ஒரு கல்லில் ரெண்டு மாங்கா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 5,588 
 
 

அன்று ஞாயிற்றுக்கிழமை.

சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு அன்றைய வாரப் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டு இருந்தார் கந்தசாமிப் பிள்ளை. எதிரே அவன் மனைவயும், மகள் கவிதாவும் நின்றுக் கொண்டு இருந்தார்கள்

மனைவி மறுபடியும் “அந்த விஷயத்தை” சொன்னதும் “இன்னொரு தடவை அந்த சரவணன் பேச்சை நீ எடுத்தா,நான் கொலைகாரனா மாறிடுவேன் கமலா. உன் பேச்சை இத்தோடு நிறுத்திக்க” என்று உறுமினார் கந்தசாமிப் பிள்ளை.

‘இந்த பிடிவாதம் பிடிச்ச முரட்டு புருஷன் கிட்டே இனி பேசிப் பிரயோஜனம் இல்லே’ என்று எண்ணி உள்ளே போய் விட்டாள் அவர் மனைவி.

பெண் கவிதாவும் மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டே தன் வேலையைக் கவனிக்கப் போய் விட்டாள்.

‘தன் ஆபீஸில் புதியதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் மானேஜர் சேசகருக்கு தன் பெண் கவிதாவை எப்படியாவது கல்யாணம் பண்ணி முடிச்சா,தன் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையும் அமையும்,தனக்கும் ஆபீசில் பல சலுகைகளும் கிடைக்கும்.அந்த ஆட்டோ டிரைவரை கல்யாணம் கட்டி கிட்டா தன் பொண்ணுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்.கொஞ்ச சமபளத்லே.அவ கஷ்டப் பட்டு தானே வாழ்ந்து கிட்டு வரணும்’என்று நினைத்து ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்’ அடிக்க திட்டம் போட்டார் பிள்ளை.

இந்த யோஜனையில் இருந்த பிள்ளைக்கு அவர் மனைவி கவிதாவின் காதலை பத்தி சொன் னது அவருக்கு காதிலே நாராசமாய் விழவே அவர் உறுமினார்.

சற்று நேரம் கழித்து “அம்மா நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்”என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பிப் போனாள் கவிதா.

பார்க்கில் தனக்காக காத்துக்கொண்டிருக்கும் சரவணனிடம் போய், அவன் கையை பிடித்துக் கொண்டு “சரண்,நம் கலயாணத்தை என் அப்பா நடக்க விட மாட்டாரு போல இருக்குது. எங்க அம்மா எவ்வளவு சொல்லியும் என் அப்பா பிடிவாதமா நம் காதலை மறுத்துட்டாரு. தயவு செஞ்சு என்னை நீங்க ……..”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் இருவர் கைகள் மீதும் கவிதாவின் கண்ணீ£ர் துளிகள் விழ அரம்பித்தது.

கவிதா விக்கி விக்கி அழுவதை பார்த்த சரவணன் “கவலைப் படாதே கவிதா.நம்ம கல்யாணம் நிச்சியமா நடக்கும்.நீ நிம்மதியா வூட்டுக்கு இப்போ போ” என்று சொல்லி அவளுக்கு சமாதானம் பண்ணி அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

ஆபீஸ் மானேஜரிடம் நிறைய பேசி,மெல்ல அவரை சமமதிக்க வச்சு,தன் பெண் கவிதாவை ‘பெண் பார்கக’ வச்சு,கல்யாணத்திகு மானேஜரின் சம்மதமும் வாங்கி விட்டார் கந்தசமிப் பிள்ளை.

கந்தசாமி பிள்ளைக்கு சந்தோஷம் தாங்கவில்லை.தன் பெண் கவிதா கல்யாண நாளையும் குறித்து விட்டார் கந்தசாமிப் பிள்ளை.

அன்று ஆபீஸில் ஆண்டு விழா.

‘ட்ரிங்க்ஸ்’,‘டின்னர்’,‘லைட் முயூசிக்’, என்று அமர்க்களப் பட்டுக் கொண்டு ஆபீஸ் ஹால். நேரம் போவதே தெரியவில்லை.எல்லோரும் படு குஷியாக நேரத்தை கழித்துக் கொண்டிருந்தார்கள்.

மானேஜர் சேகர் ஓவராக குடித்து விட்டு,மிகவும் குறைவான உடை அணிந்து இருந்த ஆபீஸ் ‘செகரட்டரி’ நளினியுடன் நெருக்கமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘டான்ஸ்’ஆடிக்கொண்டு இருந்தார். கந்தசமி பிள்ளைக்கு இதை பார்ததவுடன் தூக்கி வாரிப்போட்டது. ‘மானேஜர் சேகர் நல்ல பையன்ன்னு தானே நாம் இதுவரை நம்பிக் கிட்டு இருந்தோமே.நம்ப மானேஜர் இவ்வளவு தரம் கெட்டவரா.இந்த குடிகார பையனுக்கா நம்ப ஒரே பொண்ணை கல்யாணம் கட்டி குடுக்க முடிவு பண்ணி விட்டோமே.நாம ஏமாந்து போயிட்டோமே.மோசம் போயிட்டோமே ‘ என்று நினைத்து மிகவும் கவலை பட்டார் பிள்ளை.

கவலைப்பட்டுக் கொண்டே மறுபபடியும் நிமிர்ந்து பார்க்கும் போது மானேஜர் இன்னும் கேவலமாக உடலை நளினி மேலே உரசிக்கொண்டும்,அவளைக் கட்டிக் கொண்டும்,நடனம் ஆடிக் கொண்டு இருந்தார்.அவருக்கு கோபம் கோபமாய் வந்தது.தன் கோபத்தை மெல்ல அடக்கிகொண்டு ஆபீஸ் ‘பார்ட்டி’ முடிந்ததும் வீ£டு வந்து சேர்ந்தார் கந்தசாமிப் பிள்ளை வீட்டுக்கு வந்ததும் இரவு பூராவும் தூக்கம் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு,தான் செய்த தவறான முடிவை எண்ணி எண்ணி வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தார் பிள்ளை.

யோஜனை பண்ணி ஒரு முடிவுக்கு வந்தவராய் காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு வெளியே கிளம்பினார்.இவ்வளவு காலையில் வெளியே கிளம்பின புருஷனைப் பார்த்து “எங்கேங்க, இவ்வளவு காலையிலே கிளபிப் போறீங்க”என்று கவலையுடன் கேட்டள் கமலா. “எல்லாம் அப்புறமா வந்து சொல்றேன்,வழியே விடு” என்று சொல்லி விட்டு வேகமாக கிளம்பிப் போனார் பிள்ளை.

நேரே சரவணன் வீட்டுக்கு போய் அவனை வெளியே வரச் சொல்லி “தம்பி,நான் மோசம் போய் இருப்பேம்ப்பா.உன் காதல் ரொம்ப பா¢சுத்தமானதுப்பா.அதனால் தான் கடவுள் உங்க ரெண்டு பேரை யும் ஒன்னு சேகக முடிவு செஞ்சுட்டாரு¡ரு போல இருக்குது. தம்பி,தயவு செஞ்சி என் பொண்ணு கவிதாவை நீ கல்யாணம் செஞ்சுக்காப்பா” என்று கெஞ்சும் போது பிள்ளை கண்களில் கண்ணீர் தளும்பியது.

சரவணன் ஆச்சரியத்துடன் கந்தசாமிப் பிள்ளையைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“கவலைப்படாதீங்க மாமா.நான் கவிதாவை நிச்சியமா கல்யாணம் பண்ணி கிட்டு, அவளை என் வாழ் நாள் பூராவும் சந்தோஷமா வச்சி வாரேன்”என்று சொல்லி கந்தசாமிப் பிள்ளையை சமாதானம் பண்ணி அவரை வீட்டுக்கு அனுப்பினான் சரவணன்.“ரொம்ப நன்றிப்பா உனக்கு” என்று சொல்லி சரவணன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.

வீட்டுக்கு வந்த பிள்ளை ஒன்றும் பேசாமல் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.அவருக்கு மறுபடியும் ஆபீஸ்க்கு போய் அந்த மானேஜர் முகத்தில் முழிக்கவே பிடிக்கவில்லை.அவர் ஒரு வாரமாக ஆபீஸ் போகவில்லை.

மெல்ல தன் மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்த வாரம் ஆபீஸ் போனார் பிள்ளை.

“சார்,உங்களே மானேஜர் அவர் ரூமுக்கு வரச் சொல்றாரு”என்று பியூன சொல்லவே வேண்டா வெறுப்பா மானேஜர் ரூமிற்கு போனார் கந்தசாமிப் பிள்ளை.

“வாங்க மிஸ்டர் பிள்ளை.உக்காருங்க.என்ன உங்க பொண்ணை அவள் காதலன் சரவணனுக்கே கல்யாணம் முடிக்க எற்பாடு பண்ணி விட்டீங்க போல் இருக்குதே.என் மூஞ்சிலே எப்படி முழிக் கிறதுன்னு பயந்து தானே ஒரு வாரமா நீங்க ஆபீஸ் வராம இருக்கீங்க.கவலை படாதீங்க.எனக்கு உங்க மேலே எந்த கோவமும் இல்லை.மாறா நான் ரொம்ப சந்தோஷப்படறேன் மிஸ்டர் பிள்ளை” என்று சொல்லி நிறுத்தினார் மேனேஜர்.

பிள்ளைக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.

‘எப்படி இந்த மானேஜருக்கு நாம் நம் பெண்ணை சரவணனுக்கு கல்யாணம் கட்ட முடிவு பண்ணி இருக்கோம்’ன்னு தெரிஞ்சிச்சு’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்.தன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு இருந்த கந்தசாமி பிள்ளை ஆச்சரியத்தில் மானேஜரை நிமிர்ந்து பார்த்தார்.

“உண்மை தான் பிள்ளை நான் சொல்றது.உங்க பொண்ணு கவிதாவும், அந்த பையன் சரவணனும் ஒருவரை ஒருவர் உயிராக காதலிக்கிறாங்க என்கிற உண்மை எனக்கு உங்க பெண்ணை ‘பொண்ணு பார்த்த’ பிறகு தான் தெரிய வந்திச்சு.இவங்க காதல்லே நான் குறுக்கே இருகக வேணாம் ன்னு எண்ணித் தான் நான அன்னைக்கு ‘பார்ட்டியிலே ‘ஒரு மோசமானவன்’ போல் நடிச்சேன். ’செகரட்டிரி’ நளினி தான் எனக்கு எந்த உண்மையை சொல்லி இந்த நாடகமும் போட ஐடியா குடுத் தாங்க” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே நளினி ‘ரூம்’ உள்ளே நுழைந்தாள்.

“என் பொண்ணுக்கு நான் செய்ய தவறிய இந்த நல்ல காரியத்தே நீங்க ரெண்டு பேரும் செஞ்சு விட்டீங்க.உங்க ரெண்டு பேருக்கும் நான் எப்படி என் நன்றியை சொல்லப் போறேன்னு எனக்குத் தெரியலே” என்று சொல்லி,கண்ணீர் மல்க இருவர் காலிலும் விழப் போன பிள்ளையை தூக்கிப் பிடித்து “எழுந்திரிங்க பிள்ளை. நீங்க வயசிலே பெரியவங்க.நாங்க சின்னவங்க.எங்க கால்லே நீங்க விழக் கூடாதுங்க”என்று சொல்லி கந்தசாமிப் பிள்ளையைப் பார்த்து சொன்னார்கள்.

இருவருக்கும் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்து தன் பெண் கவிதாவை சரவணணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணீனார் கந்தசாமிப் பிள்ளை.

கமலாவுக்கும்,கவிதாவுக்கும் கந்தசமிப் பிள்ளையின் இந்த திடீரென்று ஏற்பட்ட மன மாற்றத் திற்கு காரணம் புரியாமல் திகைத்து நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

இருவருக்கும் ‘இதைப் பற்றி’ கேட்க பயமாய் இருந்ததால், அவர்கள் பிள்ளையை கேட்கவே இல்லை.

‘தன் பொண்ணு மனாசர காதலிச்ச பையனோடு அவளுக்கு கல்யாணம் நடக்கப் போவதை’ நினைச்சு சந்தோஷப் பட்டாள் கமலா.

‘நாம காதலிச்ச சரவணனுடன் நமக்கு கல்யாணம் நடக்க போவதை’ நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தாள் கவிதா.

ஒரு நல்ல முகூர்த்த்தில் கவிதா சரவணன் கல்யாணத்தை நடத்தி முடிச்சார்கள் கந்தசாமி பிள்ளையும் அவர் மனைவியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *