கதையாசிரியர் தொகுப்பு: மஸீதா புன்னியாமீன்

1 கதை கிடைத்துள்ளன.

முகவரியில்லா முகம்

 

 முந்தானைத் தலைப்பைத் தூக்கி முகத்தில் அப்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் சியாமா. சூரியன் உச்சத்துக்கு வந்து உச்ச வெப்பத்தை உமிழ்கிறானோ என்னவோ… வீட்டுக்குள்ளேயே அப்படியொரு புழுக்கம். “ஃபூ… கெழமைல சனி ஞாயிறு வரவே படாது… வேல…வேல… முடிவில்லாத வேல…” தனக்குத் தானே புறுபுறுத்தபடி அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். குளித்தால் நன்றாக இருக்கும். குளித்துத் தான் ஆக வேண்டும். சமையல் வேலைகளோடு போராடிய உடலில், உடையில் அழுக்கை அகற்றியாக வேண்டுமே… கணவரும் பிள்ளைகளும் உடுத்தி விட்டுக் களைந்த