கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 11,221 
 
 

பெரியசாமி எப்போ வந்து கடைய தொறப்பான்னு நாலஞ்சி சம்சாரிக விடிய காத்தாலயே காத்து கெடந்தாக. .அதுலயும் அந்தூரு முக்கியஸ்தரு ராமு தேவருதான் சீக்கிரமா மொகத்த வழிச்சிட்டு வேம்பாத்து பக்கத்துல உள்ள தன்னோட சினேகிதன் வீட்டு கல்யானத்துக்கு போகனும்னு காலுல சுடுதன்னிய ஊத்துன மாதிரி நின்னாரு .

வழக்கம் போல ஏழு மணிக்கு சூரங்குடியில இருந்து அருப்புக்கோட்டை போற ஜெயவிலாச எதிர் பார்த்துகிட்டு தலை முடிய வெட்டுரதுக்கும் தாடிய வழிக்கிறதுக்கும் பெரியசாமியோட வாடிக்கைகாரங்க காத்துகிட்டுருந்தாக

பெரியசாமி என்ன இந்த ஊரு காரனாப்பா வெரசா வந்து கடைய தொறக்க, அசலூருக்காரன்தானப்பா ,தூங்கி எந்திருச்சி மொத வண்டிய புடிச்சி வர வேனாமாப்பான்னு, மீசக்கார பெருசு ஒன்னு கன்னாடி கிலாசுல இருந்த டீய உரிஞ்சி கிட்டே வாயில வெங்காய போண்டாவ வச்சி மென்னு கிட்டு சத்தம் கொடுத்துச்சி.

அடுத்த கடையில டீ ஆத்திகிட்டுருந்த முருகன பாத்து எப்பா முருகா கொஞ்சம் மனி என்னாச்சின்னு பாத்து சொல்லப்பான்னு ராமு தேவரு குரல் கொடுக்க ,

அய்யா மனி ஏழாக போதுன்னான் முருகன்

கல்லும் மன்னும் பேந்து கெடுக்குர ரோட்டுலயும் மேல் மாந்த பெத்தனாச்சியம்மன் கோவில் திருவிழாவுல கால கெளப்பி ஓடி வரும் ரேசு மாடு மாதிரி புயல் வேகத்துல புழுதிய கெளப்பிகிட்டும், பெப ..பெப ..ன்னு தினுசா சத்தம் கொடுத்துகிட்டும் சரியான நேரத்துல வந்து நின்னது ஜெயவிலாசு.

வரதராசா தேட்டரு ஸ்டாப்பு எல்லாம் எறங்குங்கன்னு கண்டக்டரு சத்தம் கொடுக்க ,மத்தியானத்துக்கு வீட்ல பொண்டாட்டிகாரி கட்டிகொடுத்த சாப்பாட்டு கூடைய கையில புடிச்சிகிட்டு கட்டிருந்த சாரத்த இடுப்பு மேல தூக்கி நல்லா வரிஞ்சி கட்டிகிட்டு வேகமா பல்ல இலிச்சிகிட்டெ வந்து தன்னொட சலூன் கடைய தொரந்தான் பெரியசாமி.

பாக்க நல்லா செவப்பா கொஞ்சம் ஓட்டுன கன்னத்தோட எப்போதும் கொஞ்சோண்டு தடியோடயும் எப்போதும் லுங்கி கட்டுனாப்புல அப்புராணி சிரிப்ப சிரிச்ச கிட்டே இருப்பான்

என்னங்க இன்னைக்கு கணிக்கூர் காளியம்மன் கோவிலில் பவுர்ணமி க்கு குறி பாப்பாங்கலாம் அங்க போயி வந்தவுக நிறைய பேருக்கு வேண்டிகிட்டது அப்படியே நடந்துருக்காமங்க இன்னைக்கு அங்க ஒரு எட்டு போயிட்டு வந்துருலாம்ங்க நீங்க கொஞசம் சீக்கிரமா வேலய முடிச்சிட்டு வந்துருங்கன்னு காலைலயே ஞாபக படுத்தியிருந்தால் பெரியசாமியொட பொஞ்சாதி பேச்சியம்மாள் .

போகவேனாம்னு சொன்னா எங்க கேக்கவா போரவ ,அதுக்கு ஒரு ஒப்பாரி வைப்பாலேன்னு ,சரி நான் சாயந்தரம் அஞ்சி மணிக்கு சாயல்குடி பஸ்டாண்டுக்கு வந்துடுறேன் நீ நேர அங்க வந்துரு அப்பறம் ஒண்ணா சேர்ந்து போகலாம்னு பேச்சிகிட்ட சொல்லியிருந்தான் பெரியசாமி

கல்யணம் ஆகி அஞ்சி வருசம் முடியபோது , குழந்தையில்லத ஒரு குறைதான் அவனுக்கும் அவன் பொஞ்சாதி பேச்சியம்மாளுக்கும் , ,ரெண்டு பேருக்குமே உடம்புல ஒரு குறையும் இல்லையாம் ,இருந்தாலும் ,குழந்தை பாக்கியம் இல்லாம தவிச்சிகிட்டு இருக்காங்க

வினாயகனெ வினை தீர்ப்பவனே யானை முகத்தோனேன்னு …….தேட்டர்ல மேட்னி சோவுக்கு ரெக்காடு போட்டதும்தான் அவனுக்கு மணி ரெண்டு ஆச்சின்னு நினைவுக்கு வந்தது

.காத்திருந்த பெரியவருக்கு வெரசா மொகத்த வழிச்சிட்டு அடுத்த கடை முருகன் டீ கடையில் குடிப்பதற்கு டம்ளரில் தண்ணியும் ரெண்டு பருப்பு வடையும் வாங்கி வந்து வீட்டுல இருந்து கட்டி கொண்டுவந்த சாப்பாட்டு தூக்குவாளிய தொறந்து வச்சி தேட்டர்ல போடுற மேட்டணி சினிமா பாட்ட கேட்டுகிட்டே வயிறார சாப்பிட்டு முடிச்சான்.

.கடைக்கு முன்ன இருந்த வேப்ப மரத்து காத்து சிலு சிலுன்னு ஆழ கெரங்கடிக்க கடையிலவுள்ள நீட்டு பெஞ்ச மேல கால நீட்டி படுத்து கண்ண மூடுனவந்தான் சாயங்காலம் 4 மணி வாக்குலதான் கண்ணு முழிச்சான் பெரியசாமி .

எப்பா பெரியசாமி சாப்புட்டு படுத்த ஒரு மணி நேரத்துலையே அப்படி ஒரு தூக்கம் தூங்குறியே ராவெல்லாம் தூங்குனியா இல்லையா ன்னு வேப்பமரத்தடியில முகத்த கழுவிக்கிட்டுருந்த பெரியசாமியபாத்து கேட்டாரு டீ கடை முருகன் .

நேத்திக்கு தூத்துக்குடி பெரியாஸ்பத்திரிக்கு புருசனும் பொண்டாட்டியுமா போயிட்டு நடு ராத்திரியில தான் வீடு வந்து சேர்ந்த்திருந்தாங்கன்னு பெரியசாமிக்கு தான் தெரியும்

கண்ணாடி முன்ன வந்து நின்னு சீப்பெடுத்து தலைமுடிய சீவி முடிச்சி கொஞ்சோண்டு பாண்ட்ஸ் பவுடர எடுத்து மொகத்துல அப்பிகிட்டும் .கல்லாவுல அன்னைக்கு இருந்த வருமானத்த எடுத்து ஒருமுறைக்கு மூணு முறை எண்ணி பாத்து மேல் சட்டையின் உள்புற பக்கெட்டுல பணத்த வச்சிகிட்டு கடை வாசலை மூடினான்

சீக்கிரமே உங்களுக்கு இதுநா வரைக்கும் கைகூடாத ஒரு காரியம் கைகூட போதுன்னு அந்த காளி கோவில் பூசாரியும் குறி சொன்னதுனால ரொம்ப சந்தோசமா இருந்தா பேச்சி

,இதுபோலவேதான் இதுவரைக்கும் இங்க அக்கம் பக்கத்துல உள்ள உள்ள எல்லா கோவிலுக்கும் மட்டும் இல்லாம நுறு கிலோமீட்டர் தொலவுல வுள்ள நாலஞ்சி கோயிலுக்கும் கூட போயிட்டு வந்தும் சீக்கிரமே நல்லது நடக்குமுன்னு சொன்ன எதுவுமே இதுநாள் வரை நடந்த

பாடில்லையேன்னு மனசுல நெனச்சிகிட்டு பொண்டாடி கூட ஒப்புக்கு சிரிச்சி பேசிகிட்டுவந்தான் பெரியசாமி .

,புருசனும் பொன்ட்டாடியுமா ,விளாத்திகுளம் போற பஸ்சுல ஊருக்கு திரும்பிகிட்டு இருந்தாங்க

ஊரு வந்து சேர நல்லா இருட்டி போயிருந்தது , ஏண்டி பேச்சி புருசனும் பொண்டாட்டியும் ஜோடி யா வாரிகளே எங்க சினிமாவுக்கு போயிட்டு வாரிகலாக்கும் ன்னு பள்ளிவாசல் தெருவுல வுள்ள வீட்டு திண்ணையில உக்கார்ந்து கிட்டு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டுகிட்டே பேச்சி குடுத்த பேச்சியோட சிநேகிதி பர்வீன் நக்கலா கேட்டா

,இல்ல பர்வீனு சினிமா ஒன்னு தான் கொறச்சலாக்கும் அவங்க சொந்த காரங்க வீட்டு விசேசத்துக்கு போயிட்டு வரேன்னு மலுப்புனா ,நான் முன்ன போறேன் நீ இருந்து பேச்சி கொடுத்துட்டு வா ன்னு சொல்லிட்டு வீடு வந்து சேர்ந்தான் பெரியசாமி

பர்வீனோட ரெண்டு வயசு குழந்தைய ஆசையோட தூக்கி வச்சி ,கிட்டு அத்தைய பாரு அத்தைய பாருடா ,சிரிப்பானிய பாரு கிச்சி கிச்சு கிச்ச்சுன்னு அக்கத்துல கிச்சம் காட்டிகிட்டு இருந்தா பேச்சி .

,என்னத்தா பேச்சி எப்பத்தான் ஒன்னோட பிள்ளைய பெத்து கொஞ்ச போரவ ன்னு பர்வீனு அம்மாக்காரி கேட்டதுதான் தாமதம் பிள்ளைய வெடுக்குன்னு கொடுத்துட்டு கண்ணுல வந்தகண்ணீர தொடச்சிகிட்டு அவருக்கு சாப்பாட்டுக்கு வெஞ்சனம் வைக்கனும் நான் வர்றேன் பர்வீனுன்னு சொல்லி வெரசா கெளம்பி போனா .

ஏமா உனக்கு அறிவு இல்லையாமா அவளுக்கு தான் கல்யாணம் ஆகி அஞ்சி வருசமா குழந்த தங்காமயே போயிட்டு இருக்குல்ல நீ அது தெரிஞ்சும் ஏன் இப்படி கேட்டு அவள சங்கட படுத்துரன்னு கோவமா பேசிட்டு இருந்தா பர்வீனு

ஏண்டி இப்போ எதுக்கு சாப்படாம கண்ண கசக்கிகிட்டு உட்காந்து இருக்குரவ ,நல்லத்தான பேசிட்டு இருந்தவ யாராச்சும் குழந்தைய பத்தி கேட்டுடாகளாக்கும் , மொதல்ல அழுகாம வந்து சாப்புடுன்னு சொல்றேன்ல ஏய் லூசு வா ,நீ வரலன்னா எனக்கும் சாப்பாடு வேண்டாம் ன்னு பெரியசாமி சொல்லவும் கண்ண தொடச்சி கிட்டு சாப்பாட்ட பெனஞ்சி வயில வச்சிகிட்டா ,

மறுநாள் காலைலஇருந்து சாயங்காலம் வரைக்கும் ஒரு பய கூட கடைக்கு வரதாதுனால சும்மாவே குத்த வச்சி வுக்கந்து கிட்டு செய்தி பேப்பர பெரட்டி பெறட்டி பாத்துகிட்டும் பக்கத்து டீ கடைல இருந்த டிவி பெட்டியில போட்ட பாக்கியராஜ் படத்த முழுசா பாத்து முடிச்சிட்டு ஒரு டீய குடிச்சிட்டு கடைய சாத்திகிட்டு வீடு வந்து சேர்ந்தான்

இரவு சாப்பாட்ட முடிச்சிட்டு டிவி ல ஓடுன நிகழ்ச்சிய புருசனும் பொண்டாட்டியுமா ரசிச்சி பாத்துகிட்டுருந்தா போது ,பேச்சி ,பேச்சி குரல் கொடுத்தான்

‘’,சொல்லு மச்சான் ‘’

உங்க ஆத்தா காரிய நேத்து சாயல்குடி கடத்தெருவுல வச்சி பாத்தேன்டி

,என்ன சொல்லுச்சி மச்சான்

என்ன சொன்னா வழக்கம் போல தான் கேட்டா

என்ன மாப்புள பிள்ள தங்குறதுக்கு ஏதும் மருந்து மாத்திர பாத்திகளா இல்ல கோயிலுக்கு ஏதும் போயி வந்தீகலானன்னு கேட்டுச்சி புள்ளன்னு பெரியசாமி சொல்லி வாய மூடல ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டா பேச்சி

ஒங்க அம்மாக்காரி கேக்கத்தான செய்வா ,அவ பிள்ளைக்கு ஏதும் நல்லது நடந்துடாதான்னு ஆசை படத்தான செய்வா அதான் பாக்கம்போதேல்லாம் கேக்குறா

நீ ஏம்பிள்ள இதுக்கு அழுகுர ,நமக்குதான் ஒரு குறையும் இல்ல சீக்கிரமே குழந்தை வுருவாகிடும்னுன்னு தூத்துக்குடி பெரிய ஆஸ்பத்திரி டாக்டரே சொல்லியும்

நமக்கு குழந்த தங்காம போகுதுன்னா நாம என்ன பண்றது அந்த கடவுள்தான் மனசு வைக்கனும்னு சொல்லி அழுதுகிட்டு இருக்குரவள ஆறுதல் படுத்திநான்

வீட்டு வாசல்ல இருந்த கயித்து காட்டிலுள பொரண்டு படுத்துகிட்டு ராத்திரி முழுக்க என்னென்னவோ நெனச்சிகிட்டு இருந்தான் பெரியசாமி .

ஆறு வருசத்துக்கு முன்ன ஒருநா ராத்திரி ஒரு மணி வாக்குல வீட்டு வாசல்ல வந்து நின்னிகிட்டு என்ன இப்பவே எங்கயாது கூட்டிட்டு போயிடு மச்சான்

,எங்க அப்பா அவரு தங்கச்சி மகனுக்கு என்னைய கட்டி வைக்க முடிவு பண்ணிட்டாரு நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்கல ,நாளைக்கு எண்ணிய நிச்சயம் பண்ண வர்ரராங்கலாம் எனக்கு வேற வழி தெரியல நீ இப்பவே என்ன அழச்சிட்டு போலன்னா நான் காலைல எதையாது குடிச்சிட்டு செத்துருவேன்னு எம்மேல அப்படி ஒரு பிரியம் வச்சிருந்தவள வீட்ட எதிர்த்தும் ஊர எதிர்த்துமல நான் இவள கைபிடிச்சேன்

ஊருக்ககாரங்களும் ,உறவுக்காரங்களும் ரொம்ப வருசமா பிள்ள இல்லாம மலடியா நிக்கிறியே ன்னு கண்ணுல கண்ட எடமெல்லாம் சொல்லி சொல்லி நோகடிக்குதுகளே அவள

, இப்ப வரைக்கும் அவ ஆத்தா அப்பன் வீட்டுக்கு கூட போகாமல்ல இருக்கா ,

எப்படி போவா

,

ஒரு ,கொழந்தை பொறந்தாத்தான் எல்லாமே சரியாய் போகும் உறவுகாரங்க கூட சந்தோசமா உறவு கொண்டாட முடியும் ன்னு நெனச்சிருந்த நெனப்பெல்லாம் கனவாவே போயிகிட்டுருக்கே .

எங்களுக்கு ஒரு விடிவு பொறக்காதா கடவுளே ன்னு மனசுக்குள்ள கெடந்து மருவிகிட்டுருந்தான் பெரியசாமி

பேச்சி யோட ஒப்பாரியோடவே நாலும் கடந்துச்சி ,மாசமும் கடந்துச்சி வருசமும் கடந்துசசி …………………….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *