காயத்திரி அழுதுக் கொண்டு சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ரமேஷை ஈட்டி எடுத்து அவன் உடம்பைத் துளைப்பது போல் இருந்தது.மௌனமாய் கேட்டுக் கொண்டு இருந்தான் ரமேஷ். அவன் மனம் வேதனைப் பட்டது.‘நாம நம்ம இளமை உணர்ச்சி ஆசையை அன்று விளையாட்டு தன மாய் லதாவிடம் தீர்த்துக் கொண்டோம்.ஆனால் அது எவ்வளவு பொ¢ய மன வேதனையை லதாவுக்கு ம் அவ அம்மாவுக்கும் தந்து இருக்கு.அதனால் அவளும் அவள் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்து இருக்கா.லதா ‘அந்த’ குழந்தையே’ தான் ஸ்கூலுக்கு கொண்டு போய் விடறாளா.அப்போ அந்த குழந்தை என்னுடையது தானா.நான் தான் அந்த ஆனந்த்க்கு அப்பாவா’என்று அவன் எண்ணும் போது அவன் கண்கள் கண்ணீரில் நனைந்தது.தன் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து கண்க களை துடைத்து கொண்டான்.காயத்திரி சொன்னதைக் கேட்ட ரமேஷ் ”உண்மை தான் மாமி.என் தம்பி ஒரு ‘வெறி நாய்’ தான்.லதாவை ‘கெடுத்தது’ ‘மன்னிக்க முடியாத’ குத்தம் தான்.நீங்க கவாலீஸ் வரர் கோவிலில் சொன்னப்ப நான் ரொம்ப வருத்த பட்டேன்.எனக்கும் கோவம் கோவமா வந்தது .நானும்,அம்மாவும்,அப்பாவும்,பங்களாவுக்கு வந்ததும் ரமேஷை கூப்பிட்டு கண்டிச்சோம்” என்று சொ லி விட்டு மறுபடியும் தன் கண்களை துடைத்து கொண்டான்.
– தொடரும்…