ராமசாமி ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தார்.அவர் தன் வாழக்கையில் நன்றாக செட்டில் ஆனதும்,தன் அம்மா ஏற்பாடு பண்ணின ஒரு தூறத்து உறவு பெண் பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். ரெண்டு வருஷம் ஆனதும் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது.அந்தக் குழந்தைக்கு ஆனந்தி என்று பேர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள். ஆனந்திக்கு நாலு வயசாக இருந்த போது திடீரென்று ஒரு நாள் பத்மா விஷ ஜுரம் வந்து,போதிய மருத்துவ வசதி இல்லாமல் ஆஸ்பத்தியில் ஐஞ்சு நாள் இருந்து விட்டு இறந்து விட்டாள்.
ராமசாமி நடு வயதாக இருந்ததினாலும்,ஆனந்தியை வளர்த்து வர ஒரு பெண் துணை வேண்டும் என்பதாலும் தனக்கும் ஒரு வாழக்கை துணைவி வேண்டும் என்று நினைத்து, அவர் மேகலா என்கிற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்.ராமசாமிக்கும் மேகலாவுக்கும் அடுத்து அடுத்து ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
தனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்து விட்டதால் மேகலா அவைகளை நல்லா வளர்க்க ஆசைப் பட்டு,ஆனந்திக்கு ஆறு வயசாகியும் அவளை ஸ்கூலுக்கு அனுப்பாமல், வெறுமனே எல்லா வீட்டு வேலைகளை செய்து வரச் சொன்னாள் மேகலா.
ராமசாமி மேகலாவிடம் “மேகலா, நீ ஆனந்தியையும் ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வை.அவளும் ஸ்கூலில் படிச்சு வரட்டுமே” என்று பல தடவை சொன்னார்.ஆனால் மேகலா “வேணாங்க,அவ என்னோடு வூட்டு வேலை செஞ்சு வரட்டும்.வூட்லே நிறைய வேலைங்க இருக்குங்க.அவளும் என் கூட உதவி பண்ணி வந்தா தாங்க எல்லா வேலைங்களையும் செஞ்சு முடிக்க முடியும்” என்று பிடிவாதமாக சொல்லி விட்டாள்.ராமசாமி அதற்கு ஒன்னும் பதில் சொல்லாமல், ‘ஆனந்தி இப்படி வீட்டிலேயே இருந்துக் கொண்டு படிக்கப் போகாமல் இருந்து வறாளே’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டு வந்தார் ஆனந்தியை நிறைய கஷ்டப் படுத்தி வந்தாள் மேகலா.தினமும் ஆனந்திக்கு நிறைய வேலைகள் எல்லாம் கொடுத்து அவளை சக்கையாய் பிழிந்து வந்தாள்.அடிக்கடி ஆனந்தியை கெட்ட் வார்த்தைகளால் திட்டியும்,கைகளால் அதித்தும், தலையில் குட்டியும் கொடுமை படுத்தி வந்தாள்.இரவு பத்து மணி வரை ஆனந்தியைப் பிழிய, பிழிய, வேலை வாங்கிக் கொண்டு வந்து விட்டு மறுபடியும் காலையில் நாலு மணிக்கே எழுப்பி வீட்டின் எல்லா வேலைகளையும் ஆனந்தியை செய்து வரச் சொன்னாள் மேகலா.
அன்று ஞாயிற்றுக் கிழமை. மேகலா பக்கத்து வீட்டு அம்மாவுடன் ஏதோ பேசப் போய் இருந்தாள்.‘அம்மா தான் வீட்டிலெ இல்லையே,நாம பட்டு வரும் கஷ்டத்தை அப்பா கிட்டே சொல்லலாம்’என்று நினைத்து ஆனந்தி தன் அப்பா கிட்டே சித்தி தனக்கு செய்து வரும் கொடுமைகலை எல்லாம் சொல்லி அழுதாள்.மகள் ஆனந்தி படும் கஷ்டங்களை கேட்ட ராமசாமி அழுதார்.ராமசாமி அழுதுக் கொண்டு இருக்கும் போது மேகலா வீட்டுக்குள்ளே வந்தாள்.தன் புருஷன் ஆனந்தி யிடம் அழுவதைப் பார்த்த மேகலா உடனே ஆனந்தியைப் பார்த்து “ ஏண்டீ கழுதே, நான் வீட்டிலே இல்லாத போது உன் அப்பா கிட்டே என்னைப் போட்டு குடுத்து இருக்கியா ” என்று கத்தி விட்டு,தன் கையை ஓங்கி ஆனந்தி கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டாள் மேகலா.ஆனந்தி கன்னத்தில் மேகலாவின் ஐஞ்சு விரல்களும் பதிஞ்சு ஆனந்தியின் கன்னம் சிவப்பாக மாறியது.ஆனந்தி தன் கன்னங்களை தடவிக் கொண்டே“நான் இனிமே அப்பா கிட்டே ஒன்னும் சொல்ல மாட்டேம்மா.என்னை அடிக்காதேம்மா” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.
“ நீ மட்டும் உன் அப்பா கிட்டே இந்த மாதிரி ஏதாவது என்னைப் பத்தி போட்டுக் கொடுத்தேனா,நான் உன்னை அடிக்கிற அடியிலே, உன் காதுங்களே கேக்காதபடி மாறி, மாறி அடிச்சுக் கிடு இருப்பேன் ஜாக்கிறதை.” என்று மிரட்டினாள்.ஆனந்தி அழுது கொண்டே மத்த வேலைங்களை எல்லாம் செய்யப் போனாள்.ராமசாமிக்கு துக்கம் துக்கமாக வந்தது.மேகலா தூரப் போன பிறகு,ராமசாமி ஆனந்தி இருக்கும் இடத்திற்கு போய் அவளை மெல்ல சமாதானப் படுத்தினார்.
‘தான் இப்படி ரெண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டதால் தானே பாவம் ஆனந்திக்கு இந்த ‘மாற்றான் தாய்’ கொடுமை ஏற்பட்டு இருக்கு. தனக்கு வர சம்சாரம் தன் முதல் சம்சாரத்தின் குழந்தையை இப்படி கொடுமைப் படுத்துவான்னு எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தா,நான் இந்த ரெண்டாம் கல்யாணமே பண்ணி கிட்டு இருக்க மாட்டோமே’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அழுதார் ராமசாமி.அந்த வருத்தமே அவர் மனதை செல் போல தினமும் அரித்து வந்தது. ஆனந்திக்கு இருபது வயதாகும் போது ராமசாமி வருத்தம் ரொம்ப மேலிட ஒரு நாள் மாரடைப்பால் இறந்துப் போனார்.
தன் கணவன் இறந்துப் போய் ஒரு வருஷம் ஆன பிறகு மேகலா தன் அப்பா அம்மாவிடம் கலந்துப் பேசி, ஆனந்தியை திருச்சியில் இருந்து வந்த தன் தம்பிக்கே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டாள்.‘இத்தனை நாள் தான் நாம் அம்மாவின் கொடுமையால் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தோம்,இனிமேலாவது நாம் சந்தோஷமாய் இருந்து வரலாம்’ என்று நினைத்து ஆனந்தி தன் கணவன் வீட்டுக்கு சந்தோஷமாகப் போனாள்.
ஆனந்தி மாமியார் மாமனாருக்கு ஷண்முகம் ஒரே பிள்ளை. வீட்டுக்கு வந்த ஆனந்தியை தங்கள் பெண் போல நினைத்து மாமியாரும் மாமனாரும் நல்ல விதமாக நடத்தி வந்தார்கள்.ஆனந்தியும் அவர்கள் மனம் நோகாமல் அவர்கள் சொன்ன எல்லா வேலைகளையும் செஞ்சு வந்து, அவர்கள் சந்தோஷமாக வைத்துக் கொண்டு வந்தாள்.கல்யாணம் பண்ணிக் கொண்ட அடுத்த வருஷமே ஆனந்திக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.அந்தக் குழந்தைக்கு ‘ வசந்தன்’ என்று பேர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தாள்.அந்தக் குழந்தை க்கு பிறந்து ஆறு மாசம் தான் ஆகி இருக்கும்.ஒரு நாள் காலயில் ஷண்முகம் தன் கையில் ஒரு ‘சூட் கேஸ¤டன்’ தயாராய் நின்றுக் கொண்டு இருந்தான்.அவனைப் பார்த்ததும் ஆனந்திக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
அவள் உடனே “எங்க,இவ்வளவு காலையிலே எங்கேங்க கிளம்பி விட்டீங்க” என்று கண்ணீர் மல்க கேட்டாள் ஷண்முகம் ஆனந்தியை ஒரு கையில் பிடித்துத் தள்ளி விட்டு “தூரப் போடி கழுதை.நீ யாரடி என்னை எங்கே போறேன்னு கேக்க.இன்னியோடு உனக்கும் எனக்கும் இனிமே எந்த உறவும் இல்லேடி.எல்லாம் முடிஞ்சு போச்சுடி. தூரப் போடி”என்று கத்தி ஆனந்தியைத் தூரத் தள்ளீனான். கொஞ்ச நேரம் ஆனதும் ”அம்மா, அப்பா,நீங்க என்னை ரொம்ப கெஞ்சிக் கேட்டுக் கிட்ட மாதிரி நம்முடைய வம்சம் வளர உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை யை பெத்துக் குடுத்து விட்டேன்.நான் ஆசைப் பட்டு கல்யாணம் பண்ணிக் கொண்ட என் வசந்தாவோடு அவ வீட்டுக்குப் போய் அவளோடு வாழ்ந்து வரப் போறேன்.இனிமே நான் இங்கே வரவே மாட்டேன்.நான் போய் வறேன்” என்று சொல்லி விட்டு ஷண்முகம் கிளம்ப ஆரம் பித்தான்.ஆனந்திக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது..
ஷண்முகம் சொல்லி முடிக்கவில்லை உடனே “ஏண்டா ஷண்முகம், உனக்கு என்ன பயித்தியமாடா பிடிச்சி இருக்கு.மூக்கும் முழியுமா மகா லக்ஷ்மி மாதிரி உனக்கு ஒரு ஒரு சம்சாரம் இங்கே நம்ம வூட்டுலே இருக்கும் போது,ஏண்டா மறுபடியும் அந்த ‘பிசாசு’க் கிட்டே போக ஆசைப் படறே. அவளை நீ விட்டு விட்டு ஒரு நல்ல பொண்ணோடு குடித்தனம் பண்ணி வரணும் என்கிற ஆசையில் தானே உங்க அக்கா மேகலா கிட்டே சொல்லி நானும் அம்மாவும் ஆனந்தியை உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம்.உனக்கு இப்போ ஒரு குழந்தை கூட பொறந்து இருக்கேடா. வேண்டாம்டா,அந்த கிருஸ்தவப் பொண்ணு.அவளுக்குக் பொறந்து இருக்கிற குழந்தைங்க நம் ‘வம்சம்’ குழந்தைங்க ஆவ மாட்டாங்கடா.நீ எங்களுக்கு ஒரே பையன்டா.அந்த முருகப் பெருமான் அருளால் நம் வமசம் தழைக்க உனக்கும் ஆனந்திக்கும் ஒரு ஆண் குழந்தை பொறந்து இருக்குடா.இங்கேயே எங்களோடு இருந்துக் கிட்டு உனக்கு பொறந்து இருக்கும் அந்த ஆண் குழந்தையை,நீயும், மருமகளும் செல்லமா வளர்த்து வாங்க.அந்த பிசாசு கிட்டே மறுபடியும் போகாதேடா. அவ நம்ம ஜாதிப் பொண்ணு இல்லேடா.வேறே மதத்தை சேர்ந்தவடா” என்று சொல்லி ஷண்முதத்தின் அவன் ‘சூட் கேசை’ப் பிடித்து இழுத்தார் சுந்தரம் பிள்ளை. ஷண்முக த்தின் அம்மா மரகதமும் அழுதுக் கொண்டே “ஷண்முகம், சண்முகம்,மறுபடியும் அந்த கிருஸ்தவ ஜாதிப் பொண்ணுக் கூட போவாதேடா.ஆனந்தி ரொம்ப நல்லப் பொண்ணுடா.நம்ம ஜாதிப் பொண்ணுடா.அவ கூடவும் பொறந்து இருக்கும் குழந்தயுடனும் குழ்ந்தையோடவும் வாழ்ந்து வாடா.அந்த பிசாசு வூட்டுக்கு மறுபடியும் போவாதேடா”என்றுஷண்முகத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.ஆனால் ஷண்முகம் “அம்மா,அப்பா, நான் இவ கூட இனிமே வாழ்ந்து வர மாட்டேன்.நான் ஆசைப் பட்டு கல்யாணம் கட்டி கிட்ட வசந்தா கூட தான் இனிமே வாழ்ந்து வரப் போறேன்.என்னைத் தடுக்காதீங்க” என்ற்ய் சொலி விட்டு தன் சூட் கேஸ¤டன் வீடை விட்டு போய் விட்டான்.ஷண்முகம் அம்மாவும் அப்பாவும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் சண்முகம் போவதையே பார்த்துக் கொண்டு அழுதுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
‘இவர் வேறே ஒரு கிருஸ்தவப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு அவளோடு தான் குடித்தனம் பண்ணி வந்துக்கினு இருக்கார்’என்று தெரிஞ்சு இருந்துமா என் சித்தி கிட்டே பொண்ணு கேட்டு,இவங்க என்னை இவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்க.இப்போ என்னவோ இந்த மாமனாரும், மாமியாரும்,ஒன்னும் தெரியாத மாதிரி நீலிக் கண்ணீர் வடிக்கிறாங்களே.அடக் கடவுளே இனிமே நாம் என்ன செய்யப் போறாம்’ என்று எண்ணி வருத்தப் பட்டுக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள் ஆனந்தி.கொஞ்ச நேரம் ஆனதும் ஆனந்தி தன் மாமியாரைப் பார்த்து “ஏன் அத்தே, உங்க பிள்ளை ஏற்கெனவே ஒரு கிருஸ்தவ பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு இருப்பது உங்களுக்கு தெரிஞ்சு இருந்தும்,நீங்க ஏங்க என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க,இப்போ பாருங்க.அவர் என்னை வேணாம்ன்னு சொல்லி விட்டு முதல் சம்சாரத்தோடு போயிட்டாரேங்க.என் வாழ்க்கை இப்போ வீணாயிடுச்சேங்க.உங்க பிள்ளை எனக்கு ஒரு குழந்தையை கொடுத்து விட்டு என்னை அனாதை ஆக்கி விட்டு போயிட்டாரேங்க.நான் இப்போ என்ன பண்ணு வேன்.என் வாழ்க்கையே வீணாயிடுச்சே.இனிமே நான் என்னப் பண்ணப் போறேன் அத்தே” என்று சொல்லி தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் ஆனந்தி. உடனே சுந்தரம் பிள்ளை எங்களே மன்னிச்சுடும்மா,டம்மா.ஷண்முகத்தே விடம்மா.சண்முகத்தை உனக்குக் கல்லாணம் செஞ்சு வச்சா,அவன் மனசு மாறி அந்த ‘பிசாசை’ விட்டு விட்டு உன்னோடு ஒழுங்கா குடித்தனம் பண்ணி வருவான்னு நாங்க நினைச்சோம்மா.ஆனா அவன் அந்த பிசாசு பொம்பளே மேலே இருக்கிற ஆசையாலே உன்னையும் குழந்தையையும் விட்டு விட்டு ஓடிப் போயிட்டானேம்மா.சண்முகம் எங்களை ஏமாத்தி விட்டாம்மா. இப்போ நான் செய்யட்டும்மா” என்று சொல்லி விக்கி விக்கி அழுதார்.மாமியாரும் அழுதுக் கொண்டு இருந்தாள்
தன் கண்களைத் துடைத்துக் கொண்டே சுந்தரம் பிள்ளை “ மரகதம், இன்னியோடு அந்த ஷண்முகத்தை தலை முழுகிடு.ஷண்முகம் இனிமெ நமக்கு பிள்ளையே இல்லே.இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் ஆனந்தியும்,பேரக் குழந்தை தான் எல்லாம்”என்று சொல்லி விட்டு குளியல் அறைக்கு போய் பச்சைத் தண்ணீயை எடுத்து வேகமாக தன் தலையில் கொட்டிக் கொண்டார் அவர் குளியல் அறையை விட்டு வந்ததும் சுந்தரம் பிள்ளை மறுபடியும் ஓங்கி சத்தம் போடவே மரகதம் பயந்துப் போய் குளியல் அறைக்குப் போய் ஷன்முகத்துக்கு தலை முழுகி விட்டு வந்தாள்.
சுந்தரம் பிள்ளை ஆனந்தியைப் பார்த்து “அவன் தான் எங்களை தனியா தவிக்க விட்டு விட்டு போயிட்டாம்மா. நீ எங்க ‘வம்ச குலக் குழொந்தை’ எங்க கூட வச்சுக் கிட்டு வந்து,நீயும் எங்களோடு சந்தோஷமா இருந்து வாம்மா.நீ குழந்தையே எடுத்துக் கிட்டு எங்களை வுட்டு எங்கேயும் போயிடாதேம்மா.நீ எங்களுக்கு பாரமே இல்லைம்மா.நீ வசந்தனோடு இங்கேயே இருந்து வாம்மா.நீ எங்க மருமகம்மா,என்று தன் கைகளைப் கூப்பி அழுதுக் கொண்டே மேகலாவிடம் சொன்னார்.மாமியார் மரகதமும் அதையே சொல்லி அழுதாள்..ஆனந்திக்கு ஒன்னும் புரியவில்லை.அவள் குழம்பினாள்.அவளுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.கொஞ்ச நேரம் ஆனதும் ஆனந்தி “ என்னை கொஞ்சம் தனியா விடுங்க. இப்போ நான் உங்க கிட்டே சொல்ற நிலையிலே இல்லே.” என்று சொல்லி விட்டாள்.
அதுக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்.குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே யோஜனை பண்ண ஆரம்பித்தாள்.
‘கடவுளே,நான் சின்ன குழந்தையா இருந்தப்ப என்னுடைய நாலாவ்து வயசு வரைக்கும் சந்தோஷ மா இருந்து வந்தேன் .அப்புறமா நீ என் அம்மாவை உன் கிட்டே அழைச்சு கிட்டே.அதுக்கு அப்புறமா நான் பதினைஞ்சு வருஷமா என் சித்தி கிட்டே அடியும், உதையும்,கெட்ட வார்த்தை களால் திட்டும் வாங்கி, செக்கு மாடு மாதிரி எல்லா வேலைக்களையும் செஞ்சு வந்து கஷ்டப் பட்டு வந்தேன்.கல்யாணம் கட்டி கிட்ட பிறவு,என் சித்தியின் கொடுமையிலே இருந்து வெளியே வந்து கட்டிக் கிட்ட புருஷனோடு சந்தோஷமா இருந்து வரலாம்ன்னு தானே நான் கல்யாணத்துக்கு சம்ம்திச்சேன்.கல்யாணம் கட்டி கிட்டு ஒரு ஒன்னரை வருஷமா தான் எனக்கு நீ சந்தோஷம் குடுத்தே.இப்போ என்னையும், என் வயத்திலே பொறந்த குழந்தை யையும் அனாதை ஆக்கிட்டே. என்னை ஏன் இப்படி கஷ்டப் படுத்தறே கடவுளே’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு அழுதாள் ஆனந்தி..கொஞ்ச நேரத்தில் குழந்தை பால் குடித்துக் கொண்டே தூங்கி விட்டது. ஆனந்தி குழந்தையை மெல்ல எடுத்து தன் பக்கத்தில் விட்டுக் கொண்டு தன் புடவை மேல் துணியை சரி செய்து கொண்டு குழந்தை பக்கத்திலேயே படுத்துக் கொண்டாள்.
ஆனந்தி யோஜனை பண்ணினாள்.’இந்த மாமனாரும், மாமியாரும், என்னை இங்கேயே இருந்து வாம்மானு சொல்றாங்க.அவங்க ரெண்டு பேரும் என் மேலே இருக்கிற ஆசையாலே சொல்றாங்களா,இல்லே நான் அவங்க ‘வம்ச குலக் குழந்தை யை’ அழைச்சு கிட்டு போய் விடுவேனோ என்கிற பயத்தாலா. வசந்தனுக்கு நாலு னயசு ஆனவுடன்,அவன் தண்ணாலே சாப்பிடு வந்து,நடந்து ஓடியாடி வர ஆரம் பிச்சு விட்டா,இவங்களுக்கு நான் பாரமா தானே இருந்து வரணும்.எனக்கு படிப்பு வாசனையே இல்லை.இந்த கசப்பான வாழ்க்கை எனக்கு வேணுமா.சரி நாம இங்கே இருக்க வேணாம்ன்னு நினைச்சு,வசந்தனை கூட்டிக் கிட்டு வெளியே போனோம்ன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்” என்று நினைக்கும் போதே ஆனந்திக்கு தலையை சுத்தியது.தன் மனதுக்குள் அழுதாள்.
ஒரு மணி நேரம் தான் ஆகி இருக்கும்.மாமியார் ஆனந்தி படுத்துக் கொண்டு இருந்த ரூமுக்குள் மெதுவாக வந்து “ஆனந்தி,நீ காலையிலெ இருந்து இன்னும் சாப்பிடலையேம்மா.குழந்தை பெத்த உடம்புக்காரி இப்படி ரொம்ப நேரம் பட்டினியா இருக்க கூடாதும்மா.வாம்மா சாப்பி டும்மா”என்று பா¢வோடு கூப்பிட்டாள். ஆனந்திக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை.இருந்தாலும் மாமியார் இவ்வளவு பா¢வோடு கூப்பிட றாங்களே என்று நினைத்து சாப்பிட ஹாலுக்கு வந்தாள். தன் கைகளை கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் ஆனந்தி.மாமியார் ஆனதிக்கு சாப்பாடு போட்டுக் கொண்டே “அம்மா ஆனந்தி,நீ இந்த வூட்டிலே சண்முகம் இருத்தப்ப இருந்த மாதிரி சந்தோஷமா இருந்து வாம்மா.நாம நாலு பேரும் வயிறார சாப்பிட்டு வர நமக்கு வருமானம் வருதும்மா.எங்க குலக் கொழுந்தை எங்க கிட்டே இருந்து பிரிச்சி எங்காவது போயிடாதேம்மா”என்று தன் கைகளை கூப்பிக் கொண்டு சொன்னாள் மரகதம்..உடனே மாமனாரும் “ஆமாம்மா” என்றார். இருவர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.ஆனந்தி ஒன்னும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு தன் கைகளை கழுவிக் கொண்டு ஒன்னும் பதில் சொல்லாமல் குழந்தை படுத்துக் கொண்டு இருந்த ரூமுக்குள் போய் விட்டாள்.ஆனந்தி படுத்துக் கொண்டெ யோஜனைப் பண்ணினாள்.‘இனிமே வசந்தன் சந்தோஷம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.இந்த வூட்டிலேயே இருந்து கிட்டு வந்து அவனை நல்லா படிக்க வச்சு நல்லா முன்னுக்குக் கொண்டு வர வேணும். என்கிற முடிவுக்கு வந்தாள் ஆனந்தி.ஒரு மணி நேரம் கழித்து ஆனந்தி தான் படுத்து இருந்த ரூமை விட்டு வெளியே வந்து மாமியாரைப் பார்த்து “ நான் எங்கும் போகாம இங்கேயே இருக்கேனுங்க” என்று கண்களில் கண்ணீருடன் சொன்னாள். வளர்த்து வந்தாள்.
நான்கு வருஷங்கள் ஓடி விட்டது.ஆனந்தி பக்கத்தில் இருக்கும் ஒரு சின்ன பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்க வைத்தாள்.மரகதம் வீட்டில் இல்லாத போது சுந்தரம் பிள்ளை ஆனந்தியுடன் அதிகமாக பேச்சுக் கொடுத்து பேசி வந்தார்.ஆனந்தியின் ‘இளமை அழகு’ அவரை கிறங்க வைத்தது.அவர் தனியாக இருக்கும் போது அவர் மனதில் பல ஆசைகள் வர ஆரம்பித்தது.ஆனந்திக்கு தன் மாமனார் பேசி வருவது,பழகி வருவது ஒரு வித பயத்தை தர ஆரம்பித்தது. .அவள் எப்போதும் ஜாக்கிறதையாக இருந்து வந்தாள்.ஒரு நாள் ஆனந்தி வசந்தனை பள்ளிகூடத்தில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தாள்.பத்து நிமிஷத்துக்கு எல்லாம் மரகதம் ஆனந்தியைப் பார்த்து ”ஆனந்தி இன்னைக்கு என் அண்ணன் ஏதோ ஒரு வூடு வாங்கப் போறாராம்.என்னையும் அவரையும் வந்து வாங்கப் போற வூட்டைப் பாக்க வரச் சொல்லி இருக்கார்.ஏங்க ,நீங்களும் என் கூட அவர் வாங்கப் போற வூட்டைப் பாக்க கூட வா£ங்களா” என்று கேட்டாள்.உடனே சுந்தரம் பிள்ளை” மரகதம் எனக்கு தலை ரொம்ப வலிக்குது.நான் மருமகளை கொஞ்சம் கா·பி போட்டுக் கொடுக்கச் சொல்லி குடிச்சுட்டு கொஞ்சம் ‘ரெஸ்ட்’ எடுத்துக்கறேன்.நீமட்டும் போய் வா”என்று சொல்லி விட்டார்.மரகதம் கிளம்பிப் போனவுடன்சுந்தரம் பிள்ளை வாசல் கதவை சாத்தி விட்டு வந்து ஆனந்தியைப் பார்த்து ”ஆனந்தி,எனக்கு கொஞ்சம் கா·பி போட்டு குடு.எனக்கு தலையை ரொம்ப வலிக்குது” என்று தன் தலையை பிடித்துக் கொண்டே கேட்டார்.“இதோ போட்டு தரேன் மாமா” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போய் கா·பி கலக்கப் போனாள் ஆனந்தி. .அவர் மிருக குணம் தலை தூக்கியது.மூளையை கசக்கிப் பிழிந்துக் கொண்டார் ஆனந்தி கா·பி கொண்டு வந்து சுந்தரம் பிள்ளையிடம் கொடுத்தபோது அவர் அந்த காப்பியை வாங்கிக் கொள்ளாமல் ஆனந்தி புடவை தலைப்பைப் பிடித்து இழுத்தார்.ஆடிப் போய் விட்டாள் ஆனந்தி.‘என்னடா இது இப்படி தனியாக மாட்டிக் கிட்டு விட்டோமே.என்று நினைக்கும் போது பயம் மேலிட்டு மயக்கம் அதிகம் ஆகி கீழே விழுந்து விட்டாள்.
இந்த சமயம் பார்த்து யாரோ வாசல் கதவை பலமாகத் தட்டினார்கள்.சுந்தரம் பிள்ளைக்கு ‘யாருடா இப்போ பாத்து வாசல் கதவை இப்படி விடாம தட்டறாங்க கொஞ்ச நேரம் சும்மா இருந்து விடலாம்.கதவைத் தட்டறவன் ‘வீட்டிலே யாரும் இல்லைப் போல இருக்குன்னு நினைச்சு போயிடுவான்’ என்று நினைத்து அவர் கதவைத் திறக்காமல் இருந்தார்.ஆனால் கதவு தட்டுவது ஓயவில்லை.சுந்தரம் பிள்ளை வெறுப்புடனும் கோபத்துடனும் வேகமாகப் போய் ‘நாம் லேசாக கதவைத் திறந்து வந்தவனை அனுப்பி விடலாம் என்று நினைத்து வாசல் கதவை மெல்லத் திறந்து பார்த்தார்.அவருக்குக் குப்பென்று வேர்த்துக் கொட்டியது.வாசல் கதவு திறக்க ரொம்ப நேரம் ஆகவே மரகதம் சாவி சந்தில் தன் கண்ணை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.மரகதம் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன் கணவனைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்கு உள்ளே வந்தாள் மரகதம். உள்ளே வந்த மரகதம் ஆனந்தியின் புடவையை சரிப் படுத்தி அவளைப் போர்த்தி விட்டு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து ஆனந்தியின் முகத்தில் தெளித்து “ஆனந்தி,ஆனந்தி, எழுந்தா¢ ம்மா”என்று குரல் கொடுத்தாள்.ஆனந்தக்கு அவள் அத்தை பேசுவது எங்கோ கிணத்தின் அடியில் இருந்து கூப்பிடுவது போல கேட்டது.தன் மாமியாரைக் கட்டிக் கொண்டு ”அத்தே,அத்தே நீங்க மட்டும் வராம இருந்தா, நான் மோசம் போய் இருப்பேன் அத்தே” என்று தட்டுத் தடுமாறி சொன்னாள் ஆனந்தி.
உடனே மரகதம்” கவலைப் படாதே ஆனந்தி.இனிமே உனக்கு ஒன்னும் ஆவாம நான் பாத்துகறேன்.நீ கவலைப் படாதேம்மா” என்று சொல்லி ஆனந்தியை சமாதானப் படுத்தினாள்.பிறகு தன் கணவனைப் பார்த்து “ஏங்க உங்க புத்தி இப்படி கெட்டுப் போச்சு.இவ நம்ப மருமகங்க. மகளுக்கு சமமானவ.எப்படிங்க உங்களுக்கு இந்த ‘மிருக ஆசை’ வந்ததுங்க. .நான் மட்டும் என் செல் போனை வூட்லே மறந்துப் போய் வச்சுட்டு,அதை மறுபடியும் எடுக்க வராம இருந்து இருந்தா, இன்னேரம் ஏதாவது ‘ஏடா கூடமா’ஆகி இருக்கிங்க..கொஞ்சமாவது யோஜனைப் பண்ணீங்களாங்க. உங்களுக்கு வெக்கமா இல்லீங்க” என்று கத்தினாள்.ஆனந்தி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.“சரி ஆனந்தி,இனிமே நான் எங்கு போறதா இருந்தாலும் உன்னையும் என் கூடவே இட்டு கிட்டு போறேன்.வா,புடவை மாத்தி கிட்டு என்னோடு என் அண்ணன் வூட்டுக்கு போய் வரலாம்” என்று சொன்னவுடன் ஆனந்தி வேறு புடவையைக் மாற்றிக் கொண்டு கொண்டு மாமியாருடன் வெளியே போனாள். தன் மருமகளுடன் மரகதம் தன் அண்ணன் வீட்டுக்குப் போனாள்.மரகதத்தின் அண்ணன் கடைசி பையன் ஒருவன் ரொம்ப நாளா தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் அன்று வீட்டில் இருந்தான்.அண்ணன் பரமசிவமும்,அவர் மணைவி விமலாவும் வீட்டுக்கு வந்த தங்கையையும், மருமளையும் அன்புடன் வரவேற்று கா·பி பலகாரம் கொடுத்தார்கள்.மரகதமும் ஆனந்தியும் அவர்கள் கொடுத்த பலகாரத்தை சாப்பிட்டு விட்டு கா·பியையும் குடித்தார்கள்.ரமேஷ் ஆனந்தியை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.ஆனந்தியின் அழகு அவனை வெகுவாக மயக்கியது. தன் அம்மாவைத் தனியாக அழைத்து “அம்மா, இந்தப் பொண்ணு ஆனந்தியை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கும்மா.எப்படியாவது அப்பா கிட்டே மெல்ல சொல்லி ஆனந்தியை எனக்குக் கல்யாணம் பண்ணி வைம்மா” என்று சொல்லி கெஞ்சினான் ரமேஷ். உடனே தன் கணவனைத் தனியாகக் கூப்பிட்டு விமலா ரமேஷின் ஆசையைச் சொன்னாள். பரமசிவத்திற்கு ரொம்ப சந்தோஷம்.‘நாம எப்படி யாவது மரகதம் கிட்டே மெல்ல சொல்லி ரமேஷ¤க்கு ஆனந்தியைக் கல்யாணம் செஞ்சு வைக்க வேணும்’ என்று ஆசைப் பட்டார். பரமசிவமும் விமலாவும் தனி தனியாக மரகத்தை சந்தித்து ரமேஷ் சொன்ன ஆசையை சொன்னார்கள். மரகதம் யோஜனைப் பண்ணினாள்.‘சரி, நாம மெல்ல ஆனந்தி கிட்டே ரமேஷின் ஆசையை சொல்லி சம்மதம் வாங்கி,ஆனந்தியை ரமேஷ¤க்கு கல்யாணம் பண்ணி வைக்க வேணும்’ என்று முடிவு பண்ணினாள் மரகதம்.மரகதம் அண்ணன் அண்ணியிடம் “நான் வூட்டுக்குப் போய் மெல்ல ஆனந்தியை சம்மதிக்க வச்சு,ரமேஷ¤க்கு ஆனந்தியை கல்யாணம் பண்ணி வக்கிறேன் அண்ணே” என்று ரகசியமாக சொல்லி விட்டு,அவங்க வாங்க இருந்த வூட்டைப் பார்த்து விட்டு ஆனந்தியை அழைத்து கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள். வழி நெடுக மரகதம் ஆனந்தி இடம் தன் அண்ணன் குடும்பத்தைப் பத்தியும் ரமேஷைப் பத்தியும் மிகவும் புகழ்ந்து பேசிக் கொண்டு வந்தாள்.ஆனால் ஆனந்திக்கு மட்டும் ‘ஏன் இந்த மாமியார் இவங்க அண்ணன் குடும்பத்தை பத்தியும்,அவங்க பையன் ரமேஷை பத்தியும் நம்ம கிட்ட இப்படி புகழ்ந்து பேசறாங்க.நாம இவங்களைப் பத்தி தெரிஞ்சுக் கிட்டு என்ன ஆவணும். இவங்க யாரோ,நான் யாரோ இல்லையா’ என்று யோஜனை பண்ணிக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
சுந்தரம் பிள்ளைக்கு பிறந்த நாள் வரவே அவர் உறவுக்காரங்க எல்லோரையும் தன் வீட்டுக்கு வரச் சொல்லி ஒரு விருந்து கொடுக்க ஏற்பாடு பண்ணீனார்.அந்த விருந்தில் கல்யாணம் ஆகாத சுந்தரம் பிள்ளையின் தம்பி சரவணனும்,அவர் பையன் கேசவனும் கலந்துக் கொண்டார்கள்.அந்த விருந்தில் இங்கும் அங்கும் ஓடி ஆடி எல்லோரையும் கவனித்து வந்த ஆனந்தியைப் பார்த்ததும் கேசவன் தன்னை பறி கொடுத்து விட்டான்.இந்த ஆனந்தி.நாம கல்யாணம் கட்டிக் கட்டிகணும்’ என்று என்று ஆசைப் பட்டு விருந்து முடிந்தவுடன்,கேசவன் அப்பாவையும் அம்மாவையும் தனியாக சந்தித்து தன் ஆசையைச் சொனான்.தங்கள் பிள்ளை ரொம்ப ஆசைப் படுவதால் சரவணனும்,அவர் மணைவி கமலாவும் தங்கள் பிள்ளை கேசவனின் ஆசையை மெல்ல சுந்தரம் பிள்ளை கிட்டே சொல்லி ஆனந்தியை கேசவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் படி வற்புருத்தி னார்கள் அவர்களிடம் சுந்தரம் பிள்ளை ‘தான் ஆனந்தி கிட்டே மெல்ல பேசி இந்தக் கல்யாணத்துக்கு நிச்சியமா சம்மதம் வாங்கித் தருவதாக சத்தியம் பண்ணினார்.
அன்று வரை ஆனந்தி இடம் அதிகமாக பேசாத இருந்து வந்த சுந்தரம் பிள்ளை இப்போது அடிக்கடி ஆனந்தியைக் கூப்பிட்டு தன் தம்பி குடும்பத்தைப் பத்தியும் கேசவனை பத்தி மிக உயர்வாகப் பேசி வர ஆரம்பித்தார்.இவர் நோக்கம் என்ன. நம்மிடம் இருந்து எதை இவர் எதிர் பாக்கறார்’ என்று புரியாமல் குழம்பியாள் ஆனந்தி.அவளுக்கு எல்லாமே விளங்கி விட்டது.‘நம்மை எப்படியாவது சம்மதிக்க வச்சு,அந்த ரமேஷ¤க்கோ, கேசவனுக்கோ ‘ரெண்டாம் தரமாக’க் கல்யாணம் பண்ணி வைக்க மாமனரும், மாமியாரும் முயற்சி பண்றாங்க’ என்று நினைத்த ஆனந்திக்கு அழுகை அழுகையாய் வந்தது. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.அவள் அனலில் விழுந்த புழு போலத் துடித்தாள்.ஒரு நாள் மாமனார் மிகவும் கடுமையாக “ஆனந்தி,நீ என் தம்பி பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஆகணும்.கேசவன் ரொம்ப நல்ல பையன். .அதானாலே கொஞ்சம் சரின்னு சொல்லு ஆனந்தி” என்று மிரட்டினார்.உடனே “இதோ பாருங்க,முதல்லே என் தம்பி பையன் சுரேஷ் தான் ஆனந்தியை அவங்க வூட்லே பார்த்தப்ப ஆசைப் பட்டு என் கிட்டே கேட்டான்.நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்.இப்போ நீங்க திடீர்ன்னு வந்து உங்க தம்பி பையனை கட்டிக்கன்னு பிடிவாதம் பிடிகிறீங்க.இது சரி இல்லீங்க.தவிர கேசவன் ‘காரகடர்’ ரொம்ப சரி இல்லீங்க.கூடவே குடியும் உண்டுங்க.அந்த மாதிரி ஒரு பையனுக்கு நாம ஆனந்தியை கட்டி வைப்பது ரொம்ப சரியே இல்லீங்க.வேணாங்க அந்தப் பையன் கேசவன்” என்று சொல்லி முடிக்கவில்லை சுந்தரம் பிள்ளைக்கு கோபம கோப்பமாக வந்தது.உடனே அவர் “உன் தமபிப் பையன் ‘காரக்டர்’ மட்டும் என்ன ஒசத்தி.அவன் கூட கடைத் தெருவில் அடிதடி சண்டையில் மாட்டி கிட்டு ஆறு மாசம் ஜெயில் போனது உனக்கு மறந்துப் போச்சா மரகதம்.” என்று கத்தினார். சுந்தரம் பிள்ளையும் மாறி மாறி ரமேஷ் பேர்லேயும்,கேசவன் பேர்லேயும் பழியை போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.மறுபடியும் மாமனாரும் மாமியாரும் ஆனந்தியை கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்பவும் வற்புருத்தி வந்தார்கள்.ஆனந்திக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை..நெடு நேரம் படுத்துக் கொண்டு ஆனந்தி யோஜனைப் பண்ணி,மனதைக் கல்லாக்கிக் கொண்டு உயிரைப் போக்கிக் கொள்ளுவது முடிவு பண்ணினாள். அடுத்த நாள் ஆனந்தி வசந்தனை எழுப்பி அவனுக்கு பல்லைத் தேய்த்து விட்டு,அவனுக்கு நாஷ்டா கா·பி கொடுத்து சாப்பிடச் சொன்னாள்..வசந்தன் நாஷ்டா சாப்பிடப் பிறகு அவனைஅழைத்துப் போய் அவனுக்கு பள்ளிக் கூட ‘யூனி·பாரம்’ போட்டு பள்ளிக் கூட பையை எடுத்து அவனிடத்தில் கொடுத்தாள். பிறகுமாமானார் மாமியாரிடம் சொல்லிக் கொண்டு வசந்தனை அழைத்துக் கொண்டு அவன் பள்ளிக் கூடத்திற்கு ஆனந்தி கிளம்பினாள்.பள்ளிக் கூட வாசலிலே வசந்தன் கையை வெறுமனே தடவிக் கொண்டு அவன் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அழுதாள்.உடனே வசந்தன் மட்டும் தன் அம்மாவைப் பார்த்து “ஏம்மா,நீ அழறே உங்க உனக்கு உடம்பு ஏதாச்சும் சரி இலையாம்மா” என்று கேட்கும் போது பள்ளிக் கூட முதல் மணி அடித்தார்கள்.உடனே வசந்தன் “அம்மா பள்ளிகூட மணி அடிச்சுடாங்க.நான் உள்ளே போறேம்மா” என்று சொன்ன வசந்தனைப் பாத்து “வசந்தா,நீ நல்லாப் படிச்சு நல்லா முன்னுக்கு வர ணும்” என்று சொல்லி அவனைப் பள்ளக் கூடம் போகச் சொன்னாள்.அவன் தலை மறையும் வரை அங்கேயே நின்றுக் கொண்டு வசந்தனுக்கு ‘டா’’ டா’ காட்டிக் கொண்டு இருந்தாள். மெல்ல தன் மனசைக் கல்லாக்கிக் கொண்டு தன் எடுத்த முடிவு படி பண்ண புறப் பட்டாள்.
ரயில்வே ஸ்டெஷனை நோக்கி நடந்தாள்.ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ‘ப்லாட்·பாரத்திற்கு’ வந்து ‘ஒரு கோடிக்கு போகலாம்,அங்கு தான் ரயில் வண்டி வேகமாக வரும் அதன் முன்னால் நாம் விழுந்து உயிரை விடலாம்’ என்று நினைத்தாள். ஆனந்தி ஸ்டேஷனில் நவத்துக் கொண்டு இருக்கும் போது ஒரு ‘ப்லாட்·பார பென்ச்சில்’ தாடியும் மீசையுடன் சோர்ந்துப் போய் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் ஷண்முகத்தைப் பார்த்தாள்.ஆனந்திக்குத் தூக்கி வாரிப் போட்டது. மெல்ல அவன் பக்கத்தில் போய் “ஏங்க,உங்க உடம்புக்கு என்னங்க.இங்கே ஏங்க குந்திக் கிட்டு இருக்கீங்க.தாடி மீசை வேறே வச்சுக்கிட்டு இருக்கீங்க” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள்.கண்ணை முழித்துப் பார்த்த ஷண்முகம் ஆனந்தியைப் பார்த்ததும் ஆச்சரியப் பட்டான்.ஷண்முகம் மெல்ல எழுந்து நின்றுக் கொண்டு கண்களில் கண்ணீர் முட்ட “ஆனந்தி,பொண்ணான உன்னையும், நமக்குப் பிறந்த குழந்தையையும் விட்டு விட்டு அந்த ‘பிசாசுடன்’ ஓடிப் போன எனக்கு அந்தக் கடவுள் நல்ல தண்டனையைக் குடுத்திட்டான்.என் முதலாளி ஒரு நாள் நல்லாப் போய்க் கொண்டு இருந்த என்னை வேலையில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்..அதுக்கு அப்புறம் எனக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை.எனக்கு வேலை போனதும் ஒரு மாசத்தில் எல்லாம் அந்த ‘பிசாசு’ என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு வேறு ஒருத்தனுடன் போய் விட்டா. கையில் இருந்த பணம் எல்லாம் செலவு ஆகி இப்போ நாலு நாளா பட்டினியாய் இருக்கேன்.பசி தாங்காம நான் இன்னைக்கு ஓடி வரும் ரயில் முன்னால் விழுந்து என் உயிரை மாய்ச்சிக்கலாம் என்று தான் காத்து இருந்தேன் ஆனந்தி.அந்த கடவுள் உன்னை இப்போ எனக்குக் காட்டி இருக்கார்” என்று தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னான்.அவன் கால்களில் ரெண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்ததை கவனித்தாள் ஆனந்தி. “ரொம்ப வருத்தமா இருக்குங்க உங்களைப் பார்க்க.வாங்க,ஸ்டேஷன் காண்டீனில் ஏதாவது சாப்பிடுங்க”என்று சொல்லி ஷண்முகத்தை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த காண்டீனுக்கு அழைத்துப் போய் தன் கையில் இருந்த பணத்தில் காப்பி ‘டி·பன்’ வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்.டி·பன் சாப்பிட்டதும் அவனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. தன் கண்களைத் துடைத்துக் கொண்டே “ஆனந்தி, நீ என்னைஏத்துக்குவாயா”என்று சொல்லி கெஞ்சினான்.’‘கெஞ்சும் புருஷனை அழௌச்சு கிட்டு எங்காவது கண் காணாத இடத்திற்கு ஓடிப் போய் சந்தோஷமாய் வாழ்ந்து வரலாம்’ என்று ஆசைப் பட்டாள் ஆனந்தி.
கொஞ்ச நேரம் ஆனதும் ஆனந்தி ஷண்முகம் தன்னை விட்டு விட்டுப் போன பிறகு தன் வாழ்க்கையில் ஏற்பட கஷ்டங்களை எல்லாம் சொல்லி அழுதாள்.”.இனிமே ஒரு பய உன் கிட்டே நெருங்க நான் விட மாட்டேன் ஆனந்தி. நீ கவலைப் படாதே ஆனந்தி. நாம் ரெண்டு பேரும் சென்னைக்கு ஓடிப் போய் விடலாம்.நான் ஏதாச்சும் ஒரு வேலையைத் தேடிக்கிட்டு,உன்னை நான் காலம் பூராவும் ஒரு கஷ்டமும் இல்லாமல் வாழ வைப்பேன். என்னை நம்பு ஆனந்தி” என்று சொல்லி கெஞ்சினான் ஷண்முகம். ஆனந்திக்கு அவன் சொன்னது காதில் தேனாகப் பாய்ந்தது.”நீங்க கவலைப் படாதீங்க.நான் மெல்ல வூட்டுக்கு போய் யார் கண்லேயும் படாம கொஞ்ச பணமும் என் துணி மணிகளை யும் எடுத்து கிட்டு வறேங்க” என்று சொல்லி விட்டு வெகமாக வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனந்தி.மாமனார் கடைக்கு போன சமயத்தில் மாமியாரும் பாத் ரூமுக்குப் போனாள்..இது தான் சரியான சமயம் என்று நினைத்து ஆனந்தி வீட்டில் இருந்த பணததை எடுத்துக் கொண்டு,ஒரு துணி பையில் தன் துணி மணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வீட்டை விட்டு வேகமாக கிளம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தாள்.அந்த நேரம் பார்த்து சென்னைக்குப் போகும் பாசஞ்சர் வண்டி ஸ்டேஷனுக்குள் மெல்ல நுழைந்தது.உடனே ஆனந்தி சென்னைக்கு ரெண்டு டிக்கட் வாங்கினாள்.‘அம்மா நீ என்னை விட்டுப் போனதும் நான் சிறகுகள் வெட்டப் பட்ட பறவை போல இருந்து வந்தேன். ஆனா இப்போ எனக்கு முளைச்சு இருக்கு.இனிமே யாரேலேயும் வெட்ட முடியாது.நான் இப்போ என் புருஷனோடு ஆகாயத்தில் பறக்க போறேன்ம்மா’ என்று தன் மனதில் சந்தோஷத் துடன் சொல்லிக் கொண்டே ஷண்முகத்தின் கையைப் பிடித்துக் கொண்டு எதிரே காலியாய் இருந்த பெட்டியில் ஏறிக் கொண்டாள் ஆனந்தி.
ஆனந்தி வானத்தில் ஷண்முகத்தோடு சிறகடித்து பறந்துக் கொண்டு இருந்தாள்.