கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 5,696 
 
 

அம்மா! ரேவதி, சீக்கிரமா எழுந்திரு. கொஞ்சம் எழுந்து வேலையை பாரு! நானே எல்லாம் செய்யனும்! இதுக்கெல்லாம் ஒருத்தன் வருவான் பாரு, அப்ப தெரியும் இந்த அம்மாவோட அருமை. என காலை மந்திரம் ஓதினாள்.

ரேவதி எழுந்து வந்து அப்பாவைப் பார்த்து கண்ணடித்தாள், எப்படி உனக்கு என் அப்பா மாட்டின மாதிரியா? எனக் கேட்டுக்கொண்டே வந்தாள், காபி கொடும்மா!

டேய் பல்லை தேயுடி,!

அம்மா, அது நம்ம பல்லு, எப்பவேணாலும் தேய்க்கலாம், நீ காபி கொடு! என்றாள் துடுக்காக!

ரேவதி, குப்புசாமி மற்றும் ராதாவின் ஒரே செல்ல மகள், இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற, தற்காலிகமாக தனியார் பள்ளியில் வேலை, எல்லா வீட்டு வேலையும் தெரியும், ஆனா செய்யமாட்டாள், போற இடத்தில நான்தான் செய்யப்போறேன் என்று காரணம் கூறும், துடுக்கும், துடிப்பும், சதைப்பூச்சோடு உடலும், நீண்ட கூந்தலும், வெளிர்பற்களும் உடைய அழகு ஓவியம்.

உறவுகளை மதித்து, நண்பர்களைப் போற்றும், ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழத்தெரிந்த சமூக ரசிகை.

ரேவதி, சாயங்காலம் சீக்கிரமா வா! உன்னை பெண் பார்க்க கடலூர்லேந்து வாராங்க!

போன வாரம் மணலூர்லேந்து வந்தாங்களே! என்றாள் நக்கலாக!

ஆமாம், உன் துடுக்கான பேச்சால தட்டி போயிட்டு, போல, ஒன்றும் பதிலே வரலை.

வந்தவாக்கிட்டே, கல்யாணத்திற்குப் பிறகு என் பேச்சைக் கேட்பியா? இல்ல உங்க அம்மா பேச்சைக் கேட்பியா?னு கேட்டியே, இப்படியா கேட்பா?

அம்மா!
இதே பேச்சை நான் கல்யாணத்திற்கு பின் பேசினா, கோபப் படுவாதானே? நல்லதாபோச்சு, முன்னாடியே தெரிஞ்சுடுத்தே! இதுக்கு போய் வருத்தபடுவாளோ!

அவன் என்ன சொல்லியிருக்கனும், இரண்டு பேர் பேச்சையும் கேட்க மாட்டேன்னுதானே சொல்லியிருக்கனும், அதை விட்டுட்டு என் பேச்சைக் கேட்பேன்னு பொய் சொல்றான், சுத்தம், சுகாதாரம், கட்டுபாடு, வேலைக்குப் போகனும்னு பேசறாங்க! என்னை கல்யானம் பன்றாங்களா? ஏதாவது மிலிட்டிரிக்கு ஆள் எடுக்குறாங்களா?

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி, இதுக்கெல்லாம் கல்யாணம் ஆகி கரையேத்தறத்துக்குள்ளே நான் பரலோகம் போயிடுவேன், என்ன பேச்சு பேசறது, என முனகினாள். ஆமாம், பாட்டி ,எல்லாம் உங்கக்கிட்டேயிருந்துதான்!

எனச் சொல்லிவிட்டு எங்க அமைதி புறாவைக் கhZம் என அப்பாவைத் தேடினாள்.

குப்புசாமிக்கு பாங்கில் வேலை,
கிளம்பிக்கொண்டு இருந்தார், அப்பா! இந்த பெண் பார்க்கும் படலம் எல்லாம் வீண்ப்பா!

நான்தான் அங்க போய் வாழ போறேன், நான்தானே அவங்க வீட்டுக்குப் போய் எல்லாத்தையும் பார்க்கனும், அதை விட்டுட்டு அவங்க வருவதும், போவதும், பாடத்தெரியுமா? ஆடத்தெரியுமா? நடக்கத்தெரியுமா?னு கேட்கறது, நாம அவங்க பதிலுக்கு காத்து கிடக்கறது இதெல்லாம் சுத்த போர்ப்பா!

நீங்க எனக்கு நல்ல அழகான ஜோடி தேடறேன்னு உண்மையானவனை தொலைச்சிடாதிங்கோ! வாழ்க்கையை ரசித்து வாழ அழகு முக்கியமல்ல, உண்மை தன்மைதான் முக்கியம்.

சரிடா, இன்னிக்கி கடைசியா வரட்டும், பார்போம் என்று கூறி கிளம்பினார்.

மதியம், 3.00 மணிக்கே வீட்டிற்கு வந்தார், குப்புசாமி,

ராதா! அவங்க வீட்லேர்ந்து போன் பன்னினாங்க! அவங்க இன்றைக்கு வரலையாம்! நம்ம அங்க வரச் சொல்றாங்க! அங்கேயும் தம்பி , ரேவதி மாதிரியே இந்த பார்மாலிட்டிக்கு போறது, நம்மள கஷ்டபடுத்தக்கூடாதுன்னு நம்மயே நண்பர்கள் மாதிரி வந்து போங்கன்னு சொல்றாராம்.

ரேவதி ஏதாவது போன் பேசி சொன்னாளா? இல்ல இவங்க ஏன் நம்மைக் கூப்பிடனும்? ஒன்னுமே புரியலையே! என யோசித்து ரேவதியைப் பர்மிசன் போட்டு வரச்சொல்லனும், நீங்க எல்லாம் கிளம்பி ரெடியா இருங்க, நான் போய் பூ, பழங்கள் வாங்கி வருகிறேன் என கிளம்பினார்.

ரேவதி வீட்டிற்கு வந்தாள், என்ன குப்ஸ் இந்த தடவை முடிஞ்சுடும் போல இருக்கு? நாம நினைச்சது போல அங்க கூப்பிடுறாங்க!

நாம இல்லம்மா, நீ நினைச்சது! அனைவரும் கிளம்பினார்கள். மாப்பிள்ளை பார்க்க அவர்கள் வீட்டிற்கு. ஒரு மணி நேரம் பயணம்.

ஆண் பார்க்கும் படலம்…..

என்னங்க, அவங்க கூப்பிட்டது எல்லாம் சரிதான், ஆனா, பெண்ணை அவங்க வீட்டுக்கெல்லாம் இப்பவே போகக்கூடாதுங்க, அது சம்பிரதாயம் இல்ல. அதனால் போற வழியில் அவங்க வீட்டுக்கிட்டே உள்ள கோவில்ல இறக்கி விடுவோம், காத்துண்டு இருக்கட்டும், அப்புறமா அவங்கள கோவில்ல வச்சு பார்க்க சொல்வோம் என்றாள்.

இதுவும் சரியென பட குப்புசாமி சம்மதித்தார்,

ரேவதி கோவிலிலே இறக்கி விடப்பட்டாள் கூடவே பக்கத்துவீட்டு குட்டி பெண்ணோடு.

வாங்க! வாங்க!! எல்லோரும் வாங்க! என வாய் நிறைய கூப்பிட்டார் தாத்தா.

ஏய் எல்லாரும் வந்தாச்சுடா! என பையனுக்குத் தகவல் சொன்னார். உள்ளிருந்து பாட்டி மற்றும் பையனின் அம்மா அனைவரும் வந்தனர்,

எங்க ரேவதி வரலை? என அனைவரும் ஒருசேர கேட்க, இல்லை, இதோ இங்க உள்ள கோவில்ல இருக்கா, வருவா என மழுப்பினர்.

என்ன இது பார்மாலிட்டி, இது நம்ம வீடு, அவ பாட்டுக்கு வரலாமே அவளும் எங்க பொண்ணுதானே! பாவம் தனியா விட்டுட்டு, வரச்சொல்லுங்க, என கூறினார்கள்,

நம்ம பரத் கூட அதே கோவிலுக்குத்தான் போனான், வரச்சொல்லுங்கோ எனக்கூறிவிட்டு வந்தவர்களைக் கவனிக்கத்தொடங்கினாள்.

என்ன அக்கா? மாப்பிள்ளைப் பார்க்கத்தானே வந்தோம், நாம கோவில்ல என்ன பன்றது, சாமியைப் பார்த்துட்டு வரலாம் வாக்கா! என கூப்பிட்டது கூட வந்த குட்டிபொண்ணு.

டேய் மச்சி, இப்பெல்லாம் பெண்ணைப் பார்க்க போக வேண்டாமாடா! அவங்க வீட்டுக்கு வந்துடுவாங்களா? அவ்வளவு டிமான்டுடாடா பசங்களுக்கு? என அவன் நண்பன் கேட்டவுடன், இவள் கடுப்பாகி ,திரும்பி சண்டை போட எத்தனித்தாள்.

போட்டோவில் பார்த்தவன் மாதிரி இருக்கானே!, இவன்தானோ?, என்ன பேசறான்னு பார்ப்போம், என நினைத்து மறைந்து கேட்கலானாள்.

பேர் என்னசொன்ன, என்றான்

ரேவதின்னு சொன்னாங்க, நல்லாயிருப்பான்னும் சொல்றாங்க, பார்ப்போம்,

எனக்கு மனைவியா வருவதை விட என் வீட்டிற்கு மருமகள் தான் இப்போதைய தேவை, அம்மா, பாட்டி, அப்பா தாத்தா எல்லோரும் ரொம்ப உழைச்சிட்டாங்க, அவங்களுக்கு ஓய்வு கொடுத்து துணை, உதவியா, மகள் மாதிரி எனக்கு நல்ல நண்பன் மாதிரி, உறவுகளை மதிச்சு, இருந்திட்டாலே போதுமானதுடா, அவங்களுக்கு என்னை விட்டா யாரும் கிடையாது,

நீ சிகெரெட் பிடிக்கிறது, பார்ட்டிக்கு போறது எல்லாம் சொல்லிடாதே!

இதில் என்னடா? மறைக்கிறது, எல்லாவற்றையும் சொல்வேன், அவங்களுக்குப் பிடிக்கலைன்னா விட்டுவிடுவேன், அவங்க நமக்காக குடும்பத்தையே விடும்போது நாம இந்த சின்ன விஷயத்தை விடறது பெரிசு இல்லடா!

நான் ஒன்றும் பர்பெக்ட் ஆள் கிடையாது, ஆனால் வாழ்க்கையில், வருபவளுக்கு உண்மையா இருக்கனும்னு நினைக்கிறேன். என்று பரத் கூற,

வாங்க நாம வீட்டுக்கு போகலாம் எனக் குரல் வர திரும்பினான், கண்ணெதிரே நின்றாள், ரேவதி.

அழகிலே திகைத்து நின்றான், நீங்க… யாரு.. ரேவதியா?

ம். உங்களை பையன் பார்க்க கூப்பிட்டிங்கல, அது நான்தான் என்றாள்.

கோவில் அம்பாள், கேசுவல் உடையில் வந்தது போல் இருந்தாள்.

வாங்க என அழைத்துக்கொண்டு வண்டியில் ஏறி வீட்டை நோக்கி செல்ல..

டேய் மச்சி, நான்டா,

எனக்கு பஜ்ஜி, சொஜ்ஜி கிடையாதா?

நீ வா, உனக்கு பால்டாயில்ல பஜ்ஜி போடறேன், என்றாள் ரேவதி..

பொண்ணுங்கன்னா அவ்வளவு காமெடியா உனக்கு..

என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா!

அபிஷ்து! புளியோதரை அங்க கொடுக்கிறா! இங்கே கையேந்தி நிக்கிற, என கேட்டு பிரசாதத்தை கையில் வைத்துவிட்டுப்போனார். mh;r;rfh;.

இருவரும் ஒன்றாக வந்து வண்டியில் இறங்க மொத்த குடும்பமே பார்த்தது,

என்ன குப்புசாமி, கடமையை முடிச்சிட்டிங்க போல, கல்யாணத்திற்கு நாள் பார்த்திடலாமா? என சத்தமாக கேட்டாள் ரேவதி,

அங்கே மகிழ்ச்சியில் அவர்கள் வீடே நிறம்பியது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *