தலைமுறையின் துக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 8,220 
 
 

அரக்கோணத்தில் உள்ள நண்பனின் வீட்டுவிஷேச நிகழ்வை முடித்துவிட்டு மாலை தன் நண்பர்களுடன் ஈரோட்டைநோக்கி காரில் பயணித்த ரவி இரவு உணவுக்காக தொப்பூர் தாண்டி ஒரு உணவுவிடுதியில் நிறுத்தினான். அங்கே சாப்பிட டிபன் ஆடர் சொல்லி அமர்ந்திருந்தபோது சாப்பிட்டு முடித்த எச்சில்இலையை எடுத்து மேசையை சுத்தம் செய்தார் ஒரு பெரியவர். இதை பார்த்தா ரவிக்கு சிறிது மனகலை சற்று தயக்கத்துடன் அந்த பெரியவரிடம்

“ஐயா” என்றான்

ஆனால் அவர் எதுவும் பேசவில்லை மீண்டும் அழைத்தும் அவர் பேசவில்லை. சிறிது நேரத்தில் டிபன் வந்தது பரிமாறுபவர் கூறினார் அவரிடம் ரவி கேட்க, “சார் முதலாளியின் உத்தரவு சாப்பிட வருபவர்களிடம் தேவையில்லாமல் யாரும் பேசக்கூடாது” என்று.

ஆனால் ரவி அந்த பெரியவரின் நிலையை கண்டு அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் உணவு உண்டு முடித்துவிட்டு கல்லாவில் இருந்த முதலாளியிடம், “சார் நான் அந்த பெரியவரிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்றான்”

அதற்கு அவர் “என்ன விஷயம்” என்றார்.

“ஒன்னுமில்லை சும்மாதான்” என்றான்.

“ஒன்னுமில்லாம சும்ம பேச என்னங்க இருக்கு அதுவும் வேலை நேரத்துல அந்த பெரியவர்கிட்ட, முதல்லயே அவரு ஒழங்காவே வேலை செய்யமாட்டாறு, நீங்க பேசிட்டிருந்த அவ்வளவுதான்” என்றார்.

“இல்லைங்க, வேலையை கெடுக்காம ஒரு ஐந்து நிமிஷம் என்றான்”

“சரி சரி சிக்கரமா பேசிஅனுப்புங்க.. அப்பறம் அவருகிட்ட எதையாவது பேசி மனச கொழப்பி இந்த வேலைக்கு ஒழ வெச்சுறாதிங்க. பாவம்! அவர நம்பி சில ஜீவன்கள் இருக்கு” என்றார்.

முதலாளியிடம் அனுமதி வாங்கி பெரியவரிடம் பேச சென்ற ரவியிடம் அவன் நண்பன் பாலு, “டேய் மாப்ள அந்த பெரியவர்கிட்ட பேச என்னட இருக்கு இந்த கெஞ்சு கெஞ்சர”

“இல்ல மாப்ள இந்த வயசிலும் வேலைசெய்ய முடியாத வயசிலகூட அதுவும் எச்சில்இலை எடுக்கிறார்னா பாவம இருக்குடா” என பாலுவிடம் சொல்லிவிட்டு அந்த பெரியவரிடம்,

“ஐயா உங்க முதலாளிகிட்ட கேட்டுட்டேன் தைரியமா பேசுங்க”

“பேசறதா, என்னத்த பேசறது”

“இல்லைங்கய்யா, இந்த வயசுல இந்த வேலை செய்றீங்களே பார்க்க கஷ்டமா இருக்கு அதான்”

“இந்த வேலையா?.. இந்த எச்ச இலை எடுக்குறதா? ஏன்? எடுத்தா? என்ன யாரையும் ஏமாத்தாம என்னால ஆன வேலைய செய்யறேன். அது சரி, இதை பார்த்து நீங்க ஏன் கஷ்டபடறீங்க பேசாம போங்க… இருக்கற வேதனையில இவுங்க வேற” என்று கூறிவிட்டு கையில் வைத்திருந்த எச்சில் இலை பக்கிட்டை எடுத்துக்கொண்டு வெளியே எட்டிப்பார்த்தார்.

“ஐயா! தப்பா எடுத்துக்காதிங்க, நான் உங்கள காயபடுத்துனும்னு கேட்கல. இந்த வயசிலயும் உழைக்கும் உங்களின் கஷ்டத்தையும் அவமானம் என்ற துளிகூட இல்லாம உழைக்கும் உங்களின் தேவையின் காரணத்தையும் தெரிஞ்சுக்கதான் கேட்டேன், ஏன்னா, உங்க வயசுல எங்க வீட்டலையும் பெரியவங்க இருக்காங்க அவங்க.. அவங்க தேவையை கூட செய்யமாட்டாங்க அதனால் வீட்டில் பிரச்சனை வரும். ஆனா நீங்க பார்க்க மாற்றமா தெரியிரீங்க அதான்”

“மாற்றம தெரியிரனா என்ன மாற்றம் தெரியுது எல்லாத்துக்கும் இருக்கிற கை கால் கண்ணு எல்லாம் ஒன்னு தான் ஆனா மனசுல இருக்கிற வேதணை வேற” என்று சொல்லிக்கொண்டே பின்வாசல் பக்கம் பார்த்த அவரின் முகத்தில் ஒரு சின்ன மாற்றம். அதை கண்ட ரவி அவனும் வாசல் பக்கம் பார்த்தான்.

அப்போது 8வயதுமதிக்க ஒரு சிறுமி ஒரு ஜடை பிரிந்து ஒருஐடைபின்னியும் கழுவாத முகம் ஒருமூக்கில் லேசாக வெளிவந்த சலி ஐ எம் பட்டர்பிளை என்று எழதியிருந்த டீ சர்டின்வலது கைக்கு கீழ் கிழிந்தும் கால் பாதத்திற்கு பத்தாத செருப்புடன் ஒடி வர சட்டென கையில் இருந்த எச்சில் இலைபக்கெட்டை மறைத்துவைத்து விட்டு தன் உடையையும் தலையையும் சரிசெய்து கொண்டு அந்த சிறுமியை நோக்கி நடந்து

“ஏண்டா கண்ணு” என்று கேட்டார். “தாத்தா தம்பிக்கு பசிக்குதாம் நானும் நாளைக்கு ஸ்கூலுக்கு நேரத்திலேயே போகணும் அதனால சீக்கரம சாப்பிட்டுட்டு தூங்கணும் நீ வர லேட்டாகுமா…? நீ வர லேட்டாகுன எதாவது இருந்த சாப்பிட கட்டிதா நானும் தம்பியும் சாப்பிட” என்று கேட்க

“இப்ப எப்படிமா கட்டறது தாதா வீட்டுக்கு வரும்போதுதான் கட்டிட்டு வர முடியும் இப்ப கட்டின முதலாளி திட்டுவாறுமா”

“இல்ல தாதா எனக்கும் தம்பிக்கும் பசிக்குது இப்பவே வேணும்.. இப்பவே வேணும்” என அடம்பிடிக்க

“கண்ணு.. இல்லமா தாதா சொன்ன கேப்பையில நல்ல தங்கமல்ல…நீ போயி வீட்டுல பாட்டிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு படுத்து இரு நான் சீக்கிரமா வேலைமுடிச்சுகிட்டு தங்கத்துக்கு முனுதோசையும் ஆம்லேட்டும் கட்டிட்டு வரேன்”

“இல்ல தாதா எனக்கு இப்பவே கட்டி கூடுங்க தோசைஇல்லாட்டி பரவாயில்லை மதியனசோறு மிச்ச இருந்தாகூட பரவாயில்ல கட்டிகுடுங்க” என்றது

இதை பார்த்த ரவி “ஐயா நான் வேணா காசு கூடுத்தறறேன் பாப்பாவுக்கு வாங்கி கூடுங்க”

“காசு தர்யா… தம்பி கொஞ்சம் பேசாம இருங்க இன்னிக்கு நீங்க வாங்கி கொடுத்து பழகிட்ட.. அவளுக்கு அதே எண்ணம் தோன்றும் அது அவளா வேறமாரி மாத்திரும் பேசம இருங்க” என்று சொல்லிவிட்டு பேத்திபக்கம் திரும்பி

“கண்ணு நீ போயி வெளியில அந்த இளநீ கடையில கொஞ்ச நேரம் நில்லு நான் உள்ளே சாப்பிட எதாவது இருந்த கட்டி எடுத்துட்டு வரேன்” என்று கூற

“சரி தாதானுட்டு” மெதுவா படி இறங்கி எதிரில் இருந்த இளநீ கடையை நோக்கி ஒடினால் சிறுமி

சிறுமி இளநீ கடைக்கு சென்று நிற்பதை பார்த்துவிட்டு பெரியவர் மறைத்து வைத்த எச்சில் இலைபக்கிட்டை எடுத்துகொண்டு உள்ளே மேசைகள் மீதிருந்த எச்சில்இலைகளை எடுத்து டேபுளை சுத்தம் செய்து விட்டு ஓட்டலின் சமையலறை வாசல் பக்கம் வந்து “ஹேமா ஹேமா” என்றழைக்க உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு திருநங்கை “ஏன்ன தாதா”

“அம்மாடி பேத்தி வந்திருக்க பசிக்குதுங்கற மதியானம் மிச்ச எதாவது இருந்த பாருமா கட்டிக்குடுக்க” என்று கேட்க ஹேமாவும்

“இருங்க தாதா” னு உள்ளே சென்றாள்.

அப்போது பெரியவர் ரவியின் பக்கம் திரும்பி “பாத்தியப்பா நீ கேட்ட கேள்விக்கு இதான் பதில் இந்த கிழவனின் இந்த உழைப்புதான் வீட்டில் உள்ள ஜீவன்களுக்கு உணவளிக்குது” என்று கண்ணோரம் நீர் கசிய

“என் பெயர் கிருஷ்ணன் எனக்கு இரண்டு மகன் இரண்டு மகள்! மகள்கள் கல்யாணமாகி வெளியூரில் இருக்கிறார்கள். ஒரு மகன் இறந்து விட்டான் அவனுக்கு இரண்டு குழந்தைகள் மற்றொருமகன் பூ வியாபாரம் செய்கிறான் அவனுக்கும் இரண்டு குழந்தைகள் ஆக மொத்தம் மனைவி மருமகனு மொத்தம் 9 நபர் கொண்ட குடும்பம்.

“குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாகதான் இந்த எச்ச இலை எடுக்கிறேன்” என்று கூறும்போது அவர் கண்ணில் கண்ணீர்.அதை துடைத்து விட்டு,

“30 வருடத்திற்கு முன் கிருஷ்னகிரியில் உள்ள ஒரு பெரிய திரையரஙகின் புரெஜெக்டர் ஆப்ரேட்டர் நான். அப்பல்லாம் ராஜ வாழ்க்கை அப்ப வந்த பல படங்கள் 100நாள் 200நாள் ஓடும் அதனால் நல்ல வருமானம் மிக சந்தோஷமான வாழ்வு! முதல்மரியதை படம் 100நாட்கள் ஓடியதால் திரையரங்கிற்கு வந்த பாரதிராஜா சார் மற்றும் சிவாஜி ஐயாவுடன் எல்லாம் போட்டோ எடுத்திருக்கிறேன். ஆனால் பின்னாடி திருட்டு விசிடி டிவி சீரியல்னு வந்ததுல தியேட்டர்ல கூட்டம் கொரஞ்சுறுச்சு. போக போக தியேடடர்ல நஷ்டம் ஏற்பட்டு ஒரேடியா தியேட்டர மூடிட்டங்க நான் கிட்டதிட்ட 28 வருடமாக தியேட்டர் வேலையிலேயே இருந்ததால் எனக்கு வேறெதுவும் தெரியாது பணத்துகாக நான் அங்கும் இங்கும் சென்று நிறைய வேலைகள் பாத்தேன் ஆனால் பல வேலைகள் வயசாகிவிட்டதால செய்ய முடியில கடைசியில் இங்கு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ஹேமா உள்ளே இருந்து வெளியே வந்து “தாதா இந்த சோறு பீட்ருட் பொரியலும் ரசமு இருந்தது எல்லா ஒன்ன ஊத்தி கட்டிருக்கே எங்க அவ அவகிட்ட கூடுத்திடுங்க”

