கதையாசிரியர் தொகுப்பு: வீராசாமி ராஜேந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

சைக்கிள்

 

 ஒரு நாள் என் மகனின் சைக்கிள் திருடுபோனது. அப்பார்ட்மெண்டின் கீழே நிறுத்தப்பட்டிருந்த போது வாட்ச்மேன், கேட், பூட்டு, இத்யாதி…இத்யாதி என்று பல பாதுகாப்புகள் இருந்தும் சுலபமாகத் திருடிவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்கும் தைரியம் இல்லாததால், அப்படியே விட்டு விட்டேன். “”ஏன் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலை?” என்று மறுநாள், சின்ன மாமனார் வந்திருந்த போது கேட்டார். “”அதெல்லாம் வெட்டி வேலை. மதுரைல ஒருநாளைக்கு எத்தனை சைக்கிள் காணாமல் போகிறது தெரியுமா? அத்தனை சைக்கிளையும் தேடிக் கண்டு பிடிக்கணும்னா