கதையாசிரியர் தொகுப்பு: ரஜனி

4 கதைகள் கிடைத்துள்ளன.

பிரிவென்பது முடிவல்ல!

 

 அருணின் பைக் அந்த கட்டிடத்தின் வாயிலை தாண்டி உள்ளே வரும் பொழுதே அனுவின் விழிகள் அவனைக் கண்டுவிட்டன. பின்னே, அவன் வருவான் என்று தானே அவள் விழிகள் வாயிலையே வட்டமிட்டன. அவனை கண்ட மாத்திரத்தில் அவள் முகம் மலர்ந்து விகசித்தது. ஆவலும் ஏக்கமும் நிறைந்த விழிகளால் அவனை தொடர்ந்தாள். அவனும் வண்டியை விட்டு இறங்கி திரும்பியவுடன் அவளைப் பார்த்துவிட்டான். பார்த்தவன் அழகாக பற்கள் தெரிய புன்னகைத்தான். அவன் தன்னை நோக்கி புன்னகைத்தவுடன் அவனை நோக்கி ஓடோடி செல்ல


அதிகாலை அழகு

 

 மலர்விழியின் உடல் அந்த அதிகாலையின் குளிர்ந்த காற்றில் லேசாக நடுங்க அதுவும் இன்பமாகவே இருந்தது. பால்கனியின் விளிம்பிற்கு சென்று பார்வையைக் கீழே செலுத்த நேர்த்தியான தோட்டம். உனக்கு முன்பே குளித்துவிட்டோம் என்று சொல்வது போல நேற்று இரவு தூரிய மழையில் மலர்களிலும் இலைகளிலும் நீர்த்துளிகள். இவ்வளவு தான் என்றில்லாமல் வர்ணஜாலமாய் பூத்திருந்தன – டேலியாக்களும், ரோஜாக்களும், சம்பங்கியும், சாமந்தியும்.. இன்னும் இன்னும் அவைகளின் பெயர் நினைவில் வரவில்லை அவளுக்கு. அதிலும் அந்த பன்னீர் ரோஜாச்செடியில் இலைகளே தெரியாமல்


அந்த ஒரு இரவில்!

 

 எல்லா பொறியியல் கல்லூரிகளையும் போல XXX கல்லூரியும் நகரத்தை விட்டு தள்ளி, நெடுஞ்சாலை ஓரம் தனியாக நின்றது. உள்ளே மின்னியல், மின்னணுவியல் என எல்லா இயல்கலும் தனி தனி கட்டிடங்களாக வீற்றிருக்க, சற்று தள்ளி நின்ற பெண்கள் விடுதி இரவு 8:30 மணிக்கு உச்ச ஸ்தாதியில் இயங்கி கொண்டிருந்தது. அனைத்து பொறியியல்களும் ஒன்றாக கூடி பொரியலிலும் சாம்பாரிலும் குறை கண்டு பிடித்தனர். “அக்கா இந்த கிலியர அப்பளம் எங்க வாங்குறிங்க?” – மெஸில் வேலை செய்யும் பெண்ணிடம்


அமாவாசை இரவில்..!

 

 நான் நகரத்தின் நெரிசலை கடக்கும் போது வழக்கத்தை விட நேரமாகியிருந்தது. எல்லாம் என் மனைவியால் தான்! வீட்டிற்கு சென்றவுடன் தெளிவாக (சற்று காட்டமாகவும் தான்) சொல்லிவிட வேண்டும் இது எனக்கு சரிவராது என்று! பின்னே அவனவன் ஆபீஸ் முடிந்து அலுத்து சலித்து வந்தால் இவளது நாயை ஆஸ்பதிரிக்கு கூட்டிச்செல்ல வேண்டுமாம்! என் வீடு நகரத்தை விட்டு சற்று தள்ளி ஒரு பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இப்போது தான் வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதியில் இருந்தது. ஆறு மணிக்கு