“த அங்க இளநீ கடையில நிக்க சொன்னே இங்க நின்ன முதலாளி பார்த்த திட்டுவார்னு..” அந்த பொட்டலத்த ஹேமாவிடம் இருந்து வாங்கிவிட்டு வெளிவாசல் பக்கமா வந்து நின்னு இளநீ கடையில நின்ன பேத்தியை பார்த்து இங்க வாமானு ஜாடை பண்ண அந்த சிறுமியும் ஒரே ஒட்டமாக வர “இந்தட தங்கோ இதுல சோறு பொரியல் இருக்கு இதை கொண்டு போயி நீயும் தம்பியும் சண்டை போடம சாப்பிடுங்க” என்று கூற

“சரி” என்று கூறிவிட்டு அந்த பொட்டலத்தை வாங்கிகொண்டு அந்த சிறுமி

“தாத்தா வரும்போது எனக்கு தேங்காய் பண்ணு வாங்கி வா தாதா…”

என்று கூற

“சரிசரி வாங்கியாறேன் நீ பத்தரமா பாத்து போ பொட்டலத்த பாத்தா நாய்கிது தொரத்தும்”

“சரிங்க தாதா நீங்க மறக்கமா தேங்க பண்ணு வாங்கிட்டு வாங்க” என்று கூறிவிட்டு அந்த உணவு பொட்டலத்தை கட்டி அனைத்த படி ஓடியது.

அந்த சிறுமியின் ஒட்டம் ரவியின் கண்ணைவிட்டு மறைந்தவுடன்.

பெரியவர் கூறினார்

“என் மனைவி ஒரு.. வாதநோயாளி ஒரு மகன் விபத்தில் இறந்ததுட்டான் அந்த விபத்திலேயே அவன் மனைவியும் கால்கள இலந்து மொண்டியாயிட்ட இன்னொரு மருமக நான் என் இன்னொரு மகன் ஆக 3 வரின் வருமானம்தான் எங்கள் குடும்ப 9 பேருக்கும்” இவ்வாறு கூறிவிட்டு

“நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்போ வாழுற வாழ்க்கைகும் ம்ம்ம்.. என்ன பன்றது எல்லா தலையெழுத்து இப்பதான் புதுபடமெல்லாம் தம்மாதுண்டு போன்லயே பாக்கறாங்க சீரியல பாக்கறாங்க தம்பி…இப்பெல்லாம் யாரு சினமா பார்க்க தியேட்டருக்கு வராங்க எல்லாம் சீரியல்லேயே முழ்கிறாங்க அதனால இப்ப சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு சீரியல் வந்துவிட்டது அப்படியே சினிமா பார்க்க வந்தாலூம் தியேட்டர்கா வராங்க மால் மற்றும் ஒபன் தியேட்டர்னு போறாங்க .அதனால திரையரங்கம் பாதிக்குதுங்கறது ஒரு செய்தி அவ்வளவுதான்.ஆனால் அதனால் என்னைப்போல பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் கஷ்டம்” என்று கண் கலங்க கூறினார்.

“ஐயா நான் வேனா ஏதாவது உதவி செய்யட்டுங்களா”

“உதவியா வேண்ட வேண்டாங்க தம்பி ஏதோ என் மனக்கொறய கேட்டீங்களே இதுவே போதும்”என்று மறுத்து விட்டார்.

இறுதியாக கட்டயபடுத்தி தேங்காய்பண் வட்டமானது மூன்று மட்டும் வாங்கிகொடுத்து அதை அந்த பெரியவர் பெற்றுக்கொண்டுதற்கு நன்றிசொல்லி ரவியும் பாலும் நண்பர்களும் விடைபெற்றனர். ரவி வாகனத்தை இயக்க கொண்டே நண்பர்களிடம் ஈரோட்டில் எத்தனை திரையரங்கம் இருந்தது இப்போது எத்தனை உள்ளது அதில் வேலை செய்த ஊழியர்களின் நிலை அவர்களின் குடும்பம் என்று பேசிகொண்டே கனத்த இதயத்துடன் நண்பர்களை எல்லாம் அவரவர் வீட்டில் விட்டுவிட் டு வீட்டிற்க்கு வந்தா வீட்டில் மனைவி அம்மா அப்பா மகள்னு… எல்லாம் தான் வந்தது கூட தெரியாமல் சீரியலை மிக ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர்.

அடுத்த தலைமுறையின் மாற்றம் முந்தைய தலுமுறையின் துக்கம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *