பூவை எஸ்.ஆறுமுகம்

 

அமரர்.பூவை எஸ்.ஆறுமுகம்

 • தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் 200- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். . கிராமியச் சூழலில் மண்வாசனை கமழ்ந்திட எழுதுவதில் தனிமுத்திரை பதித்தவர்.
 • பொன்னி, காதல், மனிதன், உமா ஆகிய இதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றியுள்ளார்.
 • பக்தவச்சலம், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 4 முதல்வர்களிடமும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நூல்களுக்கு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
 • காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சிறந்த எழுத்தாளருக்கான கௌரவப்பரிசு , ‘கடல்முத்து’ நூலுக்கு கோவை லில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசு, கிருஸ்துவ இலக்கிய சங்கத்தின் சிறந்த எழுத்தாளருக்கான விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
 • தமிழ்ப்படைப்பு இலக்கியத்தில் சிறுகதையின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் அருந்தொண்டாற்றி சிறுகதைத் தொகுப்பு, புதினம், நாடகம் ஆகிய வரிசைகளில் 175 நூல்களுக்கு மேல் படைத்த அமரர். பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் என்றும் தமிழ் கூறும் நல்லுறவில் மதிக்கப்படுவார்.
 • இவர் எழுதிய “இதோ, ஒரு சீதாப்பிராட்டி” என்ற தமிழக அரசின் பரிசு பெற்ற நாடக நூல், “இன்னொரு சீதை” என்ற பெயரில் சென்னை தொலைக்காட்சியில் 17 வார தொடராக ஒளிபரப்பானது. அத்தொடரை இயக்கியவர்  பிரபல தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் திரு. கா.பரத் அவர்கள்.
 • எழுத்துலகில் பொன்விழா கண்டவர்.

இக்கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில்:

 • “இந்த லோகத்திலே இப்பைக்கு வேசம் போடுறவங்காதான் மிஞ்சிகிட்டு வராங்க”
 • “மகாத்மா நீங்க வேடிக்கையான இந்த மனுசங்களோட நெஞ்சுகளிலே விதைச் சுட்டுப்போன அன்பு வித்து இப்ப அபூர்வமாய் அதிசயமாய் முளைகிளம்ப ஆரம்பிச்சுடுசின்னுதான் தோணுது”
 • “கோயிலுக்கு அடிமைப்பட்டவர்கள் இப்பொழுது மௌனத்திற்கும் அடிமைப்பட்டார்கள்”
 • “மனம் ஒரு குழந்தை; எடுப்பார் கைப்பிள்ளை . எடுப்பவர்கள் குழந்தை வசம் மனமிழக்கலாம். அதே சமயம் குழந்தை . எடுப்பவரைப்பற்றி அந்நிலையில் தீர்ப்பு, நிர்ணயம் செய்கிறதோ? யார் அறிவார்கள்?”
 • “விதிக்கு மருந்து இல்லையாம். வினைக்கும் மருந்து இல்லையா?” என்பன போன்ற சிந்திக்கச் செய்யும் கருத்துக்களும் ஏராளமாகவே பிணைக்கப்பட்டிருக்கின்றன.
 • மேலும் நடை எளிதாக இருப்பினும் ஆங்காங்கே “இம்மாங்கொத்த நிலையிலே காந்தி செத்துபூட்டார்னு பல்லு மேலே பல்லு போட்ட எந்த புறக்குடிமவனாச்சும் செப்ப வாய்க்குமோ என்ன?”
 • “உருட்டின சோத்து கவளத்தை லபக்னு வாயிலே போட்டுக்கிடாம நேரம் கெட்ட இம்மாம் பொழுதிலே கூட சொப்பனம் கண்டுகிட்டே இருந்தாங்க”
 • “என்ன நடந்திச்சு அவுகளுக்கு”
 • “கண்டீங்களாடி பொண்டுகளா இந்த அதிசய கூத்தை? நம்ப பவளக்கொடி வாழ்க்கைப்பட்டால் தன்னோட சொந்த அயித்த மகன் வீரமணிக்குத்தான் வாழ்க்கைப்படுவேன்; இல்லாங்காட்டி காளி கோயில் பாதாளக்கேணியிலே குதிச்சு உசிரைவிட்டுப்புடுவேனாக்கும்”
 • “மூனு முடிச்சுப்போட்டுப்புட ஏறுமா? அப்படிக்கொத்த ஒரு இருசாமம் வரும்னு புரிஞ்சா, அப்பவே எம்புட்டு அம்மான் மகளைச் சிறை எடுத்துக் கிட்டுப் பறந்திட மாட்டேனா?”
 • “ஆயி நான் என்னோட அம்மான் பவளத்தை நினைச்சு இப்போ கிலேசம் காட்டல”
 • “அறந்தாங்கி புதுக்கோட்டை பஸ் வீட்டைச் சுற்றி மடங்கியது” “இட்லியை நப்புக் கொட்டி சுவைப்பானே!” “சுற்று வட்டையில் ஏகப்பிரசித்தம்”
 • “அட்டணைக்காலிட்டு குந்தியிருந்த வரைப்பைசா சுருட்டுத் தேடி வந்தது”
 • “ஆளுமுண்டலை முடங்கலை”
 • “ஒண்ணுக்கும் உதவாத இந்த ஒண்டியாலே பாவம், ஒறமொறைக்குள்ளார எதுக்கு வீணாவதாலும் சண்டையும்”

போன்ற வாக்கியங்களுக்கும் சொற்றொடர்களும் அவருடைய பிறந்த மண்ணின் வழக்கு மொழி வாசனையைச் வீசச் செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *