கதையாசிரியர் தொகுப்பு: மூதூர் மொகமட் ராபி

30 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தியுள்ள மனிதரெல்லாம்…

 

 இலண்டன் ஹீத்ரூ விமான நிலையம். கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் யூஎல்-564 விமானத்தின் பயணிகள் நுழைவாயில் அடைக்கப்படுவதற்கு சரியாக பத்தொன்பது விநாடிகள் மட்டுமே இருந்தபோது அதன் கடைசிப்பயணியாக உள்நுழைந்தேன். ‘இனிமேல் யாரும் வரப்போவதில்லை’ எனும் தைரியத்தில் கைகூப்பாமல் நின்றிருந்த ஏர்ஹோஸ்டஸ் அழகி என்னைப் பார்த்து அதிர்ந்த பின்பு உண்மையாய்ச் சிரித்தாள். முதலாம் வகுப்பு பயணிகள் பகுதியில் யன்னலோரமாக ஒதுக்கப்பட்டிருந்த குஷன் இருக்கையில் நான் அமர்ந்ததும் எதிர்ப்புற ஆசனத்தின் முதுகிலிருந்த சிறிய தொலைக்காட்சிச்சதுரம் உயிர்பெற்றது. அதில் ஓர் அழகிய


நீ எங்கே?

 

 அறைக்கதவைத் திறந்து நான் உள்ளே சென்றதுதான் தாமதம். பச்சக் என்று ஈரமாக எனது வலது கன்னத்தில் வந்து அப்பியது அது. ‘ஓ! யே.. ஏஏ…!’ எதிர்பாராத அந்த தாக்குதலால் நான் பயத்திலே அலறிச் சரிந்து கட்டிலருகே விழுந்து விட்டேன். என் கையிலிருந்த பைல் பேப்பர்கள் சிதறி அறைமுழுவதும் இறைந்ததும் மேசை மீதிருந்த குவளைத்தண்ணீர் சரிந்து தரைமுழுவதும் பரவியது. மூன்று நாட்களாக நான் மாய்ந்து மாய்ந்து எழுதிய அத்தனை நோட்ஸும் என்கண்முன்னே நனைந்து பாழாகியது. ஆனால் இதற்கும் தனக்கும்


எரிந்த பனைகள்..!

 

 அண்ணே உங்களுக்கு போன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா, உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு, ‘இல்லண்ண… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான் நான் சொல்ல வந்தேன்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது கோபம். ஆனாலும் எதுவும் கூறவில்லை. ‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்போனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான


சம்பள நிலுவை

 

 1 மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில், இரண்டாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் நிரோசனை ஏற்றிக்கொண்டு திருஞானசம்பந்தர் வீதியும் ஸீவியூ வீதியும் சந்திக்கும் முனையிலிருக்கும் வலயக்கல்வி அலுவலக வாசலில் போய் நான் இறங்கியபோது நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது. ‘ம்ம்..என்னப்பா இது….? இங்கேயாப்பா..வந்திருக்கீங்க… ம்ம்.. எனக்கேலா பசிக்கும்’ என்று பழைய அனுபவத்தினாலோ என்னவோ அழத் தொடங்கினான் நிரோசன். ‘இல்லடா கண்ணா…! என்ட செல்லம், கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்டா..முந்தி மாதிரி சுணங்க மாட்டன் அப்பா. கடிதத்தைக் காட்டினதும்


ஆறுகால் விமானங்கள்

 

 நேற்று மாலையில் இருந்தே பசி தாங்காமல் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றேன். சரியாக ஒரு முழுநாளும் கடந்து விட்டது. இன்னமும் நான் கொலைப்பட்டினி என்றால் நம்புவீர்களா? அங்குமிங்கும் அலைந்து திரிந்தாலும் யாரும் வசமாக மாட்டுகிறார்களில்லை. வயிறு ஒட்டிப்போய் கால்களெல்லாம் பலமிழந்தது போய் தொய்ந்து கிடக்கின்றது. இருந்தாலும் நம்பிக்கையிழக்கவில்லை நான். ‘உணவு கிடைக்காத காலங்களிலே மெல்ல அலைச்சலைக் குறைத்து ஓய்வெடுத்துக்கொள்வதே உத்தமம்’ என்பதுதான் என்னைப் போன்றவர்களின் மூளையின் ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளுமிருக்கும் செய்தி. எங்கள் உடல் மொழிகளே அதை நினைவூட்டி விடும். ஆனாலும்


…..ஏன் அழுதான்?

 

 திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் அன்றைய நாளுக்குரிய மாலைநேரப் பார்வையாளர் நேரம் முடிவடைந்திருந்தது. சீருடையணிந்த ஆஸ்பத்திரி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வார்டாக ஏறி இறங்கி நோயாளிகளைப் பார்வையிட வந்திருந்தவர்களையெல்லாம் திருப்பியனுப்பிக் கொண்டிருந்தார்கள். குடலிறக்க அறுவைச்சிகிச்சை ஒன்றை முடித்துவிட்டு மேலதிக சிகிச்சைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த என்னுடைய வாப்பாவுக்கு உதவியாக நின்றிருந்த நானும் மற்றவர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் மட்டுமே பதினான்காம் இலக்க வார்டுக்குள் நின்றிருந்தோம். வீட்டிலிருந்து வந்த இரவு உணவை உண்பதற்கு நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோதுதான் திடீரென அந்த அழுகுரல் கேட்டது.


விழியில் வடியும் உதிரம்!

 

 கொழும்பிலிருந்து எனக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குக் கடிதம் வந்திருந்தது. தலைநகரிலே அமைந்துள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு தினசரிப்பத்திரிகையின் உதவியாசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது கல்வித்தகைமைக்கு எத்தனையோ பல வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் எழுத்துத்துறையிலே எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக இந்த வேலையைப் பெரிதும் விரும்பியிருந்தேன். ‘தம்பி, இப்பவே வெளிக்கிடுறியாப்பா’ என்று வினவிய எனது தாயின் குரலுக்கு ஒற்றை வார்த்தையில் பதில்கூறிவிட்டு அவசர அவசரமாகப் பயணப்பொதியைத் தயார் செய்தேன். நண்பனொருவனோடு அவனது மோட்டார்


திலீப் முஸம்மில் மற்றும் தீசன் குரூஸ்

 

 இதுவரையில் ஒருபோதும் பார்த்திராத ஓர் அழகான இளம்பெண் தனது இனிய குரலில், ‘எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்! எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்!…. எக்ஸ்க்யுஸ்மீ…’ என்று இடைவிடாமல் தொடர்ந்து சொல்லியவாறு வெகுநெருக்கமாக வந்து.. ‘டேய் யார்டயோ போன் அடிக்குது. அதை எடுத்துத் தொலைங்களேண்டா! ஞாயித்துக்கிழமையிலயும் மனிசன நிம்மதியா தூங்க விட மாட்டாணுகள். சே!’ என்று யாரோ எரிச்சலோடு அதட்டினார்கள். உடனே


வசூல் ராஜாக்கள்

 

 வன்னியார் ஒழுங்கையிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றிலே மகளை இறக்கிவிட்டு அப்படியே அதுபோய் பிரதான வீதியைச் சந்திக்குமிடத்திலே இடதுபக்கம் திரும்பி நேரே மடத்தடிச்சந்தி சுற்றுவட்டத்தைத் தாண்டும்வரை அது ஓர் ஒருவழிப்பாதை என்பதை நான் கவனிக்கவில்லை. ‘சொய்……ங்!’ என்று போக்குவரத்துப் பொலீசின் விசில் சப்தம் காதிலே ஒங்கியறைந்தபோதுதான் ‘ஆகா மாட்டிக்கொண்டோம்டா!’ என்பது உறைத்தது. ‘அப்படியே திரும்பிப் பார்க்காமலே ஓடிவிடுவோமா..’ என்று உதயமான ஓர் அசட்டுத் துணிச்சல் காதுமடல்களைச் சூடாக்கிவிட்டு கணத்தில் மறைந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இல்லையென்றால் இதே நேரத்திற்கு இருக்கும்


கணிதப்புலியும் கடைசி வகுப்பும்!

 

 ‘ஜரீத் மாஸ்டர்’ என்ற பெயரைக் கேட்டால் எப்படியான ஒருவர் உங்கள் மனக்கண்ணில் தோன்றுவார்? சர்க்கஸ் கொட்டகைகளிலே கட்டுமஸ்தான உடலுடன் கையில் சவுக்குடன் நிற்கும் ரிங் மாஸ்டர் உங்களுக்கு நினைவு வந்தால் நீங்கள் வெளியூர் ஆசாமி என்பது உத்தரவாதம். நிஜமான ஜரீத் மாஸ்டர் எங்கள் வகுப்பு கணிதபாட ஆசிரியர். பாடசாலை அதிபரின் வலது கரமும் கூட. ஆனால் காற்று சற்றுப் பலமாக வீசினால் போதும், பறந்துவிடுவாரோ என்று சந்தேகிக்கத்தக்க மெல்லிய உடல்வாகு அவருக்கு. சாதாரண 13 சைஸ் டைட்