கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 4,603 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு ராசா. அந்த ராசாவுக்கு பிள்ள இல்ல. கொளுந்தியா இருக்கா. அவ, அக்காள வெரட்டிட்டு, ராசா கூட வாழணும்ணடு நெனக்கிறா. அந்த அரமணயில, ஆன, சிங்கம், புலி, காராம்பசுவு, குதுர, வெள்ளப்பசுவு நெறயா வளக்குறாங்க. அதப் பாத்துக்றதுக்கு, ஆளுக போட்டு, ராசா ஆச்சி செஞ்சுக்கிட்டிருக்காரு.

பிள்ள இல்லாத கொற பெருங்கொறயா இருக்கு. கொளுந்தியா ரத்த வெறி புடிச்சவ. அக்காள, அரமணய விட்டு வெரட்டுறதுக்கு திட்டம் போட்டுக்கிட்டிருக்கா.

அந்த அரமணயில எட்டுத் தலவாசல். ஒண்ணொன்ணுலயும் எட்டெட்டுப் பேரு காவ காக்குறாங்க. அப்ப: இவ, ஆருக்கும் தெரியாமப் போயி -, காராம்பசுவ கடிச்சு, ரத்தத்த உறிஞ்சிப்பிட்டு, போட்டுட்டு வந்து, படுத்த எடத்ல படுத்துக்றா. ராசா, காவக்காரங்கள வெரட்டுராரு. காராம்பசுவ என்னமோ அடுச்சுபிடுச்சுண்டு சொல்றாங்க. நீங்க எங்க போனீங்க? இண்ணக்கி, நல்லா காவகாருங்கண்டு சொல்றாரு.

அண்ணக்கி ராத்ரி, சிங்கக் கொட்டகக்குள்ள போனா சிங்கத்தப் புடுச்சுக் கடிச்சு, ரத்தத்த உறிஞ்சிட்டு வந்து படுத்துக்கிட்டா. காவலாளிகளால அதயும் கண்டுபிடிக்க முடியல ரொம்ப சிரமப்பட்டு காவ இருக்காங்க.

இருக்கயில, அண்ணக்கி ராத்ரில, ஆனக் கொட்டகக்குள்ள போயி, பட்டத்து ஆனயக் கடிச்சு, ரத்தத்த உறிஞ்சிட்டு வெளிய வரயில காவக்கரங்க பாத்திட்டாங்க.

காவக்காரங்களுக்கு சிக்காம ஓடியாந்து, அக்கா படுத்திருக்ற வீட்டுக்குள்ள போயி, ரத்தத்த துப்பி விட்டுட்டு. அவ எடத்ல போயி படுத்துக்கிட்டா. பின்னால வெரட்டி வந்தவங்க, அக்காள புடிச்சு, ராசாகிட்டக் குடுத்திட்டாங்க. ராணிதா, ஆன: குதிர: பசுவுகளக் கடிச்சதுண்டு காவக்காரங்க சொன்னாங்க. சொல்லவும் -, ராணிய கொண்டுபோயி: காட்ல வெட்டிப் போட்டுட்டு வாங்கடா-ண்டு ராசா சொல்லிட்டாரு.

பிள்ளத்தாச்சியா இருந்த ராணிய கொண்டுபோயி, காட்ல வெட்டிப் போட்டுட்டு வரச் சொல்லயில், அதுக்கு தங்கச்சிகாரி, எங்கக்காள வெட்ட வேணாம். அவ கண்ணுமுளிகள மட்டும் புடுங்கிக்கிட்டு வாங்கண்டு சொல்றா. காவக்காரங்க, ராணிய வனத்துக்குள்ள கொண்டுபோயி, கண்ணு முளியத் தோண்டிக்கிட்டு வந்து, தங்கச்சிகிட்டக் குடுத்தாங்க.

அண்ணக்கி ராத்திரி – வேதனையோட வேதனையா, ராணி, காட்ல ஆம்பளப் பிள்ள பெத்துக்கிட்டா. அப்ப. அந்த வழியா ஒரு முனிவரு, என்னடா! இந்தக் காட்டுக்குள்ள பிள்ள அழுகிற சத்தங் கேக்குதுண்ட்டு , அங்க வாராரு..

வந்து பாக்கயில், ராணி இருக்கா. பாவம்ண்டு கூட்டிட்டுப் போயி: நல்லா வளக்குராரு. வளக்கயில, ராசா மக் பெரியவனாயிட்டா. அம்மா! நர் பெரியவனாயிட்டே. எங்குட்டாச்சும் போயி: சம்பாரிச்சுட்டு வரேன்ட்டு, நேரா நாட்டுக்கு வாரா. வந்து: அரமணயில வேலக்கிச் சேருறா. சேந்து, எடுபிடி வேல செஞ்சுகிட்டிருக்கா. இருக்கயில, எளையராணி, இவனக் கொல்லணும்ண்டு நெனைக்கிறா. அதனால, இவன ஒரு ராட்சசிகிட்ட அனுப்புறா. போகயில், ஒரு வனத்துல, ஒரு பொம்பள தவஞ் செய்யிறா.

அவள ஒரு மொரடன் கெடுக்கப் பாக்குறா. அப்ப: அவங்கிட்ட இருந்து, அவளக் காப்பாத்துறா. காப்பாத்தவும், அந்தப் பொம்பள, இவன, வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறா. வீட்ல போயி வெசாரிக்கயில, நர் அரமணயில வேல செய்றே. ராணி, இந்த லிகிதத்தக் குடுத்து, ராட்சசிகிட்ட குடுக்கச் சொன்னாண்டு சொன்னார். அத வாங்கிப் பாத்தா. அதுல “இவன முழுங்கவும்” ண்டு இருந்திச்சு.

இந்தப் பொம்பள, அதக் கிளிச்சுப் போட்டுட்டு, “இவன நல்லா ஆதரிக்கவும் ண்டு எழுதிக் குடுத்துட்டா. கொண்டுகிட்டுப் போறா. போயில் -, அங்கிட்டு ஒரு பாம்பு ஒரு தவக்காயப் புடிச்சு முழுங்கிக் கிட்டிருந்திச்சு. பாவம் சாகப் போகுதுண்டு, தவக்கா மேல எரக்கப்பட்டு, தொடக்கரிய அறுத்து பாம்புக்குக் குடுத்திட்டு, தவக்காய, பாம்புகிட்ட இருந்து வெலக்கி விட்டர்.

வெலக்கி விட்டுட்டு, அங்கிட்டுப் போறா. ராட்சசிகிட்டப் போறா. போயி: ஓலயக் குடுத்தா. ஓலய வாங்கிப் பாத்திட்டு, நல்லா உபசரிச்சு அனுப்பி வக்கிறா.

வரயில -, ராட்சசியப் பற்றி விசாரிக்கிறா. அப்ப அவ, ஏழு சமுத்திரத்துக்கு அங்கிட்டு, ஒரு சமுத்ரம் இருக்கு. அதுக்கு நடுவுல, ஒரு ஆலாமரம் இருக்கு, அந்த ஆலாமரத்து உச்சில ஒரு வண்டு கூடுகட்டி பொளைக்கிது. அந்த வண்டுலதர் எங்க உசுரு இருக்குதுன்னு சொல்லிட்டா.

ராட்சசி சொன்னதக் கேட்டுக்கிட்டு, இவ் திரும்பி வாரர். வரயில -, ஒரு ஆத்து நெறயா தண்ணி போகுது. இவனால ஆத்தக் கடக்க முடியல. கடக்க முடியாம இருக்கயில -, தவக்காயிக ஒண்ணு சேந்து, ஒண்ணோடொண்ணப் புடிச்சு பாலம் மாதிரி படுத்துக்கிருச்சுக. அதுமேல நடந்து ஆத்தக் கடந்திட்டா. இங்கிட்டு வரயில -, இன்னொரு ஆறு மறுச்சுக்கிறவும், இவ், பாம்ப நெனச்சர். பாம்புக வந்து, ஒண்ணொடொண்ணு பின்னி, பாலம் மாதிரியாகிப் போச்சு. அது வழியா நடந்து ஆத்தக் கடந்திட்டா.

இங்கிட்டு வரயில -, ஒரு காளி கோயிலு இருக்கு. அந்தக் காளியக் கும்பிட்டர். கும்பிடவும், சாளி பிரசனமாகி, என்னா வேணும்ணடு கேட்டுச்சு. கேக்கவும், வெசயத்தச் சொன்னா.

சொல்லவும் -, விபூதியக் குடுத்து, இந்த விபூதியக் கடல்ல போட்டா, கடலு வத்திப் போகும்ண்டு சொல்லி குடுக்கவும், வாங்கிக்கிட்டுப் போறா.

சமுத்ரத்துக்கிட்ட போயிட்டா. போயி காளி குடுத்த விபூதியப் போட்டா. சமுத்ரம் ரெண்டா விரிஞ்சு வழிவிட்டுச்சு, போனார். அங்க ஒரு பெரிய ஆலாமரம் இருந்திச்சு. மரத்ல, ஏறி வண்டப் புடிச்சா. புடிச்சுக்கிட்டு நேரா அரமணக்கி வந்தா. வந்து: இவகிட்ட வந்து, எங்கம்மா கண்ணுகள தோண்டி வச்சிருக்கயில, அதக் குடுண்டு கேட்டார். கேக்கவும் -, அவ, எங்கிட்ட இல்லண்டு சொல்றா.

இல்லண்டு சொல்லவும் – வண்டு கால ஒடிச்சர். ஒடிக்கவும், எளயராணி கால்க ஒடிஞ்சுச்சு. வண்டுக் கைகள ஒடிச்சா, எளயராணி கைக ஒடிஞ்சுச்சு. பெறகும், ஒங்கம்மா கண்ணு எங்கிட்ட இல்லண்டு சொல்றா. சொல்லவும், வண்டுக் கழுத்த நெரிச்சர் . நெரிக்கவும், ராணி கழுத்து நெருஞ்சு போச்சு.

வண்டு சாகவும் அவளும் செத்துப் போனா. அரமணக்குள்ள போயி தாயோட கண்ணுகள, அடுக்குப் பானக்குள்ள இருந்து எடுத்திட்டு வந்திட்டா. ராசாகிட்ட வெவரத்தச் சொல்லிட்டு, தாயி இருக்ற எடத்துக்குப் போறா. போயி: தாயிக்கு, கண்ண வச்சா. வக்யவும் பார்வ வந்திருச்சு.

பெறகு, இவள, அரமணக்கிக் கூட்டிட்டு வந்து, நல்லாப் பொளச்சாங்களாம்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *