கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 8,290 
 

சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன?

மீனுவுக்கு முகத்தில் பயம் ஒட்டிக் கொண்டது.

காரணம், மாமியாருக்கு… மாமியார் வருவதாய் தகவல்

மாமியாரே குடைச்சல்., இதில் மாமியாருக்கு மாமியாரா, ஐயோ வேண்டவே வேண்டாம் ”என்ன பாடுபட போகிறோனோ, என் தலை உருளுவது சர்வநிச்சயம்” தானாகவே பேசிக் கொண்டாள்..

என்ன மீனு, தனியே பேசிக்கிற? சங்கர் கேட்க

உறிம்…எனக்கு கிறுக்கு பிடிச்சுக்கிச்சு” முகத்தை திருப்பிக் கொண்டு பதிலடி கொடுத்தாள்.

அதைக் காதில் வாங்காமல், மாமியாருக்கு மாமியாரை அதாவது கொள்ளுப் பாட்டியைக் கூட்டி வரப்போனான்.

மாமியாருக்கு மாமியாரான கொள்ளுப் பாட்டி வந்தாள்.

ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன் நேராக, படுக்கையறைக்கு போய் உடமைகளை வைத்து விட்டு, சமையலறையை நோரட்டம் விட்டார் கொள்ளுப்பாட்டி வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவேயில்லை. எல்லாமே ”உறிம்..உறிம்” முடித்துக் கொண்டு மீண்டும் படுக்கையறை போனவர்… ”மீனு, ஒன் பொண்ணு சர்மிளா எப்ப வரும்? கேள்வியைக் கேட்டார்.

நாலு மணிக்கு வரும் அத்தே, ”அத்தைக்கு..அத்தையை” எப்படி கூப்பிடுவது என குழம்பி ”அத்தை” என்றே கூப்பிட்டாள்.

நாலு மணிக்கு குட்டிப்பொண்ணு சர்மிளா வந்து ஓடிப்போய் கொள்ளுப்பாட்டியிடம் ஒட்டிக் கொண்டாள்.

சமையலறையில் இருந்து ”சர்மிளா குட்டி, பிராகிர“ஸ் ரிப்போர்ட் குடுத்தாங்களா, என்ன ரேங்க, மீனுவின் கேள்வி படுக்கையறை வரை கேட்டது.

இரும்மா, பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன் தொந்தரவு பண்ணாதேம்மா” குரல் கொடுத்தாள் சர்மிளா

சின்ன பொண்ணு, பாட்டி இருக்கிற தைரியத்துல மதிக்க மாட்டேங்குது புலம்பி கொண்டாள்.

புலம்பலுக்கு பின், சர்மிளா குட்டி, பாட்டிக்கு ”ஐானி, ஐானி” ரைம்ஸ் சொல்லி காட்டு” என மீனு சொல்ல

அதெல்லாம் ஸ்கூல்ல மட்டும் வெச்சுக்கோ, நான் ஒனக்கு ஒரு கதை சொல்றேன் கேட்டுக்கோ” கொள்ளுப்பாட்டி சர்மிளாவிடம் சொன்னாள்..

”அம்மாவும், அப்பாவும், எப்ப பார் வீட்டுப்பாடம் படி, பிராகரஸ் ரிப்போர்ட், ரேங்க கார்ட் ” இதான் கேட்கிறாங்க. நீங்கதான கதை சொல்ல வந்திருக்கீங்க. அதனால நீங்க இங்கேயே இருந்திடுங்கோ பாட்டி” என்றாள் சர்மிளா.

சர்மிளா முகம் பிரகாசமாய் மாறியதற்கான நியாயத்தை மீனு உணர்ந்தாள்..

Print Friendly, PDF & Email

2 thoughts on “கதை

  1. இத்தளத்தில் கதையை பதிவிட்டமைக்கு நன்றி. மேலும் கருத்தினை வழங்கிய மண்டகொளத்தூர் சுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி

  2. சர்மிளா மனது வெளிப்பட்டுவிட்டது. அவள் குழந்தை தானே.
    பெற்றொர்கள் குழந்தைகள் மனதையும் புரிந்து அதன் படி நடக்க பழகிக்கொள்ளவேண்டும் என்பது இங்கு நாம் காணும் அறிவுரையாகும்.

    “மண்டகொளத்தூர் சுப்ரமணியன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *