சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 6,385 
 
 

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

தேவி குடிசைக்கு வந்ததும் வராததும் “எனக்கு என்னவோ நீங்க சொல்றது சரின்னு படலேங்க. அவங்க வூட்லே ஒரே ஒரு ரூம் தானுங்க இருக்கு.எப்படிங்க அந்த ‘சிறுசுகள்’ அந்த வூட்லே சந்தோஷமா இருக்க முடியுங்க” என்று மறுபடியும் சொன்னவுடன் உடனே ரத்தினம் “என்னப்பா ராஜ், தேவி சொல்றது நிஜமா.அவங்க வூட்டிலே ஒரே ஒரு ரூம் தானா இருக்குது” என்று கேட்க ஆரம் பித்தாள்.‘என்னடா இது வம்பாப் போச்சு.இனிமே சேகர் அவன் அவ பெண்ஜாதியோட சந்தோஷமா இருந்து வர அவன் வழி பண்ணிக்கிறான்.இவங்க ரெண்டு பேரும் ஏன் வீணா நம்மைப் போட்டு குடைஞ்சி எடுக்கிறாங்க’ என்று வருத்தப் பட்டுக் கொண்டே“ஆமாம்மா,அவங்க வூட்டிலே ஒரே ஒரு ரூம் தான் இருந்திச்சி.நான் கூட பாத்தேன்.நான் வேலே மேலே சேகரைப் பார்ப்பேன். அப்போ அவன் கிட்டே நிதானம பேசிப் பாக்கிறேம்மா.இப்போ அந்த வூட்டிலே அவங்க அம்மா அவன் கூடவே நின்னுக் கிட்டு இருந்தாங்கம்மா.இதை நான் எப்படிம்மா அவன் கிட்டே கேக்கறது சொல்லு” என்று மெல்ல தன் சங்கடத்தை சொல்லி சமாளித்தான் ராஜ்.தேவியும் ரத்தினமும் விடாமல் ராஜ்ஜைப் பார்த்து சேகரைப் பார்த்தா மறக்கம கேட்கச் சொன்னார்கள்.அவனும் ‘இப்போதைக்கு தன்னை விட்டா போதும்’ என்று நினைத்து “நான் நிச்சியமா அவனை கேட்டுக் கிட்டு வந்து உங்க கீட்டே சொல்றேன். எனக்கும் அந்த கவலை இருக்குது” என்று சொல்லி கவலைப்பட்டான்.கொஞ்ச நேரம் கழித்து ராஜ் ‘தனக்கு ஏதோ வெளியே வேலை இருக்குது’ ன்னு சொல்லி விட்டு வெளீயே கிளம்பினான்.தேவி மட்டும் தன் அத்தை கிட்டே”அத்தே,சேகர் வூடு ரொம்ப சிறுசா இருக்கு.இன்னும் கொஞ்ச நல்ல இடமாப் பாத்து இருக்கலாம் நம்ம கமலாவுக்குன்னு எனக்கு தோணுது.கமலா மாமியார் கூட என் கிட்டே கூட அவ்வளவா அடவா பேசாம,கொஞ்சம் ‘வெடுக்’ ‘வெடுக்’குன்னு பேசினாங்க.அவங்க நம் ம கமலாவை சந்தோஷமா வச்சு கிட்டு வரணுமேன்னு ரொம்ப கவலையா இருக்கு”என்று வருத்த பட்டுக் கொண்டே சொன்னாள்.இதை நினைத்து செந்தாமரையும் கவலைப் பட்டாள்.

தேவி சொன்னதை ஞாபகம் வைத்துக் கொண்டு ராஜ் அவனை சைட்டில் பார்க்கும் போது ”என்ன சேகர்,இன்னைகே வேலைக்கு வந்துட்டே. இன்னும் ரெண்டு நாளைக்கு லீவு எடுத்துக் கிட்டு கமலாவோட ‘ஜாலியா’ இருந்து வரக் கூடாது” என்று ரொம்பவும் அன்போடு கேட்டான்.“எனக்கு ரெண்டு நாள் லீவு எடுத்து கமலாவோட ‘ஜாலியா’ ரெண்டு நாள் ஹோட்டல்,சினிமா,ன்னு போவணும் ன்னு ஆசை தான் மேஸ்திரி.ஆனா இந்த ‘கன்ட்ராகடர்’ எனக்கு கல்யாணத்துக்கு ஒரு நாள் வீவு கொடுக்கும் போதே ‘சேகர்,நான் இந்த ரெண்டு வூட்டையும் பணம் கொடுத்தவங்களுக்கு வூட்டே இந்த வார கடைசியிலே தவறாம ‘ஹாண்ட் ஓவர்’ பண்ணியே ஆகணும்.அதானால்லே நீ கல்யாணத் தே முடிச்சுகிட்டு,உடனே வேலைக்கு வா.இந்த ரெண்டு வீட்டு வேலைகளையும் நீ முடிச்ச அப்புறமா ரெண்டு நாள் வீவு எடுத்துகோ’ன்னு சொன்னார் மேஸ்திரி.அவர் சொன்ன இந்த ரெண்டு நாள் வேலையை நாம் முடிச்சிட்டு அப்புறமா ரெண்டு நாள் வீவு எடுத்துக் கிட்டு கமலாவோட ‘ஜாலியா’ சுத்தணும்ன்னு தான் இருக்கேன் மேஸ்திரி” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சேகர். “ரொம்ப சந்தோஷம் சேகர்.நீ அப்படியே செய்”என்று ராஜ்.கொஞ்ச நேரம் ஆனதும் ராஜ் ”நான் கேக்கற னேன்னு தப்பா எடுத்துக்காதே சேகர்.நாம இப்போ ஒன்னுக்குள் ஒன்னா ஆயிட்டோம்.உன் வூட்லே ஒரே ஒரு ரூம் தானே இருக்குது.இப்ப உனக்கு கல்லாணம் ஆயிடிச்சி” என்று சொல்லி முடிக்கவில் லை.சேகர் உடனே “மேஸ்திரி, நீங்க என்ன சொல்லவறீங்கன்னு எனக்கு நல்லா புரிது.நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்.நீங்க கவலைப் படாம நிம்மதியா இருந்து வாங்க” என்று சொல்லி ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தான்.ராஜ் உடனே சேகர் கையைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் சேகர்.நீ ரொம்ப நல்லவன்ப்பா.நான் கேட்டதை நீ தப்பாவே எடுத்தக்கலே”என்று சொல்லி அவன் கையைக் குலுக்கி விட்டு ”நான் போய் வறேன் சேகர். எனக்கும் வேலைக்கு நேரம் ஆச்சு”என்று சொல்லி விட்டு தான் வேலை செய்ய வேண்டிய வீட்டுக்கு வேலைக்குப் போனான்.

அன்று சாயந்திரமே ராஜ் குடிசைக்கு வந்ததும் தேவியையும் அம்மாவையும் பார்த்து ”நான் வேலை செய்யற ‘சைட்லே சேகரைப் பாத்தேன்.நான் நாசூக்கா அவன் கிட்டே’என்ன சேகர், இன்னை கே வேலைக்கு வந்துட்டே.இன்னும் ரெண்டு நாளைக்கு லீவு எடுத்துக் கிட்டு கமலாவோட ஜாலியா இருந்து வரக் கூடாது’ ன்னு பேச்சைத் துவக்கினேன்.அவன் உடனே ‘எனக்கு ரெண்டு நாள் லீவு எடுத்து கமலாவோட ஜாலியா ரெண்டு நாள் ‘ஹோட்டல்’,’சினிமா’ன்னு போவணும்ன்னு ஆசை தான் மேஸ்திரி.ஆனா இந்த ‘கன்ட்ராகடர்’ எனக்குக் கல்யாணத்துக்கு ஒரு நாள் வீவு கொடுக்கும் போதே ‘சேகர்,நான் இந்த ரெண்டு வூட்டையும்,பணம் கொடுத்தவங்களுக்கு வூட்டே இந்தா வார கடைசியிலே தவறாம ‘ஹாண்ட் ஓவர்’ பண்ணியே ஆகணும்.அதானால்லே நீ கல்யாணத்தே முடிச்சுகிட்டு உடனே வேலைக்கு வா.இந்த ரெண்டு வூட்டு வேலைகளையும் நீ முடிச்ச அப்புறமா ரெண்டு நாள் வீவு எடுத்துகோ’ன்னு சொன்னார்’ மேஸ்திரி. விடாம ‘நான் கேக்கறனேன்னு நீ தப்பா எடுத்துக்காதே சேகர்.நாம இப்போ ஒன்னுக்குள் ஒன்னா ஆயிட்டோம்.உன் வூட்லெ ஒரே ஒரு ரூம் தானே இருக்கு. இப்ப உனக்கு கல்யாணம் ஆயிடிச்சி…ன்னு சொல்லி முடிக்கவில்லை,சேகர் உடனே ‘மேஸ்திரி, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு நல்லா புரிது.நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்.எனக்கு மட்டும் அந்தக் ‘கவலை’ இல்லையா மேஸ்திரி.நீங்க கவலைப்படாம நிம்மதியா இருந்து வாங்க’ன்னு சொன் னான்.நான் அதுக்கு அப்புறமா அவனை ஒன்னும் கேக்கலே.பாக்கலாம்.சேகர் என்ன ஏற்பாடு பண்றா ன்னு”என்று சொல்லி ஒரு பெரு மூச்சு விட்டான்.“விவரம் தெரிஞ்ச பையன் தான் அந்த சேகர். ஏதா ச்ச்சும் நிச்சியமா செய்வான்னு தான் எனக்கும் தோணுது ராஜ்.இப்போ நாம் எதுக்கும் அவசரப்படக் கூடாது” என்று சொல்லி மருமக தேவியை முறைத்தாள் ரத்தினம்.“என்னை வீணா அப்படி முறைக் காதீங்க அத்தே.நான் அந்த சேகர் வூட்டே பார்த்துட்டு தான் அப்படி கேட்டேன்.நான் கமலாவை பெத்த அம்மா.என் பொண்ணெ அவனுக்கு கல்லாணம் கட்டிக் கொடுத்து இருக்கேன். நான் அவளை பத்திக் கவலைப்படாம,பக்கத்து வீட்டு பூங்காவனம் அம்மாவா கமலாவை பத்தி கவலை பட போறா” என்று கத்த ஆரம்பித்தாள் தேவி.“இப்போதைக்கு போதும் மாமியார் மருமக சண்டை.எனக்கு ரொம்ப பசிக்குது.எனக்கு சோத்தே போட்டு விட்டு அப்புறமா நீங்க ரெண்டு பேரும் ராவு பூரா சண்டை போடுங்க” என்று ராஜ் கத்தவே தேவி எழுந்துப் போய் ராஜ்ஜுக்கு தட் டைப் போட்டு சாப்பாடு போட ஆரம்பித்தாள்.தேவி தினமும் ஆறு நாளைக்கு சித்தாள் வேலைக்குப் போய் வந்து பணம் சம்பாதித்து வந் தாள்.வேலை செய்யும் இடத்தில் தன் சக சித்தாள்களிடம் சீட்டு எல்லாம் பிடித்து கணக்கை எல்லாம் சா¢வர வைத்து சீட்டு எடுத்தவர்களுக்கு எல்லாம் பணம் பட்டு வாடா பண்ணி விட்டு அதில் பணம் சம்பாதித்து வந்தாள்.மூனு மாசத்திலேயே அடகு வைத்து இருந்த தங்க சங்கிலியை ‘சேட்’ கிட்டே பணத்தை கொடுத்து மூட்டி கொண்டு தன் கழுத்தில் போட்டு கொண்டாள்

சேகர் வீட்டுக்குப் போன கமலா ஒரு நாள் தான் காலை ஆறு மணி வரை தூங்க முடிந்தது. அடுத்த நாள் காத்தாலேயே ஐஞ்சு மணிக்கு எல்லாம் செங்கமலம் எழுந்து “கமலா எழுந்திரி, வாசல் தெளிச்சு கோலம் போட்டு,மூனு பேருக்கும் அடுப்பை பத்த வைத்து ‘டீ’ போட்டு, உடனே நாஷ்டா பண்ணு” என்று உரக்க குரல் கொடுத்தாள்.கமலாவும் மாமியார் சொன்ன குரலைக் கேட்டதும் படுக் கையை விட்டு எழுந்து,தன் கண்களை கசக்கிக் கொண்டே போய் பல்லைத் தேய்த்து விட்டு வாளியில் தண்ணீர் எடுத்துக் கிட்டுப் போய் வாசல் தெளித்து கோலம் போட்டாள்.ஏதோ கோனல் மானலாக ஒரு கோலத்தைப் போட்டாள்.பின்னாலேயே வந்த மாமியார் கமலா போட்டு இருந்த கோலத்தைப் பார்த்து “என்ன கோலம் போட்டு இருக்கே கமலா.இதைப் பாத்தா ஒரு கோலம்ன்னு யா¡ராச்சும் சொல்லுவாங்க ளா.இதுக்கு முன்னே நீ கோலமே போட்டதே இல்லையா.உங்க வூட்டிலே உனக்கு இது வரைக்கும் ஒரு கோலம் கூட போட கத்துக் குடுக்கலையா.பொண்ணை இப்படி ஒரு கோலம் கூட போடத் தெரி யாம வளத்து இருக்காங்களே”என்று கமலா குடும்பத்தைப் பத்தி கிண்டல் செய்தாள் செங்கமலம். ‘அம்மா ஏதோ கமலாவைப் பத்தி கத்தி சொல்றாங்களே’ என்று கேட்ட சேகர் தன் படுக்கையை விட்டு எழுது வந்து “அம்மா,போனா போவுதும்மா.நீ கொஞ்சம் கத்து குடும்மா.அவ சீக்கிரமா கத்துக்குவா. இப்பத் தானே கமலா கல்யாணம் செஞ்சுக் கிட்டு நம்ம வூட்டுக்கு வந்து இருக்கா.போவ போவ அவ எல்லாம் கத்துக் குவாம்மா” என்று தன் புது பெண்டாட்டிக்கு சிபாரிசு பண் ணினான் சேகர்.“நீ அந்தான்டே போடா. உனக்கு ஒன்னும் தெரியாது.கல்லாணம் கட்டி கிட்டு வந்து ஒரு வயசுப் பொண் ணுக்கு,ஒரு கோலம் போடக் கூட அவங்க வூட்டிலே கத்து குடுக்கலையேடா.அதை தாண்டா நான் சொல்லிக் கிட்டு இருந்தேன்” என்று மறுபடியும் கமலா குடும்பத்தை பத்தி கேவலமாகச் சொன்னாள் செங்கமலம்.அம்மா வேறு பக்கம் பார்த்து கொண்டு இருக்கும் போது சேகர் தன் கண்னை சிமிட்டி தன் வாய் மேல் கையை வைத்து ‘அவங்க பேசட்டும்.நீ பேசாம இருந்து வா’ன்னு சைகை காட்டினான். கமலாவும் சேகர் சொன்னது போல சும்மா இருந்துக் கொண்டு அவள் காரியங்களை கவனிக்கப் போனாள்.கமலா மூனு பேருக்கும் ‘டீயை’ப் போட்டு கொடுத்தாள்.டீயை குடித்து விட்டு கமலா குளித்து விட்டு மாமியாருக்கும் சேகருக்கும் நாஷ்டா பண்ணினாள்.மாமியர் தன் குடும்பத்தைப் பத்தி இப்படி கேவலமாக பேசினதையே நினைத்துக் கொண்டு இருந்த கமலா கவனம் இல்லாமல் நாஷ்டா வில் கொஞ்சம் அதிகமாகவே உப்பைப் போட்டு விட்டாள். நாஷ்டாவை வாயில் வைத்த செங்கமலம் ”ஏன் கமலா,எனக்கு ரத்த கொதிப்பு உடம்புன்னு நான் நேத்து தானே உனக்கு சொன்னே.இப்படி நாஷ்டாவில் உப்பைப் கொட்டி, என்னை சாப்பிட வச்சு,சீக்கிரமே பரலோகம் அனுப்பி விட போறயா. .நாஷ்டாவில் உப்பு போடும் போது கவனம் வேணாவா.தூங்கிக் கிட்டே நாஷ்டவை பண்ணியா” என்று கத்தினாள் செங்கமலம்.மாமியாருக்கு என்ன பதில் சொல்றதுன்னே புரியவில்லை கமலாவுக்கு. அவள் பயந்து கொண்டே”இல்லே அத்தே,நான் மறந்து போய் ரெண்டு தரம் நாஷ்டாவிலே உப்புப் போட்டு விட்டேன்னு நினைக்கறேன்.இனிமே நான் கவனமா இருந்து வறேன் அத்தே.இந்த தடவை என்னை மன்னிச்சிடுங்க” என்று சொல்லி அழாக் குறையாக தன் மாமியார் கிட்டே மன்னிப்பு கேட் டாள் கமலா.சேகர் ‘ஏன் இந்த கமலா இப்படி அஜாக்கிறதையா நாஷ்டாவிலே ரெண்டு தடவை உப்பு போடணும்.நல்லா கவனிச்சு வந்து நாஷ்டா பண்ணக் கூடாதா’என்று நினைத்து வருத்தப் பட்டான். தினமும் சேகர் வீட்டுக்கு வந்ததும் வராததும் செங்கமலம் கமலா மேலே நிறைய ‘கம்லெயிண்ட்’ சொல்லி வந்தாள்.உடனே சேகர் அவன் அம்மாவைப் பார்த்து “போகப் போக அவ சா¢யாயிடும்மா.அவ இன்னும் சின்னப் பொண்ணு தானேம்மா” என்று தன் அம்மாவுக்கு பதில் சொல்லி வந்தான்.

ரெண்டு நாள் கூட ஆகி இருக்காது சேகர் வீட்டுக்கு வந்ததும் “சேகர், அவங்க வூட்டிலே நான் கமலாவை பொண்ணு பாக்கும் போதே ‘அவளுக்கு நல்லா சமைக்கத் தெரியுமான்னு கேட்டேனா இல்லையா சொல்லு.அதுக்கு அவங்க ஆயா என்ன சொன்னா.’அவளுக்கு நல்லா சமைக்க வருங்க. கல்லாணம் ஆவறதுக்குள்ளாற நான் இன்னும் மீதி சமையலை எல்லாம் கத்துக் குடுத்து விடறேங்க. நீங்க கவலைப் படவே வேண்டாங்க’ ன்னு சொன்னாங்களா இல்லையா.இன்னைக்கு ஒரு மீன் குழம்பு வச்சு இருக்கா பாரு.வாயிலெ வக்க வழங்கலே.மீன் குழம்பு வச்சா எவ்வளவு ருசியா இருக்கும். இவளும் மீன் குழம்பு வச்சு இருக்காளே.இந்த மீன் குழம்பை யார் சாப்பிடறது.நீ ஊத்திக்குனு சாப் பிட்டுப் பாரு.உனக்கே தெரியும்,அவ வச்சு இருக்கும் மீன் குழம்பு அழகு” என்று கத்தினாள் செங்க மலம்.உடனே சேகர் தன் கை கால்களைக் கழுவிக் கொண்டு வந்து தன் தட்டைப் போட்டுக் கொண்டு “கமலா, நீ சோத்தைப் போட்டு, மீன் குழம்பை கொஞ்சம் ஊத்து, பாக்கலாம்” என்று சொல்லி தட்டின் முன்னால் உட்கார்ந்துக் கொண்டான்.கமலா பயந்துக் கொண்டே சேகர் தட்டில் சாதத்தைப் போட்டு அவள் வைத்த மீன் குழம்பை விட்டாள்.மீன் குழம்பை ருசிப் பார்த்த சேகருக்கு அம்மா சொன்னது ரொம்ப உண்மை தான்.கமலா வச்ச மீன் குழம்பு நல்லவே இல்லை.அம்மா கத்துவதை தாங்காம சேகர் கமலாவைப் பார்த்து கோவத்துடன் ”என்ன கமலா,மீன் குழம்பை இவ்வளவு மோசமா வச்சு இருக்கே. உங்க வூட்டிலே உனக்கு மீன் குழம்பு எப்படி வக்கிறதுன்னு,உங்க அம்மாவும் ஆயாவும் உனக்கு சொல்லிக் கொடுக்கலியா கமலா.நீ வச்சு இருக்கிற மீன் முழம்பு நல்லாவே இல்லியே கமலா” என்று சொல்லி விட்டு தட்டில் போட்ட சாப்பாட்டை வீணாக்கக் கூடாது என்று நினைத்து மெல்ல அதை சாப்பிட்டு முடித்தான்.சாப்பிட்டு முடிந்ததும் சேகர் அவன் அம்மாவை பார்த்து “அம்மா,நீங்க தான் கமலாவுக்கு மீன் குழம்பு வக்கக் கத்துக் குடுங்க.அவ கத்து கிட்டு மூன் குழம்பை நல்ல வக்கட்டுமே” என்று சொன்னதும் செங்கமலத்துக்கு கோவம் வந்தது. “என்னடா சொல்றே,நான் இதுக்கு தான் அன் னைக்கே படிச்சுப் படிச்சு சொன்னே.அவங்க அம்மாவும் ஆயாவும் சொல்லி குடுத்தெ இவ கத்துக்க லே.நான் சொல்லிக் குடுத்தா இவ கத்துக்க போறா.எதுக்கு கத்துக்கணும்ங்கிற கர்வம்டா அவளுக்கு சா¢,எனக்கு என்ன.நான் சொல்லித் தாரேன்.அவ என்னமா கத்துக் கிட்டு வறான்னு பாக்கலாம்” என்றாள் வேண்டா வெறுப்புடன்.கமலாவுக்கு ‘என்னடா இது, இப்படி அம்மாவும் பிள்ளையும் நம்மை மாத்தி மாத்தி இப்படி கேட்டு கஷ்டப் படுத்தறாங்களே’ என்று நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு வந்தாள்.‘எப்படியோ மாமியார் நமக்கு எப்படி மீன் குழம்பு வக்கறதுன்னு சொல்லி கொடுத்த அதை நல்லா கத்து கிட்டு,நாம் இனிமே மீன் குழம்பை நல்லா செஞ்சி நம்ம புருஷன் கீட்டேயும், மாமியார் கிட்டேயும் நல்ல பேரை வாங்கணும்’என்று முடிவு பண்ணினாள்.

செங்கமலத்துக்கு முட்டி வலி அதிகம் ஆகி விடவே அவளால் ரொம்ப நேரம் நின்னுக் கிட்டு எல்லாம் வேலை செய்ய முடியவில்லை.அவள் உடனே கமலவைக் கூப்பிட்டு “இப்ப எல்லாம் என்னால் ரொம்ப நேரம் நிக்க முடிறதில்லே.அதனால் நான் குளிச்சுட்டு என் புடவை, தாவணி,‘ப்லவுஸ்’ எல்லாம் அப்படியே போட்டு விட்டு வந்து இருக்கேன்.நீ அதுக்கு எல்லாம் சோப்புப் போட்டு. நல்லா தோச்சு கொடியிலே உலத்தி விடு” என்று சொன்னாள்.உடனே கமலாவுக்கு ’என்னடா இது, அவங்க உடம்பிலே கட்டி கிட்டு இருந்த பழந்துணிகளை எல்லாம் நம்மைத் தோச்சுப் போட சொல்றாங்களே. அவர் பாவம் வேலைக்குப் போறவரு.அவருக்கு நேரம் இல்லே.நாம தான் அந்த துணிங்களே தோச்சுப் போட்டே ஆவணும்.இந்த அம்மா நிதானமா முடியறப்ப அவங்க உடம்பிலே கட்டி இருந்த பழந்துணி களே தோச்சி போடக் கூடாது.அந்த துணிளை எல்லாம் நம்மை தோச்சுப் போடு’ ன்னு சொல்றாங்க ளே’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள்.‘நாம இப்போ ‘சா¢’ன்னு சொல்லாட்டா ‘அவர்’ சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் இதையும் அவர் கிட்டே சொல்லி அவரை உசுப்பி விடுவாங்க’ என்று பயந்து கமலா உடனே “சா¢ அத்தே,நான் அந்த துணிகளே சோப்பு போட்டு தோச்சு,கொடியிலே உல த்தி விடறேன்”என்று சொல்லி விட்டு மாமியார் துணிகளுக்கு சோப்பு போட்டு நல்லா தோச்சு கொடியி லே உலர்த்தினாள் கமலா.நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக செங்கமலம் எல்லா வேலைகளையும் கமலா தலையில் கட்டி விட்டு அடிக்கடி பக்கத்து விட்டு அம்மாவோடு போய் வம்பு பேசிக் கொண்டு இருந்தாள்.காலையில் எழுந்து வாசல் தெளிச்சு,கோலம் போட்டு, மூனு பேருக்கும் டீ நாஷ்டா பண்ணி,அப்புறமா கடைக்கு போய் சாமான்கள்,காய்கறி,மீன், கறி எல்லாம் வாங்கி வந்து விட்டு, குளித்து விட்டு மூனு பேருடைய துணிகளை எல்லாம் தோச்சுப் போட்டு,அப்புறமா சமையல் செஞ்சி வர வேளைக்கு கமலாவுக்கு ரொம்ப களைப்பாக இருக்கும்.மொத்தத்தில் கமலா சேகர் வீட்டிலே கமலா ஒரு சம்பளம் இல்லாத சமையல்காரியாகவும்,வேலைக்காரியாகவும் இருந்து வந்தாள்..

செந்தாமரைக்கு கால் ஆண்டு பா¢¨க்ஷகள் எல்லாம் முடிந்ததும் பள்ளியில் ஒரு வார லீவு வி¢ட்டு இருந்தார்கள்.ஒரு நாள் படுக்கையில் இருந்து எழுந்ததும் தன் ‘உடம்பை’ப் பத்தி அம்மாவைத் தனியாகக் கூப்பிட்டு சொன்னாள் செந்தாமரை.அவள் ‘வயசுக்கு’ வந்து விட்டு இருந்தாள்.உடனே செந்தாமரை தன் அம்மாவிடம் “அம்மா, வீணா பந்தல் போட்டு ஊரை எல்லாம் கூட்டி அமக்களம் பண்ண வேணாம்மா. வீண் செலவு செய்ய வேணாம்ன்னு சொல்லும்மா” என்று கெஞ்சினாள்.ஆனால் தேவி “செந்தாமரை, வூட்டுலே ஒரு பொண்ணு ‘வயசுக்கு’ வந்துட்டா,பொ¢யவங்க சும்மா இருக்கக் கூடாதும்மா.அவளுக்கு ‘மஞ்சள் நீராட்டு விழா’ செஞ்சே ஆவணும்மா.நாங்க பொ¢யவங்க அதை எல்லாம் கவனிச்சுக்கறோம்”என்று சொல்லி விட்டு ரத்தினத்திடமும் ராஜ்ஜிடமும் செந்தாமரை ‘வயசுக்கு’ வந்த விஷயத்தை சொன்னாள்.உடனே தேவி பக்கத்தில் இருந்த துணிக் கடைக்குப் போய் செந்தாமரைக்கு மூனு பாவாடை, தாவணீ மாச்சிங்க் ‘ப்லவுஸ¤ம்’ வாங்கி வந்தாள்.செந்தாமரை யை நன்றாக குளித்து விட்டு வரச் சொல்லி அவளுக்கு தான் வாங்கி வந்த புதுப் பாவாடை, தாவணி ‘ப்லவுசையும்’ போட்டு ஒரு சோ¢ல் உட்கார வைத்தாள்.உடனே ராஜ் கமலாவுக்கு செய்தது போல குடிசையின் முன்னால் ஒரு பொ¢ய பந்தல் போட்டு எல்லா உறவினர்களுக்கு எல்லாம் சமாசாரத்தை சொல்லி அனுப்பினான்.விழாவுக்கு சரவணன்,சரஸ்வதி,முத்து,சேகர்,அவன் அம்மா,கமலா எல்லோ ரும் வந்து இருந்தார்கள்.எல்லோருக்கும் விருந்து சாப்பாடு போட்டார்கள் தேவியும், ராஜ்ஜும்.

விழாவுக்கு வந்து இருந்த கமலாவை அவள் ஆயாவும்,அம்மாவும்,அப்பாவும் தனி தனியாக ‘அவள் சந்தோஷமாக இருந்து வருகிறாளா’ என்று கவலையுடன் விசாரித்தார்கள்.கல்யாணம் பண் ணிக் கொண்டுப் போன கமலா கல்யாணத்தின் போது இருந்தது போல இல்லாமல் கொஞ்சம் மெலி ந்து காணப் பட்டாள்.‘அவங்கக் கிட்டே எல்லாம் நம்ம கஷ்டங்களை எல்லாம் சொல்லி அவங் களை வீணா வருத்தப் பட வைக்க வேண்டாம்’ என்று நினைத்த கமலா அவர்கள் எல்லோருக்கும் ”நான் சந்தோஷமாத் தான் இருந்து வறேன்.நீங்க வீணா கவலைப் படாதீங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.ராஜ்ஜுக்கும்,ரத்தினத்துக்கும் கமலா சொன்ன பதில் ரொம்ப நிம்மதியைக் கொடுத்தது. ஆனால் தேவிக்கு மட்டும் கமலா அவங்க வீட்டிலே சந்தோஷமாய் இல்லாதது போலவே இருந்தது. ‘நாம என்ன பண்றது.நாம அவளைக் கேட்டதுக்கு அவ ‘நான் சந்தோஷமா தான் இருந்து வறேன்னு’ சொல்லும் போது, நாம அதுக்கு மேலே என்ன கேட்பது,எப்படி கேட்பது,என்று தெரியாத தால் வெறுமனே மனதில் வருத்த பட்டு கொண்டு சும்மா இருந்து விட்டாள்.செந்தாமரைக்கும் ‘நம்ம அக்கா கல்யாணம் கட்டிக் கிட்டுப் போகும் போது இருந்த உடம்பு இப்போ இல்லாம கொஞ்சம் மெலி ஞ்சு இருக்காங்களே,ஒரு வேளை அவங்க வீட்டிலே வேலை அதிகமா இருந்து,அக்கா எல்லா வேலை களையும் செஞ்சு வறதாலே இருக்குமோ என்னவோ’ என்று நினைத்து ஒன்றும் கேட்கவில்லை.

செந்தாமாரைக்கு ஒன்பதாவது வருஷாந்திர பாஷைகள் ஆரம்பித்தது.அவள் தன் பாடங்களை மும்முறுமாய் படித்து வந்து, பாஷைகளை எல்லாம் செந்தாமரை மிகவும் நன்றாக எழுதி இருந்தாள். ஒன்பதாவது ‘ரிஸல்ட்’ வந்தது.செந்தாமரை அவள் வகுப்பில் மட்டும் இல்லாமல் எல்லா ஒன்பதாவது செக்ஷனிலும் முதல் மாணவியாக வந்து இருந்தாள்.செந்தாமரைக்கு ரொம்ப சந்தோஷம். ‘ரிஸ்ட்டைப்’ பார்த்த பிறகு செந்தாமரை உடனே போய் ராமலிங்கம் வாத்தியாரை போய் பார்த்து அவர் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டு “சார், உங்கஆசீர்வாதத்தால் நான் ஒன்பதாவதில் படிக்கும் எல்லா ‘செக்ஷன்’ மாணவர்கள்,மாணவிகளை விட நான் முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி இருக் கேன்” என்று பெருமையுடன் சொன்னாள்.உடனே மூர்த்தி “நான் இதை முன்னமே பார்த்து விட்டேன் செந்தாமரை உனக்கு இந்தப் பள்ளிக் கூடத்திலே ஒரு ‘சீட்’ வாங்கிக் கொடுத்து நான் இந்த பள்ளிக் கூடத்துக்கே பெருமையை சேர்த்து இருக்கேன்.உனக்கு அடுத்த மாணவிக்கும் இத்தனை மார்க்கு வித்தியாசம் இருக்கும் என்று ஒன்பதாவது எந்த வாத்தியாரும் நினைச்சே பாக்கலே.உண்மையிலே யே நீ ரொம்ப புத்திசாலிப் பொண்ணு தான் செந்தாமரை” என்று மிகவும் சந்தோஷப் பட்டு செந்தாம ரையை தட்டிக் கொடுத்து “செந்தாமரை,நீ இதே மாதிரி நீ ரொம்ப நல்லாப் படிச்சு வந்து பத்தாவதில் மாநிலத்திலேயே முதல் மாணவியா பாஸ் பண்ணி இந்த பள்ளிக் கூடத்திற்கும் எனக்கும் சுந்தரம் பிள்ளைக்கும் நிறைய பெருமை தேடி தரணும்” என்று ஆர்வத்துடன் கேட்டார்.உடனே செந்தாமரை ”நான் நிச்சியமா ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சி வந்து மாநில த்திலே முதல் மாணவியா வருவேன்” என்று மிகவும் உறுதியாகச் சொன்னாள்.மூர்த்தி வாத்தியார் கிட்டே சொல்லிக் கொண்டு செந்தாமரை தனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த மத்த வாத்தியார்களையும் சந்தித்து,அவர்களுக்கு தன் நன்றியை சொல்லி விட்டு வந்தாள் செந்தாமரை.வீட்டுக்கு வரும் வழியில் செந்தாமரை தனக்கு இந்த மேல் படிப்புக்கு பெரும் உதவி பண்ண சுந்தரம் பிள்ளையை ப் பார்த்து அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டு “சார்,உங்க ஆசீர்வாதத்தால் அந்தப் பள்ளிக் கூடத்தில் நான் ஒன்பதாவதில் படிக்கும் எல்லா ‘செக்ஷன்’ மாணவர்கள்,மாணவிகளை விட முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்” என்று பெருமையுடன் சொன்னாள்.உடனே சுந்தரம் பிள்ளை “அப்படியா செந்தாமரை,உன்னைப் பாத்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா.நீ இதே மாதிரி செந்தாமரை,ரொம்ப நல்லாப் படிச்சு வந்து பத்தாவதில் மாநிலத்திலேயே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி அந்தப் பள்ளிக் கூடத்திற்கும், எனக்கும்,மூர்த்தி வாத்தியாருக்கும் பெருமை தேடி தரணும்”என்று சொல்லி செந்தாமரைப் பார்த்து சொன்னார்..உடனே செந்தாமரை அவரைப் பார்த்து “அது தான் என் ஆசையும் கூட சார்.நான் நிச்சி யமா ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சி வந்து மாநிலத்திலே முதல் மாணவியா வருவேன்” என்று மிகவும் உறுதியாகச் சொன்ணாள்.“ரொம்ப சந்தோஷம்மா செந்தாமரை.இந்த மாதிரி மாநிலத்திலேயே நீ முதல் மாணவியா வந்தேன்னா அதை பாத்து ரொம்ப சந்தோஷப்படப்போறது நானும் மூர்த்தி வாத்தியாரும் தான்.மூர்த்தி வாத்தியார் என்னை சந்திக்கும் போதெல்லாம் என்னைப் பாத்து ‘சுந்தரம் பிள்ளை, செந்தாமரை ஒரு சாதாரண பொண்ணு இல்லே.அவ பெண்களில் ஒரு விலை மதிக்க முடியாத ‘மாணிக்கம்’.நீங்க அவளை சிபாரிசு பண்ணி,எங்க பள்ளிக்கூடத்துலே சேத்ததுக்கு நானும்,எங்க பள்ளீ கூட நிர்வாகமும் ரொம்ப கடமைப்பட்டு இருக்கோம்’ ன்று சொல்வார்.எனக்கு உன்னை நினைச் சா ரொம்ப பெருமையா இருக்கு செந்தாமரை” என்று சொல்லி செந்தாமரையின் கையைப் பிடித்து குலு க்கி பாராட்டினார் பிள்ளை.

சுந்தரம் பிள்ளையிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு செந்தாமரை தன் குடிசைக்கு வந்தாள். அவள் குடிசைக்கு வருவதற்கும் தேவி குடிசைக்கு வருவதற்கும் சரியாய் இருந்தது. உடனே செந்தாமரை தன் அம்மாவைப் பார்த்து “அம்மா, நான் என் பள்ளிக் கூடத்தில் ஒன்பதாவதில் படிக்கும் எல்லா ‘செக்ஷன்’ மாணவர்கள்,மாணவிகளை விட முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி இருக்கேன் ம்மா” என்று பெருமையுடன் சொன்னாள்.“அப்படியா செந்தாமு.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாவும்,சந்தோஷமாயும் இருக்கு.இந்த மாதிரி நீ ரொம்ப நல்லா படிச்சு பத்தாவதிலும் முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணனும்”என்று சொல்லி செந்தாமரையைக் கட்டிக் கொண்டாள் தேவி. உடனே செந்தாமாரை “நான் நிச்சியமா பத்தாவதிலும் முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணுவேம்மா.நீங்க கவலை படாம இருந்து வாங்கம்மா” என்று சொன்னாள்.குடிசைக்கு உள்ளே போய் ஆயா கிட்டே “ஆயா,நான் ஒனபதாவதிலே எல்லா செக்ஷன் மாணவர்கள்,மாணவிகளை காட்டிலும் அதிகமா மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருக்கேன்” என்று சந்தோஷத்துடன் சொன்னாள் செந்தாமரை. ரத்தினம் “அப்படியா செந் தாமு.நீ நல்லா படிச்சு வாம்மா” என்று சொன்னாள்.

ராஜ் குடிசைக்கு கமலாவை அழைத்துக் கொண்டு வந்தான்.சேகர் முகம் வழக்கமாக இருப்பது போல அவ்வளவு சந்தோஷமாக இல்லை.அவன் முகத்தில் ஒரு சோகம் படர்ந்து இருந்தது.இதை கவனித்த ராஜ் “என்ன சேகர், ரொம்ப வருத்தமா இருக்கே.என்னப்பா விஷயம்.என் கிட்டே சொல்லு ப்பா.என்னால் முடிஞ்சா நான் உனக்கு உதவி பண்றேன்”என்று சொல்லி சேகர் முகத்தைக் கவ னித்தான்.சேகர் கண்லே கண்ணீர் துளித்த்து.அவன் உடனே “மேஸ்திரி,நான் இருந்து வந்த வூட்டு க்கு நாலு மாசமா வாடகையே தரலே. என் வூட்டுகாரர் இப்போ என்னை உடனே வூட்டை காலி பண்ணச் சொல்றாரு.எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே” என்று சொல்லும் போது சேகர் கண் களில் இருந்து கண்ணீர் தரையில் விழுந்தது.உடனே ராஜ் “அப்படியா சேகர்.கேக்கவே ரொம்ப கஷ் டமா இருக்குப்பா.இப்போ என்ன செய்யப் போறேப்பா” என்று கவலையுடன் கேட்டான்.கமலா கண் ணிலும் இருந்து கண்ணீர் முட்டியது.அவள் தன் புடவையை எடுத்து தன் கண்களைத் துடை த்துக் கொண்டாள்.சேகர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “மேஸ்திரி,நீங்க எனக்கு இங்கே பக்கத்திலே ஒரு குடிசையை வாடகைக்குப் பாத்து சொல்ல முடியுமா.நான் இங்கேயே வந்து தங்கி விடறேன்.இப்போ கமலா வேறே ‘முழுக்காம’ இருக்கா…..” என்று சொல்லி முடிக்கவில்லை உடனே தேவி ஓடிப் போய் “கமலா,உனக்கு இப்போ எத்தினி மாசம் ஆவுதும்மா” என்று கேட்டு கமலாவை தனியா அழைத்துப் போனாள்.ரத்தினமும்”கமலா நீ ‘முழுவாம’ இருக்கியாம்மா.எனக்கு ரொம்ப சந் தோஷமா இருக்கும்மா” என்று சொல்லி கமலாவைக் கட்டிப் பிடித்தாள்.ராஜ்ஜும் தேவியும் ‘இப்போ கமலா வேறே ‘முழுகாம’ இருக்கா.நாம என்ன பண்ணலாம்’ என்று யோசித்தார்கள்.தேவிக்கு சட்டெ ன்று மூனாவது குடியில் இருந்த அம்மா அவங்க குடிசையை காலி பண்ணி விட்டு தன் பையன் கூட வேறு இடத்திற்குப் போனது ஞாபகத்துக்கு வந்தது.உடனே தேவி ”ஏங்க, நம்ம குடிசைக்கு மூனாவது குடிசையில் இருந்த அம்மா அந்த குடிசையை காலி பண்ணிக்கிட்டு அவங்க பையனோடு வேறே இடத்துக்கு போய் விட்டு இருக்காங்க.நான் அந்த குடிசையை கமலாவுக்கு வாடகைக்கு குடுப் பாங்களான்னு விசாரிச்சு கிட்டுவறேங்க” என்று சொல்லி விட்டு தன் குடிசையை விட்டு வேகமாகப் போனாள்.ரத்தினம் கமலாவுக்கும் சேகருக்கும் நாஷ்டா கொடுத்து ‘டீயும்’ போட்டுக் கொடுத் தாள்.ரெண்டு பேரும் ரத்தினம் கொடுத்த நாஷ்டாவை சாப்பிட்டு விட்டு ‘டீயும்’ குடித்தார்கள். வெளியே போன தேவி சிரித்துக் கொண்டே குடிசைக்குள்ளே வந்தாள்.உள்ளே வந்ததும் தேவி “நான் அவங்க கிட்டே பேசி முடிச்சேட்டேன்.அந்த குடிசைக்கு சொந்தமானவங்க அந்த குடிசையை நமக்கு வாடகைக்கு தறதா ஒத்துகிட்டாங்க.வர ஒன்னாம் தேதியிலே இருந்து வாடகைக்கு ஒத்துகிட்டாங்க” என்று சொன்னாள்.உடனே ராஜ் ”ரொம்ப சந்தோஷம் தேவி..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கமலா “அம்மா ரொம்ப தாங்ஸ்ம்மா.நீ பண்ண இந்த உதவிக்கு” என்று சொல்லி அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.சேகரும் ”ரொம்ப தாங்ஸ்ங்க.நீங்க சமயத்திலே இந்த உதவியைப் பண்ணி இரு க்கீங்க.நீங்க இந்த உதவி பண்ணாம இருந்தா,நானும் கமலாவும் தங்க வூடு இல்லாம ரொம்ப கஷ்டப் பட்டு இருப்போமுங்க” என்று தன் கையை கூப்பி சொன்னான்.கொஞ்ச நேரம் பேசிக் கிட்டு இருந்து விட்டு சேகர் ”மேஸ்திரி,நான் எங்க அம்மாவையும் கமலாவையும் அந்த வூட்டை காலி பண்ணி விட்டு வர மாசம் ஒன்னாம் தேதி நான் மூனாவது குடிசைக்கு வந்து விடறேன்” என்று சொல்லி விட்டு சேகர் கமலாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குப் போனான்.

ஒண்ணாம் தேதி சேகர் சொல்லி விட்டுப் போனது போல தன் பழைய வீட்டு சாமான்களையும் எல்லாம் எடுத்துக் கொண்டு,கமலவையும் அவன் அம்மாவையும் அழைத்துக் கொண்டு தேவி இருந்த மூனாவது குடிசைக்கு குடி வந்தான்.தேவியும் ராஜ்ஜும் ரத்தினமும் அந்த குடிசைக்குப் போய் மூனு பேருக்கும் நாஷ்டாவையும் டீயையும் கொடுத்து விட்டு வந்தார்கள்.ரத்தினமும் தேவியும் கமலா ‘முழுகாம’ இருப்பதால் அடிக்கடி அவளுக்கு இனிப்பு பல காரங்கள் பண்ணிக் கொண்டு போய் கொடு த்துக் விட்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.செந்தாமரையும் ஞாயிற்றுக் கிழமைகளில் தன் அக்கா குடிசைக்குப் போய் கமலாவிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்தாள்.ரத்தினத்துக்கும்,தேவிக்கும், செந்தாமரைக்கும் அவர்கள் எப்போது கமலா குடிசைக்குப் போனாலும் நிறைய வேலைகள் பண்ணிக் கொண்டு வந்ததையும்,அவர்களுடன் ஒரு ஐஞ்சு நிமிஷம் கூட உக்காந்துக் கொண்டு பேச முடியாம இருந்து வந்ததைப் பார்த்து மிகவும் கவலை பட்டார்கள்.கமலாவின் மாமியார் வெறுமனே உட்கார்ந்துக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருந்ததைப் பார்த்த அவர்களுக்கு கோவம் கோவமாய் வந்தது. தங்கள் கோவததை அடக்கிக் கொண்டு தங்கள் குடிசைக்கு வந்தார்கள்.ஒரு அரை மணி நேரத்தில் தேவியும் ராஜ்ஜும் ஒருவர் பின்னால் ஒருவர் குடிசைக்கு வந்தார்கள்.ரத்தினம் அவர்கள் ரெண்டு பேரையும் பார்த்து ”நீங்க ரெண்டு பேரும் குடிசைக்கு வரட்டும்ன்னு தான் காத்து இருந்தேன்.நான் காலையிலே கமலா பிள்ளைதாச்சிப் பொண்ணாசே.அவளுக்கு இந்த அதிரசம் ரொம்பப் பிடிக்குமே ன்னு நினைச்சி கோடிக்கடை அம்மா கிட்டே ரெண்டு அதிரசத்தை வாங்கிக் கிட்டுப் போய் கமலா கிட்டே குடுத்துட்டு வரலாம்னு அவ குடிசைக்குப் போனேன்.கமலா தூக்க முடியாம ரெண்டு பக்கெட் துணிகளைத் துக்கிக் கிட்டு போய் குந்திகின்னு சோப்புப் போட்டுக் கிட்டு இருந்தா.அவ மாமியார் வாசலிலே நின்னுக்கிட்டு ‘கமலா,துணிங்களுக்கு நல்லா சோப்புப் போடு.நேத்து நீ தோச்ச துணிங் களே அழுக்கே போவலே.துணிக்கு நோவுமோ சோப்புக்கு நோவுமோன்னு போடாதே’ ன்னு கத்தி சொல்லி கிட்டு இருந்தாங்க.எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்திச்சி.ஆனா அப்புறமா அந்தக் கிழவிக் கிட்டே நம்ம கமலா தானே குடித்தனம் பண்ணி வரணும்’ன்னு நினைச்சி என் ஆத்திரத்தை அடக்கிக் கிட்டு அந்த மாமியார் கிட்டே ‘நான் கமலா முழுகாம இருக்கிறதாலே அவளுக்கு ரெண்டு அதிரசம் வாங்கியாந்தேன்.அதை கமலா கிட்டே கொடுத்து விட்டுப் போவ தான் நான் வந்தேன்’ ன்னு சொன் னேன் ராஜ்” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.

பள்ளி கூடம் திறந்து ‘க்லாஸ்’ வாத்தியார் எல்லோருடைய மார்க்குகளை எல்லாம் சொன்னார். கூடவே அவர்கள் எழுதிய விடைத் தாள்களையும் கொடுத்து வந்தார். செந்தாமரை கணக்கில் நுத்துக்கு நூறு மார்க் வாங்கி இருந்தாள்.மற்ற ‘சப்ஜெக்ட்டில்’ எல்லாம் அவள் 97,98,97 என்று நூத்துக்கு ரெண்டோ மூனோ மார்க மட்டும் தான் கம்மியாக வாங்கி ‘க்லாஸிலே’ முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி இருந்தாள்.‘க்லாஸ்’ வாத்தியார் செந்தாமரையை தன் அருகில் கூப்பிட்டு “எல்லா ‘சப்ஜெட்களிலும்’ ரொம்ப நல்ல மார்க்குகள் வாங்கி இருக்கே.நீ இன்னும் கஷ்டப் பட்டு படிச்சு வந்து எல்லா ‘சப்ஜெக்ட்களிலும்’ நூத்துக்கு நூறு மார்க் வாங்கி பத்தாவதில் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வரணும் செந் தாமரை” என்று சொல்லி செந்தாமரையின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.செந்தாமரை ரொம்ப சந்தோ ஷப் பட்டு ”சார்,நீங்க சொன்னா மாதிரி நான் இன்னும் ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சு வந்து எல்லா ‘சப்ஜெக்ட்களிலும்’ நூத்துக்கு நூறு மார்க் வாங்கி பத்தாவதில் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வருவேன்” என்று மிகவும் ‘கான்·பிடண்ட்டாக’ச் சொன்னாள்.உடனே அந்த வாத்தியார் ”வொ¢ குட் செந்தாமரை.நீ இவ் வளவு ‘கான்·பிடண்ட்டா’க சொல்வதைப் பார்த்தா நீ நிச்சியமாக ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வருவதிலே எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை.நீ இந்தப் பள்ளிக் கூடத்துக்கு நல்ல பேரையும் பெருமை யையும் வாங்கித் தரணும்”என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.

செந்தாமரையின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த சுமதி என்கிற பொண்ணு கணக்கில் முப்பத்தைஞ்சு மார்க் தான் வாங்கி இருந்தாள்.செந்தாமரை தன் சீட்டுக்கு வந்ததும் செந்தாமரை “நீ கணக்கிலே நூத்துக்கு நூறு மார்க வாங்கி இருக்கே.’கங்கிராஜுலேஷன்ஸ்’ செந்தா மரை. இந்த ‘க்லாஸ்லே’ நீ ஒருத்தி தான் நூத்துக்கு நூறு மார்க வாங்கி இருக்கே” என்று பேச்சுக் கொடுத்து செந்தாமரையுடன் பேசினாள் சுமதி.கேட்க வேண்டுமே என்று நினைத்து செந்தாமரை சுமதியைப் பார்த்து” நீ கணக்கிலே எவ்வளவு மார்க் வாங்கி இருக்கே சுமதி” என்று கேட் டாள்.உடனே சுமதி தன் தலையைத் தொங்க போட்டுக் கொண்டே “முப்பதைஞ்சு மார்க் தான் வாங்கி இருக்கேன் செந்தாமரை”என்று சொல்லி வெட்கப்பட்டாள்.சாப்பாட்டு ‘ப்ரேக்’ விட்டவுடன் சுமதிக்கு அவள் வீட்டில் கார் வந்தவுடன் அவள் தன் பங்களாவுக்கு கிளம்பிப் போனாள்.செந்தாமரை அவள் கொண்டு அலுமினிய டப்பாவில்கொண்டு வந்து இருந்த முனு இட்லி,சட்னியை சாப்பிட ஆரம்பித்தாள்.மூனு இட்லியை சாப்பிட்ட பிறகு செந்தாமரை குடித் தண்ணீர் இருக்கும் இடத்திற்குப் போய் தண்ணீரைக் குடித்தாள்.

வழக்கத்துக்கு மாறாக சுமதி வீட்டிலே சீக்கிரமா சாப்பிட்டு விட்டு ஒரு அரை மணிக்கெல்லாம் பள்ளிக் கூடம் வந்தாள்.வந்த சுமதி செந்தாமரை எங்கே இருக்கிறாள் என்று தேடிப் பிடித்து அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.’சா¢, சுமதியை விசாரிக்கலாம்’ என்று நினைத்து “வா சுமதி,என்ன இன்னைக்கு சீக்கிரமா சாப்பிட்டு விட்டு வந்து இருக்கே” என்று கேட்டாள் செந்தாமரை.உடனே சுமதி தன் தலையைத் தொங்க போட்டுக் கொண்டே”செந்தாமரை,நீ எனக்கு கணக்கு சொல்லிக் குடுப்பியா. நான் எங்க அப்பா கிட்டே கேட்டு உனக்கு ‘டியூஷன்’ ·பீஸா மாசம் ஐனூறு ரூபாய் தரச் சொல்றேன். என்னைத் தப்பா எடுத்துக்காதே.எனக்கு பத்தாவதிலே கணக்கிலே நல்ல மார்க் வாங்க வேணும்.எங்க குடும்பத்திலே எல்லாரும் நல்லா படிச்சு இருக்காங்க.நான் எங்க வீட்டிலே எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணு செந்தாமரை.நான் கணக்கிலே நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணனும்” என்று செந் தாமாரை யின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் சுமதி.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *