கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 6,770 
 
 

அத்தியாயம் 21 | அத்தியாயம் 22 | அத்தியாயம் 23

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை.ஜோதிக்கு கல்யாண நாள்.ஜோதி காலையிலேயே எழுந்து விட்டாள் அவள் குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு தான் வாங்கி வந்த புது கல்யாண ‘டிரஸ்ஸை’ ராணீக்குக் காட்டினாள்.மிக அழகாக இருந்தது அந்த’டிரஸ்.’பிறகு “ராணீ நான் போய் வறேன்.எனக்கு சமயம் கிடைக்கும் போது நான் உன்னையும் ராஜ்ஜையும் இங்கே வந்து பாக்கறேன்.நான் நல்ல ‘செட்டில்’ ஆனதும் உன்னையும் ராஜ்ஜையும் நான் வந்து என் வூட்டுக்கு அழைச்சுப் போறேன் ராணீ.உன் உடம்பு பழையபடி சீக்கிரம் நல்லா ஆவணும்.உன் உடம்பை நல்லா கவனிச்சுக்கோ. ராஜ்ஜை நல்லா வளத்து வா”என்று சொன்னாள் ஜோதி.பிறகு வாசலுக்கு வந்து காலியாய் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டாள் ஜோதி.ஜோதி அந்த ஆட்டோவில் ஏறீ கிளம்பினாள். ஜோதியின் ஆட்டோ கண்ணில் இருந்து மறையும் வரை வாசலிலிலேயே நின்றுக் கொண்டு கையை ஆட்டிக் கொண்டு இருந்தாள் ராணீ.பிறகு குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு தன் சித்தியை மனதில் நினைத்துக் கொண்டு அவளுக்கு மனதார நன்றி சொன்னாள் ராணீ.

குழந்தையை எடுத்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினாள் ராணீ.நடராஜன் தான் கதவைத் திறந்தான்.இரவு பூராவும் தூங்காததாலும்,படி ஏறி வந்த ராணீக்கு மூச்சு வாங்கி கொண்டு இருந்தது. “என்ன ராணீ,இப்படி மூச்சு வாங்குது உனக்கு.கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. ராத்திரி நீ சரியா தூங்கலையா” என்று கேட்டான் நடராஜன். ராணீ “ஆமாங்க.என் கூட இருந்த சித்தி இன்னிக்கு காலெலே கல்யாணம் செஞ்சு கிட்டு அசோக் நகர் போயிட்டாங்க. நான் இரவெல்லாம் அவங்களை நினைச்சு கிட்டு இருந்தேங்க.அவங்க தான் என்னை சென்னைக்கு இட்டு வந்து, சோறு போட்டு, இருக்க இடம் கொடுத்தாங்க.அவங்க பண்ண இந்த உதவியே ரா பூரா நான் நினைச்சுக் கிட்டு இருந்தேங்க.அதனால் ராத்திரி நான் சரியாவே தூங்கலேங்க.தவிர இப்பல்லாம் மாடிப்படி ஏறினாலே இப்படித் தான் எனக்கு மூச்சு வாங்குதுங்க” என்று சொல்லி விட்டு ராணீ குழந்தை ராஜ்ஜை கீழே விளையாட விட்டு விட்டு வேலைகளை செய்யத் தொடங்கினாள்.“இப்படி மூச்சு வாங்கக் கூடாது ராணீ.அம்மா சொன்ன மாதிரி நீ டாக்டரை ஏன் போய் பார்க்காம இருக்கே.உடனே பாத்து நல்ல மருந்தா வாங்கி சாப்பிடு ராணீ” என்று சொன்னான் நடராஜன்.ராணீ மொட்டையாக “சரிங்க” என்று சொன்னாள் ராணீ.

ராணீ தன் வேலைகளை நிதானமாக செய்துக் கொண்டு இருந்தாள்.இந்த மூச்சு வாங்குவது அவளுக்கு இன்னும் இருந்துக் கொண்டு தான் இருந்தது.ஒரு அரை மணி நேரம் ராணீ வேலை செய்த பிறகு தன் குழந்தை பார்க்க வருவது போல் வந்து அவன் பக்கத்தில் ஒரு பத்து நிமிஷம் பக்கம் உக்காந்து கொஞ்சம் மூச்சு வாங்கி விட்டு,பிறகு எழுந்து போய் மீதி வேலைகளை செய்து வந்தாள் அவள்.அவளால் முன்னே மாதிரி வேகமாக வேலைகள் எல்லாம் செய்ய முடியவில்லை.இதை கவனித்து வந்தாள் கமலா. ராணீ கிளம்பிப் போன பிறகு கமலா ”ஏங்க, ராணீ முன்னே போல் சேந்தாப் போல வேகமாக வேலை செய்யறதில்லீங்க.இதை நீங்க கவனிச்சீங்களா.அவளால் வேகமாக வேலை செய்ய முடியலேங்க.அவ உடம்பை டாக்டர் கிட்டே போய் காட்டிக்கன்னு சொன்னா,அவ போகாதிருக்கா. ஏன்னு எனக்குப் புரியலேங்க” என்று நடராஜனிடம் சொன்னாள்.“நான் கூட இதை கவனிச்சேன் கமலா.நாம் என்ன பண்ண முடியும்.அவ தானே டாக்டர் கிட்டே போய் அவ உடம்பைக் காட்டிக்கணும்.நாம சொல்லத் தான் சொல்ல முடியும்.பணம் கூட தர முடியும் கமலா.ஆனா அவ டாக்டர் கிட்டே போகலீன்னா நாம் என்ன பண்றது கமலா”என்று சொல்லி வருத்தப் பட்டான் நடராஜன்.“அடுத்த இரண்டு நாட்களுக்கு நடராஜன் ‘மார்னிங்க் டியூட்டிக்கு’ப் போய் இருந்தான். கமலா அந்த வார பத்திரிக்கை ஒன்றைப் சுவாரசியமாகப் படித்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு வாரம் போய் இருக்கும்.அன்று ராணீ வேலை செய்துக் கொண்டு இருக்கும் போது வேலைகு வந்து பத்து நிமிஷத்துக்கெல்லாம் திடீர்னு அவளுக்கு மூச்சு முட்டி,மூச்சு விட மிகவும் கஷ்டப்பட்டு அவள் தரையில் உட்கார்ந்து விட்டாள்.தரையில் உட்கார்ந்து கொண்டு இருந்தும் அவள் மூச்சு விட கஷ்டப்பட்டாள்.நல்ல வேலை நடராஜனுக்கு அன்னிக்கு ‘ஈவினிங்க டியூட்டி’.அதனால் அவன் வீட்டில் இருந்தான்.நடராஜன் உடனே “ராணீ என்ன ஆச்சு உனக்கு.இப்படி மூச்சு விடவே கஷ்டப் பட்டு வரே” என்று அவள் அருகில் வந்து கேட்டான்.ராணீ வெறுமனே கைகளால் சைகை செய்தாலே ஒழிய அவளால் பேச முடியலே.உடனே நடராஜன் “கமலா,நீ குழந்தையை பாத்துக்க. நான் ராணீயை டாக்டர் கிட்டே காட்டிட்டு வரேன்.அவ மூச்சு விடவே ரொம்ப கஷ்டப் படறா.அவளால் பேசவே முடியலே” என்று சொல்லி விட்டு,கமலா பதிலுக்கு கூட காத்து இராமல், கீழே போய் ஒரு ஆட்டோவை ஏற்பாடு பண்ணி வந்து ராணீயை மெதுவா கீழே அழைத்துப் போய் அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் ராணீயை அங்கு இருந்த டியூட்டி டாக்டா¢டம் காட்டினான்.அந்த டாக்டர் ராணியை பரிசோதித்துப் பார்த்தார்.உடனே அந்த டாக்டர் “இந்த அம்மா உடம்பு கொஞ்சம் மோசமா இருக்கு.நீங்க அவங்களை உடனே ‘அட்மிட் ‘பண்ணுங்க” என்று சொல்லி விட்டார்.

நடராஜனும் ராணீயை அழைத்து போய் உடனே ‘அட்மிட்’ பண்ணினான்.ராணீயை I.C.U.க்கு அழைத்துப் போய் அவளுக்கு ‘இஞ்செக்ஷன்’ கொடுத்து அவளை உடம்பு முழுவதும் பரிசோதனைப் பண்ணினார் டாக்டர். ‘எக்ஸ்ரே’ எடுத்துப் பார்த்தார்கள்.ஒரு பத்து நிமிஷம் கழித்து I.C.U.வில் இருந்து வெளியே வந்த டாக்டர் “சார் அந்த அம்மாவுக்கு உணவு குழாயிலும், மூச்சு குழாயிலும் புத்து நோய் ரொம்ப பரவி இருக்கு.அது இப்போ மிகவும் முத்திய நிலைலே இருக்குங்க. இவங்க இன்னும் ஹாஸ்பிடலில் ரெண்டு நாளாவது தங்க வேண்டும்.அப்போது தான் இவங்களை நாங்க குணப் படுத்த முயற்சி பண்ண முடியும்” என்று சொன்னார்.“சரி,சார் இவங்க இங்கே இருக்கட்டும் சார்.நீங்க இவங்களுக்கு உடனே வைத்தியம் பண்ண ஆரம்பிங்க” என்று சொன்னான் நடராஜன்.நடராஜன் கவலை யோடு வெளியில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் “நீங்க போய் அவங்களேப் பார்க்க போவலாம்” என்று சொன்னவுடன் நடராஜன் ஓடிப் போய் ராணியை போய் பார்த்தான்.ராணீ மிகவும் சோர்வாக இருந்தாள்.ராணீ முடியாமல் “எனக்கு பிரசவம் பாத்த டாக்டர் எனக்கு புத்து நோய் இருக்குதுன்னு சொல்லி பல மருந்துகளை எல்லாம் எழுதிக் குடுத்து என்னை சாப்பிட்டு வரச் சொன்னாங்க.கூடவே ‘இந்த மருந்துகளை எல்லாம் சரியாகச் சாப்பிட்டு வந்தாலே, நீ மூனு வருஷம் தான் உயிரோடு இருப்பே.நீ அப்படி சாப்பிடாம இருந்தா உன் உயிர் ஒரு வருஷம் கூட தங்காதுன்னு’ சொன்னாங்க.நான் யோசிச்சேங்க.மூனு வருஷம் கழிச்சு போற உயிர் ஒரு வருஷத்தி லேயே போவட்டு மேன்னு ஒரு மருந்தையும் நான் சாப்பிடலேங்க.நான் ஒரு பாவிங்க.மன்னிக்கக் கூடாத ஒரு பாவிங்க நான்.இந்த கடைசி நேரத்திலே ஒரு உண்மையை உங்க கிட்டே சொல்றேங்க. நீங்க பணம் கொடுத்தும்,பல தடவை சொல்லியும், நான் தாங்க அந்த பணத்திலே கருத் தடை மாத்திரை வாங்கி சாப்பிடலேங்க.உங்க ஆண் அழகை கண்டு நான் மயங்கி னேனுங்க.உங்க நல்ல மனசும் உங்க நல்ல எண்ணமும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சுங்க. உங்க கிட்டே இருந்து ஒரு குழந்தையே நான் பெத்துக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டேனுங்க.உங்களே ஏமாத்தி,இந்த மன்னிக்க முடியாத குத்தம் பண்ணி நான் இந்த குழந்தையே பெத்துக்கிட்டதுக்கு அந்தக் கடவுள் எனக்கு உடனே இந்த கூலியே குடுத்திட்டாருங்க.இந்த பொல்லாத வியாதியே எனக்குக் குடுத்துட்டாரு.என் அம்மாவும் செத்து ட்டாங்க.என் சித்தியும் கல்யாணம் கட்டிக் கிட்டு போன வாரம் தான் என்னை விட்டு விட்டு அவங்க புருஷன் வீட்டுக்குப் போனாங்க.நான் இப்போ ஒரு அனாதைங்க” என்று சொல்லி விக்கி விக்கி அழுதாள் ராணீ.பிறகு அவள் கண்ணை மூடிக் கொண்டு விட்டாள்.ராணீ சொன்னதைக் கேட்டு நடராஜன் திடுக்கிட்டான் நடராஜன்.ராணீ விக்கி விக்கி அழுது கொண்டு இருந்தாள்.அவள் அழுது அழுது அவள் தலையணை பூராவும் நனைந்து விட்டது. நடராஜன் கல்லாய் நின்றுக் கொண்டு இருந்தான்.அவன் மனம் குழம்பினான்.இந்த நிலையில் நாம் என்ன பண்ணப் போறோம் என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு ,ராணீயின் கட்டில் முன்னால் நின்றுக் கொண்டு அவள் உடம்பு சீக்கிரம் தேவலை ஆக வேண்டுமே என்று கடவுளை வேண்டி வந்தான் நடராஜன்.

அரை மணி நேரம் ஆனது. ராணீயை பரிசோதித்துக் கொண்டு இருந்த டாக்டர்கள் ‘ராணீநிலைமை மிகவும் மோசமாகி விட்டது’ என்று சொல்லி விட்டார்கள்.அவள் மூச்சு விடவே கஷ்டப் பட்டாள்.மெல்ல கண் விழித்த ராணீ “நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்து விடுவேங்க ன்னு எனக்குத் தோணுதுங்க.சாவறத்துக்கு முன்னாடி…என் குழந்தை…..யே……. நான் ….. பாக்க….. ணுங்க” என்று ராணீ திக்கி திக்கிப் பேசினாள்.அவளுக்கு மூச்சும் முட்டியது.பேச்சும் அடைத்தது. மறுபடியும் ராணீ தன் கண்களை மூடிக் கொண்டு விட்டாள்.நடராஜன் உடனே கமலாவுக்கு போன் பண்ணி,”கமலா,ராணீ உடம்பு ரொம்ப மோசமா இருக்கு. ராணீ அவ குழந்தையை உடனே பாக்க ரொம்ப ஆசைப் படறா.அதனால்லே நீ உடனே குழந்தையை எடுத்துக் கிட்டு ஆஸ்பத்திரிக்கு சீக்கிரமா வா” என்று ஆஸ்பத்திரி பேரை செல் போனில் சொன்னான்.உடனே கமலா ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து ‘ராணீ’ ன்ற பொண்ணு எந்த ரூமிலே இருக்கா ன்னு ‘ரிஸ்பஷனில்’ விசாரிச்சுக் கொண்டு வந்து நடராஜன் பக்கத்தில் வந்து நின்றாள்.உயிருக்குப் போராடி வரும் ராணீயைப் பார்த்தாள் கமலா. ராணீக்கு ஏன் இப்படி ஆகி விட்டது என்றே கமலாவுக்குப் புரியவில்லை.உடனே நடராஜன் “கமலா,ராணீக்கு புத்து நோய் வந்து இருக்கு.அந்த வியாதி இப்போ ரொம்ப முத்திப் போய் இருக்கு.இப்போ அவ பேசவே முடியாம ரொம்ப கஷ்டப் படறா கமலா” என்று சொன்னான் நடராஜன். மெல்ல குழந்தையை ராணீயின் பக்கத்தில் விட்டாள் கமலா. கமலா கையும்,குழந்தை கையும், ராணீ மேல் படவே ராணீ மெல்ல கண்களை விழித்துப் பார்த்தாள்.மெல்ல குழந்தையை வருடிய வண்ணம் ”என் செல்லமே.. என் கண்ணே..என் ராஜாவே…, நீ….. இன்னும்… கொஞ்ச நேரத்தில் ….அனாதையாகப் போறேடா….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் மூச்சு முட்டியது. அவளால் பேச முடிய வில்லை.அவள் அழுதுக் கொண்டே இருந்தாள்.இந்த காட்சியைப் பார்க்க முடியாமல் நடராஜன் கண்களிலும் நீர் துளித்தது.கமலா அதை கவனிப்பதற்கு முன்னால் அவன் தன் தலையைத் திருப்பிக் கொண்டான். ராணீ படும் வேதனை அவனால் தாங்க முடியவில்லை.என்ன தோன்றியதோ அவனுக்கு.சட்டென்று “ராணீ,நீ நிம்மதியா இரும்மா.உன் குழந்தையை நாங்க வளத்து,பொ¢யவனாக்கி,அவனை முன்னுக்கு கொண்டு வரோம்.என்ன கமலா,உனக்கு இதில் சம்மதம் தானே” என்று சொல்லி விட்டு கமலாவின் முகத்தைப் பார்த்தான் நடராஜன். கமலாவுக்கு ஒன்னும் புரியவில்லை.தன் கணவன் இப்படி திடீரென்று கேட்பார்ன்னு அவ எதிர் பார்க்கவே இல்லை. அவள் சற்று நேரம் யோசித்தாள். ‘இது வேலைக்காரியின் குழந்தையாச்சே,எப்படி இது நம்ம குழந்தைன்னு நினைச்சு நாம வளக்கறது.குழந்தையில் ஜாதி, மத, ஏழை,பணக்கார வித்தியாசம் நாம பார்ப்பது சரியில்லைன்னு அவளுக்குத் தோன்றினாலும்,இது ஒரு வேலைக்காரி குழந்தை,என்கிற நினைப்பு வந்ததும் அவள் மனம் இந்த குழந்தையை தன்னுடன் வளக்க இடம் கொடுக்க வில்லை..

‘சாகும் தருவாயில் இருக்கும் இந்த பொண்ணு எதிரே நாம் முடியாதுன்னு சொல்லி அவள் நிம்மதி இல்லாம சாக நாம காரணம் ஆக இருக்க வேணாம்.நடராஜன் வூட்டுக்கு வந்ததும் மெதுவா அவர் கிட்டே இது ‘ஒரு வேலைகாரி பெத்த குழந்தைங்க’ .நமக்கு இந்த குழந்தை வேணாம்ங்க’ ன்னு சொல்லி அவரை நாம் சமாளிச்சுக் கொள்ளலாம்’ என்று நினைத்து கமலா “சரிங்க அப்படியே செய்யலாம்” என்று சொல்லி விட்டாள்.நடராஜனுக்கு சொல்ல முடியாத சந்தோஷம்.ராணீக்கும் கமலா சொன்னதை கேட்டு சந்தோஷம்.“என்.. செல்லமே…இப்போ நீ.. அனாதை ..இல்லேடா….உனக்கு அப்பா இருக்காரு….. இப்போ….. அம்மாவும் கிடைச்சுட்டாங்க….. நீ சந்தோஷமா…. வாழ்ந்து…”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவள் பேச்சும், அவன் மூச்சும், நின்று விட்டு அவள் தலையும் சாய்ந்து விட்டது.‘இந்த சின்ன வயசிலே ராணீக்கு இந்த கொடிய வியாதி வந்து அவள் இப்படி சோகமாக செத்துப் போக நோ¢ட்டதே’ என்று எண்ணி கமலாவும் நடராஜனும் மிகவும் துக்கப் பட்டர்கள்.“ராணீ இறந்து விட்ட சேதியை அவ உறவுக்காரங்க யார் கிட்டேயும் சொல்லலாம்ன்னா அவ உறவுக் காரங்க யாரையுமே எனக்குத் தொ¢யாதே.நாம் என்ன பண்ணலாம் அவ சித்தி ஒருத்தி கல்யாணம் பண்ணிகிட்டு போன வாரம் தான் போயிட்டா ன்னு ராணீ சாகும் போது சொன்னாளே.நமக்கு அவ விலாசம் கூட தொ¢யாதே.இந்த மாதிரி ராணீக்கு அகால மரணம் ஆகும்ன்னு தொ¢ஞ்சு இருந்தா நாம் அவ விலாசத்தை கேட்டு வச்சு இருக்கலாமே” என்று எண்ணி வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னான் நடராஜன்.“ஏங்க ராணீக்கு வேறு உறவுக்காரங்க யாராச்சும் விலாசம் தொ¢ஞ்சா அவங்க கிட்டே நாம் சொல்லி அவ ‘கடைசி காரியங்களை’ச் செய்யச் சொல்லலாமேங்க” என்றாள் கமலா.“நீ சொல்றது சரி கமலா.நமக்கு அவங்க உறவுக் காரங்க யார்,அவங்க விலாசம் என்னன்னு,தொ¢யாதே கமலா.நாம் யார் கிட்டே போன் பண்ணி சொல்றது சொல்லு கமலா” என்றான் நடராஜன் வருத்தத்துடன்.ராணீ£யின் சிகிச்சைக்கு என்ன பணம் ஆச்சு என்று கேட்டு ஆஸ்பத்திரியில் கேட்டு பணத்தைக் கட்டி விட்டு ராணியின் ‘சடலத்தை’ப் பெற்றுக் கொண்டான் நடராஜன்.“கமலா நீ குழந்தையை எடுத்துக் கிட்டு வூட்டுக்குப் போ. நான் ராணீயின் ‘காரியம்’ எல்லாம் முடிச்சு விட்டு வூட்டுக்கு வறேன்” என்று சொல்லி விட்டு ஒரு காரை ஏற்பாடு பண்ணி ராணீயின் சடலத்தை எடுத்துக் கொண்டு அவள் ‘ஈமக் கடன்களை’ எல்லாம் முடிக்க மயானத்துக்குப் போனான் நடராஜன்.மயானத்தில் ராணீ ‘ஈமக் கடன்களை’ எல்லாம் முடித்தான் நடராஜன்.பிறகு தன் வீட்டுக்கு சோர்வாக வந்தான்.கமலா குழந்தையை எடுத்துக் கொண்டு விட்டுக்கு வந்து சேர்ந்தாள். குழந்தையை விளையாட விட்டு விட்டு அவள் ‘கட’’ கட’ வென்று சமையலை செய்து முடித்தாள். அவளுக்கு நடராஜன் ராணீ¢யின் ‘ஈமக் கடன்களை’ செய்யச் போனது துளிக் கூட பிடிக்கவில்லை.தன் துணிகளை எல்லாம் கழட்டிப் போட்டு விட்டு அவன் குளிக்கப் போனான். குளித்து விட்டு வந்த நடராஜனிடம் ”இந்த வேலை க்காரியின் குழந்தையை நாம வளக்க வேணாமுங்க.இந்த குழந்தையை நாம ஒரு அனாதை இல்லத்தில் சேத்து விடலா முங்க.நமக்கு இந்த குழந்தை வேணாங்க.என்ன சொல்றீங்க நீங்க” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள் கமலா. நடராஜன் ஆடிப் போய் விட்டான்.அவன் கமலா இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி விட்டு ”என்ன கமலா,ராணீ சாவும் போது நான் அவ கிட்டே ‘ராணீ நீ நிம்மதியா இரு.உன் குழந்தையை நாங்க வளத்து, பொ¢ய வனாக்கி,அவனை முன்னுக்கு கொண்டு வரோம்’ ன்னு நான் சொன்னப்போ நீ ‘சரிங்க அப்படியே செய்யல்லாம்’ன்னு சொன்னயே.இப்ப என்னடான்னா,நீ இந்த குழந்தை ‘ஒரு வேலைக்காரி குழந்தைங்க’ ன்னு சொல்றே.நாம அதை வளக்க வேணான்னு சொல்றே.குழந்தையை ஒரு அனாதை இல்லத்திலே சேத்திடலாம்ன்னு வேறே சொல்றே.எனக்கு நீ சொல்றது ஒன்னுமே புரியலே” என்று அதிர்ச்சியோடு கேட்டான் நடராஜன்.கமலா ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.

சற்று நேரத்திற்குப் பிறகு “ராணீக்கு சாவும் போது நாம வாக்கு குடுத்தாப்பல,நாமே இந்த குழந்தையை வளக்கலாம் கமலா.எனக்கு அது தான் சரின்னு படுது” என்றான் கனிவாக நடராஜன். கமலா மௌனமாக இருந்தாள். ¢றகு அவளே “நான் சொல்றேன்னு நீங்க தப்பாக மட்டும் எடுத்துக்காதீங்க.இந்த வேலைக்காரி குழந்தை நமக்கு வேணாமுங்க.இதை நாம வளப்பது சரி இல்லீங்க” என்று தான் சொன்னதையே சொல்லி வந்தாள்.பிறகு அவள் எழுந்துப் போய் சாப்பாடு தட்டை டேபிளில் போட்டு சாப்பாடு பறிமாறப் போனாள்.அவளுக்கு நடராஜன் சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை.‘என்ன சொன்னா இவள் குழந்தையே வளர்த்து வர சம்மதிப்பா’ என்று யோஜனைப் பண்ணினான்.அவனுக்கு ஒன்றும் தோணவும் இல்லை.புரியவும் இல்லை.நடராஜன் ஒன்னும் பேசாமல் எழுந்து “கமலா,நீ சொல்றதை கேட்டு எனக்கு மனசே சரி இல்லை.நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு தன் செருப்பைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினான் நடராஜன்“மத்தியானம் சாப்பிட்டதுங்க நீங்க.சாப்பிட்டு விட்டு அப்புறமா நீங்க போங்க” என்றாள் கமலா.“இல்லை கமலா நான் வெளியே போய் விட்டு வரேன்” என்று சொல்லி கிளம்ப தயாரானான் நடராஜன்.“சரிங்க சீக்கிரமா வந்து விடுங்க நீங்க வரும் போது குழந்தைக்கு நாலு டிரஸ், ஜட்டி, பனியன், ஒரு சாப்பாட்டு தட்டு, ஸ்பூன்கள்,குழந்தை பிஸ்கெட், பால் டப்பா, தலையனை, போர்வை, நாலு ‘டவலுங்க’ எல்லாம் மறக்காம வாங்கி வாங்க” என்று சொன்னாள் கமலா.“சரி கமலா நான் வாங்கிகிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு செருப்பை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிப் போனான் நடராஜன்.நடந்துக் கொண்டே நடராஜன் யோஜனைப் பண்ணி பக்கத்தில் இருந்த பார்க்கில் வந்து உட்கார்ந்து கொண்டான் நடராஜன். ’இது வேலைக்கார குழந்தை’ன்னு கமலா சொல்றாளே.இவ எப்படி இந்த குழந்தையை இந்த குடும்பத்தில் வளத்து வர சம்மதிப்பா ‘என்று புரியாமல் தவித்தான். ‘இது வேலைக்கார குழந்தை தான் நான் இல்லை என்று சொல்லலே.ஆனா இந்த குழந்தை எனக்கு பிறந்த குழந்தை ஆச்சே.இது என் ரத்தமாச்சே.இதை நான் எப்படி வேணாம்ன்னு சொல்லி கமலா சொன்னது போல ஒரு அனாதை இல்லத்தில் சேத்து விடறது.கடவுளே. இது என்ன சோதனை.இந்த சோதனைலே இருந்து எப்படி நான் வெளியே வறது” என்று நினைத்து மனம் குழம்பினான் நடராஜன்.

பார்க்கிலேயே உட்கார்ந்துக் கொண்டு யோசித்துக் கொண்டு இருந்தான் அவன்.பார்க்கில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் ஒருவர் ஒருவராக எழுந்துப் போய் பார்க்கே காலியாக விட்டது.அப்போது தான் மணியைப் பார்த்தான் நடராஜன்.அது ஒன்பது அரை மணி காட்டியது. இவ்வளவு காட்டியதுகாட்டியது.இவ்வளவு நேரமாயிடுச்சே.கடைங்க மூடி விடப் போறாங்களே,கமலா குழந்தைக்குக் கேட்ட சாமான்கள் நாம வாங்கக் கிட்டுப் போணுமே’ என்று எண்ணி தன் யோஜனையில் இருந்து விடுபட்டு கடையை நோக்கி வேகமாக நடந்தான் நடராஜன்.

கமலா சொன்ன சாமான்களை எல்லாம் கடையில் வாங்கிக் கொண்டான் நடராஜன்.மனதில் மட்டும் ‘இந்த குழந்தையை நாம் இழந்து விடக் கூடாது.இது என் குழந்தை.எப்பாடு பட்டாலும் நான் இந்த குழந்தையை என்னிடமே வச்சுக்கிட்டு முன்னுக்கு கொண்டு வருவேன்.நான் இந்தக் குழந்தையை வளத்து வருவேன் என்கிற நம்பிக்கையிலே தானே ராணீ நிம்மதியா தன் கண்ணை மூடினா.அப்படி நான் இந்தக் குழந்தையை வளத்து முன்னுக்கு கொண்டு வராம,கமலா சொல்லுவது போல எங்காவது ஒரு அனாதை இல்லத்திலெ அவனைக் கொண்டு போய் விட்டு விட்டா ராணீ ஆத்மா சாந்தியே அடையாது’ என்பதில் ரொம்ப தீர்மானமாக இருந்தான் நடராஜன்.

நீ சொன்ன சாமான்ங்க எல்லாம் நான் வாங்கிட்டேன்.இன்னும் பத்து நிமிஷத்திலே நான் வூட்டுக்கு வந்து விடுவேன்”என்று சாதாரணமாக சொல்வது போல் சொன்னான் நடராஜன். “சரிங்க,நீங்க சீக்கிரமா வாங்க” என்று சொல்லி விட்டு போனை ‘கட்’ பண்ணினாள் கமலா.நடராஜன் வீட்டுக்கு வந்ததும் அவன் வாங்கி வந்த சாமான்களை எல்லாம் அவன் கையில் இருந்து வாங்கி வைத்தாள் கமலா. நடராஜன் வாங்கி வந்த ஒரு நல்ல ‘டிரஸ்ஸை’க் குழந்தைக்குப் போட்டாள் கமலா.சிறிது நேரம் கழித்து கமலா குழந்தையை தூங்கப் பண்ணினாள்.குழந்தை தூங்கினதும் அவனை ஒரு ‘பெட் ஷீட்டை’ப் போட்டு அவனை கீழே விட்டாள்.குழந்தை மேலே ஒரு போர்வையைப் போத்தினாள்.”பகல் பூராவும் உங்களுக்கு ஒரே அலைச்சல்.இப்போ நிதானமா சாப்படுங்க” என்று சொல்லி தட்டைப் போட்டு சாப்படை பறிமாறினாள் கமலா.

கொஞ்ச நேரம் கழித்து “அந்த பொண்ணு ராணீ வாழ்க்கை முடிஞ்சி போச்ச்சுங்க.பாவம் இந்த சின்ன வயசிலே அவ இந்த தீராத நோய் வந்து இறந்திட்டா”என்று பேச்சை ஆரம்பித்தாள் கமலா.“ஆமாம் கமலா,யார் யாருக்கு கடவுள் என்ன வியாதி போட்டு இருக்கிறாரோ அதை அவங்க அனுபவிச்சுத் தான் தீரணும் கமலா.என்ன ஆயுசு போட்டு இருக்காறோ அதன் படி இந்த உலகத்தை விட்டு எல்லோரும் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு போய்த் தான் தீரணும்.இதை மாத்த யாராலும் முடியாது” என்று விரக்தி யுடன் சொன்னான் நடராஜன்.ராணீ இறந்து போன துக்கம் அவன் மனதில் கொடுத்த வாட்டத்தைக் கமலா கமலா கவனிக்கத் தவறவில்லை.இப்போ நாம் இருவரும் சாப்பிட்டு ஆச்சு,குழந்தையும் தூங்குது. நாம் கமலா கிட்டே மெல்ல பேசிப் பாக்கலாமே’ என்று தோன்றியது நடராஜனுக்கு. “கமலா உனக்கு இனிமே குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லேன்னு டாக்டர் சொல்லிட்டார். உனக்கோ குழந்தைன்னா ரொம்ப ஆசை.இந்த ராஜ்ஜுடன் நீ ஆசையா நிறைய விளையாடி வந்து இருக்கிறதே நம்ம குழந்தை தவறிப் போன போது நீ மனசு எவ்வளவு கஷடப் பட்டு,மன வியாதி வந்து அவஸ்தை பட்டே.உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.இப்போ இந்த குழந்தை நாம வளர்த்து வந்தா,உனக்கு மறுபடியும் அந்த மன வியாதி வராம இருக்கும் இல்லீயா.நாம் இந்த குழந்தையை வளத்து வரலாம் கமலா” என்று சொல்லி அவள் பதிலுக்காக காத்து இருந்தான்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *