மா.பிரபாகரன்

மா.பிரபாகரன்
 

எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை – 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை பாடல்கள் சிறுவர் மணி சுட்டி விகடன் தி இந்து மாயா பஜார் இதழ்களிலும், மானுடம் வளர்நிலா போன்ற சிற்றிதழ்களிலும், பல இணைய இதழ்களிலும் ஏராளம் வெளி வந்துள்ளன.

எனது முதல் சிறுவர் சிறுகதை நூல் சின்னானும் சிட்டுக்குருவிகளும் – 2018 இல் வெளிவந்தது. சிறுவர் மணி நடத்திய ஜோதிடர் வரதன் சிறுகதைப் போட்டி அழ.வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப் போட்டி இவற்றில் பரிசுகள் வென்றுள்ளேன். சிறுவர்களுக்கு நேரடியாக அறிவுரைகள் வழங்குவதைக் காட்டிலும் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும் அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தும் படைப்புகள் அவர்களை நல்ல மனப்பாங்கு கொண்டவர்களாக மாற்றும் என்பது எனது எண்ணம். எனது படைப்புகள் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்றும் நான் நம்புகிறேன்.

எனது முதல் படைப்பு ‘புறக்கணிப்பு’ எனும் சிறுகதை தினமணிகதிரில் வெளியானது. தொடர்ந்து நிறைய படைப்புக்கள் கதிரில் வெளிவந்துள்ளன.

தொடர்புக்கு:
அலைபேசி: 94421 17261
மின்அஞ்சல்: prabakaran.writings@outlook.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *